உலகை அதிர வைத்த “மைக்கேல் ஜாக்சன்” ஒரு சகாப்தம்

18
மைக்கேல் ஜாக்சன் Michael Jackson

ளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜாக்சன். அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். Image Credit

தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

மைக்கேலின் அசுரத்தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது தொலைக்காட்சியில் பார்க்காமல் இருப்பவர்கள் மிகச் சொற்பம்.

மைக்கேல் ஜாக்சன்

கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதற் கொண்டு ப்ரூஸ் லீ யைக் கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.

இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

கலைஞர்களின் ரோல் மாடல்

நமது பிரபு தேவா முதற் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல.

பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள்.

இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.

இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்பச் சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தைத் துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர்.

வெள்ளையர்களுக்குக் கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது.

வெறித்தனமான ரசிகர்கள்

அப்போது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றிக் காட்டியவர்.

நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்தப் பட்ட வார்த்தை அல்ல, சொல்லப் போனால் அதை விட மிகக் குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை.

அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால், அது வரை கூடத் தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள்.

இதைப் பார்க்கும் போது நான் எப்போதும் நினைப்பது, இப்படிக் கூட வெறித்தனமாக ரசிகராக மாற்ற வைக்க முடியுமா என்பது தான்.

தனது ரசிகரிடம் நீ இவனைக் கொன்று விடு என்று மைக்கேல் கூறினால், பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்குக் காட்டுத்தனமான ரசிகர்கள்.

பாகுபாடு இல்லை

ஒருவரை இந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களைக் கவருபவராக இருந்து இருக்க வேண்டும்.

இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.

அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர்.

இவருக்குத் தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனித் தனியாகப் பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள்.

இவரின் ஒரு அசைவிற்காகக் கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்.

அவருடைய த்ரில்லர் (1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலகச் சாதனை அடைந்தது என்பதில் எந்த வியப்பும் இல்லை.

புதிய பரிமாணம்

பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர்.

காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது – Moon Walking), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது.

நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் இதை செய்வதைப் பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது உடைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார்.

இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ்ல் இருக்கும்.

திருமணம்

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார்.

இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்குப் பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டுக் காயங்கள் ஆனது.

இதற்கு பெரும் நஷ்ட ஈடு பெற்று, அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார்.

காஸ்மெடிக் அறுவை சிகிச்சை

அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற, காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார்.

பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம். இதனால் அவர் பல பிரச்சனைகளைச் சந்தித்தார்.

இவர் இந்த நிலைக்குக் காரணமே இந்தத் தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.

இதற்குப் பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாகக் கொடுத்தார், இதைப் போலச் செலவுகள் அவரைப் பெரும் சிக்கலில் தள்ளியது.

மதம் மாற்றம்

சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்யப் பணம் வாங்கி விட்டு அவர் அதைச் செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள்.

பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார்.

உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அவர் பெயர் உட்படத் தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது.

இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம்.

மைக்கேல் ஜாக்சன் இறுதித் திரை

“இறுதித் திரை” என்று நிகழ்ச்சியை நடத்துவற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் ஆனால், இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார்.

கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மைக்கேல் இறந்த போது அவருக்கு BBC கொடுத்த முக்கியத்துவம் நான் எதிர்பாராதது.

ஒரு நாள் முழுக்க வேறு எந்தச் செய்தியும் இல்லாமல் அவர் சமபந்த்தப்பட்ட விசயங்களையே கூறிக்கொண்டு இருந்தார்கள்.

இவர் இறப்பு செய்தியால் சமூகத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் BBC செய்தித் தளங்கள் அதிக வருகையாளர்களால் திணறி விட்டன.

தளங்களின் சர்வர்கள் திடீர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தவித்து விட்டன.

ஸ்தம்பித்த கூகுள் தளம்

அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல மைக்கேலை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மற்றும் விவரங்களை அறிந்து கொள்ள ஓட்டு மொத்தமாகப் பார்வையாளர்கள் கூகிள் தேடுதலை நாடிய போது, கூகிள் தளமே ஸ்தம்பித்து விட்டது.

தங்கள் தளத்தைத் திட்டமிட்டு தாக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவிற்குப் பயந்து விட்டதாகக் கூகிள் நிறுவனம் கூறி உள்ளது.

மேற்கூறியதே போதும் மைக்கேல் ஜாக்சனின் புகழை நிரூபிக்க, எந்த அளவிற்கு உலகில் மிக முக்கியமான நபராக விளங்கி இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்ட.

பிரபலம்

பிரபலம் ஆவது பெரிய விசயமில்லை ஆனால், அந்தப் பிரபலம் எப்படி மக்களைக் கவர்ந்து இருக்கிறார் என்பதே பெரிய விஷயம்.

அதில் மைக்கேல் எந்த நிலை என்று யாரும் கூறி தெரியவேண்டியதில்லை.

மைக்கேலின் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த திறமையாளர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

உலகில் இனி இவரைப் போலப் பலர் வரலாம் ஆனால், எவரும் இவர் புகழை பெற மற்றும் மிஞ்ச முடியாது என்பது திண்ணம்.

மைக்கேலை பற்றி ஒரு இடுகையில் கூறி விட முடியாது அவ்வளவு சிறப்புகளைக் கொண்டவர், ஒரு ரசிகனாக அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

தனது கடைசிக் காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்த அவர் இனி அமைதியாக உறங்கப் பிராத்திப்போம்.

Read இசைக்கு மொழியேது!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

  1. அவர் ஆத்மா அமைதியாக உறங்கட்டும். அவர் இசை என்றென்றும் வாழும்.

    (அவரது இசை அல்பங்கள் அவர் இறந்த பின் மீண்டும் விற்பனையில் சூடு பிடித்து முதல் இடத்தை பிடித்ததாக பிபிஸில் பார்த்தேன்)

  2. ஜாக்சன் வாழ்ந்தது 50 ஆண்டுகாலம் தான் என்றாலும், மாவீரன் அலெக்சாண்டர்-ஐ போல் சரித்திர நாயகன் ஆகிவிட்டார்.. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

  3. அற்புதமான திறமை சாலி, ஆனால் வாழத் தெரியாமல் வீழ்ந்தவர்.
    நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிகளவில் உதவிகள் செய்தவர் அவர்.

    முடிவில்லா அமைதியை இறைவன் அவர்க்கு அருளட்டும்.

  4. எத்தனையோ சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார் என்றாலும் அவர் சாதனைகளை யாரும் மறுக்க மறக்க முடியாதுதான். நிச்சயம் அவர் சகாப்தம்தான். அருமையாகக் கூறியிருக்கிறீர்கள்.

  5. //இதை பார்க்கும் போது நான் எப்போதும் நினைப்பது இப்படி கூட வெறித்தனமாக ரசிகராக மாற்ற வைக்க முடியுமா என்பது தான்//

    பாட்ஷா… பாட்ஷா…

  6. அற்புதமான திறமை சாலி, ஆனால் வாழத் தெரியாமல் வீழ்ந்தவர்.
    நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிகளவில் உதவிகள் செய்தவர் அவர்.

    முடிவில்லா அமைதியை இறைவன் அவர்க்கு அருளட்டும்.//

    ஜோ அவரை பற்றி ரொம்ப அற்புதமாக சொல்லிவிட்டார்…நன்றி கிரி அற்புதமான வரலாற்று பதிவு இது

  7. "மைக்கேல்" ஒரு சகாப்தம் சூப்பர் ஆனால் "பேய் தனமான ஆட்டத்தை" என்ற இடத்தில "அசாத்திய ஆட்டத்தை" என்று குறிப்பிட்டு இருக்கலாம் (நான் ஒரு மைக்கேல் பைத்தியம்). அந்த புனித ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

    மற்றும் உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் தகவல்கள் அருமை.

  8. தேள் கொட்டினால் கைகால்களை உதருவதைப் போல் இதெல்லாம் ஒரு ஆட்டமா ? இவரெல்லாம் ஒரு கலைஞரா ? என்று மைக்கேல் ஜாக்சனைத் தூற்றிய 'சோ' இராமசாமியைத் தவிர்த்து சுழன்று ஆடும், ஆடவைக்கும் ஜாக்சன் அனைவருக்கும் பிடித்தவர்தான்.

  9. AT ONE TIME, MJ WAS PERFORMING ON A CHARITY SHOW AND IN THE FRONT ROW, THERE WERE BLIND CHILDREN AND IT WAS AMAZING HOW THE CHILDREN STARTED DANCING TO THE RYTHEM AND BEATS OF HIS DANCE AND THE MUSIC

  10. கார்த்திக், ஜோசப் பால்ராஜ், ஜமால், ராஜ், டொன் லீ, ஜாக்கி சேகர், தீப்பெட்டி, சிங்கக்குட்டி, ராமலக்ஷ்மி, தமிழன், அருண் மற்றும் கோவி கண்ணன் வருகைக்கு நன்றி

  11. //குறை ஒன்றும் இல்லை !!! said…
    உன் பேரு விட்டு போச்சு.. விடு அடுத்த பதிவுல பாத்துக்கலாம்.//

    :-))

    "குறை ஒன்றும் இல்லை !!! said…
    என்ன ராஜ்னே கூப்புடுங்கண்ணே!!!"

    ஹலோ நீங்க தானே உங்க பேரு ராஜ் னு சொன்னீங்க, அதுனால சரியா தானே குறிப்பிட்டு இருக்கிறேன் .

    நான் எப்பவுமே புனை பெயரில் கூப்பிடுவதை தவிர்த்து விடுவேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here