மலேசியாவில் ஒரு நாள் – 1

52
மலேசியாவில் ஒரு நாள்

நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாகத் தள்ளித் தள்ளிச் சென்று கடந்த வாரம் மலேசியா சென்று வந்தேன்.

மலேசியாவில் ஒரு நாள்

சிங்கபூருக்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு பாலம் தான் உள்ளது.

இங்கே இருந்து செல்லும் போது பாலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் இமிகிரேசன் முடிவில் மலேசியா இமிகிரேசன். இந்தப் பாலம் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது.

ஒரு நாள் தான் செல்ல முடிந்தது அதனால் அதிக இடங்கள் செல்ல முடியவில்லை. சிங்கப்பூர் ல் இருந்து பேருந்து ரயில் கப்பல் விமானம் மூலம் செல்லலாம்.

விமானம் மூலம் சென்றால் எதையும் காண முடியாது மற்றும் செலவு பிடிக்கும் என்பதால் பேருந்தில் செல்வதாக முடிவு செய்து நானும் நண்பரும் சென்றோம்.

மலேசியா நெடுஞ்சாலை

மலேசியா நெடுஞ்சாலை மிகச் சிறப்பாக உள்ளது, சாலைகள் மிகத் தரமாக இருந்தது இரு புறமும் மரங்கள் மலைகள் என்று இயற்கை சூழ்ந்தது.

ஓட்டுநர் நகரை தாண்டியவுடன் விசை மிதியில் குச்சி வைத்து விடுவார் என்று நினைக்கிறேன் 🙂 .

வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை போக்குவரத்து நெரிசல் இல்லை, பிரேக் போடவில்லை. ஒரே வேகத்தில் நிற்காமல் போய்க் கொண்டு இருக்கிறது.

கோலாலம்பூர் போக்குவரத்து நெரிசல்

ஆனால் கோலாலம்பூர் (K L என்று அழைக்கிறார்கள்) அடைந்தவுடன் போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் ஆகி விடுகிறது.

நண்பர் போக்குவரத்து நெரிசல் பற்றிக் கூறி இருந்தாலும் நான் நம்பவில்லை ஆனால், பார்த்தவுடன் தான் அது உண்மை என்று தோன்றியது.

அங்குக் கார்கள் அதிகமாக உள்ளன. சுமார் ஒரு கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேல் போக்குவரத்து நிற்கிறது. வழியில் அதிக அளவில் சுங்க சாவடிகள் இருந்தன.

சிங்கையில் இருந்து 6 மணி நேர பேருந்து பயணத்தில் கோலாலம்பூரை அடையலாம்

கோலாலம்பூர் எந்த ஒரு பில்ட் அப் ம் இல்லாமல் வந்தது போல இருந்தது.

பொதுவாக ஒரு பெரிய நகரத்தை அடையும் போது வழியில் அதிக அளவில் கடைகள், நெருக்கமான கட்டிடங்கள், வண்ணமயமான சுற்றுப் புறம் என்று எதிர்பார்த்தேன்.

அவை எல்லாம் நான் சென்று அடைந்த இடத்தில் இருந்தது ஆனால், வழியில் அவ்வாறு பார்த்ததைப் போல நினைவில்லை.

டைம் ஸ்கொயர்

டைம் ஸ்கொயர் என்ற இடம் அருகில் தங்கி இருந்தோம், அதன் அருகிலும் சுற்று புறங்களிலும் ஏகப்பட்ட கடைகள் வண்ணமயமான இடங்கள் (நாம் மலேசியா விளம்பரங்களில் காண்பது போல).

ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்தார்கள்.

அங்கே உள்ள பிரபலமான BB பிளாசாவில் அனைத்து வகைப் பொருட்களும் கிடைக்கின்றன, மிகப் பெரிய இடம் மற்றும் அதிகளவில் கடைகள்.

தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் உள்ளார்கள், தமிழ் பேசும் நபர்களையே அதிகளவில் கண்டோம், வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வே இல்லை.

ஆமாவா!

அவர்கள் பேசும் தமிழ் கொஞ்சம் வித்யாசமாக உள்ளது, அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள்.

தமிழர்கள் அதிகளவில் இருந்தாலும் தமிழ் அங்கே சிங்கையைப் போல ஆட்சி மொழிகளுள் ஒன்றல்ல.

அங்கு மலாய் மொழி பேசப்படுகிறது மற்றும் அதுவே அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆங்கிலத்தை எங்கும் காண முடியவில்லை.

ஒரு சில இடங்கள் தவிர. இதனால் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிய சிரமமாக உள்ளது.

அவர்கள் ஜப்பான் போல அவர்கள் மொழிக்கே முன்னுரிமை தருக்கிறார்கள். இதனால் ஆங்கிலத்தில் பேச மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அங்கே டாக்சி, காஸில் அதிகளவில் ஓடுகிறது, பெட்ரோல் போடும் இடங்களில் காஸ் நிரப்ப வசதி உள்ளது.

போக்குவரத்து விதிமுறைகள் அவ்வளவாகப் பின்பற்றபடுவதில்லை.

மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர்.

இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தில் உள்ளார்கள் (வாலிப வயசு 😀 ).

மசாஜ் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளன

“லேடிபாய்” எனக் கூறப்படும் ஆண்களாய் இருந்து பெண்களை மாறியவர்கள் பலர் உள்ளதாக டாக்சி ஓட்டுநர் கூறினார். இவர்கள் உண்மையான பெண்களை விட அழகாக இருப்பார்கள் என்று கூறினார் 🙂 .

பாலியல் தொழிலாளர்களும் குறிப்பிடத் தக்க அளவில் தென்பட்டனர்

இரவில் நெடு நேரம் வண்ணமயமாகப் பரபரப்பாக இருக்கிறது

ரிங்கட்

அங்கே பணம் “ரிங்கட்” என்று அழைக்கப்படுகிறது நம்ம ஊர் “ருபாய்” போல

பிரபலமான இரட்டை கோபுரம் அருகில் சென்று பார்க்க நேரமில்லை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டேன்.

அங்கே இருந்த முக்கியச் சாலையில் படத்தில் இருப்பவர் சில்வர் பெயிண்ட் பூசி கொண்டு சிலை போல அமர்ந்து இருந்தார், கொஞ்சம் கூட அசையவில்லை.

நான் ரொம்ப நேரம் இருந்து பார்த்தேன்.ரொம்பக் கஷ்டமான விஷயம் தான் ஆனால் அவருக்கு வசூல் நல்லா கிடைத்தது.

நான் மேலே கூறியது கோலாலம்பூர் பற்றிய இடங்களை மட்டுமே, மலேசியாவில் மற்ற இடங்கள் எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை.

அடுத்தப் பதிவில் உலகின் மிகப்பெரிய முருகன் சிலையுள்ள அழகான கோவிலான பத்து மலை பற்றிக் கூறுகிறேன்.

Read: மலேசியாவில் ஒரு நாள் ([இறுதி]பாகம் 2)

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

52 COMMENTS

  1. //மங்களூர் சிவா said…
    ப்ரிஜ்ஜ தாண்டி அந்தாண்ட போனதுக்கே அயல்நாட்டு பயணம்னு லேபிளா???
    கிரி கொஞ்சம் ஓவரா இல்ல???//

    ஹா ஹா ஹா ஹா

    ஏங்க! சிவா எல்லை தாண்டினா அது வேறு நாடு தானே.. 🙂 ஐரோப்பா நாடுகள் சென்றால் சிறு ரயில் பயணத்திலேயே பல நாடுகளை அடைய முடியும்.

    //நல்லா இருந்தது பதிவு.//

    நன்றி சிவா. திருமணத்திற்கு பிறகு ரொம்ப பிசி ஆகிட்டீங்க போல அவ்வளவாக உங்கள் பின்னூட்டத்தை மற்ற பதிவுகளில் காண முடியவில்லை.

  2. ஆறு மணிநேரமா ஆச்சு. நான் போனப்ப க் காலை 7 மணிக்கு பஸ்ஸில் ஏறி 12.30க்கு கே.எல். போயாச்சேப்பா. அதுவும் நல்ல சொகுசு பஸ். ஏர்ஹோஸ்டஸ் போல பஸ் ஹோஸ்டஸ் காஃபி, டீ எல்லாம் வேணுமான்னு கேட்டுக் கொடுத்தாங்க. அப்புறம் ஒரு இடத்தில் பயணிகளுக்கு காலை உணவு கலெக்ட் பண்ணிக்கிட்டார் ஓட்டுனர். நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கும் சேர்த்துத்தான் காசு கட்டறோம். அப்புறமா…… ஒரு ரெஸ்ட் ஏரியாவுலே 20 நிமிசம் நிறுத்துனாங்க.

    அங்கே பழங்கள் எல்லாம் அழகா நறுக்கி ஒரு பையில் போட்டு அதுக்கு மிளகாய்த்தூள் உப்பு தூவிக் கொடுத்தாங்க. ஒரே ஒரு ரிங்கெட் தான். எங்க காசுக்கு வெறும் 50 செண்ட். அடடா….. என்ன மலிவுன்னு பூரிச்சுப்போயிட்டேன்.

    சுமோ மாலில் பொருட்கள் உண்மையாவே மலிவு.

  3. கிரி,

    மலேசிய பயணக்கட்டுரையா? கலக்குங்க.

  4. //முரளிகண்ணன் said…
    கிரி, முருகன் கோவிலுக்கு போகவில்லையா?//

    மலேசியா போனதே அதற்க்கு தான் முரளிகண்ணன் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

    ====================================================================

    //நான் ஆதவன் said…
    //தமிழர்கள் அதிகளவில் இருந்தாலும் தமிழ் அங்கே சிங்கையை போல ஆட்சி மொழிகளுள் ஒன்றல்ல.//

    அப்படியா! நான் ஆட்சிமொழி என்றல்லவா நினைத்தேன் :-(//

    நானும் முன்பு அப்படி தான் நினைத்து இருந்தேன்

  5. //துளசி கோபால் said…
    ஆறு மணிநேரமா ஆச்சு. நான் போனப்ப க் காலை 7 மணிக்கு பஸ்ஸில் ஏறி 12.30க்கு கே.எல். போயாச்சேப்பா//

    என்ன மேடம்! அரை மணி நேரம் தானே அதிகம், அப்போது போக்குவரத்து நெரிசல் இருந்தது.

    //அதுவும் நல்ல சொகுசு பஸ்//

    நான் வரும் போது டபுள் டக்கர் பஸ் ல வந்தேன். டிவி(தனிதனி) மற்றும் பல வசதிகள் இருந்தது

    //நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கும் சேர்த்துத்தான் காசு கட்டறோம். //

    நான் அப்படி செல்லவில்லை வழியில் சாப்பிட புட் கோர்ட்டில் நிறுத்தினார்கள்

    //அங்கே பழங்கள் எல்லாம் அழகா நறுக்கி ஒரு பையில் போட்டு அதுக்கு மிளகாய்த்தூள் உப்பு தூவிக் கொடுத்தாங்க//

    உண்மை தான் மேடம், நான் கார்ன் வாங்கினேன் 🙂

  6. //Vaanathin Keezhe… said…
    “மலேசிய தமிழ்ப் பெம்கள் அழகாக உள்ளனர், நான் பார்த்தவரை…..
    …..மசாஜ் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளன”
    -இந்த அனுபவமெல்லாம் அடுத்த பாகத்தில் வருமா!! :)//

    ஹா ஹா ஹா

    வினோ என்னுடையது வெறும் பார்வை அனுபவம் மட்டுமே :-))

    ===================================================================

    // வெயிலான் said…
    கிரி,
    மலேசிய பயணக்கட்டுரையா? கலக்குங்க.//

    நன்றி வெயிலான்

  7. சிங்கப்பூரைப் பற்றி எழுதியது போலவே சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீகள். பத்து மலை கோவில் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    //அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள்//

    ஆமாவா:)?

    கர்நாடகாவிலும் தமிழர் அல்லாதார் தமிழ் பேசுகையில் இப்படித்தான் கூறுவார்கள்!

  8. //.:: மை ஃபிரண்ட் ::. said…
    எங்க ஊரு உங்களை கவர்ந்தது என்பதை கேட்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது கிரி.//

    நன்றிங்க. உங்களை இதற்க்கு முன் நான் தொடர்பு கொண்டிருந்தில்லை என்பதால் அழைக்க முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்.

    //கே எல் ஒரு ஏரியா மட்டும் சுத்தி பார்த்துட்டு கிளம்பிட்டீங்களா? //

    இல்லைங்க பத்து மலை மற்றும் K L அருகில் உள்ள ஒரு நீர்வீழ்சிக்கும் சென்றோம் பெயர் மறந்து விட்டேன், சூப்பராக இருந்தது.

    //அந்த டைம் ஸ்குவேர் மேலேத்தான் குருவி விஜயும், பில்லா அஜித்தும் ஒரு சில காட்சியில நடித்தார்கள்.//

    அப்படியா! நம்ம விஜய் ஸ்பைடர் மேன் மாதிரி தாவுவாரே அந்த கட்டிடமா!

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //vasuhi said…
    பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது. பாகம் 2 ஐயும் எதிர்பார்க்கிறேன்.//

    நன்றி வாசுகி (என் அக்காவின் பெயரும் வாசுகி தான்). உங்களின் தொடர்ச்சியான பின்னூட்டத்திற்கும் நன்றி.

  9. //இராம்/Raam said…
    கிரி,

    நான் வந்து ரெண்டாவது வாரமே மலேசியா போயிட்டு வந்துட்டேன்… :)//

    கில்லாடியா இருக்கீங்க 🙂

    //நான் போனப்போ பத்துமலை முருகன் கோவிலில் எடுத்த படம்…//

    சூப்பரா இருக்குங்க ராம். உங்க அளவிற்கு நான் எடுக்கல.

    ===================================================================

    //ராமலக்ஷ்மி said…
    சிங்கப்பூரைப் பற்றி எழுதியது போலவே சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறீகள். பத்து மலை கோவில் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்//

    விரைவில் எழுதுகிறேன் நன்றி ராமலக்ஷ்மி. எழுத நிறைய இல்லை அடுத்த பதிவில் முடிந்து விடும். ஒரு நாள் தான் சென்றேன்.

    //ஆமாவா:)?//

    :-))))

    //கர்நாடகாவிலும் தமிழர் அல்லாதார் தமிழ் பேசுகையில் இப்படித்தான் கூறுவார்கள்!//

    ஆமாவா :-))))))

  10. //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர்//
    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்

  11. கிரி நீங்கள் எழுதும் பயணக் (அல்லது இடங்கள் பற்றிய) கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது. வேணுமென்றே அப்படி எழுதுகிறீர்களா..இல்லை தெரிந்தே தான் பகிடியா எழுதுகிறீர்களா..?

    //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர் நான் பார்த்தவரை..//

    ஆஹா…வீட்ட மாட்டிக்க போறிங்க…

  12. //மங்களூர் சிவா said…
    ப்ரிஜ்ஜ தாண்டி அந்தாண்ட போனதுக்கே அயல்நாட்டு பயணம்னு லேபிளா???
    கிரி கொஞ்சம் ஓவரா இல்ல???

    :)))))))))))))))))))))))))))
    //

    ரிப்பீட்டே !

    மலேசியா நம்ம ஊர் சாயலில் பொறுப்பற்ற பொதுமக்கள் இருந்திருப்பார்களே.

  13. //தமிழர்கள் அதிகளவில் இருந்தாலும் தமிழ் அங்கே சிங்கையை போல ஆட்சி மொழிகளுள் ஒன்றல்ல.//

    அப்படியா! நான் ஆட்சிமொழி என்றல்லவா நினைத்தேன் 🙁

  14. “மலேசிய தமிழ்ப் பெம்கள் அழகாக உள்ளனர், நான் பார்த்தவரை…..
    …..மசாஜ் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளன”
    -இந்த அனுபவமெல்லாம் அடுத்த பாகத்தில் வருமா!! 🙂

  15. எங்க ஊரு உங்களை கவர்ந்தது என்பதை கேட்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது கிரி.

    கே எல் ஒரு ஏரியா மட்டும் சுத்தி பார்த்துட்டு கிளம்பிட்டீங்களா?

    அந்த டைம் ஸ்குவேர் மேலேத்தான் குருவி விஜயும், பில்லா அஜித்தும் ஒரு சில காட்சியில நடித்தார்கள்.

  16. //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர்//

    வழிமொழிகிறேன் 🙂

  17. //மோகன் said…
    கிரி, நல்ல பதிவு,//

    நன்றி மோகன்

    //உங்க கிட்டே இன்னும் எதிர் பார்க்கிறேன் (ரோம்) . இரண்டாவது பதிவு போட்டுடுங்க.//

    என்னங்க மோகன்! நான் போனதே ஒரு நாள் தான், அதிகளவில் தகவல்கள் தருவது சிரமம் தான், முயற்சிக்கிறேன் 🙂

    //கன்னடத்தில் அப்படியா என்பதை “ஹவுதா” என்று கேட்பார்கள். ஹவுது என்றால் ஆமாம்.//

    அப்படியா!!

    ===================================================================

    //வால்பையன் said…
    //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர்//
    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்//

    குசும்பு 🙂

  18. //தராசு said…
    மலேஷிய பயணக் கட்டுரை அருமை//

    நன்றி தராசு

    //ஆமா அங்க பார்த்த தமிழர்கள் உங்களை பார்த்தா பேசறாங்களா//

    நாம் பேசினால் அவர்களும் சரியாக தான் பேசினார்கள். ஒரு நாளில் பெரிதாக எதையும் கூற முடியாது இருந்தாலும் பேசியவரை ஓகே.

    //நம்ம போயி வலிய பேசுனாலும், இங்கிலீசுல பீட்டர் வுடுறாங்க, பாரீஸுல நான் இப்படித்தான் ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தேன்//

    :-)))) இங்கிலிபீச்சா அவ்வ்வ்வ்

    //அப்புறம் K.L ஏர்போர்ட்டை ஒரு தரம் பார்த்திருங்க, முழுவதும் பைப்களைக்கொண்டே வடிவமைக்கப்பட்ட அந்த கட்டிடம் ஒரு Engineering Marvel.//

    திரும்ப வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி தராசு.

  19. //’டொன்’ லீ said…
    கிரி நீங்கள் எழுதும் பயணக் (அல்லது இடங்கள் பற்றிய) கட்டுரைகளை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது.//

    ஐயய்யோ! என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. அந்த அளவிற்கு மொக்கையாகவா இருக்கு! :-((((((((

    //வேணுமென்றே அப்படி எழுதுகிறீர்களா..இல்லை தெரிந்தே தான் பகிடியா எழுதுகிறீர்களா..?//

    நான் எப்போதும் இதை போல எழுதினால் அனைத்தும் கலந்து தான் எழுதுவேன், சீரியஸ் ஆக கூறி கொண்டு இருந்தால் படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே! அதனாலே கொஞ்சம் காமெடியும் கலந்து எழுதுவேன். நல்லா இல்லையா 🙁

    //ஆஹா…வீட்ட மாட்டிக்க போறிங்க…//

    என்னை தண்ணி தெளிச்சுட்டாங்க :-))) எதுவும் சொல்ல மாட்டாங்க

    ===================================================================

    //கோவி.கண்ணன் said…
    //மலேசியா நம்ம ஊர் சாயலில் பொறுப்பற்ற பொதுமக்கள் இருந்திருப்பார்களே.//

    ஆஹா! இதுக்கு பேர் தான் போட்டு வாங்கறதா! நான் ஏதாவது சொல்ல போக இதை வைத்து மாட்டி விடலாம்னு பார்க்கறீங்களா 🙂 நாங்க உஷாரு! மீ த எஸ்கேப்பு :-)))))))))

  20. கிரி,

    நான் வந்து ரெண்டாவது வாரமே மலேசியா போயிட்டு வந்துட்டேன்… 🙂 நான் போனப்போ பத்துமலை முருகன் கோவிலில் எடுத்த படம்..

  21. //ஜோதிபாரதி said…
    ஆகா! மலேசியா போய் வந்தாயிற்றா?

    போய் வந்தேன் 🙂

    //தமிழச்சி என்றாலே அழகுதானே!//

    இதற்க்கு கொஞ்சம் விளக்கம் கூறினால் என்னை எல்லோரும் போட்டு கும்மிடுவீங்க :-)))

    //அங்கு சேகரித்த விடயங்களைப் பொறுப்பாகத் தொகுத்திருக்கிறார். கீப் இட் அப் கிரி!//

    ஆஹா! ஜோதிபாரதி நீங்க என்னை பாராட்டறீங்களா! இல்லை கலாய்க்கறீங்கலான்னே தெரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ===================================================================

    //இனியவள் புனிதா said…
    //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர்//
    வழிமொழிகிறேன் :-)//

    புனிதா நீங்க மலேசியாவா! :-))))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //இளவேனில் said…
    கிரி செம சூப்பரா எழுதரிங்க…கலக்குங்க//

    நன்றி சக்தி. ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளயே காணோம்!!

  22. //ஐயய்யோ! என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. அந்த அளவிற்கு மொக்கையாகவா இருக்கு! :-((((((((//

    நல்ல பகிடியா இருக்கு. என்று சொல்லிறன்…:))

    //
    நான் எப்போதும் இதை போல எழுதினால் அனைத்தும் கலந்து தான் எழுதுவேன், சீரியஸ் ஆக கூறி கொண்டு இருந்தால் படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே! அதனாலே கொஞ்சம் காமெடியும் கலந்து எழுதுவேன். நல்லா இல்லையா :-(//

    நல்லா இருக்கு

    //
    என்னை தண்ணி தெளிச்சுட்டாங்க :-))) எதுவும் சொல்ல மாட்டாங்க //

    :))

  23. //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர//

    கிரி, நோட் பண்ணிகிட்டேன்.

  24. மோகன் said…
    ////அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள்////

    கன்னடத்தில் அப்படியா என்பதை “ஹவுதா” என்று கேட்பார்கள். ஹவுது என்றால் ஆமாம். அதையே தமிழுக்கும் மாற்றி வழங்கி விட்டார்கள் போல இருக்கிறது.////

    ஹவுது மோகன். நீங்கள் சொல்வது சரியே:)!

  25. கிரி, நல்ல பதிவு, உங்க கிட்டே இன்னும் எதிர் பார்க்கிறேன் (ரோம்) . இரண்டாவது பதிவு போட்டுடுங்க.

    ////அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள்////

    கன்னடத்தில் அப்படியா என்பதை “ஹவுதா” என்று கேட்பார்கள். ஹவுது என்றால் ஆமாம். அதையே தமிழுக்கும் மாற்றி வழங்கி விட்டார்கள் போல இருக்கிறது.

    //கர்நாடகாவிலும் தமிழர் அல்லாதார் தமிழ் பேசுகையில் இப்படித்தான் கூறுவார்கள்!//
    நான் பார்த்த வரையில் (கேட்ட வரையில்) கர்நாடக தமிழர்களும் ஆமாவா என்றுத் தான் கேட்பார்கள்.

  26. //நசரேயன் said…
    நல்ல தகவல் கிரி//

    நன்றி நசரேயன்

    //யாரையாவது பார்த்த புகை படம் எடுத்து போடுங்க//

    எடுக்கும் போது என்னை போட்டு குமுறாம இருந்தா சரி :-)))

    ===================================================================

    //’டொன்’ லீ said…
    //ஐயய்யோ! என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. அந்த அளவிற்கு மொக்கையாகவா இருக்கு! :-((((((((//

    நல்ல பகிடியா இருக்கு. என்று சொல்லிறன்…:))//

    பகிடின்னா நகைச்சுவையா! மன்னித்துக்குங்க ‘டொன்’ லீ, நான் தான் அர்த்தம் புரியாம சொல்லிட்டேன் (இப்பவாது புரிந்துட்டு பேசுறேனா :-))) )

    //நல்லா இருக்கு//

    நன்றி 🙂

  27. //புதுகை.அப்துல்லா said…
    அட நீங்க அப்ப மசாஜ் பண்ண போகலயா??? :)))))))))//

    சிங்கப்பூர் ல் இல்லாத மசாஜா 🙂 அதுவுமில்லாம மசாஜ் பண்ணுற கண்டிஷன் ல நான் இல்ல :-))))))))))

    ===================================================================

    //வடகரை வேலன் said…
    //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர//

    கிரி, நோட் பண்ணிகிட்டேன்.//

    ஹா ஹா ஹா ஹா எல்லோரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க 😉

    ===================================================================

    //ராமலக்ஷ்மி said…
    ஹவுது மோகன். நீங்கள் சொல்வது சரியே:)!//

    ராமலக்ஷ்மி நீங்க பெங்களூருவில் இருக்கீங்கன்னு நிரூபித்து விட்டீங்க :-)))

  28. மலேஷிய பயணக் கட்டுரை அருமை,

    ஆமா அங்க பார்த்த தமிழர்கள் உங்களை பார்த்தா பேசறாங்களா, நான் வெளி நாட்டுக்கு போனப்ப எல்லாம் நல்லா தமிழ் தெரிஞ்ச, நம்ம தமிழ் நாட்டிலிருந்து போயி அங்க வேலை செய்யறவங்க கூட நம்ம கிட்ட பேசமாட்டேங்கிறாங்க, அத்வும் நம்ம போயி வலிய பேசுனாலும், இங்கிலீசுல பீட்டர் வுடுறாங்க, பாரீஸுல நான் இப்படித்தான் ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தேன்.

    அப்புறம் K.L ஏர்போர்ட்டை ஒரு தரம் பார்த்திருங்க, முழுவதும் பைப்களைக்கொண்டே வடிவமைக்கப்பட்ட அந்த கட்டிடம் ஒரு Engineering Marvel.

  29. ஆகா! மலேசியா போய் வந்தாயிற்றா?
    தொகுப்பு நன்று!
    ஆமா, மலேசிய தமிழச்சிகள் அழகு என்று பகர்ந்திருக்கிறீர்களே,
    தமிழகத்து, ஈழத்து, சிங்கபுரத்து, மேலை வடக்கு கிழக்கு நாடுகளில் வாழும் எம் தமிழச்சிகள் கோவிக்க மாட்டார்களா?
    தமிழச்சி என்றாலே அழகுதானே!

  30. //ப்ரிஜ்ஜ தாண்டி அந்தாண்ட போனதுக்கே அயல்நாட்டு பயணம்னு லேபிளா???
    கிரி கொஞ்சம் ஓவரா இல்ல???//

    இன்செருங்க, அப்ப கிரி அவரோட ப்ரிட்ஜ் -ஐத் தாண்டி குசினிக்குப்(அடுக்களை அல்லது சமையற்கூடம்) போனதை பதிவாப் போட்டுட்டார் என்கிறீர்களா?
    இல்லை. படம் பிடித்திருக்கிறார். அங்கு சேகரித்த விடயங்களைப் பொறுப்பாகத் தொகுத்திருக்கிறார். கீப் இட் அப் கிரி!

  31. //விஜய் ஆனந்த் said…
    :-)))…//

    புன்னகை மன்னன் விஜய் ஆனந்த் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //arun said…
    romba nalla pathivu,//

    நன்றி அருண்

    ===================================================================

    //Dr.Sintok said…
    இது என்ன டம்ல் நாடுன்னு நினைச்சிங்களா……….?//

    ஹி ஹி ஹி சில சமயம் டம்ல் நாடு போல இருப்பது வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கு எளிதாக இருக்கிறது.

    //பையன்களும் அழகாக தான் இருப்பார்கள்….நம்ப விக்னேஸ்வரன் மாதிரி…..//

    இதில் உள்குத்து எதுவுமில்லையே! 🙂

    //என்ன dato பார்க்காம போய்ட்டிங்க……//

    அப்படின்னா என்னங்க?

    //மலையகம் அப்படி இல்லை…..//

    மலையகம் என்றால் மலேசியாவா! இந்த வார்த்தையை நான் ஈழத்தில் தான் கேள்வி பட்டு இருக்கிறேன் (மலையக தமிழர்கள்)

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி Dr.Sintok

  32. /*
    “லேடிபாய்” என கூறப்படும் ஆண்களாய் இருந்து பெண்களை மாறியவர்கள் பலர் உள்ளதாக டாக்சி ஓட்டுனர் கூறினார்
    */
    யாரையாவது பார்த்த புகை படம் எடுத்து போடுங்க

  33. கிரி said…
    //முரளிகண்ணன் said…
    கிரி, முருகன் கோவிலுக்கு போகவில்லையா?//

    மலேசியா போனதே அதற்க்கு தான் முரளிகண்ணன் அடுத்த பதிவில் கூறுகிறேன்.

    //

    அட நீங்க அப்ப மசாஜ் பண்ண போகலயா??? :)))))))))

  34. //அவர்கள் பேசும் தமிழ் கொஞ்சம் வித்யாசமாக உள்ளது, அப்படியா! என்பதற்கு ஆமாவா! என்று கூறுகிறார்கள். //
    நீங்க வேர இங்க கோசொங்-kosong (சைபர்-0)தமிழ் வார்த்தைனு சிலர் நினைக்கிறார்கள்…..

    //அங்கு மலாய் மொழி பேசப்படுகிறது மற்றும் அதுவே அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஆங்கிலத்தை எங்கும் காண முடியவில்லை//
    இது என்ன டம்ல் நாடுன்னு நினைச்சிங்களா……….?

    //மலேசியா தமிழ் பெண்கள் அழகாக உள்ளனர் // பையன்களும் அழகாக தான் இருப்பார்கள்….நம்ப விக்னேஸ்வரன் மாதிரி…..

    //பிரபலமான இரட்டை கோபுரம் அருகில் சென்று பார்க்க நேரமில்லை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டேன்// என்ன dato பார்க்காம போய்ட்டிங்க……நடக்கிற தூரம்தான் டைம் ஸ்கொயர்ல் இருந்து….

    //தமிழ் அங்கே சிங்கையை போல ஆட்சி மொழிகளுள் ஒன்றல்ல.//
    சிங்கை வந்தேறிகளின் தேசம்….மலையகம் அப்படி இல்லை…..ஆனால் இங்கு 500 தமிழ் பள்ளிகள் உள்ளன….. 80000 மாணவர்களுக்கும் மேல் இங்கு பயில்கிறார்கள்…

  35. நல்ல பதிவு..கிரி…KL ல் இன்னமும் எவ்வளவோ சூப்பர் இடங்கள் இருக்கின்றன..இனி இந்த மாதிரி இடங்களுக்கு போவதற்கு முன், மலேசிய சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று… ஒரு லிஸ்ட் / பிளான் போட்டுக்கொள்ளவும்…

  36. //கன்னடத்தில் அப்படியா என்பதை “ஹவுதா” என்று கேட்பார்கள். ஹவுது என்றால் ஆமாம்.//

    அப்படியா!!”

    கிரி, நாமெல்லாம் “அப்டியா”னுதான் சொல்லோனும்.
    அப்புறம் அந்த வெள்ளி மனிதர் பின்னாடி சென்று கொண்டிருக்கும் பெண் யாருங்க?? ரம்பாவா ??? 😉
    கட்டுரை நன்றாக இருந்தது!

  37. கிரி!எப்படி இருக்கீங்க?மலேசியா நல்லாவேயில்லை!காரணம் அதென்ன படத்துல ரோட்டுல கார்கள் மட்டும் ஓடுது இல்லாட்டி சித்திரக்குள்ளனை நடு ரோட்டுல உட்கார வச்சிருக்காங்க.இப்படி அந்த மனுசன் கஷ்டப் படாமல் ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தா அதைப் பார்க்க கூட்டம் சேர வேண்டாமா?நம்மூர்ப் பாரம்பரியங்களை நாங்கெல்லாம் ஹைவேஸ் தவிர இங்கே கூட விட்டுத் தருவதில்லையாக்கும்.வண்டியோட்டுறவனை வழிமறிச்சு நில்லுடான்னு சொல்லி குறுக்கும் நெருக்கும் மனிதர்கள் போகாத சாலை பயணச் சாலையல்ல:)

  38. //சதீசு குமார் said…
    மலையக சுற்றுலா சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துகள்..//

    நன்றி சதீசு குமார், நான் போயிட்டு வந்துட்டேங்க 🙂

    ===================================================================

    //மங்களூர் சிவா said…
    @ஜோதி பாரதி

    கலாய்க்க விடமாட்டீங்களே!?
    :)))))))//

    சிவா நீங்க வேற அவரே என்னை பாராட்டுராறா இல்ல கலாய்க்கராறா ன்னு தெரியல :-))

    ===================================================================

    //கீ – வென் said…
    நல்ல பதிவு..//

    நன்றி வெங்கி. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க 🙂

    //மலேசிய சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று… ஒரு லிஸ்ட் / பிளான் போட்டுக்கொள்ளவும்…//

    இந்த முறை நேரமில்லை அதுவே காரணம்

  39. //Vijay said…
    கிரி, நாமெல்லாம் “அப்டியா”னுதான் சொல்லோனும்.//

    ஹா ஹா ஹா தலைவர் ஸ்டைல்லயா :-)))

    //அப்புறம் அந்த வெள்ளி மனிதர் பின்னாடி சென்று கொண்டிருக்கும் பெண் யாருங்க?? ரம்பாவா ??? ;)//

    ஹி ஹி ஹி சிங்கை மாதிரி அங்கே பாதி பேர் ரம்பா தான்

    //கட்டுரை நன்றாக இருந்தது!//

    நன்றி விஜய்

    ===================================================================

    //ராஜ நடராஜன் said…
    கிரி!எப்படி இருக்கீங்க?//

    சூப்பரா இருக்கேன். உங்களை தான் காணோம் (உடன் பதிவுகளையும்)

    //அதைப் பார்க்க கூட்டம் சேர வேண்டாமா?//

    நல்ல கூட்டம் தான், நான் கூட்டத்திற்கு முன்னாள் நின்று அவரை எடுத்தேன் 🙂

    //வண்டியோட்டுறவனை வழிமறிச்சு நில்லுடான்னு சொல்லி குறுக்கும் நெருக்கும் மனிதர்கள் போகாத சாலை பயணச் சாலையல்ல:)//

    ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க ..இப்படி போனா தானே நமக்கு சாலையை கடந்த மாதிரியே இருக்கும் 😉

    ===================================================================

    //ஜோசப் பால்ராஜ் said…
    அட கிரி, இந்தா இருக்க மலேசியாவ இப்பத்தான் பார்த்தீங்களா?//

    அதை என் கேட்கறீங்க! அதுவும் ஒரு நாள் தான் போக முடிந்தது :-((

    //நெம்ப நல்லாருக்கு கிரி.
    அடுத்த பாகத்த சீக்கிரம் எழுதுங்க.//

    ரொம்ப நன்றி ஜோசப் பால்ராஜ். உங்களை போல ஒரு சிலர், நான் இதை போல கட்டுரை எழுதும் போது கொடுக்கும் உற்சாகமே மேலும் என்னை தூண்டுகிறது.

  40. அட கிரி, இந்தா இருக்க மலேசியாவ இப்பத்தான் பார்த்தீங்களா?
    ஆனா லேட்டா பார்த்தாலும் ஒரு சிறந்த பயணக் கட்டுரைய எழுதியிருக்கீங்க. நெம்ப நல்லாருக்கு கிரி.
    அடுத்த பாகத்த சீக்கிரம் எழுதுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here