மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 2)

31
மலேசியாவில் ஒரு நாள் 2

நான் முக்கியமாகப் போக நினைத்த இடம் பத்து மலை முருகன் கோவில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அங்கே தான் உள்ளது.

எனக்குப் பிடித்த கடவுள் முருகன் என்பதாலும் அங்கே செல்ல மிக ஆர்வமாக இருந்தேன்.

கோவிலுக்கு 272 படிகள் உள்ளது. செங்குத்தாக உள்ளது, படிகள் அகலம் குறைவாக உள்ளன.

முதியவர்கள், கால் வலி உள்ளவர்கள் ஏறுவது சிரமம். ஆனாலும் சில முதியவர்களைப் பார்க்க முடிந்தது.

இயற்கையாகவே அமைந்த இடம் என்பதால் பார்ப்பதற்கு வித்யாசமாக இருந்தது.

நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்திற்கு முன்பு மழை பெய்து இருந்தது அதனால் மழை நீர் சொட்டிக்கொண்டு இருந்தது சாதாரணமாகவே அப்படித் தான் என்று கூறினார்கள்.

மேலே சிமெண்ட் கூரை எதுவும் கிடையாது இயற்கையாகவே அமைந்துள்ள மலை(குகை) தான் கூரை.

எனவே, சாதாரணமாக மலையில் சுரக்கும் நீர் வடிவது எப்படி இயற்கை நிகழ்வோ அதே போல நீர் சுரந்து சொட்டி கொண்டே இருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது

குகை என்று கூறுவதால் குறுகலாக இருக்கும் என்று எண்ண வேண்டாம், நல்ல பெரிய உயரமான மற்றும் விசாலமான இடம்

மலை மீது ஏறி மீண்டும் கொஞ்சம் படிக்கட்டுகள் இறங்கி மூலவரை தரிசிக்க வேண்டும்.

சிறிய கோவில்

கோவில் பெரிய அளவில் எல்லாம் கிடையாது சிறிய கோவில் தான், ஆனால் இடம் மிக அமைதியாக இருப்பதால் அந்த இடத்திற்கு அது மேலும் அழகு சேர்க்கிறது.

நாங்கள் சென்ற போது அங்கே கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டு இருந்தது. அந்த இடத்தின் சூழ்நிலைக்கும் பாடலுக்கும் அப்படியொரு பொருத்தம்.

பொதுவாகவே சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம் கேட்க அருமையாக இருக்கும்.

அதுவும் இப்படி ஒரு அருமையான சூழ்நிலையில் அமைதியாகக் கேட்கும் போது விவரிக்க வார்த்தைகள் இல்லை

உணவகங்கள்

கோவிலின் அடிவாரத்தில் நம்ம ஊர் உணவகங்கள் உள்ளது, சுவையாக இருந்தது என்று கூற முடியாது

அடிவாரம் நல்ல விசாலமான இடம் தைப்பூசம் போன்ற நாட்களில் வரும் கூட்டத்திற்கு நன்கு ஈடு கொடுக்கும்.

நம்ம தல அஜித் பில்லாவில் ஆடுவாரே சேவல் கொடி! பாட்டிற்கு அதே இடம் தான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம பக்கத்து (மலேசியாவில் வாழும்) பொண்ணுகளைப் பார்த்துச் சைட் அடிக்க வாய்ப்புக் கிடைத்தது, முருகன் மன்னிப்பாராக 🙂 .

என்ன தான் சங்கி மங்கி என்றாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான், அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது 😉 .

நீர்வீழ்ச்சி

நாங்கள் மாலை நேரத்தில் சென்றதால் தாமதமாகி விட்டதால் விரைவில் கிளம்ப வேண்டியதாகி விட்டது.

நாங்கள் சென்ற இன்னொரு இடம் ஹி ஹி பெயர் மறந்து விட்டேன், கோலாலம்பூர் அருகிலேயே 20 நிமிட கார் பயணத்தில் அடைந்து விடலாம், அருமையான நீர்வீழ்ச்சி.

இதைத் தனியார், அரசு அனுமதி பெற்றுப் பராமரிப்பதாகக் கூறினார்கள், சிறப்பாகவே செய்து இருந்தார்கள் உள்ளே செல்ல இலவசம் வண்டியை நிறுத்த மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள்

சும்மா சொல்லக் கூடாதுங்க குற்றால நீர்வீழ்ச்சி கணக்கா ஊத்து ஊத்துன்னு ஊத்துது. விழும் தண்ணீர் குளம் போலத் தேங்கி பின் வழிந்து செல்லும் படி அமைத்து இருக்கிறார்கள்.

பசங்க பொண்ணுக பெரிசுங்க எல்லாம் பட்டாசா குதி போடுறாங்க. அதிலையும் பசங்க, இருக்கிற எல்லாப் பல்ட்டியையும் போட்டு அந்த இடத்தையே ரணகளம் ஆக்குறானுக 🙂 .

ஒரு மீனு உயிரோட இருக்க வாய்ப்பு இல்ல 🙂 .

அங்கேயும் நம்ம மக்கள் அதிகம், என்னடா இது! மலேசியாவா இல்ல தமிழ்நாடான்னு நமக்கு சந்தேகம் வந்துடும்.

ஏதோ வெள்ளை தோல பார்க்கிறதால சரி இது நம்ம ஊரு இல்லைன்னு முடிவு பண்ணிக்க வேண்டியதா இருக்குது

அங்கே இருந்த பூங்காவில் ஏதோ சீரியல் பாட்டு எடுத்துக்கொண்டு இருந்தாங்க.

சரி என்ன தான் எடுக்கறாங்கன்னு நம்ம பண்பாட்டை 🙂 விட முடியாமல் கொஞ்ச நேரம் பார்த்தேன்.

ஒரு காட்சியையே ஒன்பது வாட்டி எடுத்துட்டு இருக்காங்க..இவங்க மொக்கை தாங்காம எஸ்கேப் ஆகிட்டேன்.

அங்கே இருந்தவங்க ஒரு சிலர் காதுல கடுக்கன், ஸ்ப்ரிங் முடி, கலர் முடி, உதட்டுல என்னமோ கிளிப் மாதிரி போட்டு இருப்பாங்களே அது.

தலை முடிய இதற்க்கு மேல் கொலை செய்ய முடியாது என்கிற ரேஞ்சுக்கு இருந்து நம்மை டென்ஷன் பண்ணுனாங்க.

இமிக்ரேசன்

எல்லாம் முடிந்து திரும்பிச் சிங்கை வரும் போது மலேசியா இமிக்ரேசன்ல பொறுப்பா சீல் மாற்றிக் குத்திட்டாங்க.

அதாவது Nov 29 2008 மலேசியா க்கு உள்ளே நுழைந்து Nov 1 2008 வெளியே போகிற மாதிரி.

நம்ம இமிக்ரேசன் அண்ணாத்தை பொறுப்பா Dec 1 க்கு Nov 1 சீல் குத்திட்டாரு, எத்தனை பேருக்குக் குத்தினாரோ!!!

நாம யாரு! வழக்கம் போலப் பார்க்காம சிங்கப்பூர் இமிக்ரேசன் ல நுழைந்தா கோழிய அமுக்குற மாதிரி உடன் வந்தவரைப் பிடிச்சிட்டாங்க.

அவர் சீல் எங்கேன்னு கேட்குறாரு நாம செந்தில் வாழை பழ காமெடி மாதிரி.

அது தான் சார் இது

இது போறதுக்கு வறதுக்கு எங்கே!

அது தான் சார் இது.

அப்புறம் பாஸ்போர்ட்டை எங்களிடம் காட்டி விளக்கினதுக்கு அப்புறம் ஐயையோ! நம்மை ஜட்டியோட சன் டிவி செய்தில மாதிரி உட்கார வைத்து விடுவாங்களோன்னு பயம் ஆகி விட்டது.

அடேய்! கிரி உங்களுக்குச் சங்கு தாண்டி ன்னு பீதி ஆகி விட்டது

சரி! மலேசியா இமிக்ரேசன் பக்கத்துல தான்.. அவங்க கிட்ட காட்டி ஏதாவது செய்வோம்னு பீதியில யோசிச்சுட்டு இருக்கும் போது (நமக்குத் தான் அதுக்குள்ளே சூப்பர் சானிக் வேகத்துல கற்பனை ஓடுமே 😀 ), நம்ம சிந்தனையைக் கலைத்து…

“சரி! இனிமே பார்த்து ஒரு முறை செக் பண்ணிட்டு வாங்குங்க!” என்று எச்சரித்து அனுப்பினாங்க..

நல்ல வேளைடா சாமி .. மலேசியா போக நினைத்துக் கடைசில பின்னாடி பிரம்படி கொடுத்துப் பழுக்க வைத்து இருப்பாங்கன்னு கலவரம் ஆகிட்டோம்.

அதுவும் உடன் வந்தவர் செம டென்ஷன் ஆகிட்டார்.

தப்பிச்சா போதும்னு, அருள் பாலித்த சிங்கை இமிக்ரேசன் கடவுளுக்கு நன்றி சொல்லி லிட்டர் கணக்குல வழிந்து விட்டு ஜூட் விட்டு வந்தாச்சு..

கிளைமாக்ஸ் தவிர மலேசிய பயணம் ஒரு நாள் சூப்பர் தான். ஆனா கடைசில பேதி மருந்து கொடுக்காமையே வயிற்றைக் கலக்கி விட்டது தான் ரொம்ப நேரம் மனசுல இருந்தது.

பின் குறிப்பு

அதிக அளவில் தகவல்கள் தரும்படி சில நண்பர்கள் கேட்டு இருந்தீர்கள், நான் சென்றதே ஒரு நாள் தான் எனவே இவ்வளவு தான் கொடுக்க முடிந்தது.

பதிவு போட வேண்டும் என்பதற்காகச் சுவாராசியம் மற்றும் அவசியம் இல்லாத தகவல்களைக் கொடுக்க விருப்பம் இல்லை.

தேவை இல்லாமல் இது பற்றிய பதிவின் எண்ணிக்கையையும் கூட்டவும் விருப்பமில்லை.

மீண்டும் இதைப் போலச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் அதிகத் தகவல்களைத் தெரிந்து பதிவிடுகிறேன்.

Read: மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 1)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

31 COMMENTS

  1. கோயில் படிக்கட்டு செங்குத்தா இருக்கா?

    அடக் கடவுளே….. அடுத்தவருசம் போய்வரத் திட்டம் வச்சுருக்கேனே.

    கால்மூட்டு வலி வேற இருக்கே….

    பதிவு நல்லா இருந்துச்சு கிரி. எனக்கு வேண்டிய முக்கிய இன்ஃபர்மேஷன் கிடைச்சதே:-)

  2. மலேசிய குடிவரவு/குடியகல்வு திணைக்களம் இப்படித்தான். வாங்கிற சம்பளத்துக்கு குறைவாத்தான் வேலை பார்ப்பார்கள். நான் மலேசியா செல்லும் போது, இதனால் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது வழக்கம். ஏனெண்டால் நம்ம சிங்கை குடிவரவு/குடியகல்வு திணைக்களம் பக்காவா கண்ணில விளக்கெண்ணையை ஊத்தி வைச்சிக் கொண்டு இருப்பார்கள்…அங்கே அவங்கள் ஏதாவது பிழை விட்டால் ஆப்பு நமக்கு தான். நல்ல வேளை நீங்கள் அங்கே திரும்பி போகவில்லை..போயிருந்தால்..கோவிந்தா கோவிந்தா தான்…

    🙂

  3. கிரி,

    நல்ல பதிவு.

    //பதிவு போட வேண்டும் என்பதற்காக சுவாராசியம் மற்றும் அவசியம் இல்லாத தகவல்களை கொடுக்க விருப்பம் இல்லை, தேவையில்லாமல் இது பற்றிய பதிவின் எண்ணிக்கையையும் கூட்டவும் விருப்பமில்லை//

    உங்களை நன்றாகத் தெரிந்த பதிவுலகத்திற்கு இந்த வார்த்தைகளைச் சொல்லத் தேவையில்லை.

  4. புகைப்படம் இன்னும் கொஞ்சம் தொலைவில் எடுத்து இருக்கலாம்.

  5. //துளசி கோபால் said… கால்மூட்டு வலி வேற இருக்கே….//மேடம் கவலை படாதீங்க. நீங்க பொறுமையா நடந்து போகலாம். நான் இது உண்மையில் என் அம்மாவை மனதில் வைத்தே கூறினேன், என் அம்மாவை அங்கே அழைத்து செல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப ஆசை பட்டேன், ஆனால் இதில் என் அம்மாவால் நடக்க முடியாது, இதனால் நான் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை :-(//பதிவு நல்லா இருந்துச்சு கிரி//நன்றி மேடம் ===============//’டொன்’ லீ said… நான் மலேசியா செல்லும் போது, இதனால் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது வழக்கம்//இனிமேல் நானும் :-))//சிங்கை குடிவரவு/குடியகல்வு திணைக்களம் பக்காவா கண்ணில விளக்கெண்ணையை ஊத்தி வைச்சிக் கொண்டு இருப்பார்கள்//200% உண்மை //அங்கே அவங்கள் ஏதாவது பிழை விட்டால் ஆப்பு நமக்கு தான்.//ஜஸ்ட் ல எஸ்கேப் ஆகிட்டேன் …:-)))====================//வடகரை வேலன் said… கிரி,நல்ல பதிவு.//நன்றி வேலன் //உங்களை நன்றாகத் தெரிந்த பதிவுலகத்திற்கு இந்த வார்த்தைகளைச் சொல்லத் தேவையில்லை//இது என் மீதான உங்கள் அன்பை காட்டுகிறது, இருந்தாலும் நான் அதிகம் பதிவு எழுதுவதில்லை என்னை தெரியாதவர்கள் பலர் இருப்பர், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றே கூறினேன்.

  6. //கோவி.கண்ணன் said… புகைப்படம் இன்னும் கொஞ்சம் தொலைவில் எடுத்து இருக்கலாம்//கோவி கண்ணன் எந்த படம் சொல்றீங்க? குகைக்குள்ள எடுத்த படம் என்றால் நாங்கள் சென்ற போது ரொம்ப இருட்டாகி விட்டது, தொலைவில் எடுத்தால் ஒன்றுமே தெரியாது ======================//vasuhi said… படங்கள் அழகாக இருக்கின்றன. தகவல்களையும் முடிந்த வரை அலுப்பில்லாமலேயே எழுதி இருக்கிறீர்கள்.//நன்றிங்க வாசுகி //இந்த வசனத்தில் இருந்து கட்டுரை முடியும் வரை comedy பின்னி எடுத்திருக்கிறீங்க//நன்றிங்க.. நான் கோயம்புத்தூர் காரங்க அது இயல்பாவே எனக்கு வரும்.//நிஜமாக நல்லா பயந்து இருப்பீர்கள் போல.//ஆமாங்க. ஏன் என்றால் சிங்கையில் தண்டனைகள் கடுமையாக இருக்கும், பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டாங்க, அதனால் பீதி ஆகி விட்டது.//செந்திலின் வாழைப்பழ comedy இற்கு ஒப்பிட்டு எழுதினீங்க பாருங்கோ….அதை யோசித்து பார்க்க நிஜமாகவே சிரிப்பை அடக்க முடியல.//:-)))) ஆனா நான் அங்கே தொடை நடுங்கி விட்டேன்..வெட வெடன்னு ஆகிட்டேன் உண்மையில் நான் காமெடி சென்ஸ் உள்ள ஆளு தான், ஆனால் பெரும்பாலும் நான் எழுதும் பதிவுகளுக்கு அந்த மாதிரி காமெடி செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை, இப்படி கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்கிறேன் :-)))========================//முரளிகண்ணன் said… :-)))))))))(For imigration part)//:-))) வருகைக்கு நன்றி முரளிகண்ணன்

  7. பதிவு அருமை…

    // பதிவு போட வேண்டும் என்பதற்காக சுவாராசியம் மற்றும் அவசியம் இல்லாத தகவல்களை கொடுக்க விருப்பம் இல்லை//

    சூப்பர்…

  8. பதிவும் படங்களும் அருமை. குறிப்பாக குகையின் படத்தை தங்கள் விவரிப்புடன் இணைத்துக் கற்பனை செய்து கொள்ள முடிந்தது.

    //சுவாராசியம் மற்றும் அவசியம் இல்லாத//

    சொல்லவே வேண்டாம். சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லாத பதிவு.

    // மீண்டும் இதை போல செல்ல வாய்ப்பு கிடைத்தால் அதிக தகவல்களை தெரிந்து பதிவிடுகிறேன்.//

    அடுத்த வாய்ப்பு சீக்கிரம் வர வாழ்த்துகிறேன்.

  9. //பாலு மணிமாறன் said… Nice Post Giri..//நன்றி பாலு மணிமாறன்//Malaysian Tamils are really kind, honest and caring people.//நான் பார்த்தவரை நீங்கள் கூறியது சரி.உங்கள் முதல் வருகைக்கு நன்றி====================//சரவணகுமரன் said… பதிவு அருமை…//நன்றி சரவணகுமரன் ======================//ராமலக்ஷ்மி said… பதிவும் படங்களும் அருமை//நன்றி ராமலக்ஷ்மி //அடுத்த வாய்ப்பு சீக்கிரம் வர வாழ்த்துகிறேன்.//:-) பார்ப்போம்

  10. அந்த சிலை தங்கமா
    நம்ம ஊராய் இருந்தால் கை தனியா கால் தனியா கழட்டிட்டு போயிருப்பானுங்க, அம்புட்டு பக்தியாமாம்.

    🙂

  11. படங்கள் அழகாக இருக்கின்றன. தகவல்களையும் முடிந்த வரை அலுப்பில்லாமலேயே எழுதி இருக்கிறீர்கள்.

    //நாம யாரு! வழக்கம் போல பார்க்காம சிங்கப்பூர் இமிக்ரேசன் ல நுழைந்தா கோழிய அமுக்குற மாதிரி உடன் வந்தவரை பிடிச்சிட்டாங்க //

    இந்த வசனத்தில் இருந்து கட்டுரை முடியும் வரை comedy பின்னி எடுத்திருக்கிறீங்க.but நிஜமாக நல்லா பயந்து இருப்பீர்கள் போல.

    செந்திலின் வாழைப்பழ comedy இற்கு ஒப்பிட்டு எழுதினீங்க பாருங்கோ….
    அதை யோசித்து பார்க்க நிஜமாகவே சிரிப்பை அடக்க முடியல.

    ஹி ஹி ஹி ……

    கலக்குவது என்று முடிவே எடுத்திட்டீங்களா.

  12. //வால்பையன் said… அந்த சிலை தங்கமாநம்ம ஊராய் இருந்தால் கை தனியா கால் தனியா கழட்டிட்டு போயிருப்பானுங்க, அம்புட்டு பக்தியாமாம்.//ஹி ஹி ஹி ====================//டுபுக்ராணி said… உலகத்துலேயே குகை குள்ள அமைஞ்ச முருகன் கோவில் இது ஒன்னு தான்.//எனக்கு தெரியாதுங்க. ஆமா! என்னங்க இப்படி ஒரு பேரு வைத்து இருக்கீங்க :-))என்னால எல்லாம் அப்படி கூப்பிட முடியாது, உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராணி.

  13. //மங்களூர் சிவா said…
    பதிவு மிக சுவாரசியமாக இருந்தது. க்ளைமேக்ஸ் தவிர.//

    நன்றி சிவா 🙂

  14. எந்த முருகன் கோவிலுக்கும் இல்லாத ஒரு பெருமை எந்த கோவிலுக்கு ஒன்று உள்ளது. பெரும்பாலும் முருகன் கோவில் மலை மேல தன் இருக்கும், உலகத்துலேயே குகை குள்ள அமைஞ்ச முருகன் கோவில் இது ஒன்னு தான்.

  15. Nice one Giri..

    Your post make us feel that we need to visit this place at least one. I feel the same in your singapore post also. Hats off Giri

  16. //arun said… Nice one Giri..//நன்றி அருண் //Your post make us feel that we need to visit this place at least one. I feel the same in your singapore post also. Hats off Giri//நீங்கள் கூறுவது எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது அருண் நன்றி.===================//மோகன் said… கிரி, நல்லா இருந்துச்சு உங்க மலேசிய அனுபவ பதிவு! //நன்றி மோகன் //அதாவது தலையில கார குழம்பு ஊத்தின மாதிரி இருந்துசின்னு சொல்லறீங்க.//ஹா ஹா ஹா அதே!//அது. வெளிநாட்டுக்கு போனாலும் நம்ம பண்பாட்டை காப்பாத்தறீங்க!//இல்லைனா தப்பாகிடுமில்ல :-)))//வாங்குவார் ஒரு இடத்தில்(!). தப்பித்தீர்கள். :))//விவேக் செய்த மாதிரி செய்தால் எனக்கு அங்கேயே சங்கு தான் :-))))

  17. கிரி, நல்லா இருந்துச்சு உங்க மலேசிய அனுபவ பதிவு!

    //அங்கே இருந்தவங்க ஒரு சிலர் காதுல கடுக்கன், ஸ்ப்ரிங் முடி, கலர் முடி, உதட்டுல என்னமோ கிளிப் மாதிரி போட்டு இருப்பாங்களே அது, தலை முடிய இதற்க்கு மேல் கொலை செய்ய முடியாது என்கிற ரேஞ்சுக்கு இருந்து நம்மை டென்ஷன் பண்ணுனாங்க//

    அதாவது தலையில கார குழம்பு ஊத்தின மாதிரி இருந்துசின்னு சொல்லறீங்க.

    //அங்கே இருந்த பூங்காவில் ஏதோ சீரியல் பாட்டு எடுத்துக்கொண்டு இருந்தாங்க..சரி என்ன தான் எடுக்கறாங்கன்னு நம்ம பண்பாட்டை :-)) விட முடியாமல் கொஞ்ச நேரம் பார்த்தேன்,//

    அது. வெளிநாட்டுக்கு போனாலும் நம்ம பண்பாட்டை காப்பாத்தறீங்க!

    நல்ல வேளை, விவேக் எதோ ஒரு படத்தில் மலேசிய போலீசிடம் அடி வாங்குவார் ஒரு இடத்தில்(!). தப்பித்தீர்கள். :))

  18. //நசரேயன் said…
    மலேசிய போகமலே நேரில் பார்த்த அனுபவம்//

    நன்றி நசரேயன். உங்கள் (US) ஊர் பற்றியும் எழுதலாமே! நாங்களும் தெரிந்து கொள்வோம்.

  19. இரசிக்கும்படியான பதிவாக இருந்தது கிரி. ஆம் நானும் மலேசியர்தான். இது தங்களின் முந்தைய கேள்விக்கான பதி 🙂

  20. //இனியவள் புனிதா said…
    இரசிக்கும்படியான பதிவாக இருந்தது கிரி. //

    நன்றி புனிதா

    //ஆம் நானும் மலேசியர்தான். இது தங்களின் முந்தைய கேள்விக்கான பதி :-)//

    அப்பாடா! நான் சரியா தான் கண்டு பிடித்து இருக்கேன் 😉

  21. கிரி!படங்கள் கலை கட்டுகிறது.இனிப் பதிவுக்குப் போகிறேன்.

  22. //கோயில் படிக்கட்டு செங்குத்தா இருக்கா?

    அடக் கடவுளே….. அடுத்தவருசம் போய்வரத் திட்டம் வச்சுருக்கேனே.//

    டீச்சர்! இன்னும் ஒரு வருசம் இருக்கிறது.அதற்குள் மூட்டு வலிக்கு ஒரு மருந்து. மூட்டு வலிக்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது உடல் வாகு மற்றும் தசை நார்களுக்கு அதிக வேலை தராமல் இருப்பது.இந்தப் பின்னூட்டம் படிச்சிட்டு நாளையிலிருந்து பதிவு போடறதுக்கு முன்னாடி நல்ல பிள்ளையா காலை நேரத்தில் 10,15 நிமிசம் கால் தசைகளுக்கு யோகா போன்ற சிறு பயிற்சிகள் செய்தால் படிகள் செங்குத்துப் பற்றியெல்லாம் கவலையே வேண்டாம்.

    (கிரி!பின்னூட்டத்தை அப்படியே டீச்சருக்கு கடத்துங்கள் பார்க்கலாம்.)

  23. //ராஜ நடராஜன் said…
    கிரி!பின்னூட்டத்தை அப்படியே டீச்சருக்கு கடத்துங்கள் பார்க்கலாம்.//

    கடத்தல் செய்தல் சட்டத்திற்கு புறம்பானது :-))

    உங்க ஆலோசனை நல்லா இருக்கு

  24. டீச்சர் ‘கடத்தாமலேயே’ பார்த்தாச்சு.

    அடுத்த வருசத்துக்கு இன்னும் 19 நாள்தான் இருக்கு.

    யோகா எல்லாம் செய்ய நோ ச்சான்ஸ்.
    டைகர் பாம், அமிர்தாஞ்சன், அயோடெக்ஸ், டீப் ஹீட், ருமாண்டில் எல்லாம் வாங்கி அடுக்கி வச்சுருக்கேன்.

  25. கிளைமாக்ஸ் மிக்க அருமை கிரி.
    ஏன் ஒரு நாள் பயணம், மூன்று நாட்கள் சென்று வந்து இருக்கலாமே. பக்கத்திலே இருப்பதால் இந்த அசட்டையோ…

  26. பத்து மலை முருகன் கோவில். உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அங்கே தான் உள்ளது.
    உலகத்துலேயே குகை குள்ள அமைஞ்ச முருகன் கோவில் இது ஒன்னு தான்
    கோவில் பெரிய அளவில் எல்லாம் கிடையாது சிறிய கோவில் தான், ஆனால் இடம் மிக அமைதியாக இருப்பதால் அந்த இடத்திற்கு அது மேலும் அழகு சேர்க்கிறது.
    தை பூசதன்று ஒறு லட்சம் பக்தர்கள் கோவிளுயக்கு வருவார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here