Line of Duty | British TV Crime series | தெறி விசாரணை

2
line of duty

ழல் தடுப்புப் பிரிவில் பணிபுரிபவர்கள் எப்படி விசாரணையை நடத்தி குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே Line Of Duty கதை.

Ted Hastings

இவ்வமைப்பின் தலைவராக Ted Hastings, அவரின் கீழ் பணிபுரிவர்களாக Steve Arnott & Kate Fleming. Image Credit

துவக்கத்தில் பேசிட்டே இருக்காங்களே என்று கடுப்பாக இருந்தது. போகப்போகக் கதையைக் கொண்டு சென்ற விதம் அசத்தல். காவல்துறையில் உள்ளவர்கள் இதைப்பார்த்தாலே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இப்படியொரு மேலதிகாரி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு Ted Hastings கதாப்பாத்திரம். ரொம்ப இயல்பாக அட்டகாசமாக நடித்துள்ளார்.

Steve Arnott & Kate Fleming

Steve Arnott & Kate Fleming இருவருமே விசாரணையில் கேள்விகள் கேட்கும் போது தெறிக்க விடுகிறார்கள். DS.Arnott ஒருபடி மேலே சிந்தித்துப் பல இடங்களுக்குச் சென்று துருவித் துருவி விசாரணை செய்வது செம.

விசாரணையில் Ted Hastings, DS.Arnott & DC.Kate Fleming மூவரும் கேள்விகளால் எதிராளியை திணறடித்தால், சில நேரங்களில் எதிராளியும் இவர்களைக் கேள்விகளால் மடக்குவது, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று கூறத்தோன்றுகிறது 🙂 .

Lindsay Denton

அதிலும் Lindsay Denton என்ற பெண் அதிகாரி, ஒவ்வொரு வார்த்தையும் சரக் சரக்குனு குத்தி கிழிப்பது போல இருக்கும். யம்மாடி! ரணகளமான பெண்.

நமக்கே.. அடேங்கப்பா! என்னமா மடக்குறாங்கய்யா! என்று தோன்றும். முடிந்தது எதிராளியை மடக்கி விட்டார்கள் என்று நினைத்தால், பிரம்மாஸ்திரம் போல எதையாவது கேட்டுத் திணறடிப்பது கலக்கல்.

Steve Arnott துடிப்பாகவும், சில நேரங்களில் கொஞ்சம் அவசரப்படுபவராகவும், Kate Fleming சூழ்நிலையை நிதானமாகக் கையாள்பவராகவும் உள்ளார்கள்.

இருப்பினும் Steve Arnott வந்தாலே நம்மாளு வந்துட்டான்ய்யா.. இனி பட்டைய கிளப்ப போகுது என்பதாகத் தோன்றுகிறது 🙂 .

Wonderful Team

Ted Hastings, Steve Arnott & Kate Fleming மூவருமே 4 சீசன்களிலும் உள்ளார்கள், இவர்கள் அல்லாமல் வேறு எவரையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இவர்களுக்குள்ளும் சில போட்டி பொறாமைகள் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.

இருவரையும் Ted Hastings தேவையான வேண்டிய நேரத்தில் கண்டிப்பதும், பாராட்டுவதும் என மேலதிகாரிக்குள்ள தகுதியோடு பொறுப்பாக நடந்து கொள்வார்.

குற்றம் செய்தவர்கள் சிலர் தப்பி விடுவது கடுப்பளிக்கிறது.

திரைக்கதை & வசனங்கள் 

திரைக்கதை தாறுமாறாக உள்ளது. எப்படி இது போல வசனங்களை அமைக்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது! கூறுவது மிகையாகத் தோன்றினாலும் அது தான் உண்மை.

சில நொடிகள் கவனம் திரும்பினாலும் சில முக்கியமான வசனங்களைத் தவற விட நேரிடும். எனவே, கவனம் சிதறாமல் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

சப்டைட்டில் சில மைக்ரோ நொடிகள் தாமதமாக வருகிறது. எனவே, படிக்கும் முன்பே வேறு வசனம் வந்து விடுகிறது. அதோடு பேசுபவர்களும் வேகமாகப் பேசுகிறார்கள். எனவே, பல வசனங்களை Pause / Rewind செய்து பார்க்க வேண்டியதாக இருந்தது.

அமெரிக்க சீரீஸ்களை விடப் பிரிட்டிஷ் சீரீஸில் கறுப்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஈழ / தமிழ் / இந்திய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

பின்னணி இசை

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் செமையாக உள்ளது. பின்னணி இசையில் அதிகம் உணர்வது துப்பாக்கி, கை விலங்கின் க்ளிக், கிறீச் சத்தங்கள். புரியும்படி கூற வேண்டும் என்றால், ரசூல் பூக்குட்டி செய்யும் பணி.

ஒரு நிமிடம் கூட அங்கே இங்கே திரும்ப விடாமல் பார்க்க வைத்துள்ளது. 4 சீசன்களுமே மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழில் எடுக்கப்பட்டால்,  இதற்கு விசாரணை என்ற பெயரைத் தவிர வேறு எதையும் வைக்க முடியாது 🙂 .

மறக்க முடியாத அனுபவம்

அனைவருக்கும் இந்தச் சீரிஸ் பிடிக்கும் என்று கூற முடியாது ஆனால், ஒன்றிப் பார்த்தால், உங்களை வேறு அனுபவத்துக்குக் கொண்டு செல்லும் என்பது உறுதி.

நான் பார்த்த சிறந்த சீரீஸ்களில் இதுவும் ஒன்று. மறக்க முடியாத அனுபவம்.

பரிந்துரைத்தது நண்பர் கௌரிஷங்கர். NETFLIX ல் உள்ளது.

2012 ல் இருந்து ஒளிபரப்பப்பட்டு வரும் இந்தச் சீரீஸில் 5 சீசன் உள்ளது ஆனால், NETFLIX ல் இதுவரை 4 மட்டுமே உள்ளது.

Genre British police drama, Crime Detective fiction, Thriller
Created by Jed Mercurio
Written by Jed Mercurio
Directed by David Caffrey, Douglas Mackinnon, Daniel Nettheim, Michael Keillor, John Strickland, Jed Mercurio, Sue Tully
Starring Martin Compston, Vicky McClure, Adrian Dunbar, Craig Parkinson
Theme music composer Carly Paradis
Country of origin United Kingdom
Original language(s) English
No. of series 5
No. of episodes 29 (list of episodes)
Cinematography Ruairi O’Brien (Series 1–2), Peter Robertson (Series 3), Anna Valdez Hanks (Series 4), Stephen Murphy (Series 4)
Running time 57 minutes
Release Original network BBC Two (2012–2016), BBC One (2017–)
Picture format HDTV 1080i
Audio format Dolby Digital
Original release 26 June 2012 – present

தொடர்புடைய கட்டுரைகள்

Bodyguard | British TV Crime series | Season 1

The Stranger | 2020 | British TV Crime series | Season 1

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. விதவிதமா, புதுசு புதுசா சும்மா பூந்து விளையாடுறிங்க கிரி .. கலக்குங்க.. நமக்கு தான் நேரம் கிடைக்க மாட்டுது .,. கிடைக்கிற நேரத்திலும் கிரிக்கெட் விளையாட போயிடுறேன் .. எப்பவும் busya இருப்பது போல் ஒரு மாயை ஆனால் எந்த வேலையும் முடிந்த திருப்தி இல்லை … நேரம் கிடைக்கும் போது பார்க்க முயற்சிக்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி

  2. யாசின் ரொம்ப நாளா கேட்கணும் என்று நினைத்து இருந்தேன். யார் கூட கிரிக்கெட் விளையாடுறீங்க?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here