வரவேற்பை பெறும் ஆன்லைன் பாடல் தளங்கள் செயலிகள்

6
Online Streaming

MP3 / USB காலம் முடிந்து App காலம் பயணிக்கிறது. காலம் மாறுகிறது எனவே, தொழில்நுட்பமும் மாறிக்கொண்டே உள்ளது. Image Credit

MP3

முன்பு பாடல் கேட்பது என்றால் அனைவருக்கும் உதவியது MP3 பாடல்கள் தான். காரணம், எளிதாக USB யில் கொண்டு செல்லலாம். வீடு, கார் என்று எங்கும் பயன்படுத்தலாம்.

ஆனால், இணையம், 4G பிரபலமாகத் துவங்கிய பிறகு, துண்டிப்பு இல்லாத இணையம் கிடைக்க ஆரம்பித்த பிறகு மெதுவாக MP3 பயன்பாடு குறைந்து வருகிறது.

MP3 மட்டுமல்ல USB பயன்பாடே குறைந்து வருகிறது. தற்போது அனைவரும் இணையத்தில் இருந்தே அனைத்தையும் செய்ய முடிவதால், USB தேவை குறைந்து வருகிறது.

MP3 யை (USB யில்) அதிகம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் பேருந்து, வாடகை கார், லாரி ஓட்டுநர்கள் மற்றும் Ring Tone க்காக பயன்படுத்துபவர்கள் மட்டுமே.

சிலர் திரைப்படங்களை COPY செய்ய USB பயன்படுத்துகிறார்கள். மற்றபடி இதன் பயன்பாடு குறைந்து வருகிறது.

முன்பு சுற்றுலா செல்வது என்றால், USB யில் பாடல்கள் இருக்கா என்று எல்லோரும் கேட்பது வழக்கம் 🙂 .

செயலிகள்

தற்போது இவற்றை Spotify, Gaana, Saavn, Wynk Music, Apple Music, YouTube Music, Amazon Music & FM செயலிகள் ஆக்கிரமித்து விட்டன.

என்னையே எடுத்துக்கொண்டால், முன்பு MP3 பயன்படுத்திக்கொண்டு இருந்தேன், தற்போது மேற்கூறிய செயலிகள், இணையத் தளங்கள் மட்டுமே.

ஏராளமான MP3 பாடல்கள் இன்னும் உள்ளது ஆனால், பயன்படுத்தப்படாமல் சேமிப்பாக மட்டுமே உள்ளது.

முன்பு தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்லும் போது இச்செயலிகளில் பாடல்கள் கேட்கும் போது இணையம் தடை படும் ஆனால், தற்போது இப்பிரச்சனைகள் குறைவு.

எனவே, செயலிகள் பிரபலமாகி வருகின்றன. முன்பு சிலர் மட்டுமே பயன்படுத்தி வந்தது, தற்போது அனைவருக்குமானதாக மாறி வருகிறது.

இதன் பயன்பாடு அதிகரிக்கக்காரணம் இணையம் மட்டுமல்ல Bluetooth வசதி அனைத்து இடங்களிலும் கிடைப்பதும் ஒரு முக்கியக்காரணம்.

காரில் செல்லும் போது எவரும் அவர் விருப்பப்பாடல்களை அவரவர் மொபைலில் தேர்வு செய்து கேட்க முடியும் (BT) என்பது இதன் சிறப்பு.

நீங்கள் எவ்வாறு பாடல்கள் கேட்கிறீர்கள்? 🙂 .

கொசுறு

முன்பு திரைப்படப் பாடல் வெளியீட்டின் போது CD DVD வெளியிடப்படும். அது MP3 யாக மாறி இணையத்தில் பரவி விடும். இதனால் பணம் கொடுத்து DVD வாங்குபவர்கள் குறைந்தார்கள்.

இனி இதன் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசித்தால்… YouTube இதற்கு விடையாக வந்தது அதோடு Online Streaming தளங்கள் இதை வாங்க முன் வந்தன.

அதிலும் YouTube ல் வெளியிடுவது மிகப்பெரிய இலாபமாகத் தயாரிப்பாளர்களுக்கு அமைந்து விட்டது. எந்தத் தயாரிப்புச் செலவும் இல்லாமலே எளிதாகப் பணம் வந்து விடும். YouTube Upload செய்தால் வேலை முடிந்தது.

எனவே, மாற்றங்களோடு நாமும் மாறிக்கொண்டே செல்கிறோம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. கிரி.. என்னோட அனுபவம் கொஞ்சம் வித்தியசமானது.. இது வரை ஒரு பாடல் கூட MP 3 யிலும், USB யிலும் பதிவு செய்ததே இல்லை.. பாடல் கேட்ட ரொம்ப பிடிக்கும்.. ஆனால் அதுவே போதையாகி விட கூடாது என்று மனநிலைக்கு தகுந்தவாறு பாடல்களை YOUTUBE இல் கேட்பேன்.. சில நேரம் ஹிந்தி பாடல்கள்.. பயோனீர் CD பிளேயர் கனவை பற்றி முன்பே கூறி இருக்கிறேன்..

  பல நேரம் இளையராஜாவின் பாடல்கள்.. 2000 அப்புறம் வந்த படங்களில் அதிக பட்சம் என் விருப்ப பாடல்கள் 20 இருந்தாலே அதிகம்.. நமக்கு எப்பவும் பழையது தான்.. என் ரசனை மனைவிக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.. எப்பாவது பித்து பிடித்த ஒரு மனநிலை வரும்..

  அதுபோல சமயங்களில் ஒரே பாட்டை 15 / 20 தடவைக்கு மேல் தனிமையில் கேட்பேன்.. அப்படி அதிகம் கேட்ட பாடல் (சாமுண்டி படத்தில் வரும் முத்து நகையே, முழு நிலவே) எப்ப கேட்டாலும் பிரெஷ்ஷா இருக்கும்.. தேவா சாரின் இசையில் பல பாடல்கள் பிடித்தாலும் விருப்ப முதற்பாடல் இதுதான்..

  இதுவரை கைபேசியில் ஒரு பாடல் கூட ஏற்றியது இல்லை.. ஏற்றவும் தோன்றியது இல்லை.. பிடிக்கும் போது பாடல் கேட்க தோன்றும் அவ்வளவு தான்.. நிறைய பாடல்களை கேட்கும் போது பல நிகழ்வுகள் கண் முன்னே தோன்றும்..

  அதை நினைக்கும் போது இனிமையாக இருக்கும்.. கோவை பற்றி நினைவு வந்தாலே, முதன்முதலில் கோவைFM இல் கேட்ட “பார்த்த முதல் நாளே” பாடல் உடனே நினைவுக்கு வரும்.. முதற்முறை FM இல் இந்த பாட்டை கேட்கும் போது இசையை கேட்டு மிரண்டு விட்டேன்.. காட்சி படுத்தியவிதம் எனக்கு பிடிக்காது.. தற்போது இந்த பாடல் கேட்கும் போது சாதாரணமாக இருக்கிறது..

  காதலர் தினம் பாடல்களை கேட்கும் போது இளநிலை முதலாம் ஆண்டு கல்லூரி நாட்கள் உடனே நினைவுக்கு வரும்.. கல்லூரி நாட்களில் நான் பார்த்த முதல் திரைப்படம் இது தான்.. கிட்டத்திட்ட குணால் போல தான் என் வாழ்க்கையும்.. புது இடம், புரியாத ஆங்கில மொழி, காதலில் விழுந்த தருணம் , MBA கனவு, காதலிக்கு திருமணம் (நல்லவேலை கிரியோட பதிவுகளை என் மனைவி படிப்பதில்லை)..

  என படத்தில் வரும் பல நிகழ்வுகள் என் வாழ்விலும் வந்தது.. சுவாரசியமான அனுபவமாக இருக்கும்..என ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கதை நிச்சயம் இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. ஆன்லைன் தளங்களில் பாடல்களில் நாம் கேட்கும் விதத்தை வைத்து அவையே பல பாடல்களை நமக்கு தேர்வு செய்து தரும் சற்று சிந்தித்துப் பார்த்தால் பெரும்பாலும் அவை நாம் கேட்க விரும்பிய பாடல்களா தான் இருக்கும். இன்றும் பல விசேஷ வீடுகளில் எண்பதுகளில் 90களில் வந்த பாடல்களை தான் போடுகிறார்கள். 2000 பிறகு வந்த பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை என்பது எனது எண்ணம். நான் இன்னமும் தொன்னூறுகளில் வாழ்வதற்கு நினைக்கிறேன். இன்றைய இசை எனக்கு அன்னியமாக தெரிகிறது. காதலர் தினம் படம் பார்த்து குணால் சிகை அலங்காரம் வைக்க முடிவைக்க வீட்டில் திட்டு வாங்கிய பசுமையான அனுபவங்களை கிளறி விட்டீர்கள்.

 3. @யாசின்

  “மனநிலைக்கு தகுந்தவாறு பாடல்களை YOUTUBE இல் கேட்பேன்”

  USB என்றால் குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே கேட்க முடியும். ஆன்லைன் என்றால் பல வகையான பாடல்களைக் கேட்கலாம்.

  எனக்கும் 1990 / 2000 துவக்கப்பாடல்களே அதிக விருப்பம். அதோடு கறுப்பு வெள்ளை பட பாடல்களும்.

  “சாமுண்டி படத்தில் வரும் முத்து நகையே, முழு நிலவே”

  நல்ல பாடல் தான்.. ஆனால் உங்களுக்கு இவ்வளவு பிடித்ததுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லையே 🙂 .. இதைப்படித்த பிறகு திரும்பக் கேட்டுப்பார்த்தேன்.

  “பார்த்த முதல் நாளே” வேட்டையாடு விளையாடு.

  இதில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.

  “காதலிக்கு திருமணம் (நல்லவேலை கிரியோட பதிவுகளை என் மனைவி படிப்பதில்லை)”

  😀

 4. @விஜயகுமார்

  “ஆன்லைன் தளங்களில் பாடல்களில் நாம் கேட்கும் விதத்தை வைத்து அவையே பல பாடல்களை நமக்கு தேர்வு செய்து தரும் சற்று சிந்தித்துப் பார்த்தால் பெரும்பாலும் அவை நாம் கேட்க விரும்பிய பாடல்களா தான் இருக்கும்.”

  Artificial Intelligence 🙂 .. எதிர்காலத்தில் இன்னும் நம் மனதை படித்து விடும்.

  “2000 பிறகு வந்த பாடல்கள் அவ்வளவாக கவரவில்லை என்பது எனது எண்ணம். நான் இன்னமும் தொன்னூறுகளில் வாழ்வதற்கு நினைக்கிறேன்.”

  எனக்கும் தற்போதைய பாடல்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. தற்காலிக விருப்பம் மட்டுமே.

  பழைய பாடல்கள் போல என்றும் விருப்பமானவையாக இருப்பதில்லை.

  “காதலர் தினம் படம் பார்த்து குணால் சிகை அலங்காரம் வைக்க முடிவைக்க வீட்டில் திட்டு வாங்கிய பசுமையான அனுபவங்களை கிளறி விட்டீர்கள்.”

  காதலர் தினம் குணால் போல என் நண்பன் வைத்து இருந்தான். அப்போது மிக பிரபலம்.

  ஆனால், இவ்வளவு பேரை பாதித்துள்ளது வியப்பாக உள்ளது.

 5. இரண்டாயிரத்து பிறகு சினிமாவின் தாக்கம் வாழ்வில் குறையத் தொடங்கி விட்டது என்பதுதான் எனது கருத்து. விடலைப்பருவத்தில் சினிமாவின் தாக்கம் தொண்ணூறுகள் மற்றும் 2000 களோடு சரி. காதல் தேசம் படம் வந்த பிறகு அப்பாஸ் கட்டிங் வினித் கட்டிங் என்று பிரபலமாக இருந்த பழைய ஸ்டைல்கள். நடிகர் விஜய் ஒரு படத்தில் ரிம் லெஸ் கண்ணாடி அணிந்தது பல பேர் அந்த கண்ணாடியை வாங்கி போட்டது சினிமாவின் தாக்கத்தின் அடையாளம். ஆனால் இன்றைக்கு இருக்கும் விடலைப் பருவத்தினர் பெரும்பாலும் விஷங்களாக இருக்கிறது. அதிகப்படியான தொழில்நுட்ப நுகர்வு இதற்கு காரணம்.

  யூட்யூப் வருவதற்கு முன்பு இருந்த ராகா,ஓசை போன்ற இசை தளங்கள் இப்பொழுது சிறப்பாக செயல் படுகிறதா என்று தெரியவில்லை. 90களில் 2000களில் இவையே பாடல்களுக்கு source ஆக இருந்தது.youtube இடம் இவை இன்று தோற்று விட்டன. பாடல்களை கண்ணைமூடி கேட்கும் சுகம் பார்ப்பது கிடைப்பதில்லை என்பது எனது கருத்து.

 6. @விஜயகுமார்

  “காதல் தேசம் படம் வந்த பிறகு அப்பாஸ் கட்டிங் வினித் கட்டிங் என்று பிரபலமாக இருந்த பழைய ஸ்டைல்கள். நடிகர் விஜய் ஒரு படத்தில் ரிம் லெஸ் கண்ணாடி அணிந்தது பல பேர் அந்த கண்ணாடியை வாங்கி போட்டது சினிமாவின் தாக்கத்தின் அடையாளம். ”

  உண்மையே 🙂

  “யூட்யூப் வருவதற்கு முன்பு இருந்த ராகா,ஓசை போன்ற இசை தளங்கள் இப்பொழுது சிறப்பாக செயல் படுகிறதா என்று தெரியவில்லை.”

  ராகா தளம் தான் என் விருப்பமான தளம். துவக்கத்தில் இதையே அதிகம் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன்.

  தற்போதும் உள்ளது ஆனால், காலத்துக்கு ஏற்பத் தன்னை மேம்படுத்திக்கொள்ளாததால் வளர்ச்சியைப் பெற முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here