உலகம் முழுவதும் திறன்பேசிகளின் இயங்குதளம் (OS) என்றால் இரு பெரு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் Android மட்டுமே!
இதைத்தாண்டி இருக்கலாம் ஆனால், அவை துக்கடா அரசியல் கட்சிகள் மாதிரி தான். Image Credit
Apple Store Vs Google Play Store
ஆப்பிள்
ஆப்பிள் வசதியானவர்களைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் சாதனங்கள்.
இதில் வன்பொருள் மென்பொருள் தரம் அபாரம். தன்னுடைய வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும், தரத்தில் எந்தச் சமரசமும் செய்து கொண்டதில்லை.
விலையைப் பற்றிக் கவலைப்படாமல் தரத்தை பற்றி மட்டுமே நினைப்பவர்கள், அதிகச் செலவு செய்ய நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவன திறன்பேசி தான் வாங்குகிறார்கள்.
Android
Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகச் செலவு செய்ய நினைக்காதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள்.
இதனால் ஆப்பிள் திறன்பேசியை அனைவரும் வெறுப்பவர்கள் என்ற அர்த்தமில்லை, விலை குறைத்து கிடைத்தால் வாங்க தயாராக இருப்பவர்களே!
ஆனால், தரம் என்பதையும் தாண்டி எளிமையான பயன்பாடு, அதையொட்டிய வசதிகள், பல வகை திறன்பேசிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆப்பிள் திறன்பேசிகளைக் கொடுத்தாலும் விரும்பமாட்டார்கள்.
எனவே, இரு இயங்கு தளத்துக்கும் தனித்தன்மை என்றுள்ளது.
ஆப்பிள் நிறுவன திறன்பேசி விலைக்குச் சமமாக இருக்கும் “Google Pixel” Android திறன்பேசிகளை வாங்குபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.
சராசரி
இருப்பினும் சராசரியாகப் பார்க்கும் போது ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் செலவு செய்யத் தயங்காதவர்களாகவும், Android திறன்பேசி பயன்படுத்துபவர்கள் செலவு செய்ய யோசிப்பவர்களாகவும் உள்ளனர்.
எனவே குறைவான பயனாளர்கள் சதவீதத்தை வைத்து இருந்தாலும் ஆப்பிள் நிறுவனமே செயலிகள் மூலமாக அதிகம் சம்பாதிக்கிறது.
அதிகளவில் பயனாளர்கள் வைத்து இருந்தாலும் ஆப்பிளுடன் Android போட்டி போட முடியவில்லை.
வருமான சதவீதம்
Apple Store Vs Google Play Store வருமானம் எந்த அளவில் உள்ளது என்பதை விளக்கும் படங்களே இவை! Image Credit
சுருக்கமாகச் சொல்வதென்றால், செயலிகளின் தரவிறக்கம் அதிகமிருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் பாதி தான் Android பெறுகிறது.
உதாரணத்துக்கு Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இலவச செயலியைத் தான் தரவிறக்கம் செய்வார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்கள் குறைவு.
நான் Android பயன்படுத்துகிறேன் ஆனால், இதுவரை பணம் கொடுத்துச் செயலி வாங்கியதில்லை. Google Rewards மூலமாகக் கிடைக்கும் பணத்தின் மூலமே நான் செயலிகளை வாங்கி இருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம்.
செயலிகள் மூலம் மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் நாடான சீனாவில் Apple Store உள்ளது ஆனால், Android Play Store க்கு தடையுள்ளது.
இருப்பினும் சீனா வருமானத்தைக் கழித்தாலும் 30% வருமானம் அதிகளவில் ஆப்பிள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கட்டுரைகள்
கூகுள் நமக்குப் பணம் தருகிறது என்பது தெரியுமா?!
சந்தையைக் கலக்கும் கூகுள் திறன்பேசி “Pixel”
கொசுறு
என்ன திறன்பேசியைப் பயன்படுத்துகிறீர்கள்? எந்த இயங்குதளம் பிடித்துள்ளது?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, இதுவரை ஆப்பிள் நிறுவன கைபேசியை பயன்படுத்தியது இல்லை.. என்னுடைய ஆரம்பம் MAY 2007 இல் நோக்கியோ 1100 (நண்பன் ஒருவன் கொடுத்த பயன்படுத்திய கைப்பேசி.. இன்றும் உள்ளது..) பின்பு C6 , இடையில் கொஞ்ச நாள் லெனோவா.. தற்போது ஜியோமி MI4W .. திரும்பவும் 1100 மாறலாம் என்று கூட நினைத்ததுண்டு.. மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை..
நான் இதுவரை GOOLE PLAY STORE மட்டுமே பயன்படுத்தி உள்ளேன்.. அதிகம் தரவிறக்கம் செய்தது கிடையாது.. பாடல்கள் தரவிறக்கம் செய்து கேட்க வேண்டும் என்ற ஆசை உண்டு.. இருப்பினும் அதிக நேரம் கைபேசியுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன்.. இதுவரை 1 ரூபாய் செலவு செய்தது இல்லை.. முன்பு ஒருமுறை ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.. தற்போது சுத்தமாக இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நான் இப்போது Apple 8 பயன்படுத்துகிறேன். இதற்கு முன்னர் நெஸ்ஸ்ஸ் 5 வைத்திருந்து Kindle App இனை Install செய்ததால் அந்த கைபேசி அகாலமரணமடைந்தது. என்னுடய வேலைக்கு புகைப்பட கருவி தேவையென்பதாலும், நான் கூடுதலாக அதை கொண்டு போக மறப்பதாலும், உடனடியாக புதிய கைபேசி வாங்கவேண்டியதாகபோய்விட்டது. கடந்த தை மாதத்தில் Galexy 8 மாத கட்டணத்தில் 25$ ஆகவும் Apple 8 15$ ஆகவும் Apple 10 25 $ ஆகவும் இருந்தது. கஸ்டப்பட்டு உழைத்து வீணாக்குவதா என்பதால் Apple 8 இனையே வாங்கினேன் . இன்ன்மொரு 10 $ கூட போட்டு Apple 10 வாங்க்யிருக்கலாமோன்று சில நாள் நினைத்தேன். பிறகு அதுவெல்லாம் மறந்துவிட்டது. இப்ப திரும்பவும் நியாபகப்படுத்திவிட்டீர்கள். PogemonGo விளையாடுவதால் இதுவரை App Store இற்கு 7 $ கொடுத்துள்ளேன். இனி கொடுப்பதாகவுமில்லை.
@யாசின் Mi Cheap and Best 🙂 என்னுடைய நண்பர்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். நானும் iPhone செல்லும் எண்ணமில்லை.
@ப்ரியா Kindle App நிறுவியதால் செயலிழந்ததா! வியப்பாக உள்ளது. என்ன பிரச்சனையோ!
PogemonGo நல்லா இருக்கா? எனக்கென்னமோ விளையாட்டில் ஆர்வமில்லை.. என் அக்கா பசங்க கூட இதை கொஞ்ச நாள் ஆர்வமா விளையாட்டிட்டு இருந்தாங்க.. அப்புறம் கண்டுக்கலை.
Google Store இல் Kindle இல்லை( எங்கள் ஊரில் மட்டுமோ தெரியாது). தனியாகத்தான் நிறுவ வேண்டும். அப்படி நிறுவிய சில மணி நேரத்தில் செயலிழந்த கைபேசி இதுவரைக்கும் உயிர்க்கவில்லை.Google இல தேடி பார்த்த்போது பலருக்கு இதுபோல நிகழ்ந்துள்ளது. Pogeman Go நல்லாவா உள்ளது என்று கேட்கிறீர்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக விளையாடி வருகிறேன். 1100km மொத்தமாக நடந்து கடந்து நன்றாகவே போகிறது. இதுவும் ஒருவகை போதை போன்றதுதான். இதுவரை 3 தடவை விளையாடமல் விட்டு திரும்ப ஆரம்பித்திருக்கிறேன் என்றால் பாருங்கள். நான் இப்போது இருக்கும் இடத்தில் எனக்கு யாரையும் தெரியாது. அப்படியான தருணத்தில் கடந்த 6 மாதமாக தினமும் மாலை நேரங்களில் சில பல மணி நேரம் இதில்தான் கடக்கிறது. இப்போது போகிமானை விற்பது கூட வந்துவிட்டது. மாதம் இரண்டு விழாக்கள் வேறு இருக்கிறது.
அடேங்கப்பா! 🙂 தமிழ்நாட்டில் Pokeman Go அறிமுகப்படுத்திய போது பரபரப்பாக இருந்தது, பின்னர் அப்படியே கை கழுவி விட்டார்கள்.
அந்த சமயத்தில் MEMES கூட அதிகமாக இருந்தது.
இந்த வரியை கொஞ்சம் தெளிவாக பதிவிட முடியுமா?
Google Rewards மூலமாகக் கிடைக்கும் பணத்தின் மூலமே நான் செயலிகளை வாங்கி இருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம்.
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.paidtasks இந்த செயலியை நிறுவிக்கொண்டால் அவ்வப்போது வரும் Survey கலந்து கொண்டால் இதில் நமக்கு பணம் கிடைக்கும் அவை Play Store ல் சேமிக்கப்படும். இதை வைத்து நாம் நம் விருப்பம் போல செயலிகளை (App) வாங்கிக்கொள்ளலாம்.