iPhone விலை | கிட்னி கிண்டல்கள்

6
iPhone விலை

ப்பிள் நிறுவனம் வருடாவருடம் தனது புதிய மொபைல் பற்றி அறிமுகத்தைச் செப்டம்பர் மாதம் நடத்தும். அறிமுகப்படுத்தி iPhone விலை கூறியதும் அது குறித்த கிண்டல்களும் உலகம் முழுக்க உள்ள மக்களால் பகிரப்படும். Image Credit

iPhone என்பது அதை வாங்க வசதி உள்ளவர்களுக்கானது, மற்றவர்கள் தங்களின் வருமானத்துக்கு ஏற்றத் திறன்பேசியை வாங்கிக்கொள்ள வேண்டியது தான்.

iPhone விலை

சீனாவில் ஒரு கிறுக்கன் கிட்னியை விற்று iPhone வாங்கியது இரு வருடங்களுக்கு முன்பு நடந்தது.  இதுவே iPhone விலையைக் கிண்டலடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

iPhone வாங்குறவன் 80,000 / 1,00,000 கொடுத்து வாங்கினால்.. அது அவன் பணம் அவன் விருப்பம். பணம் வீணானால் அது அவன் பிரச்சனை.

முதல் காட்சியில் பார்க்கும் திரைப்படம் தானே அடுத்து வரும் காட்சிகளிலும் வரும்.. பின் எதற்கு அவ்வளவு பணம் கொடுத்து முதல் காட்சியைப் பார்க்க வேண்டும்?!

எத்தனை பேர் சிகரெட் புகைக்கிறீர்கள்? குடிக்குச் செலவு செய்கிறீர்கள்? நீங்கள் இதற்குச் செலவு செய்யும் பணத்தை உங்களின் படிப்புக்கோ குடும்பத்துக்கோ ஏன் செய்யக் கூடாது?!

iPhone வாங்குற பணத்தில் இத்தனை சரக்கு அடிக்கலாம் என்று கிண்டலாகக் கணக்குக் கூறுபவர்கள், அது வீண், உடலுக்குக் கெடுதல் என்று உணரவில்லையே!

தரம்

7 வருடங்கள் iPhone பயன்படுத்தி இருக்கிறேன். இதன் தரம் என்பது அளவிடமுடியாதது, சில குறைந்த பட்ச விதிவிலக்குகள் இருக்கலாம்.

இந்தியா வந்த பிறகு என்னுடைய வருமானத்துக்கு ஏற்ற Android தான் பயன்படுத்துகிறேன். Android பயன்படுத்த அசத்தலாக இருக்கிறது. திரும்ப iPhone க்குச் செல்லும் எண்ணமே இல்லை.

iPhone போல Android திறன்பேசிகளிலும் கிட்டத்தட்ட இதே விலையில் திறன்பேசிகள் உண்டு. அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

தாங்கள் செய்யும் மற்ற வெட்டிச் செலவுகளைக் கணக்கில் எடுப்பதில்லை. iPhone என்றால் மட்டும் பலர் “பட்ஜெட் பத்மநாபன்” ஆகி விடுகிறார்கள்.

நம்மைப் பாதிக்காதவரை மற்றவரின் விருப்பத்தை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது?!

ஒருத்தன் என்னத்தையோ வாங்கிட்டுப் போறான்.. நமக்கென்ன! அவன் பணம் வைத்து இருக்கிறான், அவன் விருப்பம்… வாங்குறான். இதில் என்ன இருக்கு?!

நமக்கு அவசியமென்றால், நம்முடைய வருமானத்தில் முடியும் என்றால் எதையும் வாங்கலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

Readசந்தையைக் கலக்கும் கூகுள் திறன்பேசி “Pixel”

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. கிரி நீங்க பொதுவான பார்வையை சொல்லியிருக்கீங்க. ஆனால் இந்த ஐ போன் கௌரவத்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகின்றது. இங்குள்ள முதலாளிகள் அத்தனைபேர்களும் ஐ போன் தான் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் என் பார்வையில் சில விசயங்கள்.

    மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் 48000 ரூபாய்க்கு வாங்கியிருந்தார். எனக்கு ஓரளவுக்குத்தான் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள் தெரியும். ஆனால் ஆனால் அவர் பேசுவதற்கு மட்டும் தான் பயன்படுத்துவார். அவர் நீங்க சொன்ன மாதிரி காசு இருக்கு. வாங்கினால் என்ன? என்கிற ரீதியில் தான் அதை வாங்கினேன் என்றார்.

    ஒரு கார், அல்லது அவரவர் பயன்படுத்தும் பொருட்கள் எந்த அளவுக்கு அவருக்கு பயன்படுகின்றது என்பதை மட்டும் நான் கவனிப்பேன். எழுபது சதவிகித மக்கள் வாங்கிய பொருளில் என்ன வசதிகள் தொழில்நுட்பங்கள் உள்ளது என்பதனையே அறியாமல் தான் தங்கள் காசை வீணாக்குகின்றார்கள்.

    அலுவலகத்தில் ஒருவரின் சம்பளம் பதினைந்து ஆயிரம். அவர் அட்வான்ஸ் வாங்கி பதினைந்து ஆயிரம் ரூபாய்க்கு அலைபேசி வாங்கிக் கொண்டு வந்து எல்லோரிடமும் காட்டினார். அந்த மாதம் அவருக்கு நிர்வாகம் சம்பளம் கூட்டுவதாக இருந்தது. இதைப் பார்த்து முதலாளி நிறுத்தி வைத்து விட்டார்.

    இப்போதைக்கு எனக்கு புகைப்படங்கள் வீடியோ நல்ல தரத்தில் வேண்டும் என்பதில் தான் அலைபேசியில் விருப்பமாக உள்ளது. முடிந்தால் அதனைப் பற்றி எழுதவும்.

  2. கிரி, இது ரொம்ப எளிமையான ஒன்று (பல்லு இருக்குறவன் பகோடா சாப்பிடறான்) இல்லாதவன் வேடிக்கை பார்க்கிறான்… அவ்வளவு தான்… அவரவர் வருமானத்தையும், விருப்பத்தையும் பொறுத்து… இதில் நாம் கூறி… என்னவாக போகிறது…

  3. நம்மை பாதிக்காதவரை மற்றவரின் விருப்பத்தை விமர்சிக்க நமக்கு என்ன உரிமை உள்ளது?
    100%உண்மை, கடன் வாங்காமல் எதை வாங்கினாலும் பிரச்சனை இல்லை அதேபோல் தேவை இல்லாதது வாங்கினால் தேவையானதை விற்க நேரிடும்

    • (தேவை இல்லாதது வாங்கினால், தேவையானதை விற்க நேரிடும்.) நண்பர் சந்திரசேகர் எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் அனுபவப்பூர்வமாக இந்த பிரச்சனையை சந்தித்து இருப்பர். நன்றி.

  4. @ஜோதிஜி

    “ஐ போன் கௌரவத்தின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகின்றது.”

    அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மை.

    “அவர் பேசுவதற்கு மட்டும் தான் பயன்படுத்துவார். அவர் நீங்க சொன்ன மாதிரி காசு இருக்கு. ”

    பலர் இதே போல தான் இருக்கிறார்கள் ஆனால், அது ஐ போன் மட்டுமல்ல மற்ற திறன் பேசிகளுக்கும் பொருந்தும்.

    “எழுபது சதவிகித மக்கள் வாங்கிய பொருளில் என்ன வசதிகள் தொழில்நுட்பங்கள் உள்ளது என்பதனையே அறியாமல் தான் தங்கள் காசை வீணாக்குகின்றார்கள்.”

    முழுக்க ஏற்றுக்கொள்கிறேன் 🙂 .

    “அந்த மாதம் அவருக்கு நிர்வாகம் சம்பளம் கூட்டுவதாக இருந்தது. இதைப் பார்த்து முதலாளி நிறுத்தி வைத்து விட்டார்.”

    இதுல இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ! 🙂

    “இப்போதைக்கு எனக்கு புகைப்படங்கள் வீடியோ நல்ல தரத்தில் வேண்டும் என்பதில் தான் அலைபேசியில் விருப்பமாக உள்ளது.”

    தற்போது பெரும்பாலான திறன்பேசிகளில் சிறப்பான தொழில்நுட்பம் வந்து விட்டது. நன்றாக உள்ளது.

    @யாசின் “பல்லு இருக்குறவன் பகோடா சாப்பிடறான்”

    இதை எழுத நினைத்தேன்.. மறந்துட்டேன் 🙂

    @சந்திரசேகர் “தேவை இல்லாதது வாங்கினால் தேவையானதை விற்க நேரிடும்”

    உண்மை. யாசின் சொன்ன மாதிரி சூப்பர் 🙂

  5. Dual Space, Dual Apps | Parallel space, Single Handed Mode, Triple Cameras : Android rules in this areas

    //Android பயன்படுத்த அசத்தலாக இருக்கிறது. திரும்ப iPhone க்குச் செல்லும் எண்ணமே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!