ஒரு கொலை நடக்கிறது, காவல்துறையும் அங்கே இருக்கும் நபரைக் கைது செய்கிறது ஆனால், தான் கொலை செய்யவில்லை என்கிறார். அப்படியென்றால் யார் கொலை செய்தது? என்பதே The Invisible Guest.
ரொம்ப நாளைக்குப் பிறகு சுவாரசியமான புலனாய்வு படத்தைப் பார்க்கிறேன்.
The Invisible Guest
படம் துவங்கியதில் ஆரம்பிக்கும் சந்தேகம், அவரா இவரா, ஒருவேளை இவரா இருக்குமோ! என்று சுத்தலில் விட்டு இறுதியில் யார் கொலை செய்தது என்று தெரிய வரும்போதும், எப்படிப்பட்டவர் என்று அறியும் போதும் அதிர்ச்சியாக இருக்கும்.
இப்படத்தில் நடக்கும் இன்னொரு கொலை யாராக இருக்கும் என்பதை மட்டும் எளிதாக ஊகிக்க முடிந்தது. பல ஹாலிவுட் படங்களைப் பார்த்ததால் இருக்கலாம்.
படம் இறுதிவரை ஒரு பரபரப்பை வைத்துக்கொண்டே உள்ளது அசத்தல். நம்மிடையே ஒரு பயம், சந்தேகம், குழப்பம், பரபரப்பு என்று அனைத்தையும் ஒருங்கே கொண்டு செல்கிறார்கள்.
படத்தின் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு ஏற்பப் பக்காவாக உள்ளது.
புலனாய்வு படங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நிச்சயம் உங்களை ஏமாற்றாது.
இப்படத்தில் எதைக் கூறினாலும் படத்தின் சுவாரசியத்தைக் கெடுத்து விடும் என்பதாலே எதையும் கூறவில்லை. இப்படத்தைப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் ட்ரைலரை கூடப் பார்க்க வேண்டாம்.
The Invisible Guest படத்தைப் பரிந்துரைத்த நண்பன் பாபுக்கு நன்றி. படத்தை NETFLIX ல் காணலாம்.
Read : 6 Underground (2019) மிரட்டல் சண்டை
கொசுறு
படம் $4.5 மில்லியனில் எடுக்கப்பட்டு $30 மில்லியனை வசூல் செய்துள்ளது.
இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சியை வைத்து “Badla” என்ற பெயரிலும், தெலுங்கில் “Evaru” என்றும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இதுவரை இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை.. படத்தின் வசூல் உண்மையில் பிரமிக்கவைக்கிறது.. நேரம் இருக்கும் போது பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
இந்த வசூல் பெரும்பகுதி சீனா வெளியீட்டின் மூலம் கிடைத்தது. அவங்க ஊரில் குறைவு தான்.