“Size Zero” கிளப்பும் பீதி!

24
size zero

Size Zero வா என்னய்யா இது புதுக் கதையா இருக்குன்னு கேட்கிற ஆளா!

அப்ப இதைப் படிங்க..ஓரளவு சுவாராசியமாகவும் இருக்கும் அதே சமயம் என்ன கொடுமை சார் இது! ன்னு டென்ஷன் பண்ணுவதாகவும் இருக்கும்.

நீங்க ஃபேஷன் டிவி பார்த்து இருப்பீங்க அதுல பார்த்தீங்கன்னா வர பொண்ணுக எல்லாம் பெரும்பாலும் குச்சி குச்சி யா இருப்பாங்க, ஃபேஷன், ஸ்டைல் என்றாலே இப்ப அப்படித் தான் ஆகி விட்டது.

இப்ப என்ன பிரச்சனைனா மேலை நாடுகள்ல இது வியாதி மாதிரி ஆகி விட்டது. அதாவது பொண்ணுக தங்கள் உடம்பை எலும்பு தெரியும் படி இளைக்க வைத்து திரிவது தான் தற்போதைய ஃபேஷன்.

அடப்பாவிகளா! என்னய்யா இது உலகக் கொடுமையா இருக்குன்னு சொல்றீங்களா! அப்படி எல்லாம் சொல்லப்படாது… தொடர்ந்து படிங்க..

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

நம்ம ஊர்ல எப்படி நடிகர் நடிகைகளைப் பார்த்து ரசிகர்கள் தங்கள் ஸ்டைல் களை மாற்றிக் கொள்கிறார்களோ அதே போல ஹாலிவுட்ல இருக்கிற நடிகர் நடிகையர் மற்றும் அங்குள்ள செலிபிரிட்டிகள் என்ன செய்தாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் கூட்டமும் உண்டு.

இவங்க நமக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல.

தற்போது ஹாலிவுட் கதாநாயகிகள் பலரை இந்த வியாதி பிடித்து ஆட்டுகிறது.

அதனால்n தங்கள் எடையைத் தாறுமாறாகக் குறைத்து அபாயகரமாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள் ஆர்வம் முற்றி போய்.

இவர்களைப் பார்த்து பலரும் உடல் இளைக்க முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மேலை நாடு பிரபலங்களான Victoria Beckham [ஃபுட்பால் விளையாட்டு வீரர் பெக்காமின் மனைவி, முன்பு Spice girls ல் இருந்தவர் Nicole Richie ஆகியோர் இந்த Size Zero ல ரொம்பப் பிரபலம்.

தற்போது இந்தியாவில் இதை ஆரம்பித்து இருப்பவர் பாலிவுட் கரீனா கபூர், பாவம்!! சல்மான் தான் கடுப்பாகிட்டாரு.

அதோட இல்லாமல் இப்படி இருக்கிறது கேவலமா இருக்குன்னு வேறு கூறி கரீனாவ கடுப்படித்து விட்டாரு 😉 .

சரி size zero னா என்ன?

Women’s Dresses and Suits
United States 4 6 8 10 12 14 16 18
Europe (Italy) 38 40 42 44 46 48 50 52
Europe (Scandinavia and Germany) 34 36 38 40 42 44 46 48
Europe (France, Spain and Portugal) 36 38 40 42 44 46 48 50
Europe (UK and Ireland) 8 10 12 14 16 18 20 22
Japan 5 7 9 11 13 15 17 19

அளவுகள்

இது பற்றிப் புதிதாகக் கேள்விபடுகிறவர்களுக்கு இந்த அளவுகள் குழப்பமாகத் தான் இருக்கும்

ஒவ்வொரு நாட்டிலும் உடைகளின் அளவு வெவ்வேறாகக் குறிக்கப்படுகிறது, நம்ம ஊர்லையே ஒவ்வொரு ப்ரேண்டுக்கும் ஒவ்வொரு சைஸ் இருக்கும், “கில்லெர்” ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும் “லீ” ஜீன் ஒரு சைஸ் ல இருக்கும்.

நாம கில்லெர் அளவு நினைத்து போட்டு பார்க்காம “லீ” எடுத்துட்டு வந்தா அது கூடவோ அல்லது குறைவாகவோ அளவு இருந்து விடும்.

தற்போது அமெரிக்காவில் பெண்களுக்கு இருப்பதிலேயே குறைந்த அளவாக 4 (அட்டவணையைப் பார்க்க) என்று குறிப்பிடப்படுகிறது இந்த உடை (எடை) கலாச்சாரம் பரவிய பிறகு உடைகளின் அளவு Size Zero ஆகி விட்டது.

சுருக்கமா சொல்வது என்றால் இது தான் பெண்களுக்குக் கடைசி அளவு இதற்கு கீழே சிறியதா உடை கிடையாது.

Double Zero

இதையும் தாண்டி “௦௦” (Double Zero) வும் வந்து விட்டது!

குண்டாக அல்லது சாதாரணமாக இருந்த பலரும் உடல் மெலிய டயட் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் மற்றும் உடல் குறைய என்னென்ன வழிகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

மெல்லிதாகக் கூட இல்லாமல் அதை விட அபாயகரமாக மெலிய துவங்கி விட்டனர். இதைப் போல இல்லாதவர்கள் இப்படி நாம் இல்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர்!!

இதனால் உடலை எப்படி மற்றவர்களைப் போல இளைக்க வைப்பது என்று கவலையுடனே இருக்கிறார்கள்!!

இங்கிலாந்து மற்றும் சில நாடுகளில் இதைப் போல Size Zero ல இருக்கிற பெண்களை ஃபேஷன் ஷோ க்களில் கலந்து கொள்ள அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ரொம்ப மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள் என்று தவிர்க்கிறார்கள்.

இந்த size zero ல இருக்கிறவங்க Anorexia நோய் வந்தவர்களைப் போல் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்த நோய் வந்தவர்கள் உடல் எடை குறைந்து மெல்லியதாகக் காணப்படுவார்கள். எனவே size zero என்றாலே Anorexia வும் விவாதத்தில் கலந்து கொள்கிறது.

நம்ம ஊர்ல எல்லாம் இப்படி இருந்தா ரசிகர்கள் தெறித்து ஓடிடுவாங்க.

நம்மவர்களுக்கு நமீதா மாதிரி புஷ்டியா!! இருந்தா தான் ரசிப்பாங்க. நமீதா இப்படியொரு முயற்சி செய்தா எத்தனை ரசிகர்கள் கொந்தளிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க 🙂 .

நடிகைகள் குச்சி குச்சி யா இருந்தா கொலை வெறி ஆகிடுவாங்க..

“தோரணை” படத்துல ஸ்ரேயா size zero க்கு முயற்சித்து இருப்பாங்க படம் பார்த்த பல பேர், என்னப்பா இது! ஸ்ரேயா ஹாஸ்பிடல்ல இருந்து நேரா வந்துடுச்சா! என்று வெறுத்து போய்ட்டாங்க.

விஷால் கூட லிப் டு லிப் முத்தம் ல கூட ஒண்ணும் கிளுகிளுப்பே இல்லைன்னு அழுகாத குறையா சொல்றாங்க.. அதனால நம்ம ஊருக்கு இதெல்லாம் ஒத்து வராது.

இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு size zero க்கு முயற்சி செய்துட்டு இருக்காங்க.

நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

  1. //நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் //;) . Size 0.1 😉

  2. சைஸ் ஜீரோ நல்ல காமெடி.

    ஆனா தமிழ்ல ஜெயமாலினி, குஷ்பு, நமீதான்னு புஷ்டி பயில்வானுகளுக்குத்தான் மார்க்கெட்.

  3. :)விருப்படி வாழ நினைக்கிறாங்க… இருந்துட்டு போகட்டும்…

  4. // வடகரை வேலன் said…
    சைஸ் ஜீரோ நல்ல காமெடி.

    ஆனா தமிழ்ல ஜெயமாலினி, குஷ்பு, நமீதான்னு புஷ்டி பயில்வானுகளுக்குத்தான் மார்க்கெட்.//

    அப்பீட் ஆகற வரைக்கும் ரிபீட்டே………

    கிரி, என்ன திடீர்னு சைஸ் ஸீரோ, GIRLS பீரோன்னு…. புது புது கதவெல்லாம் தெரக்கறீங்க………. உள்ள போய் பாத்தா ரெம்ப கிலி ஆகுதுப்பா……

    ஓகே ……… நெக்ஸ்ட் மேட்டர் என்ன……..

  5. //நம்ம ஊர்ல எல்லாம் இப்படி இருந்தா ரசிகர்கள் தெறித்து ஓடிடுவாங்க, நம்மவர்களுக்கு நமீதா மாதிரி புஷ்டியா!! இருந்தா தான் ரசிப்பாங்க. //

    நம்ம ஊர் பெருசுகளை சரியா புரிஞ்சி வச்சிருக்கிங்க!

  6. நல்ல தகவல்கள் சொல்லியிருக்கீங்க.

    இப்பொழுதைய கல்லூரி மற்றும், பள்ளியின் இறுதியாண்டில் இருக்கும் பெண்கள் இது போன்ற நோயினால் பாதிக்க படுகிறார்கள்.

    ————————

    Zero Size – இது பெண்களின் வயிற்றை குறிக்கும் சொல்

    pack – இது ஆண்களுக்கு வயிற்றை குறிக்கும் சொல்

    8 pack, 6 pack, 4 pack இது போல

  7. உடல் தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் நலத்துக்குக் கொடுக்காத மேற்கத்திய வணிகத் தந்திரங்களுக்கு நம் ஊர்ப் பேதைகளும் பலியாவது கொடுமை,கிரி.

  8. உடல் எடை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பர்களும் இருக்கிறார்கள்..,

    சாப்பிடவுடன் வாந்தி எடுத்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள்…

    சிலர் கையை விட்டுக்கூட வாந்தி எடுப்பது உண்டு

    50% 75% எடை குறைப்பு கூட இதனால் ஏற்படுவது உண்டு

  9. //நட்புடன் ஜமால் said…

    Zero Size – இது பெண்களின் வயிற்றை குறிக்கும் சொல்
    pack – இது ஆண்களுக்கு வயிற்றை குறிக்கும் சொல்
    8 pack, 6 pack, 4 pack இது போல//

    ஜமால் கலக்குங்க.. நீங்க என்ன pack 😉

    ============================================================

    // -L-L-D-a-s-u said…
    😉 . Size 0.1 ;)//

    இப்படி எல்லாம் சொல்லப்படாது :-))

    ============================================================

    // வடகரை வேலன் said…
    சைஸ் ஜீரோ நல்ல காமெடி.
    ஆனா தமிழ்ல ஜெயமாலினி, குஷ்பு, நமீதான்னு புஷ்டி பயில்வானுகளுக்குத்தான் மார்க்கெட்//

    ஹி ஹி ஹி வேலன் நான் இவர்களை சொல்லலாம் என்று இருந்தேன், ஆனால் ரொம்ப பழைய!!! நடிகைகள் எனபதால் விட்டு விட்டேன் ..இருந்தாலும் குஷ்பூ என்ன்னோட ஃபேவரைட் 😉 டென்ஷன் ஆகக்கூடாது

    =====================================================

    // VIKNESHWARAN said…
    :)விருப்படி வாழ நினைக்கிறாங்க… இருந்துட்டு போகட்டும்…//

    விக்னேஸ்வரன் உங்களுக்கு பரந்த மனசு 🙂

    =====================================================

    // ஷண்முகப்ரியன் said…
    உடல் தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் நலத்துக்குக் கொடுக்காத மேற்கத்திய வணிகத் தந்திரங்களுக்கு நம் ஊர்ப் பேதைகளும் பலியாவது கொடுமை,கிரி.//

    சார்! இவங்க உடல் தோற்றம் தான் கேவலமா இருக்கே சார்.. அழகான வாளிப்பான உடலை இப்படி கெடுத்து வைத்து இருக்காங்க…

    நம்ம தான் மேற்க்கத்திய கலாச்சாரத்தை ஒண்ணு விடாம காப்பி அடிக்கிறமே 😉 ஹி ஹி அப்பப்ப நானும்

    =======================================================

    // R.Gopi said…
    கிரி, என்ன திடீர்னு சைஸ் ஸீரோ, GIRLS பீரோன்னு…. புது புது கதவெல்லாம் தெரக்கறீங்க………. உள்ள போய் பாத்தா ரெம்ப கிலி ஆகுதுப்பா….//

    நல்ல கிளப்பராருயா பீதியன்னு சொல்றீங்களா :-))) நாங்க அதிரடி பதிவர்.. கலந்து கட்டி அடிப்போம் 😉

    //ஓகே ……… நெக்ஸ்ட் மேட்டர் என்ன//

    வழக்கம் போல இதற்க்கு சம்பந்தமே இல்லாமல் 😉

    =======================================================

    // ’டொன்’ லீ said…
    haaha….:-)//

    புன்னகை மன்னன் வருகைக்கு நன்றி

    =======================================================

    // வால்பையன் said…
    நம்ம ஊர் பெருசுகளை சரியா புரிஞ்சி வச்சிருக்கிங்க!//

    அப்ப நீங்க பெருசா! :-)))) இளமை இதோ! இதோ!!

    =======================================================

    ரிப்பீட்டு சிவாக்கு நன்றி :-))

    ========================================================

    //SUREஷ் (பழனியிலிருந்து) said…
    சாப்பிடவுடன் வாந்தி எடுத்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள்.//

    அடப்பாவிகளா! அப்புறம் எதுக்கு சாப்பிடறாங்க! என்ன கொடுமை இது!

    சுரேஷ் உங்க பதிவு இன்னும் படிக்கவில்லை, விரைவில் படித்து பின்னூட்டம் இடுகிறேன்.

    நன்றி

  10. /
    இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு size zero க்கு முயற்சி செய்துட்டு இருக்காங்க, நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் :-)))
    /

    :))))
    0.1?
    :)))

  11. /
    வால்பையன் said…

    //நம்ம ஊர்ல எல்லாம் இப்படி இருந்தா ரசிகர்கள் தெறித்து ஓடிடுவாங்க, நம்மவர்களுக்கு நமீதா மாதிரி புஷ்டியா!! இருந்தா தான் ரசிப்பாங்க. //

    நம்ம ஊர் பெருசுகளை சரியா புரிஞ்சி வச்சிருக்கிங்க!
    /
    repeateyyy

  12. //இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு size zero க்கு முயற்சி செய்துட்டு இருக்காங்க, நானெல்லாம் அதெல்லாம் செய்யாமையே அந்த அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கிட்ட தான் இருக்கிறேன் :-)))//

    உங்களோட ரகசியத்தை வைத்து ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சீங்கன்னா பிச்சுகிட்டு போகும்

  13. சைஸ் zero பத்தி நானும் எழுதி வைத்திருக்கேன்… நல்ல போஸ்டிங்.

  14. நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கிங்க…
    வாழ்த்துக்கள்

  15. கார்ட்டூன் கமெண்ட்ஸ் சூப்பர்.

    ஸ்ரேயா கூட நடிக்கிற நடிகர்கள் எல்லாம் எலும்பு குத்துன்னு புகார் பண்ணுகிறார்களாம். அய்யோ பாவம்.

  16. அண்ணே பேரு என்னமோ சைஸ் ஜீரோ ஆனா படத்த பாத்தா 100 டிகிரி காய்ச்சல் வரும் போல இருக்கு …

  17. //உடன்பிறப்பு said…
    உங்களோட ரகசியத்தை வைத்து ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சீங்கன்னா பிச்சுகிட்டு போகும்//

    ஹி ஹி ஹி உடன்பிறப்பும் கலந்து கொள்வாரா! 😉

    =============================================

    //jackiesekar said…
    நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதி இருக்கிங்க…
    வாழ்த்துக்கள்//

    ஆராய்ச்சி எல்லாம் எதுவுமில்லைங்க..கொஞ்சம் தெரிந்ததை வைத்து புளுகாம எழுதினேன் அவ்வளோ தான் 🙂

    =============================================

    //காத்தவராயன் said…
    ஸ்ரேயா கூட நடிக்கிற நடிகர்கள் எல்லாம் எலும்பு குத்துன்னு புகார் பண்ணுகிறார்களாம். அய்யோ பாவம்.//

    ஹா ஹா ஹா

    ==============================================
    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    அண்ணே பேரு என்னமோ சைஸ் ஜீரோ ஆனா படத்த பாத்தா 100 டிகிரி காய்ச்சல் வரும் போல இருக்கு//

    இதற்கேவா! அப்ப இவங்க இதற்க்கு முன்னாடி எப்படி இருந்தாங்கன்னு போட்டோ போட்டு இருந்தா குளிர் ஜூரம் வந்துடும் போல இருக்கே 😉

    உங்க பேரு என்னங்க? உங்களை எப்படி தான் கூப்பிடுறது!!!
    ===============================================

    // மயில் said…
    சைஸ் zero பத்தி நானும் எழுதி வைத்திருக்கேன்… நல்ல போஸ்டிங்.//

    நன்றி மயில் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

    ==============================================

    //தீப்பெட்டி said…
    நல்ல தகவல் தான்..//

    நன்றி தீப்பெட்டி

  18. கிரி,

    ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க 🙂

  19. என்ன ராஜ்னே கூப்புடுங்கண்ணே!!!

  20. // ☼ வெயிலான் said…
    கிரி,

    ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க :)//

    😉

    =======================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    என்ன ராஜ்னே கூப்புடுங்கண்ணே!!!//

    கூப்பிட்டு விடுவோம் 🙂

  21. இப்போதுதான் இதைப்பற்றி கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி.

    மைனஸ்ல போகாம இருந்தா சரிதான்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!