Thanks or Thank You

5
Thanks or Thank You

லகில் அதிகம் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாக ‘Thanks or Thank You’ உள்ளது. மொழிகளைக் கடந்து, ஆங்கிலமே தெரியாதவர்கள் கூடக் கூறும் வார்த்தை.

ஒருவர் செய்த உதவிக்கு Thanks என்று கூறுவது சிறப்பான செயல் என்றாலும், அதை இன்னும் சிறப்பாகக் கூற முயற்சிக்கலாம்.

தற்போது Thanks என்பது ஒரு சம்பிரதாயமான நிகழ்வாக, கடமைக்குக் கூறும் வார்த்தையாக மாறி விட்டதால், பலரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால், அதையே கொஞ்சம் மாற்றிக் கூறினால், கேட்பவர்கள் மகிழ்வார்கள் அல்லது திருப்தியாவார்கள் அல்லது நீங்கள் கூறிய நன்றியை முழுமையாக உணர்வார்கள்.

Thank You

அது தான் ‘Thank You’. இதை இன்னும் சிறப்பாக்க வேண்டும் என்றால், Thank You உடன் சம்பந்தப்பட்ட நபரின் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு ‘Thank You Giri’.

குறிப்பாக அலுவலக மின்னஞ்சல்களில் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். இந்த Thank You சம்பந்தப்பட்ட நபரைச் சிறு புன்முறுவலுக்கு உள்ளாக்கும்.

‘Thanks’ என்று கூறுவதை விட ‘Thank You’ என்று கூறுவது அவர்களது உதவியை நேரடியாக அங்கீகரிப்பதாக உணரச் செய்யும். இதனால் உங்கள் மீது கூடுதல் மதிப்பு, தோழமை உணர்வைக் கொடுக்கும்.

இதை நான் பெரும்பாலான நேரங்களில் உணர்ந்து இருக்கிறேன்.

இதைச் சோதிக்க, ஒருவருக்கு Thanks என்பதற்குப் பதிலாக, அழுத்தி Thank You என்று கூறுங்கள், அவர் முகத்தில் சம்பிரதாயப் புன்முறுவலாக இல்லாமல் உண்மையான மகிழ்ச்சியை, திருப்தியை அவரின் முக மாறுதலில் காணலாம்.

இதைச் செயல்படுத்திப் பாருங்கள், நான் கூறுவது உண்மை என்று உணர்வீர்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரை

நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?

https://www.facebook.com/giriblog

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களின் தீராக் காதலன் நான். நீங்கள் எழுதி உள்ளதை விரிவாக இப்போது ஊருக்குச் சென்று வந்த அனுபவம் வாயிலாக எழுதி வைத்து உள்ளேன்.

  2. ஒரு உண்மைய சொல்றேன்.. காலையில அலுவலகத்துல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை.. குட் மார்னிங்!!! அதிலயும் சில சக பணியாளர்கள் (நமக்கு குழி வெட்ட காத்து கொண்டிருப்பவர்கள்) குட் மார்னிங் கூட , HOW ARE YOU ??? என்று கேட்கும் போது சும்மா BP ஏறி இறங்கும்.. பல பேருக்கு பதிலே சொல்லமாட்டேன்.. (கவுண்டமணி சார் ஸ்டைல் ல மூஞ்ச சிரிச்சமாதிரி வச்சுப்பேன்.. )

    உள்ள ஆயிரத்தெட்டு விஷமத்த வச்சிக்கிட்டு, எப்படி வெளியில சிரிச்சிக்கின்னே கேட்கறாங்கனு தெரியல… ஆனால் நீங்க சொன்னது வித்தியாசமா இருக்கு!!! யோசித்து பார்த்த புதுசா தான் இருக்கு.. முயற்சி பண்ணி பார்ப்போம்… THANK YOU கிரி

  3. @வரதராஜலு ஜோதிஜி நன்றி

    @யாசின் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் நினைப்பதை பற்றியும் யோசிக்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!