இந்தி திணிப்பு என்றால் என்ன? என்று இதுவரையும் புரியாதவர்களுக்கு அல்லது புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களுக்கு இந்தியைத் திணிக்கும் IRCTC விளக்கப்பாடம் எடுத்துள்ளது.
இந்தியைத் திணிக்கும் IRCTC
“இந்தி எதிர்ப்பு”க்கும் “இந்தி திணிப்பு எதிர்ப்பு”க்கும் வித்யாசம் உள்ளது ஆனால், பலர் இரண்டுமே ஒன்று தான் என்று பேசுவார்கள்.
IRCTC இணையத் தளம் “ஆங்கிலம், இந்தி” மொழிகளில் சேவை வழங்கி வருகிறது என்பது இத்தளத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும்.
தனியார் நிறுவனமான “கூகுள்” வியாபார நோக்குக் காரணமாக இருந்தாலும் இந்தியாவின் பெரும்பான்மை மொழிகளில் தன் சேவையைத் தருகிறது ஆனால், மத்திய அரசு கொடுக்கும் இரு மொழிகளைக்கூட உருப்படியாகத் தரமுடியவில்லை.
தனித்தளம்
இந்தி மொழிக்கென்று தனியாகத் தளம் இருக்கும் போது எதற்காக ஆங்கிலத் தளத்தில் இந்தியை நுழைக்க வேண்டும்?
உனக்குச் சாப்பிட தனித் தட்டு கொடுத்த பிறகும் அடுத்தவன் தட்டிலும் கையை வைப்பது எவ்வளவு பிச்சைக்காரத்தனமான செயல்?
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், உடன் இந்தியும் வருகிறது. ஏன்டா! இந்திக்கு தான் தனியா தளம் இருக்கே! அப்புறம் எதுக்குடா இதுலயும் இந்தியை நுழைக்கறீங்க?
இந்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இதைத் திணிப்புக் கிடையாது என்று கூற முடியுமா?
கொஞ்ச மாதங்கள் முன்பு இதே IRCTC தளத்தில், என்ன பிரச்சனை என்று நினைவில்லை, ஒரு Popup அறிவிப்பு கொடுத்தார்கள்.
அதிலும் இந்தி முதலிலும் பிறகு ஆங்கிலத்திலும் வந்தது.
இந்திக்கு என்று தனித்தளம் இருக்கும் போது என்ன கூந்தலுக்கு ஆங்கிலத் தளத்தில் இந்தி அறிவிப்பை நுழைக்க வேண்டும்?
இவற்றைப் பார்க்கும் போது கடுப்பாகுமா ஆகாதா?!
ஆங்கிலத் தளத்தில் இந்தி
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது உடன் இந்தியும் வருவதைப் பார்த்தாலே கடுப்பாக உள்ளது (https://www.irctc.co.in/).
“ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம், ரயில் பயணியருக்கு டிக்கெட் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. இந்தி மொழியை ஊக்குவிப்பது, அதன் வேலை அல்ல“
என்று IRCTC க்குக் கே.கே.டி.ஆர்.யு.ஏ. எனப்படும், கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
சில நாட்களில் தவறு நடந்ததாகக் கூறி நீக்கி விட வாய்ப்புள்ளது. இவங்களோட எண்ணமே, “கல்லை விட்டுப் பார்ப்போம்” என்பதாகத்தான் ஒவ்வொருமுறையும் உள்ளது.
பிற்சேர்க்கை – அசிங்கப்பட்ட IRCTC தளம்!
தொடர்புடைய கட்டுரை
இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
கொசுறு
புதிய தளம் வசதிகள் இருந்தாலும், வெறுமையாக, வெள்ளையாக உள்ளது, UI சரியாக இல்லை. பயனாளர்கள் கருத்துகளைப் பெற்று மாற்றம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இந்தி எதிர்ப்பு என்று ஒன்றில்லை. எல்லாமே இந்தி திணிப்பு எதிர்ப்புத்தான். இந்தி திணிப்பு எதிர்ப்புத்தான் ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்பாகவே மாறுகிறது/ தோற்றமளிக்கிறது. நான் ஆச்சரியப்படுகின்ற விடயம், தமிழர்களையும் மலையாளிகலையும் தவிர்த்து ஏன் மற்றயவர்கள் இந்தி திணிப்பினை எதிர்ப்பதில்லை.
உங்களை கடுப்பேத்த ஒரு கேள்வி.
தமிழ் படங்களில் இந்தி பேசுவது சரியா. தமிழர்கலில் மிகப்பெரும்பான்மையானோருக்கு இந்தி தெரியாது என்றபோதிலும் இந்தி பேசி நடிப்பது சரியா. அதுவும் அவர்களுக்கு பிடித்தமான சூப்பர் ஸ்டாராக இருந்து கொண்டு இந்தி பேசி நடிப்பது சரியா. அதுவும் கியாரே என்று சொல் இன்று தமிழர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு கொண்டு சென்று சேர்த்தது ஒருவகை திணிப்புத்தானே.
இது உங்களை கடுப்பேத்த மட்டுமே. உங்களின் ஆதங்கத்தை நீர்த்துப்போக செய்யவல்ல.
பிறமொழித் திணிப்பு இல்லாத மொழிப் பாவனையே சிறப்பு.
நம் மொழி நமது அடையாளம்.. எந்த சூழ்நிலையிலும் அதனை விட்டுவிட கூடாது… நமது கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் நமது சந்ததிகளுக்கு நிச்சயம் கற்று தர வேண்டும்.. திணிப்புகள் பலவாறு இருந்தாலும் (இருக்கும்) நமது நிலையில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்…
@ப்ரியா கர்நாடகாவில் தமிழ்நாடு போல எதிர்ப்புகள் அதிகம். கேரளா, ஆந்திராவில் இந்தி பயன்படுத்துபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளார்கள், எனவே, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பிடிக்காத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல இருக்கிறது, ரஜினி பற்றிய உன்னுடைய பார்வை.
காலா மும்பையில் நடக்கும் ஒரு கதைக்களம். அங்கே உள்ள மக்கள் இந்தி தமிழ் இரண்டும் கலந்து பேசுவார்கள், பெரும்பாலும் இந்தி.
இதில் ரஜினி எப்படி இந்தி பேசலாம் என்று கேட்பதுக்கு நான் அழுவதா சிரிப்பதா?! அதுவும் திணிப்பு என்று கூறுவது.. ஷப்பா . எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?!
விட்டா… கபாலில ஏன் ரஜினி மலாய் வசனம் பேசினாருன்னு கேட்ப போல.
ப்ரியா கடுப்படிக்க கேட்கப்படும் கேள்விகள் கூட கொஞ்சம் லாஜிக்கா இருந்தால் நல்லது.
@yarlpavanan உண்மை
@யாசின் திணிப்புகள் அதிகமாகும் போது பல பிரச்சனைகள் உருவாகிறது.