கூகுளில் சேமித்த கடவுச்சொல் பாதுகாப்பானதா?!

3
கூகுளில் சேமித்த கடவுச்சொல்

ணையப்பயன்பாடு அதிகரிப்பதால், நாம் பயன்படுத்தும் தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதில் பயன்படுத்தும் பயனர் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு கணக்குகளுக்கும் தேவையான பயனர் கணக்கு / கடவுச்சொல்லை நினைவு வைத்து இருப்பது சாத்தியமில்லை.

ஒரே கடவுச்சொல்லையே அனைத்து கணக்குகளுக்கும் வைத்தால், ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால், உங்களின் மொத்த பயனர் கணக்குகளும் எளிதாக முடக்கப்படும்.

Password Manager

எனவே, Password Manager போன்ற செயலிகள் பிரபலமாயின. இதனுடைய ஒரு பயனர் கணக்கை மட்டும் (Master Password) நினைவில் வைத்துக்கொண்டால் போதும் மற்ற கணக்குகளின் கடவுச்சொற்களை நினைவு வைக்க வேண்டிய அவசியமில்லை.

கூகுளில் சேமித்த கடவுச்சொல் பாதுகாப்பானதா?!

இதுபோல ஒரு Password Manager சேவையைத்தான் கூகுள் சில வருடங்கள் முன்பு அறிமுகப்படுத்தியது. நம்முடைய பயனர் கணக்கு / கடவுச்சொல்லை கூகுள் க்ரோம் உலவியிலேயே சேமித்துக்கொள்ள முடியும்.

கூகுள் கணக்கில் சேமிக்கப்படுவதால், நாம் மறந்தாலும் பிரச்சனையில்லை.

இதன் அடுத்தக் கட்டமாக, கடவுச்சொல்லை மாற்றும்போது கூகுளே கடினமான கடவுச்சொல்லை பரிந்துரைக்கும் வசதியைக் கொண்டு வந்தது.

கூகுள் தன்னுடைய கணக்கில் இவற்றைச் சேமித்து வைத்துக்கொள்வதால், இதை நினைவில் வைக்க வேண்டிய தேவையில்லை.

உங்களுடைய பொறுப்பு யாதெனில், உங்கள் கணினியில் யாரும் உள்ளே நுழைந்து விடாமல் பார்த்துக்கொள்வது தான்.

முன்பு உங்களுடைய கடவுச்சொல் திருடப்பட்டுள்ளதா என்பதை அறிய கூகுள் ஒரு நீட்சியை (Extension / Add On) Link அறிமுகப்படுத்தியது.

தற்போது நீங்கள் க்ரோம் உலவியில் (கூகுள் கணக்கில்) சேமித்த பயனர் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அறிய https://passwords.google.com/ தளம் சென்று “Check Passwords” என்பதை க்ளிக் செய்தால், முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் வசதியைப் பயன்படுத்தி உங்கள் கணக்குகளின் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமா?

SIM SWAP மோசடி [FAQ]

எது மாறினாலும் “123456” மட்டும் மாறவில்லை!

3 COMMENTS

  1. நன்றி கில்லாடி, நல்ல டிப்ஸ் குடுத்துருக்கீங்க. extension install பண்ணியாச்சு 🙂

  2. நிச்சயம் பயனுள்ள தகவல்… எல்லோருக்கும் இது பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here