மூன்று தோல்விப் படங்களால் நொந்து போய் இருக்கும் கார்த்திக்கு “பிரியாணி” ஆறுதலாக வந்து இருக்கிறது. Image Credit
இரண்டு படம் தொடர்ந்து ஓடவில்லை என்றால் மக்கள் மறந்து விடுகிறார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
பிரியாணி
ப்ளே பாய் கார்த்தி ஒரு ஃபிகர் பின்னாடி ஜொள்ளு விட்டுச் சென்று ஒரு கொலை பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். இவருடன் இலவச இணைப்பாக பிரேம்ஜி அமரன்.
அப்புறம் என்ன.. அதில் இருந்து எப்படி விடுபட்டு வெளியேறுகிறார்கள் என்பதை சீரியஸ் கலந்த நகைச்சுவையுடன் கூறி இருக்கிறார்கள்.
எனக்கு வெங்கட் பிரபு படம் பார்க்கும் போதெல்லாம் தவறாமல் தோன்றுவது, எப்படி இவ்வளவு ஸ்டைலிஷாக எடுக்கிறார் என்பது தான்.
படம் நெடுக நகைச்சுவையைத் தூவி, நமக்கு போர் அடிக்காமல் வைத்து இருக்கிறார்.
ஆனால், சுமாரான வில்லன், பொருத்தமில்லாத காரணங்கள், பல எப்படிக்கள் படத்தைச் சூப்பர் என்று கூறமுடியாமல் செய்து விடுகிறது.
குறிப்பாக கடைசியில் இடியாப்ப சிக்கலைக் குறுகிய நேரத்தில் விளக்குவதால், புரிந்து கொள்ள சிரமமாகவே இருந்தது.
கார்த்தி
கார்த்தி இதில் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஒரு காட்சியில் பெரிய மீசை வைத்து வருவார்… அதே போல ஒரு காட்சியில் கத்தும் படி காட்சி இருக்கும் அதிலும் அப்படியே சூர்யா போலவே இருக்கிறார்.
படம் நெடுக ஒரு ஃபிகர் விடாமல் பிக்கப் செய்கிறார். படத்தில் மட்டுமல்ல படம் பார்க்கும் பெண்களுக்கும் கார்த்தியை இதில் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே கார்த்திக்கு பெண் ரசிகைகள் அதிகம். இதில் இன்னும் கூடுதல் ஆக வாய்ப்பு.
கார்த்தி ஒரு பேட்டியில் எனக்கு ஜோடி பிரேம்ஜி அமரன் தான் என்று கூறி இருந்தார், அது உண்மை தான்.
கார்த்தியுடன் ஹன்சிகாவை விட பிரேம்ஜி தான் அதிக காட்சிகளில் இருக்கிறார். அதிக காட்சிகள் என்பதை விட படம் முழுக்க இருக்கிறார்.
பிரேம்ஜிக்கு இருக்கும் ராசி இவருடைய அண்ணன் படத்தில் மட்டுமே இவர் மின்னுவது. இதிலும் படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்ல இவர் தான் உதவி இருக்கிறார்.
அடிக்கடி வாயை திறந்து பயமுறுத்துவதை இவர் குறைத்துக் கொண்டால் நல்லது, படம் பார்ப்பவர்களுக்கு.
ஹன்சிகா
ஹன்சிகா ப்ப்பாபாபாபா… வெங்கட் பிரபுக்கு ஒரு பெரிய நன்றி. ஹன்சிகாவிற்கு ஓரளவு நாகரீகமான உடை அணிய வைத்ததற்கு, குறிப்பா துப்பட்டாவுடன் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
இது மட்டும் இல்லை என்றால் படம் பார்ப்பவர்கள் இதயவலி வந்து ஒரு வழி ஆகி இருப்பார்கள்.. ஹி ஹி நானும் தான் 😉 .
ஹன்சிகா தொல்லையே தாங்க முடியலை என்றால், இதில் இன்னொரு யாரு பெத்த புள்ளையோ ஒருத்தர் வருகிறார் ப்ப்பாபாபாபாபா முடியல.. படம் பார்க்குற எல்லோரும் செத்தாணுக.
வெங்கட்பிரபு “சரோஜா” படத்தில் கோடானு கோடி பாட்டில் நிகிதாவை விவகாரமாக ஆடவிட்டு பலரின் பல்சை எகிற வைத்து இருப்பார்.
இதில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பலருக்கு நெஞ்சு வலி வரக் காரணமாகி விடுவார் போல இருக்கிறது 🙂 .
ஒரே முகங்கள்
இந்தப் படத்திலும் வெங்கட் பிரபு படத்தில் வழக்கமாக வருபவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். இதை வெங்கட் பிரபு குறைத்துக் கொள்வது நல்லது.
ஒரே முகங்களை அனைத்துப் படங்களிலும் பார்க்கச் சலிப்பாக இருக்கிறது.
ஜெய் ஒரு காட்சியில் வருவார். அதில் “இவர் சும்மா இருந்தார் அதனால், இதில் நடித்தார்” என்று நக்கல் வேறு 🙂 .
சம்பத் இதில் CBI அதிகாரியாக வந்து வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
உமா ரியாஸ், நாசர், நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராம்கி என்று பலர் வருகிறார்கள் ஆனால், யாருக்குமே பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.
நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்து இருக்கும் ராம்கி “நான் எப்போதும் ஒரே மாதிரி தான் பாஸ்!” என்று அப்படியே நடித்து இருக்கிறார். எந்த வித்தியாசமும் இல்லை.
கார் சேசிங்கில் பல கார்களை உடைத்து இருக்கிறார்கள். வசதியான தயாரிப்பாளர் என்பதால் பிரச்சனை இல்லை.
யுவன் 100
யுவனுக்கு இது 100 வது படம்.
“ஆரம்பம்” தான் கணக்குப் படி 100 வது படமாக இருந்து இருக்க வேண்டும் ஆனால், இந்தப் படம் தாமதமாகி விட்டதால், “ஆரம்பம்” முந்திக் கொண்டது.
இருந்தும், இது தான் 100 வது படம் என்று கூறி இருக்கிறார்கள்.
பாட்டெல்லாம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்டது. எனவே படத்திற்கு இது முக்கிய பலம்.
படத்தில் ஒரு காட்சியில், “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் கவுண்டர் செந்தில் பெட்ரோமாக்ஸ் நகைச்சுவையில் ஒரு பின்னணி இசை வரும், அது இந்தப் படத்தில் ஒரு இடத்தில் வருகிறது. செம.
இந்தச் சின்னப் பின்னணி இசை, காலங்கள் பல கடந்தும் திரும்பக் கேட்கும் போதும் சிரிப்பை வரவழைக்கத் தவறுவதில்லை.
படம் நிச்சயம் இளையவர்களுக்கானது, குடும்பத்தினருடன் சென்றால் சில காட்சிகளில் சங்கடத்தில் நெளிய நேரிடலாம்.
படத்தின் நெடுக இருக்கும் சிறு சிறு நகைச்சுவைகள் படத்தைக் கொண்டு செல்கிறது.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், லாஜிக் பார்க்காமல் பார்க்க விருப்பம் என்றால் பிரியாணி பார்க்கலாம், மோசமில்லை.
Directed by Venkat Prabhu
Produced by K. E. Gnanavel Raja
Written by Venkat Prabhu
Starring Karthi, Hansika Motwani, Premgi Amaren, Ramki, Mandy Takhar
Music by Yuvan Shankar Raja
Cinematography Sakthi Saravanan
Editing by Praveen K. L., N. B. Srikanth
Studio Studio Green
Release dates 20 December 2013
Running time 149 minutes
Country India
Language Tamil
கொசுறு
“கோவா” படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திற்கும் ஒரு Tag போடுவார். கோவா க்கு A Venkat Prabhu Holiday, மங்காத்தா க்கு A Venkat Prabhu Game, பிரியாணிக்கு A Venkat Prabhu Diet.
இதை ஒருவர் நக்கலடித்து ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் “சார்! அப்படின்னா சரோஜா க்கு A Venkat Prabhu Item” மா என்று கேட்க.. அதற்கு வெங்கட் பிரபு அடப்பாவி! என்று பதில் கூறி இருந்தார்.
லாஜிக்கா தானே கேட்டு இருக்காரு 🙂 .
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கேட்ட பாடல்கள் அனைத்துமே சுமார் ரகத்தை சேர்ந்ததகதான் இருந்தது. superhit நிச்சயம் இல்லை என்று நினைக்கிறேன் .
“”எல்லோரும் செத்தாணுக. வெங்கட்பிரபு “சரோஜா” படத்தில் கோடானு கோடி பாட்டில் நிகிதாவை விவகாரமாக ஆடவிட்டு பலரின் பல்சை எகிற வைத்து இருப்பார். இதில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பலருக்கு நெஞ்சு வலி வரக் காரணமாகி விடுவார் போல இருக்கிறது 🙂 .””
nice comment Giri (Her name is MANDI THAKKER)
வீட்லய செஞ்சி சாப்புடுங்க தயவு செய்து theatre பக்கம் போக வேண்டாம்…
அப்ப வெங்கட்பிரபு டயட் பார்த்துடலாம்
பாஸ் நான் படம் பார்க்கும் போது உங்கள் விமர்சனம் face bookla வந்தது அதிலும் நீங்க சொன்ன வரி மிகவும் ரசித்து பார்தேன் நன்றி ்்்்்்ஹன்சிகா தொல்லையே தாங்க முடியலை என்றால், இதில் இன்னொரு யாரு பெத்த புள்ளையோ ஒருத்தர் வருகிறார் ப்ப்பாபாபாபாபா முடியல.. படம் பார்க்குற எல்லோரும் செத்தாணுக. வெங்கட்பிரபு “சரோஜா” படத்தில் கோடானு கோடி பாட்டில் நிகிதாவை விவகாரமாக ஆடவிட்டு பலரின் பல்சை எகிற வைத்து இருப்பார். இதில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பலருக்கு நெஞ்சு வலி வரக் காரணமாகி விடுவார் போல இருக்கிறது .
For Karthi it’s best for his last 3 films, for Venkat Prabhu it’s worst for his last 3 films…….
@ஆனந்த் நீங்கள் முதல் முறை கேட்டால் அப்படித்தான் இருக்கும். தொடர்ந்து கேட்டுப் பாருங்கள். அனைத்துப் பாடல்களுமே அருமை ஆனால் இதில் பெரும்பாலான பாடல்கள் மாண்டேஜ் பாடலாக வந்ததால், அதோடு விட்டு விட்டு வந்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
@சுரேஷ் & ராஜன் 🙂
@கிஷோர் 🙂 அந்த அளவிற்கு மோசமாக இல்லையே!
@சரவணன் பாருங்க..
@தமிழ் செல்வன் 🙂
படம் எனக்கு புடிச்சது தல
தலைமுறைகள் படம் பாருங்க உங்களுக்கு புடிக்கும்
– அருண்
நீங்க மட்டும்தான் படம் நல்லா இருக்குனு எழுதி இருக்கீங்க. படம் பாக்கள. பாத்துட்டு உங்க விமர்சனத்த compare பண்ணி பாக்குறேன்.
@அருண் தலைமுறைகள் படம் இங்கு வெளியாகவில்லை. இணையத்தில் வந்த பிறகு தான் பார்க்க வேண்டும்.
@படம் போர் அடிக்காம இருக்குனு சொல்லி இருக்கேன்.. உடன் விசயங்களும் கூறி இருக்கிறேன்.