Article 15 (இந்தி 2019)

2
Article 15

ல்வேறு உண்மைச் சம்பவங்களை இணைத்து Article 15 திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

Article 15

தலித் சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்து, கொன்று தூக்கில் போட்டு விடுகிறார்கள் ஆனால், ஆணவக்கொலை என்று சித்தரிக்கப்பட்டு அவர்களது பெற்றோரே கைது செய்யப்படுகிறார்கள்.

இப்பகுதி காவல் அதிகாரியாக வரும் Ayushmann Khurrana, இதை யார் செய்தது என்பதைக் கண்டறிந்து தண்டனை வாங்கிக்கொடுக்க முடிகிறதா? என்பதே கதை.

தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகள், தாழ்த்தப்பட்டோர் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை அனைத்து ஊடகங்களும் பெரிதாக்கி தமிழ்நாட்டைச் சாதியம் மிகுந்த மாநிலமாகச் சித்தரிக்கின்றன.

இதில் உண்மையும் உள்ளது என்றாலும், காட்சிப்படுத்தப்படுவது தமிழகம் தான் ஆனால், வட மாநிலங்கள், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் இவை தமிழகத்தை விட அதிகம்.

தமிழகச் செய்திகள் வெளியே வருகிறது மற்ற இடங்களில் வெளிவருவதில்லை.

தீண்டாமை

இப்படத்தில் வரும் சம்பவங்களைப் பார்த்தால், நாம் கிழக்கிந்திய கம்பெனி காலத்துக்குச் சென்று விட்டோமோ எனும் அளவுக்குக் காட்சிகள் உள்ளது.

தீண்டாமை உச்சத்தில் உள்ளது அதாவது, நீங்கள் நினைப்பதை விடப் பல மடங்கு அதிகம்.

இவை அனைத்தும் உண்மை என்பது பெரும் சோகம்.

மதம், அரசியல் சார்ந்த சர்ச்சையான காட்சிகள் உள்ளது, இதற்கு எதிர்ப்பு வரவில்லையா?!

படம் மெதுவாகச் செல்கிறது ஆனால், கொஞ்சம் கூடச் சலிப்புத்தட்டவில்லை. அட்டகாசமான திரைக்கதை. தெளிந்த நீரோடை போலக் கதை செல்கிறது.

கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் எனவே, பெயரைத் தொடர்வது சிரமமாகவும், வட மாநிலப்பெயர்கள் என்பதால், யார் யாரை சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது.

CBI அதிகாரியாக வரும் நாசர் எடுத்தவுடன் ஒரு சார்பாகச் செயல்படுவது நம்பமுடியாததாக இருந்தது. CBI யிலும் அத்துமீறல்கள் நடக்கிறது என்றாலும், இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது.

தலித் போராளியின் காதலியாக வருபவரின் நடிப்பு மட்டுமே செயற்கையாக இருந்தது, மற்றபடி ஒவ்வொருவரும் அக்கதாப்பாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

எப்படித்தான் தேர்வு செய்தார்களோ! அசத்தல்.

ஆதிக்கச் சாதியினர், அதிகார மீறல், தலித் தலைவர்களின் போலித்தன்மை, இந்துத்வா அரசியல் என்று அனைத்தையும் தொட்டு இருக்கிறார்கள்.

இப்படம் எதையும் மறைக்காமல், துணிச்சலாக அனைத்தையும் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது. தைரியம் தான்!

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அட்டகாசமாக உள்ளது, எந்த இடத்திலும் உறுத்தாமல்.

அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

சாதி, மதத்தில் அதிக ஈடுபாடு, பற்றுதல் உடையவர்களுக்கு Article 15 சுருக்குனு இருக்கலாம், பிடிக்காமலும் போகலாம். எனவே, சரியான மனநிலையுடன் பார்ப்பது நல்லது.

இப்படம் NETFLIX தளத்தில் உள்ளது.

Directed by Anubhav Sinha
Produced by Anubhav Sinha, Zee Studios
Written by Gaurav Solanki, Anubhav Sinha
Starring Ayushmann Khurrana, Nassar, Manoj Pahwa, Kumud Mishra, Isha Talwar, Sayani Gupta
Music by Songs: Anurag Saikia, Piyush Shankar, Devin Parker, Gingger
Score: Mangesh Dhakde
Cinematography Ewan Mulligan
Edited by Yasha Ramchandani
Release date 28 June 2019
Running time 130 minutes
Country India
Language Hindi

Read : Andhadhun [இந்தி – 2018] ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பதிவை படித்த பின் படத்தோட முன்னோட்டம் பார்த்தேன்.. பிடித்து இருந்தது.. திருமணத்திற்கு முன் நிறைய ஹிந்தி படங்கள் பார்ப்பேன்.. அதே போல ஹிந்தி பாடல்களும் நிறைய கேட்பேன்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. திருமணத்திற்கு பின் ஏனோ குறைந்து விட்டது..ஹிந்தி படம் மனைவிக்கு பிடிக்காது என்பதும் ஒரு காரணம்.. எனக்கும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போகி விட்டது.. தற்போது அமீர்கான் படங்கள் மட்டும் பார்ப்பேன்..அது தவிர்த்து நண்பர்கள் யாராவது பரிந்துரைக்கும் படங்களை பார்ப்பதுண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here