இணையத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவர்கள் என்னென்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதை வைத்துதான் Searching படமே!
Searching
மனைவி இறந்த பிறகு, மகளுடனான நேரடித் தொடர்பு குறைந்து, பெரும்பாலும் ஃபேஸ்புக் சாட் மற்றும் மற்ற சமூகத்தளங்கள் வழியாக மட்டுமே கிம் தொடர்பு கொள்வார்.
இப்படிச் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு நாள் மகள் காணாமல் போக, மகள் பயன்படுத்திய சமூகத்தளங்களின் கணக்கில் நுழைந்து விவரங்களைத் தேடுவார்.
இறுதியில் பெண்ணைக் கண்டு பிடித்தாரா இல்லையா? என்பது தான் கதை.
சமூகத்தளங்கள்
இணையத்தில் வழக்கமாகச் செல்லும் ஃபேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம், YouTube, ட்விட்டர், ட்விட்டர், #Hashtag ன்னு அனைத்தும் இதில் வரும்.
80% படம் கணினியிலேயே முடிந்து விடும். கிம் என்னென்ன தேடுகிறார் என்பதைப் பார்க்கும் போது நமக்குச் சுவாரசியமாக இருக்கும்.
ஏனென்றால், அவையெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூகத்தளங்களாக இருக்கும்.
சமூகத்தளங்களில் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள், எவ்வளவு மோசமாக விமர்சிக்கிறார்கள், எப்படிப் புறம் கூறுகிறார்கள், தான் பிரபலமாக எப்படி மற்றவர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று அப்படியே காட்டியுள்ளார்கள்.
இதைப் பார்க்கும் போது தினமும் சமூகத்தளங்களில் சந்திக்கும் நபர்கள், அவர்களின் செயல்கள் நினைவுக்கு வந்து செல்லும். ஏன்.. உங்களையே காணலாம் 😀 .
சமூகத்தளங்கள் மற்றும் ஓரளவு இணையம் பரிட்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்ற படம். மற்றவர்களுக்கு “என்ன இழவுடா இது!” என்று தான் இருக்கும் 🙂 .
கிம் பயன்படுத்துவது ஆப்பிள் கணினி என்பதால், ஆப்பிள் பயனாளர்கள் கூடுதலாக இப்படத்தை ரசிக்க முடியும்.
விண்டோஸ் பயனாளர்களுக்கு UI பழக்கமில்லாததால் புரிய சிரமமாக இருக்கலாம் ஆனாலும் புரிந்து கொள்ள முடியும்.
1 மில்லியனில் எடுக்கப்பட்டு 75 மில்லியன் வசூலித்த படம்!
படத்துக்கு மிகப்பொருத்தமான பெயர் 🙂 .
Searching படத்தைப் பரிந்துரைத்த அருண், பாபு & சூர்யாக்கு நன்றி.
Directed by Aneesh Chaganty
Written by Aneesh Chaganty, Sev Ohanian
Starring John Cho, Debra Messing
Music by Torin Borrowdale
Cinematography Juan Sebastian Baron
Edited by Nick Johnson, Will Merrick
Distributed by Sony Pictures Releasing
Release date January 21, 2018 (Sundance)
August 31, 2018 (United States)
Running time 102 minutes
Read : The Invisible Guest (Spanish- 2016) கொலை செய்தது யார்?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
படத்தோட கதைக்கரு புதுமையாக இருக்கிறது.. 1 மில்லியனில் எடுக்கப்பட்டு 75 மில்லியன் வசூலித்த படம்!!! உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது.. யதார்த்தமான படங்களுக்குக்கான வரவேற்பு அதிகமாக இருப்பதை உணர்த்துகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
சமூகத்தளங்கள் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு பிடிக்கும்.