ஜப்பானில் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு பலர் உயிரிழந்தார்கள் அந்தச் சோகமே இன்னும் முடியவில்லை திரும்ப மறுபடி நிலநடுக்கம் ஏற்பட்டு பீதியை கிளப்பி வருகிறது. Image Credit
எப்போதுமே இதைப்போல அழிவில் நீண்ட நாள் கழித்து சிலர் அதிசயமாக உயிர் பிழைத்து ஆச்சர்யப்படுத்துவார்கள் அது போல இதிலும் சிலர் பிழைத்தனர் இதில் ஒரு குழந்தையும் வயதான தாத்தாவும் அடங்குவர்.
இவர்கள் இல்லாமல் ஒரு நாய் மூன்று வாரம் தாக்குப்பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
சுனாமியில் அடித்து வரப்பட்ட ஒரு வீட்டின் கூரையிலே மூன்று வாரம் இருந்து இருக்கிறது.
மனிதனை விட நாய் உப்பு தண்ணீரை சமாளிக்கும் என்பதால் எப்படியோ சமாளித்து இருக்கிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் யாராவது பிழைத்து இருக்கிறார்களா என்று மீட்புப் படையினர் தேடிக்கொண்டு இருக்கும் போது தான் இந்த நாயைக் கண்டு மீட்டு இருக்கிறார்கள்.
தனது எஜமானரை மீண்டும் கண்ட அந்த நாயின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி 🙂 .
சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் ஜப்பான் விடுபடவில்லை அதை விட நாளுக்கு நாள் கதிர்வீச்சு பிரச்சனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே பயமாக இருக்கிறது.
உணவுப் பொருட்கள், காய்கறிகள், தண்ணீர் என்று எங்குப் பார்த்தாலும் கதிர்வீச்சு பரவி இருக்கிறது. எப்படித்தான் இருப்பது?
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தல
– அருண்
புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
// தனது எஜமானரை மீண்டும் கண்ட அந்த நாயின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோசம்.//
ஆம்:)! நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள் கிரி
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி.
மற்ற பதிவுகள் எல்லாம் ரீடரில் “Mark All as Read” என்று கொடுக்கும் வேளையில் உங்களோட ஒரு பதிவு தான் கடைசி வரை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது…
இதே மாதிரி போய்கிட்டே இருங்க…