In the blood
ஒரு ஜோடி தேனிலவுக்கு வேறு நாட்டிற்குச் செல்ல அங்கே கணவன் கடத்தப்படுகிறார். அவரை அவரது மனைவி எப்படி மீட்கிறார் என்பதே கதை. Image Credit
இதைப் படித்தால் தமிழில் வந்த புதுமைப் பெண் / புரட்சிப் பெண் போல உங்களுக்கு நினைவு வரலாம் ஆனால், அதெல்லாம் அமைதி போராட்டம் இங்கேயோ அதிரடிப் போராட்டம்.
யம்மாடி.. என்னா அடி.. என்னா உதை. நாயகி Gina Carano அனைவரையும் பின்னி பெடலெடுக்கிறார்.
யார்ரா இது.. இவரைப் பார்த்தால் எதோ இந்தப்படத்திற்காக அடிப்பது போல இல்லாமல் சண்டைப் பயிற்சி பெற்ற நபர் போல இருக்காரே என்று தோன்றியது.
அண்ணன் விக்கிப் பீடியாவில் தேடிப்பார்த்தால் இவர் கிக் பாக்சர். ஆஹா! அது தான் இப்படிப் போட்டு வெளுத்தாரா என்று தோன்றியது.
செம சண்டை அசத்தல் வேகம் என்று கலக்கியிருக்கிறார். இவர் Fast and furious படத்தில் கூட வருகிறார்.
என்ன ஒரு மன உறுதி.. தைரியம்.. வேகம்.. அடேங்கப்பா! பிரம்மிக்க வைத்து விட்டார். ம்ஹீம் நம்ம இந்தப் பொண்ணு பக்கத்துல கூட நிற்க முடியாது போல.
படம் என்னமோ ஆதி காலத்து பழைய மொக்கைக் கதை தான். இந்தப் பெண்ணின் நடிப்பிற்காக / சண்டைக்காக / மன உறுதிக்காக இப்படத்தை அவசியம் பார்க்கலாம்.
நான் தீவிர ரசிகன் ஆகிட்டேன்.. ஆளும் செம்மையா இருக்கார் 😉 .
All is lost
வித்யாசமான படங்கள் பல வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் என்ன வித்யாசம் என்றால்… படம் முழுக்க ஒரே ஒரு கதாப்பாத்திரம்.
அட ஆமாங்க! நீங்க நம்புறீங்களோ இல்லையோ ஒரே ஒருத்தர் தான் படம் முழுக்க வருகிறார்.
ஒருவர் என்றால்… வசனம்! மொத்தமே அரைப் பக்கம் தான் அதுவும் அவரா பேசிக்கொள்வது 🙂 .
சிறு படகில் கடலில் செல்லும் போது ஏற்படும் விபத்தால் படகில் ஓட்டை ஏற்படுகிறது. இதனால் அவசரகாலப் படகின் மூலம் தப்பிக்க அதுவும் பாதிப்படைகிறது.
இறுதியில் என்ன ஆகிறது? என்பது தான் கதை.
இதில் நடித்தவரை படுத்தி எடுத்துட்டாங்க பாவம். வயதான காலத்தில் இவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கணுமா!
கதை மெதுவாகத்தான் செல்லும், கொஞ்சம்… இல்லை நிறையவே பொறுமை தேவை. நான் முழுக்கப் பார்த்தேன் 🙂 . எனக்கு இது போலப் படங்கள் என்றால் விருப்பம்.
பொறுமை இருக்கும் நபராக இருந்தால், இந்தப் படத்தைப் பார்க்கலாம் 🙂 .
Captain Philips
கொஞ்ச வருடங்கள் முன்னாடி சோமாலியா கடல் கொள்ளையர்கள் கப்பலை கடத்துவது என்பது வழக்கமான செய்தியாக இருந்தது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
அது போல ஒரு கப்பலை “அப்பரசண்டி” கடல் கொள்ளையர்கள் கடத்தி மாட்டிக் கொள்கிறார்கள். பின்னர் என்ன ஆகிறது என்பதே படம்.
பார்க்குறதுக்கு “சார்! நடிச்சா ஹீரோ தான்!” என்பாரே விருச்சிககாந்த் அவரைப்போலவே தான் இவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், எப்படித் திட்டமிடுகிறார்கள்? இருக்கும் கொஞ்ச வசதியை வைத்து எப்படிக் கடத்துகிறார்கள் என்று வியப்படைய வைக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும் விட இவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு ரசிகன் ஆகிட்டேன் 🙂 . சுமாரான ஆங்கிலம் தான் ஆனால், அழகாகப் புரிய வைக்கிறார்கள். அசத்தல்.
கடத்தப்படும் நபராகவும் / கப்பல் கேப்டனாகவும் Tom Hanks. இவர் சும்மாவே பட்டயக் கிளப்புவார் இதுல மனுசன் தூள் கிளப்பி இருக்காரு.
இவர் இந்தக் கொள்ளையர்களைக் குழப்ப பயன்படுத்தும் யோசனை பிரம்மாதம் 🙂 .
படம் அவசியம் பாருங்க. உங்களை ஏமாற்றாது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
Sleepless night
இப் பிரெஞ்சு படத்தைத் தான் கமல் “தூங்காவனம்” படமாக தமிழில் ரீமேக் செய்கிறார்.
இது அதிகாரப்பூர்வ ரீமேக்.
காவல் அதிகாரி, போதை மருந்து கும்பல் இவர்களுக்கிடையே மாட்டிக்கொண்ட அதிகாரியின் மகன். எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று இருக்கிறார்கள்.
படத்தின் 90% படப்பிடிப்பு ஒரே ஒரு Pub ல் ஒரே இரவில் நடைபெறுகிறது.
இதுபோல நிறையப் படங்கள் வந்துள்ளன ஆனால், இதைக் கமல் ரீமேக் செய்ய விறுவிறுப்பான திரைக்கதையும் அதிகப் பட்ஜெட் தேவையில்லாததும் காரணமாக இருக்கலாம்.
இப்படத்தை 38 நாட்களில் எடுத்து முடித்ததாகச் செய்திகளில் வந்தது. படம் நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் நீளமும் குறைவு.
தமிழில் இதை எப்படி எடுத்து இருப்பார்கள் என்று பார்க்க ஆர்வம் இருக்கிறது.
Madmax – Fury Road
இந்தப் படத்தைப் பலர் பில்டப் கொடுத்த போது என்னயா ரொம்பப் பேசுறாங்களே என்று நினைத்தேன்.
fantasy கதை எனக்குப் பிடிக்காது என்பதால் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுட்டேன். எதேச்சையாக இந்தப் படம் பார்க்க வேண்டி வந்தது. செம்ம படம்.
fantasy கதையில், அவர்களின் கற்பனை வளம் இருக்கே..! ப்ப்ப்ப்ப்பா பின்னிட்டாங்க. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!
வித விதமான வாகனங்கள், வடிவமைப்புகள், பிரம்மாண்ட அரங்க அமைப்புகள். வெடி பொருட்கள், தற்கொலைப் படை! (மாதிரி), உயிர் பற்றிய கவலையே இல்லாதவர்கள் என்று படம் நெடுக ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
பின்னணி இசை தூள் கிளப்புது. சிறந்த ஒலி அமைப்பில் படம் பார்த்தால், பட்டாசாக இருக்கும்.
இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து விடாது. இது போலப் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அவசியம் பாருங்கள். பிரம்மாண்டம் என்பதற்கு இது போலப் படங்களே உதாரணம்!
Fantasy படங்கள் உங்களுக்குப் பிடிக்காது என்றாலும் இவர்களின் கற்பனைத்திறன் / சிந்திக்கும் திறனை காண்பதற்காகவது இப்படத்தைப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம் 🙂 .
எனக்கு இது போன்ற படங்களில் ஆர்வமில்லை ஆனால், பார்த்த பிறகு மிரண்டு விட்டேன். பின் இதனுடைய மெல் கிப்சன் நடித்த பழைய பாகத்தையும் பார்த்தேன்.
கொசுறு
இதுவரை ஏராளமான திரைப்படங்களைப் பரிந்துரைத்து இருக்கிறேன். பலர் பார்க்கிறேன் என்பார்கள் ஆனால், பார்த்தார்களா என்று தெரியாது.
ஆனால், நான் பரிந்துரைக்கும் படங்களைப் பார்த்து அப்படம் குறித்த கருத்தை நண்பர் ஸ்ரீநிவாசன் பல முறை தெரிவித்து இருக்கிறார்.
மூன்று வருடங்கள் கழித்து எல்லாம் பார்த்து அது குறித்த கருத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.
இவ்வாறு கூறும் போது நான் பரிந்துரைப்பதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. இந்தச் சமயத்தில் நண்பர் ஸ்ரீனிவாசனுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பரிந்துரைத்த படங்களை பார்க்க முயல்கிறேன்
ஞாயிறன்று நான்கு படங்களை பார்த்தேன்
முதலில் புலி (ரொம்பவே பிறாண்டிருச்சி)
அதற்க்கப்புறம் Insidious 3 / It Follows / (தயவு செஞ்சி ரெண்டு படத்தையும் பார்த்துடாதீங்க IMDB நல்ல ரேட்டிங் கொடுத்துருக்காங்க – எவனோ செய்வினை செஞ்சுட்டான் ) இன்சிடியஸ் முதல் பாகம் தான் பெஸ்ட் – படத்தின் ஆரம்ப இசையிலேயே பயந்துட்டேன்.
ils / Them என்ற ஒரு பிரஞ்சு படம்.. ஆரம்பத்துல திகிலாதான் இருந்தது.. போகப்போக பிடிக்கவில்லை. ஒருமணி நேரம் திகில் 13 நிமிஷம் கிளைமாக்ஸ்.
இதில் புலியை தவிர மூன்று படங்களையும் ரெண்டு மணி நேரத்தில் பார்த்துட்டேன். புலி ஹி ஹி ஒன்றை மணிநேர ஹிம்சை
சென்ற மாதம் சீன பயணத்தில் உருப்படியா பார்த்தது ஆப்ளிவியன் / End of tomorrow .
நேற்று தான் மிஷன் இம்பாசிபிள் ரப் நேஷன் பார்த்தேன்.
தல,
இந்த லிஸ்ட் ல “Madmax – Fury Road ” இந்த படம் மட்டும் தான் கேள்வி பட்டு இருக்கேன். முடிஞ்சா இந்த madmax படம் பாக்கணும் நு இருந்தேன்..
பகிர்வுக்கு நன்றி தல.. Sleepless night பாக்கணும் நு தோணுது 🙂
– அருண் கோவிந்தன்
புலி திரைவிமர்சனம் இல்லியா கிரி அண்ணா . அந்த பாண்டஸி படத்தை பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும் அண்ணா
நீங்கள் குறிப்பிட படங்களில் Captain Philips- மட்டுமே பார்த்து இருக்கிறேன். படத்தில் துவக்கத்தில் இருந்த விறுவிறுப்பு இடையில் கொஞ்சம் குறைவது போல் இருந்தது. எந்த மாதிரி தொழில் நுட்பங்களை எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பது வியக்க வைக்கிறது. மற்றபடி படம் மிகவும் பிடித்து இருந்தது. இது போல யதார்தனமான படங்களின் காதலன் நான்.
சமீபத்தில் எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.
எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது.
நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். படம் செல்ல, செல்ல பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சினிமா என்பதை மறந்து மலையேற்ற குழுவில் நாமும் ஒருவராகிவிடுகிறோம். நேரம் இருக்கும் போது பார்க்க முயற்சி செய்யவும். பகிர்வுக்கு நன்றி கிரி.
நல்ல திரை விமர்சன். நல்லாயிருக்கு உங்கள் ப்ளாக். நன்றி.
தமிழ் படங்களே பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது இதில் பிற மொழி படங்கள் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. இருந்தும் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது. அப்படி பார்க்கும் சந்தர்ப்பம் வரும் போது உங்களின் இந்த லிஸ்ட் எனக்கு கை கொடுக்கும்
@ராஜ்குமார் ITfollows ஏற்கனவே பார்த்து விட்டேன். சுமாரான படம்.
@அருண் Mad Max பாருங்க செமையா இருக்கும்.
@Irzath இது மாற்று மொழிப்படங்களின் விமர்சனங்கள், தமிழ் அல்ல. அதோட நான் இன்னும் புலி பார்க்கவில்லை.
@யாசின் எவரெஸ்ட் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். இரு வாரங்களில் பார்த்து விடுவேன்.
@Maliyekal நன்றி
@சரவணன் ரைட்டு.
பாக்கல ட்ரை பண்றேன்.
Please review : https://srmouldtech.wordpress.com
We cater to precision medical equipment mfg. Appreciate support in terms of Funding, Enquiries & Orders.
Watching PRISON BREAK – Its great, thanks to you for introducing that.
regards,THYAG
நன்றி… in the blood movie பார்த்தேன். அருமை!.