I Care A Lot (2020) | அவசரப்பட்டுத் தூக்கிட்டோமோ!

2
I care a lot

Die Another Day & Gone Girl போன்ற படங்களில் நடித்த Rosamund Pike மிரட்டும் த்ரில்லர் படமே I Care A Lot. Image Credit

I Care A Lot

அமெரிக்காவில் வயதானவர்களைக் கவனிப்பதாக நடித்து அவர்கள் சொத்தை Rosamund Pike நிறுவனத்தினர் அபகரிக்கிறார்கள்.

துணை யாரும் இல்லாத ஆனால், அதிகச் சொத்துள்ளவர் என்று வயதான ஒரு பெண்மணியைச் சட்டத்தை வைத்து இவர்கள் காப்பகத்துக்குக் கூட்டி வர, பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகி விடுகிறது.

Rosamund Pike இப்பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா? என்பதே I Care A Lot

Rosamund Pike

இவருடைய துவக்க அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்த உடனேயே விவகாரமானவர் என்று புரிந்து விடுகிறது. அதாவது எதற்கும் பயக்காத நபர் என்று.

தன் காப்பகத்தில் உள்ளவர்களிடம் அன்பாகப் பேசுவதும், நன்றாகக் கவனிப்பதாக அவர்களை நம்ப வைப்பதும் என்று சிரித்த முகத்துடன் ஏமாற்றுகிறார்.

இவர் மற்றவர்களிடம் நடந்து கொள்வதைப் பார்த்தால், அட! எவ்வளவு நல்லவர்யா! என்று இருக்கும் 🙂 .

தன் புத்திசாலித்தனத்தால், பேச்சு திறமையால் சிரித்துக்கொண்டே இவர் சமாளிக்கும், கண்டுபிடிக்கும் இடங்கள் எல்லாம் அசத்தல்.

இவரிடம் உள்ள CONFIDENT அவரது உடல்மொழியிலேயே நமக்கு நன்கு தெரியும்.

Peter Dinklage

Game Of Throne சீரிஸில் வந்த Peter Dinklage வில்லனாக வருகிறார். மூன்று அடி உயரம் இருந்து கொண்டு இவர் அனைவரையும் மிரட்டுவது வித்யாசமாக உள்ளது.

துவக்கத்தில் நகைச்சுவை வில்லனோ என்று நினைத்தால், பகீர் ரகமாக இருப்பார். ஆஹா! இவருக்குள்ள இப்படியொருவரா! என்று திக்குனு இருக்கும்.

வக்கீலாக வருபவர் மிரட்டும் இடம் அட்டகாசம். அவர் பேசுவது மிரட்டுவது போல இருக்காது ஆனால், இருக்கும் 🙂 .

நம் விருப்பம் இல்லையென்றாலும், அமெரிக்க நீதிமன்றம் கட்டளையிட்டால் காப்பகம் செல்ல வேண்டும் என்பது, என்ன மாதிரியான சட்டமோ!

இறுதியில் முடிவு நன்றாக இருக்கும் என்றாலும், இன்னும் மிரட்டலாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், ஏனோ இயக்குநர் முயற்சிக்கவில்லை.

நல்லதொரு த்ரில்லர் படம். த்ரில்லர் என்பதால், சுவாரசியம் குறைந்து விடும் என்று பல காட்சிகளைக் குறிப்பிட முடியவில்லை.

பரிந்துரைத்தது பாபு. NETFLIX ல் உள்ளது.

Directed by J Blakeson
Produced by Teddy Schwarzman, Ben Stillman, Michael Heimler, J Blakeson
Written by J Blakeson
Starring Rosamund Pike, Peter Dinklage, Eiza González, Chris Messina
Music by Marc Canham
Cinematography Doug Emmett
Edited by Mark Eckersley
Distributed by Netflix
Release date September 12, 2020 (TIFF), February 19, 2021 (United States)
Running time 118 minutes
Country United States
Language English

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Prison Break | Terrific Thriller Series

Joji (2021 மலையாளம்) | A Psychological Thriller

Fauda | Israeli TV Action Series | உளவுத்துறை Vs தீவிரவாதிகள்

Ee Adutha Kaalathu (2012 மலையாளம்) | A Must Watch Movie

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. இதுவரை படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை.. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.. தற்போது நேரம் கிடைக்கும் போது மலையாள படங்கள் மட்டும் பார்க்கிறேன்.. ஆங்கில படங்கள் பார்ப்பது மிக மிக குறைவு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் பாருங்க.. ரொம்ப நன்றாக இருக்கும். நண்பர்கள் பலர் பார்த்து நன்றாக இருப்பதாகக் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here