ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

13
Pls don't buy this book ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

கோபிநாத் எழுதிய “ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” மற்றும் Chetan Bhagat எழுதிய 2 STATES நண்பன் பாபு கொடுத்தான். Image Credit

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

கோபி உண்மையைத் தான் சொல்லி இருக்காரு 🙂 . தமிழ் ஊடகங்கள், பதிவர்கள் சிலர் பரபரப்பான தலைப்பை வைத்து ஹிட்ஸ் பெறுவார்கள்.

ஒரு சிலர் தலைப்பில் உள்ளதிற்கு ஓரளவு நியாயம் கூறும் அளவில் எழுதி இருப்பார்கள். ஒரு சிலர் தலைப்பைத் தவிர சுவாரசியமாக எதுவுமே உள்ளே எழுதாமல் இருப்பார்கள்.

இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, “தயவு செய்து இந்தப் பதிவைப் படிக்காதீங்க!” என்று தலைப்பு வைத்து உள்ளே இழுப்பாங்க.

அதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு தலைப்புத் தான் கோபி புத்தகம்.

வழக்கமான ஒரு சுய முன்னேற்றப் புத்தகமே இது! எந்த ஒரு புதிய சிறப்பும் இல்லை.

கோபி போன்ற பிரபலமானவர்களே இப்படி தலைப்பு வைத்து இழுத்து ஏமாற்றினால் மற்றவர்களை என்ன கூறுவது? இது கோபிக்கு நிச்சயம் அழகல்ல.

இது குறித்து அவர் விளக்கம் கூறி இருந்தாலும், அதை எத்தனை பேர் கேட்டு இருக்கப் போகிறார்கள்!

அப்படியே கேட்டு இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு இருக்கத் தானே செய்யும். பூட்டி இருப்பதைத் தான் திறந்து பார்க்கத் தோன்றும்.

ஒரு சில நல்ல புத்தகங்கள், பதிவுகள் தலைப்பு சரியில்லாததால் பலரின் கவனத்தை பெறாமல் சென்று விடும்.

படிப்பவர்கள் பெரும்பாலும் தலைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதே இதற்குக் காரணம்.

இதற்கு, எழுதுபவர்களும் ஓரளவு நியாயமான முறையில் கவர்ந்து இழுக்கும் தலைப்புகள் வைக்க முயற்சிக்க வேண்டும்.

இல்லை என்றால் அவர்களின் உழைப்பு, திறமை கவனிக்கபடாமலே போய் விடும். வறட்சியான தலைப்புகள் அவர்களின் உழைப்பையே வீணடித்து விடும்.

இதில் ஒரு பாவமான பிரிவினர் இருக்கிறார்கள். ரொம்ப நல்ல பதிவாக இருக்கும் ஆனால், யாரும் கண்டுக்க மாட்டார்கள்.

ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சர்ச்சையான தலைப்பை வைத்து, “இப்படி தலைப்பு வைத்தால் தான் வருவீங்க அதனால் வைத்தேன்” என்று கூறி இருப்பார்கள்.

பிரபலமான நபர்

ஒருவர் பிரபலமான நபர் என்றால் அவர் என்ன தலைப்பு வைத்தாலும் சென்று படிக்கத் தயாராக இருப்பார்கள்.

ஆனால், அதிகம் அறிமுகம் இல்லாதவர் எழுதும் புத்தகம், பதிவு என்றால் தலைப்பு ரொம்ப முக்கியம்.

சொல்லப்போனால் பிரபலமானவர்கள் எழுதியதை விடச் சிறப்பாக ஒரு சாதாரணமானவர் எழுதி இருக்கலாம் ஆனால், கவனிக்கப்பட மாட்டாது.

காரணம், உலகம் பிரபலமானவர்களுக்கே முக்கியத்துவம் தரும்.

“சண்டியர்” என்று கமல் தனது படத்திற்கு பெயர் வைத்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது அதனால், வேறு வழி இல்லாமல் “விருமாண்டி” என்று மாற்றினார்.

தற்போது அதே “சண்டியர்” என்று ஒரு படம் வருகிறது. ஒரு சத்தமும் இல்லை.

சண்டியர் பெயரை எதிர்த்தவர்கள் இப்ப எங்கே போனார்கள்?

கண்ணதாசன்

ஒருமுறை கண்ணதாசன், தான் எழுதிய கவிதையை ஒரு மாணவனை விட்டுப் படிக்கக் கூறினார். அங்கே இருந்தவர்கள் எந்தப் பாராட்டும் தெரிவிக்கவில்லை.

பின்னர் அந்த மாணவன் எழுதிய கவிதையைத் தான் எழுதியதாக வாசித்தார். இவர் வாசித்தவுடன் அரங்கில் பலத்த கைதட்டல்.

பின்னர் இதைக் குறிப்பிட்டு, “உலகம் யார் கூறுகிறது என்பதைத் தான் பார்க்கிறதே தவிர அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனிப்பதில்லை” என்று கூறி இருந்தார்.

புத்தகம் இவ்வளோ விற்பனையானதிற்கு (2,50,000 பிரதிகளைத் தாண்டி விட்டதாகக் கூறுகிறார்கள்) காரணம் இதில் உள்ள விஷயம் அல்ல.

முழுக் காரணமும் இதை எழுதியவர் கோபிநாத் என்பதும் மற்றும் இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்க்காக மட்டுமே!

அதற்காக இப்புத்தகம் மோசம் என்று கூறவில்லை.

இதில் நல்ல விஷயங்கள் / அனுபவங்கள் உள்ளது ஆனால், ஏற்கனவே இதை விட சிறப்பாக எழுதியவர்கள் உள்ளார்கள்.

எழுத்தாளர் சாரு

பிரபல எழுத்தாளர் சாரு, கோபி புத்தக விற்பனை பற்றிப் புலம்பியது நியாயம் என்றே தோன்றுகிறது.

அவருடைய நாவல் 5000 புத்தகம் கூட விற்பதில்லை என்று அடிக்கடி விரக்தியாகப் பேசுவார்.

இவருடைய நாவல்களில் பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், இவர் கூறுவது போல சுய முன்னேற்ற நூல்கள், சமையல் செய்வது எப்படி?, ஆன்மீகப் புத்தகங்கள், அந்தரங்க பிரச்சனைகள் கேள்வி பதில் போன்ற டெம்ப்ளேட் வகை புத்தகங்களை வாங்குவதில் தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாவல்கள், அறிவியல் ரீதியான புத்தகங்களும் அதிகம் விற்பனையாகிறது ஆனால், புத்தகக் கண்காட்சியையே வாழ வைப்பது இது போன்ற புத்தகங்கள் தான்.

இந்த நிலைக்குக் காரணம் மக்களின் ரசனையின்மையா! மக்களுக்குப் பிடிக்கும் படி எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியவில்லையா!

அல்லது நம்முடைய வார இதழ்கள் மக்களைச் சினிமா செய்திகளைக் கொடுத்தே மூளையை மழுங்கடித்துள்ளனவா! அல்லது சுஜாதா போன்று எளிமையாக எழுதத் தெரியவில்லையா! தமிழக மக்கள் ரசனை அவ்வளவு தானா!

அல்லது எழுத்தாளர்கள் தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதாலா!

எனக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காயாகக் கசக்கும். எனவே இது போன்ற விஷயங்கள் என்றால் மட்டும் தெறித்து ஓடி விடுவேன்.

தமிழில் நீங்கள் படித்த (எளிமையான நடையைக் கொண்ட) சிறப்பான நாவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் படிக்க முயற்சிக்கிறேன்.

 2 STATES

Image Credit : www.bookganga.com

Read: “என்னுடைய” Engliஷ் Vingliஷ்

பஞ்சாபி ஆணுக்கும் தமிழ் (பிராமின்) பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலையும், அதற்கு அவர்கள் பெற்றோரின் எதிர்ப்புகளையும் விவரிக்கும் கதை.

நான் 23 பாகம் தான் படித்து இருக்கிறேன் இன்னும் முடிக்கவில்லை ஆனால், படித்த வரை நன்றாக உள்ளது. இது அவருடைய சொந்த வாழ்க்கைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் காட்சிகளை விவரிப்பது ரொம்ப ரொம்ப அருமை. செம நகைச்சுவையாக இருக்கிறது, இவை எல்லாவற்றையும் விட படிக்க ரொம்ப எளிமையாக இருக்கிறது.

காதலிக்கப்படும் பெண் தமிழ் என்ற விசயமும், சில தமிழ் வசனங்களும், நடைபெறும் சம்பவங்களும் நமக்குப் பரிச்சியமானவை என்பதால் இதில் ஒன்ற முடிகிறது.

சென்னை

இந்தப் புத்தகத்தின் சென்னைப் பகுதியில் சென்னையையும், தமிழர்களையும், அவர்கள் பழக்கங்களையும் டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்.

இந்தக் கதையில் வரும் இவருடைய காதலி தமிழ் பிராமின்.

பொதுவாகவே இவர்கள் வீட்டில் ஆச்சாரம், ஹிந்து செய்தித் தாள், அமைதி, கட்டுப்பாடு, படிப்பு, படிப்பு மறுபடியும் படிப்பு என்று இருப்பார்கள்.

இந்தப் பெண் வெளியே பீர், சிக்கன், செக்ஸ் என்று இருக்கிறார் 😀 . 

இவர் தான் Chetan Bhagat மனைவி என்று நினைக்கிறேன், இன்னும் நான் படித்து முடிக்கவில்லை]. இது அவருக்கு வசதியாகப் போச்சு! செம்ம ஓட்டு ஓட்டுறாரு.

இவர் கூறுவதைப் படிக்கும் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்க் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முடிவே செய்து இருப்பார்கள்.

இத்தனை கடுப்பையும் மீறிப் படிக்க வைத்துக்கொண்டு இருப்பது இவருடைய நகைச்சுவை தான்.

விரைவில் படமாக வரப்போகிறது. வந்தால், எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சர்ச்சை இருக்கும்.

கொசுறு 1

அடுத்த பதிவு “மகாநதி” திரைவிமர்சனம் மற்றும் முன்னரே கூறியபடி கமல் படங்களுக்கு நான் எழுதும் கடைசி திரைவிமர்சனம்.

கொசுறு 2

என்னுடைய நண்பரும், பதிவரும், ரஜினி ரசிகருமான சரவணன் தான் எழுதிய “இளமை எழுதும் கவிதை நீ…” தொடரைப் புத்தகமாக 5 ஜனவரி 2014 வெளியிடப்போகிறார்.

அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவருடைய இந்தத் தொடர் முழுமையும் படித்து இருந்தாலும், புத்தகமாகப் பார்க்க ஆவலாகத் தான் உள்ளது.

ஒரு முரட்டு வாலிபனுக்கும், ஒரு புத்திசாலியான பெண்ணுக்கும் இடையே கல்லூரியில் நடைபெறும் மோதல் காதலை கதையாக எழுதி இருக்கிறார்.

சரவணன் தளத்தின் முகவரி http://kudanthaiyur.blogspot.com

புத்தகம் சிறப்பாக விற்பனை ஆகி சரவணன் இன்னும் பல புத்தகங்கள் எழுதிப் பெரும் புகழ் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நமக்குத் தெரிந்தவங்க பிரபலம் ஆனால், நமக்குப் பெருமை தானே! 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

 1. //எனக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காயாக கசக்கும். எனவே இது போன்ற விஷயங்கள் என்றால் மட்டும் தெறித்து ஓடி விடுவேன்.//

  Same blood 🙂

 2. சரியோ தவறோ கோபியின் இந்த புத்தகம் லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. விளம்பர சந்தையே இன்று அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

  உங்கள் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

 3. //தமிழில் நீங்கள் படித்த (எளிமையான நடையைக் கொண்ட) சிறப்பான நாவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் படிக்க முயற்சிக்கிறேன்.//

  கிரி இது நாவல் அல்ல பாலாவின் மறு பக்கம் நன்றாக இருக்கும் படித்த்து பாருங்கள்

  http://www.scribd.com/doc/42755254/Tamil-Evan-Thaan-Bala

 4. “என்னுடைய அடுத்த பதிவு “மகாநதி” திரைவிமர்சனம் மற்றும் முன்னரே கூறியபடி கமல் படங்களுக்கு நான் எழுதும் கடைசி திரைவிமர்சனம்.”

  – கமல் படத்துக்கு நான் இனிமேல் விமர்சனம் எழுத மாட்டேன், ‘கதம் கதம்’-னு சொல்லிட்டு, இப்போ ‘மகாநதி’-க்கு விமர்சனம் எழுதறேன்னு சொல்றீங்களே? அப்படி, அதுவும் அவ்ளோ பழசான படத்துக்கு, நீங்க என்ன விமர்சனம் எழுதிறீங்கன்னு பாக்கறேன்.

 5. புத்தகம் படிப்பது என்பது என்றுமே மகிழ்வான ஒன்று. இணையத்தில் படிப்பதை முற்றிலும் வெறுக்கிறேன்.. சில நேரங்களில் வழியில்லாமல் வாசிக்கிறேன். பயண நேரங்களில் நான் புத்தகம் படிப்பதை அதிகம் விரும்புபவன். .நீங்கள் கூறியது போல், கண்ணதாசன் அவருடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில்தான் புகழ்படாத நேரத்தில் எழுதிய பல சிறந்த பாடல்கள் தகுதி குறைவாகவே பார்க்க பட்டதாக குறிபிட்டுள்ளார்.. இது என்னை பொறுத்தவரை உண்மைதான். எந்த ஒரு மனிதனுக்கும் இதே நிலை தான்.

  உண்மையில் புத்தகங்களை நான் காதலிக்கிறேன். உங்களுக்கு நேரம் இருப்பின் வைரமுத்துவின் தண்ணீர் தேசம், டைரக்டர் சேரனின் டூரிங் டாக்கீஸ், நடிகர் பிரகாஷ்ராஜ்ன் சொல்லாததும் உண்மையே, ரே. கார்த்திகேசு வின் காதலினால் அல்ல.. புத்தகத்தை படிக்க முயற்சி செய்யவும்.

  உங்கள் நண்பன் சரவணனின் புத்தகத்தை வாங்கி வாசிக்க முயற்சிக்கிறேன். (நமக்கு தெரிந்தவங்க பிரபலம் ஆனால், நமக்குப் பெருமை தானே!) உண்மை தான் கிரி.

 6. கிரி நீங்கள் எதற்கு சார் கமல் மாதிரி ஒரு useless பற்றி அல்லது அவரது திரைப்படங்கள் பற்றி விமர்சனம் எழுதி உங்கள் மரியாதையை கெடுத்து kollathiral அவர் ரசிகர்கள் கமல் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதினால் மட்டுமே ஒப்பு கொள்வார்கள் இல்லையென்றால் உங்களை பற்றி கேவலமாக பேசுவார்கள். ரஜினி படம் அல்லது புதுமுகம் அல்லது ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் படங்களை விமர்சனம் செய்து நிறை அல்லது குறைகளை எழுதுங்கள் போதும்.

 7. கமல் படங்கள் விமர்சனம் எழுத வேண்டாம். ரஜினி அல்லது புது முகங்கள் படங்கள் விமர்சனம் எழுதினால் போதும். கமல் அவர் ரசிகர்கள் விமர்சனம் செய்தால் ஒப்ப மாட்டார்கள்.

 8. வாழ்த்துக்கள் சரவணன்

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  கோபி புத்தகம் மாதிரி நெறைய படிச்சு பல்பு வாங்கி இருக்கேன். சுய முன்னேற்ற புத்தகங்கள் எனக்கு உடன் பாடு இல்லை ஒவ்வொரு மனுஷனும் unique behaviours உண்டு நு நான் நம்புறவன்

  2 states கேள்வி பட்டு இருக்கேன் படிச்சது இல்லை இந்த author ர பத்தி தான் actor சூர்யா செம யா எழுதுவார் 2 states எல்லாம் படிச்சு கிட்டே இருப்பேன் நு சொன்னார்

  மிஸ்டரி நாவல் புடிக்கும் ந தமிழ் ல – இந்திரா சௌந்தரராஜன் னோட நாவல்கள் படிங்க. அவரோட நாவல்கள் ல சில தான் – விடாது கருப்பு, மர்ம தேசம் எல்லாமே

  – அருண்

 9. ஹிஸ்டரிக் மற்றும் thrillerku
  கண்ணதாசனின் சேரமான் காதலி,
  நா. பார்த்தசாரதியோட மணிபல்லவம் படிங்க.
  ரெண்டுமே கொஞ்சம் பெரிய நாவல் தான். ஆனால் ரொம்ப interestinga இருக்கும்.

 10. @தமிழ் செல்வன் பலர் ரத்தம் பார்த்து இருப்பாங்க போல இருக்கே.. என்ன மாதிரி 🙂

  @ஜோஜிதி உண்மை தான் ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை.

  @ராஜகோபால் ஏற்கனவே யாரு பரிந்துரைத்து இருந்தார்கள் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். நான் பாலாவின் ரசிகன் கூட.

  @கௌரிஷங்கர் நீங்க என்னோட பதிவுகளை எல்லாம் தொடர்ந்து படிக்கறீங்க என்று தெரியும் ஆனால் சரியாகப் படிக்கறீங்களா என்று சந்தேகமாக இருக்கிறது. திரும்ப ஒருமுறை அந்தப் பதிவை படிங்க. நான் என்ன கூறி இருக்கிறேன் என்று.

  @யாசின் நீங்க ஏற்கனவே பிரகாஷ்ராஜ் புத்தகம் சொல்லாததும் உண்மையே பற்றி கூறி இருக்கீங்க. நான் .மறக்கவில்லை.. கண்டிப்பாக இதை வாங்கிப் படிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்.

  உங்கள் புத்தக ஆர்வம் ரொம்ப சந்தோசம்.

  @அருண் சுய முன்னேற்ற கருத்துக்கள் பற்றி நீங்கள் கூறியது சரி தான்.

  சூர்யா எங்க எழுதி இருக்காரு! நான் படிக்கலையே..!

  மர்மதேசம் சன் தொலைக்காட்சியில பார்த்து இருக்கிறேன்.. படித்தது இல்லை. படிக்கிறேன்.

  @கீர்த்திவாசன் இந்தப் படம் விமர்சனம் எழுதுவது என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். திட்டுபவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி

  @அகிலா நன்றி

 11. உங்களைப் போலவேதான் நானும். ஆங்கிலம்னாலே வேப்பங்காய்.. கற்றுக் கொள்ளவாவது இந்த 2 STATES புத்தகத்தை படிக்க முயற்சிக்கிறேன். வழக்கம் போலவே உங்கள் எழுத்து அருமை..

 12. தங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி

 13. “சூர்யா எங்க எழுதி இருக்காரு! நான் படிக்கலையே..!”

  சூர்யா எழுதலை சேடன் பகத் தோட book promotion சென்னை ல நடந்தது அந்த promotion கு chief guest சூர்யா அதுல பேசும் போது 2 ஸ்டேட்ஸ் அவ்வளவு கலக்கல் லா இருக்கும் படிச்சுகிட்டே இருப்பேன் நு சொன்னார்

  – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here