ஆப்பிள் ஐஃபோன் நிறை குறைகள்

24
ஆப்பிள் ஐஃபோன் iPhone நிறை குறைகள்

னைத்து தொடுதிரை திறன் பேசிக்கும் (Smartphone)  முன்னோடி என்றால் ஆப்பிள் ஐஃபோன் தான். இதன் நிறை குறைகளைப் பார்ப்போம். Image Credit

ஆப்பிள் ஐஃபோன் குறிப்புகள்

  • உலகில் அதிகளவில் மக்கள் விரும்பும் சாதனங்களில் ஒன்று ஆப்பிள் iPhone.
  • வருடாவருடம் ஜூன் மாதம் புதிய மாடலை வெளியிடும்.
  • iOS என்ற இயங்குதளத்தை (OS) தனது தொலைபேசியில் பயன்படுத்துகிறது.
  • வன்பொருள் (Hardware) மிகத் தரமானது.
  • மற்ற தொலைபேசிகளை ஒப்பிடும் போது, தொடுதிரை (Touch Screen) பயன்படுத்துவது எளிது,
  • வெளியாகும் போது, இரவெல்லாம் வரிசையில் நின்று வாங்க பெருங்கூட்டம் நிற்கும். சீனாவில் வெளியிட்ட போது ஆப்பிள் கடை, கூட்ட நெரிசலில் உடைக்கப்பட்டு பெரிய பிரச்சனை ஆனது.
  • சீனாவில் கிட்னியை விற்று ஒருவர் ஐஃபோன் வாங்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது.
  • பலரால் உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான மென்பொருட்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.
  • பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாததால், மற்ற எந்தத் திறன்பேசிகளை விடவும் ஐஃபோன் பாதுகாப்பு மிகச்சிறப்பாக உள்ளது.
  • Malware மென்பொருட்களால் iOS செயலிகள் பாதிக்கப்படுவது, மிகக்குறைவு.
  • பழுதாவதற்கான சதவீதம் மிகக்குறைவு.
  • குழந்தைகளும், பெரியவர்களும் எளிதாகப் புரிந்து பயன்படுத்த முடியும்.
  • வைரஸ் பாதிப்புக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

குறைகள் 

  • இதற்கென்று உள்ள மென்பொருளை (iTunes) வைத்து மட்டுமே எதையும் செய்ய முடியும்.
  • MP3 பாடல்களை ஏற்றுவது Android போல எளிதல்ல.
  • Adobe Flash பயன்படுத்த முடியாது.
  • சில நிறுவனங்கள் Android க்கு மட்டும் செயலி வெளியிடும், iPhone க்கு கிடைக்காது.
  • iOS இயங்கு தளத்தை ஐஃபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • பேட்டரி நேரம் திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டுண்டு. தற்போதைய பதிப்பில் இக்குறை சரிசெய்யப்பட்டுள்ளது.
  • Android திறன்பேசிகளுடன் iPhone Blutooth வேலை செய்வதில் பிரச்சனைகள் உள்ளது.
  • ஐஃபோன் விலை ஒரு லட்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டுள்ளது. விலை அதிகம் எனவே, சாமானியர்கள் வாங்குவது எளிதல்ல.

தொடர்புடைய கட்டுரைகள்

Android திறன்பேசி பயன்படுத்துகிறீர்களா?

Android OS பதிப்புகளின் பெயர் ஏன் மாறுகிறது?

iPhone விலை | கிட்னி கிண்டல்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

  1. iPhone பேட்டரி டைம் HTC -யை விட நல்லாத்தான் இருக்கிறது என்பது என் கருத்து. 7 மணி நேரம் பேசிக்கொள்ள முடியும் என்பது, மற்ற மடல்களை விட நன்று.

  2. iPhone பேட்டரி டைம் HTC -யை விட நல்லாத்தான் இருக்கிறது என்பது என் கருத்து. 7 மணி நேரம் பேசிக்கொள்ள முடியும் என்பது, மற்ற மடல்களை விட நன்று.

  3. தொழிநுட்ப தகவல்களை அருமையாக தொகுத்து சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றிண்ணே.

  4. நான் என்னோட மொபைல இன்னும் வெறுமனே பேசுறதுக்கு மட்டுந்தான் பயன்படுத்துறேன். அப்பப்ப போட்டோ எடுக்கறேன், ரொம்ப அபூர்வமா பாட்டு கேக்குறேன், சில சமயம் நெட்-அ பயன்படுத்தி இருக்கேன் (நோக்கியா Express Music 5800). இதுக்கும் மேல இன்னும் வேற என்ன வசதிகள் இருக்குன்னே தெரியாது. இந்த பதிவ படிக்கும் பொது “சரி, இதெல்லாம் இருக்குதா? ம்ம்ம்… இதெல்லாம் எங்கியோ இருக்குது”-ங்குற எண்ணம்தான் இருக்குது. நீங்க சொன்னா மாதிரி பயன்படுத்த ஆரம்பிச்சா, அதன் அருமை தெரியும்னு நினைக்கிறேன். ஆனா ரொம்ப ஹை-பையா ஒரு மொபைல் வாங்கி, ஊருக்கு போகும்போது அத வச்சு சீன் போடணும்னு ஒரு சின்ன ஆசை. 🙂

    –> ஒரு செய்தி நிறுவனத்தின் மைக் லோகோ மட்டும் சன் செய்தியில் மறைத்துக் காட்டப்படுகிறது
    அது தினமலர் லோகோதான். ஏன் என்று தெரியவில்லை. அப்படி மறைக்கிறதாலதான் அது என்னன்னு உத்து உத்து பாக்க வேண்டியதா இருக்கு, என்னமோ இருக்கு…. “எங்கப்பன் குதிரைக்குள்ள இல்ல”-ன்னு இவனுங்களே சொல்றானுங்க. 🙂

    ஜெயலலிதா படம் – எம்.ஜி.ஆர் எதனால் விழுந்தார் என்பது தெரிகிறது. 😉

  5. Translate சூப்பர்.. இன்னும் Alphaல இருக்கறதால கொஞ்சம் பிரச்சனை வரும்னு கூகுள் சொல்லுது. அதுவும் உண்மைதான். இதுக்கு முக்கியமான காரணமா தமிழோட “எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை” அமைப்பும் பயனிலையில் எண், பால், இடம், திணை விகுதிகள், காலம்காட்டும் இடைநிலைகளும் காரணம் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பதாகவும் அது தெரிவிக்கின்றது.

  6. இதில் சிம்பியன் மென்பொருள் மட்டும் மரணப்படுக்கையில், நோக்கியா கை விட்டு விட்டதால்!

  7. iphone4 பற்றியும் வரவிருக்கும் iphone5 பற்றியும் விரிவாக தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் நன்றி தொடுதிரை போன் Samsung, HTC, சோனி இந்த வரிசையில் நோக்கியா கூட தொடுதிரை Nokia 5800 xpressmusic போன் அறிமுகப்படுத்தியிருப்பது உங்களுக்கு தெரியாதா iphone அடுத்தபடியாக மக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் இருப்பது இதுவும் தான் என்பதை உங்கள் பதிவில் இணைத்துக்கொள்ளுங்கள் நன்றி

  8. அனைவரின் வருகைக்கும் நன்றி மற்றும் அந்த செய்தி நிறுவனம் தினமலர் என்று தெளிவுபடுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

    @விஜய் சாம்சங் பேட்டரி நன்றாக உள்ளது iPhone உடன் ஒப்பிடும் போது. அதோடு இணையம் அதிகம் பயன்படுத்தினால் அல்லது அதிகம் பேசினால் ரொம்ப சூடு ஆகிறது.

    @முத்து அது குதிரைக்குள் அல்ல குதிருக்குள் 😀

    @தமிம் நோக்கியாவை சேர்க்கவில்லை என்றால் அடித்து விடுவீர்கள் போல இருக்கே! 🙂 சும்மா தமாசு..

    நோக்கியா இயங்குதளம் சிம்பியானுக்கு சுத்தமாக வரவேற்ப்பு இல்லை. அதனால் அதற்க்கு இனி எதிர்காலம் இல்லை. நோக்கியா Windows அல்லது Android ல் இணைந்தால் மட்டுமே இனி வளர்ச்சி இருக்கும் அல்லது தன்னுடைய இயங்கு தளத்தை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

    @சங்கர் மின்னஞ்சல் அனுப்புங்கள். நண்பர்கள் அன்புத்தொல்லையால் சாட் வருவதில்லை.

  9. என்னதான் மற்றைய தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டாலும் iphone தொடுதிரை தரத்தை எட்டுவது கடினம் தான். உங்களின் android பற்றிய இடுகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் வெளியிடுங்கள் .

  10. வணக்கம் கிரி ,…..

    நீங்க சொல்லுரத கேக்கும்போது ஆவலாதான் இருக்கு ஆனா இங்க ஆப்பிள் rs 35000 சொல்லுறாங்க அதான் யோசனையா இருக்கு

    ஆனா பாருங்க ஆப்பில் ல உள்ள வசதிய விட அதிகம் வசதி உள்ள போன்கள் நோக்கியா lg ல rs 20000 க்கு கெடைக்குது

  11. கிரி, நலமா? பல அறிய தகவல்களை தருகிறீர்கள். ரொம்ப நன்றி. – பயபுள்ள.

  12. நல்ல தெளிவான பதிவு, மிக்க நன்றி சகோதரா,

    எனக்கு ஒரு உதவி செய்யுங்க.
    என்னுடைய Nokia E500 ல் இனையத்தில உளவும் போது தமிழ்
    எழுத்தக்கள் மறைக்கப்டு கின்றது.
    எவ்வாறு சறி செய்வது?

  13. anna,

    i am using only phones worth rs. 1500 to rs.2500- for தி past ten எஅர்ஸ். So i cant understand the above things.

  14. @துவாரகன் நீங்கள் கூறுவது சரி தான். iPhone தொடுதிரை தரத்துடன் மற்ற தொலைபேசிகளை ஒப்பிட முடியாது. Android பற்றி எனக்கு குறைந்த அளவே தெரியும் அதனால் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வேண்டியுள்ளது. அரைகுறையாக எப்போதும் எழுத மாட்டேன்..அதனால் நன்கு புரிந்து கொண்டு பிறகு எழுதுகிறேன் (கண்டிப்பாக)

    @ஆனந்த் நீங்கள் கூறியது போல iPhone விலை அதிகம் தான் ஆனால் HTC போன்ற தொலைபேசிகளின் விலையும் கிட்டத்தட்ட iPhone அளவு வருகிறது.

    நீங்கள் இன்னும் iPhone பயன்படுத்தியதில்லை என்பதால் அதனுடைய சிறப்பு உங்களுக்கு தெரியவில்லை அதனால் தான் நோக்கியா LG உடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். iPhone உடன் Android இயங்குதளம் உள்ள தொலைபேசிகளை மட்டுமே ஒப்பிட முடியும்.

    @பயபுள்ள வாங்க! வாங்க! ரொம்ப நாள் ஆச்சு.. நான் ரொம்ப நல்லா இருக்கேன் 🙂

    @இனியன் Android இயங்கு தளத்திற்கு நான் கூறிய யோசனையே தான் இதற்கும். பின் வரும் முறைப்படி உங்கள் தொலைபேசியில் இதை செயல்படுத்துங்கள்.

    1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/

    இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

    2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
    3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
    4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

    இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

    @ராஜேஷ் நானும் உங்களைப்போலவே தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன் சமீபத்தில் தான் இதற்கு மாறினேன். கடந்த ஒன்பது வருடங்களாக நோக்கியா தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். விலைகளில் மாறுபாடு இருந்தது.

  15. மிக்க நன்றி கிரி, இப்ப நாங்களும் தமிழ் படிக்கிறம் கைபேசியில்(நோக்கியா E5 ௦௦),

    என்ன தான் தமிழ்,ஆண்ட இனம் என்று பேசினாலும் இவ்வகையான
    உதவிகளுக்கு ஆங்கலத்தைதான் நாடுவேன்.
    இது முதல் மாற்றம்

  16. அண்ணே !!! எனக்கு ஒரு நாலு போன் வாங்கி அனுப்புங்க(உங்க செலவுல தான் ) அப்புறம் நான் சொல்றேன் எது பெஸ்ட்டுன்னு :))

  17. //@சங்கர் மின்னஞ்சல் அனுப்புங்கள். நண்பர்கள் அன்புத்தொல்லையால் சாட் வருவதில்லை//

    அண்ணனுக்கு நெறைய கேர்ள் பிரண்ட்ஸ் !!! அதன் அண்ணன் கூச்ச படறார் !!! வேற ஒண்ணும் இல்லை !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here