அரசியல், காவல்துறை பிரச்சனைகளை எதார்த்தமாகக் கூறும் படம் Nayattu.
Nayattu
ஒரு பெண் மற்றும் ஆண் காவலர், அவர்கள் உயரதிகாரியாக ஒரு சராசரி காவல் அதிகாரி . சூழ்நிலை காரணமாக அரசியல் கட்சி நபருடன் கைகலப்பாகி விடுகிறது.
இதன் பிறகு எதிர்பாராத விபத்தும் நடக்க, பிரச்சனை பெரிதாகி விடுகிறது.
சிக்கினால் அதோகதி என்று மூவரும் தப்பித்து விடுகிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. Image Credit
அரசியல்
அரசியல் எப்படி இருக்கும் என்று கொஞ்ச காட்சிகளிலேயே தெளிவாக விளக்கி விடுகிறார்கள்.
பிரச்சனை செய்யும் அரசியல் நபர் நடிப்பு அட்டகாசம்.
ஒத்தை எலும்பை வைத்துட்டு இவர் செய்யும் அலப்பறை, தெனாவெட்டு, கட்சியின் பின்புலம் உள்ள தில் காரணமாகத் திமிராக நடந்து கொள்வது மிரட்டல்.
என்ன செய்யப் போறானோ! என்று நமக்கே திக்குனு தான் இருக்கும். உடல்மொழி, கோபம், வேகம் என்று வழக்கமான முரட்டு அரசியல்வாதி என்று சிறந்த நடிப்பு.
மணியன் கதாப்பாத்திரத்தில் வரும் Joju George, அன்பான அப்பா, மகளின் மீது உயிரையே வைத்து இருப்பவர் ஆனால், கோபக்காரர், அவசரப்படுபவர்.
மணியனிடம் அடுத்த நிலையில் பணி புரியும் Kunchako Boban இள வயது நபர். இவரைப்போலவே சுனிதா.
பாதிக்கப்பட்டவர் தலித் என்பதால் சாதிப் பிரச்சனையாகி தற்போதைய முதல்வருக்கு அடுத்த நாள் நடக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி சந்தேகமாகி விடும்.
எனவே, தப்பித்த நபர்களைப் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம்.
முதல்வராக வருபவர் பதட்டத்தை மறைத்து, பொறுப்பில் உள்ள உயர் காவல் அதிகாரியைக் கேள்வி கேட்கும் இடமெல்லாம், ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமையில் நடப்பது.
உயர் காவல் அதிகாரிகளுக்கே உள்ள நெருக்கடி, பிரச்சனையைச் சரி செய்தே ஆக வேண்டிய நிலை என்று நமக்கே பரிதாபமாக உள்ளது.
தமிழ்நாட்டில் தான் இதுபோல நடப்பது அதிகம் என்று நினைத்தால், ‘மாடல்’ மாநிலமும் விதிவிலக்கல்ல போல.
எதார்த்தம்
மணியன் கூறும் சில நெருக்கடிகள் தமிழ்நாட்டிலும் இயல்பாக நடக்கும் பிரச்சனைகள். காவலர்கள் நிலை எந்த மாநிலம் என்றாலும் பரிதாபம் தான்.
‘ரவுடிகள் கூட ஒரு வேலையைச் செய்ய முடியாது என்ற கூற முடியும் ஆனால், நம்மால் முடியாது‘ என்று கழிவிரக்கமாக மணியன் கூறுவது வழக்கமான காவல்துறை நபரின் சலிப்பு.
அரசியல் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு எப்படி அப்பாவிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பதை இப்படம் போகிற போக்கில் கூறுகிறது.
முடிவு எதார்த்தமாக உள்ளது. வேறு மாதிரி முடிவை மாற்றி இருக்கலாம் என்ற எண்ணம் வந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒளிப்பதிவு பின்னணி இசை
பெரும்பாலும் கிராமம் சார்ந்த பகுதிகள் தான் காட்சிகளில் வருகிறது. எனவே, எங்கும் பசுமையாக உள்ளது.
காட்சிகள் அனைத்துமே இயல்பாக உள்ளது, குறிப்பாகக் காவல் நிலையம் சார்ந்த காட்சிகள்.
இவர்கள் தப்பித்துச் செல்லும் காட்சிகள் பரபரப்பாக இருப்பதோடு பின்னணி இசையும் அதை அதிகப்படுத்துகிறது.
இவர்கள் மூன்று பேரைத் துரத்தும் மற்ற காவல் அதிகாரிகள் நிலை இன்னும் நெருக்கடி. குறுகிய நேரத்தில் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம்.
பயத்தில் படம் எப்படா முடியும்! என்றாகி விட்டது 🙂 .
தப்பித்துச் செல்லும் பகுதியில் தமிழ்நாடு எல்லை பகுதியும், தமிழர்களும் வருகிறார்கள். இன்னொரு மொழிப்படத்தில் தமிழ் வருவது மகிழ்ச்சி ஆனால், மலையாளப் படங்களில் தமிழ் இயல்பானது.
NETFLIX ல் காணலாம். பரபரப்பான திரைக்கதையில், பதட்டமாகவே பார்க்க வேண்டும் என்றால், Nayattu பொருத்தமான படம்.
Directed by Martin Prakkat
Produced by Ranjith, P. M. Sasidharan, Martin Prakkat
Written by Shahi Kabir
Starring Kunchako Boban, Joju George, Nimisha Sajayan
Music by Vishnu Vijay
Cinematography Shyju Khalid
Edited by Mahesh Narayanan
Release date 8 April 2021
Country India
Language Malayalam
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
Joseph (மலையாளம் 2018) | விபத்தா கொலையா?!
Take Off [மலையாளம் – 2017] “உலகப்படம்”
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
உங்க விமர்சனம் எப்பவும் தரமாக இருக்குது
நன்றி தீனதயாளன்.. 2009 ல் இருந்து படிக்கறீங்கன்னு நினைக்கிறேன்.
கிரி, இந்த வார இறுதிக்குள் இந்த படத்தை பார்த்து விடுவேன்.. மலையாளம் தற்போது எனக்கு விருப்ப மொழியாக இருப்பதால் , தற்போது அதிகம் மலையாள படத்தை மட்டும் தான் பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
பாருங்க யாசின் நல்லா இருக்கும்..
படம் சூப்பர் அண்ணா