தமிழுக்குப் பெருமையளிக்கும் விதமாக ஒரு மிகப்பெரிய நிகழ்வு சத்தமே இல்லாமல் கடந்த மாதம் நடந்து இருக்கிறது. Image Credit
சென்னையில் நடந்த “Google for தமிழ்”
இந்திய மொழிகளில் இந்தி மற்றும் பெங்காலி மொழிகள் மட்டுமே கூகுள் விளம்பரத்துக்குத் தகுதி பெற்று இருந்தன. தற்போது மூன்றாவது மொழியாகத் தமிழ் இணைந்து இருக்கிறது.
கூகுள் CEO வாகச் “சுந்தர் பிச்சை” அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இந்தியா அதிகளவில் கவனிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இந்தியாவின் வளர்ச்சியைக் கூகுள் செமையாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. ஒருவகையில் நமக்கும் இது நன்மையே!
இணையத்தில் தமிழ்
உலக மொழிகளில் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளில் தமிழ் மிக முக்கிய இடத்தில் உள்ளது ஆனால், இது வரை தமிழ் மொழிக்கு விளம்பர வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் தமிழ் தளத்தில் எழுதுபவர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த ஏக்கத்தைப் போக்கும்படியாக இந்த அறிவிப்புள்ளது.
இனி Google AdSense பயன்படுத்தித் தமிழ்த் தளங்கள் வைத்துள்ளவர்கள் இனி விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இது குறித்து விரைவில் எழுதுகிறேன். இது ஒரு நல்ல மாற்றம்.
தமிழ் இணையமும் பெரியளவில் அசுரத்தனமான வளர்ச்சி பெறும்.
தமிழில் விளம்பரங்கள், கூகுள் தேடல்கள் குறித்த விவரங்கள் போன்றவை குறித்த அறிமுக நிகழ்ச்சிக்கு கூகுள் ஏற்பாடு செய்து இருந்தது.
விண்ணப்பம் ஏற்கப்பட்டுத் தேர்வு செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.
என்னுடைய விருப்ப நிறுவனம் கூகுள் நடத்தும் முதல் தமிழ் நிகழ்ச்சி என்பதால், ஆர்வமுடன் நேற்று (13 மார்ச் 2018) கலந்து கொண்டேன்.
நிகழ்ச்சி நிரல்கள்
நிகழ்ச்சி “தமிழ்” என்ற தலைப்பில் இருந்தாலும், பெரும்பாலும் விளக்கங்கள், பேச்சுகள் ஆங்கிலத்தில் இருந்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது.
இணையத் தளங்களில் விளம்பரங்கள் எப்படிப் பயன்படுத்துவது, நல்லது கெட்டது, கொள்கைகள் பற்றி விளக்கம் கொடுத்தனர்.
கூகுள் தேடல் பற்றி ஒருவர் சிறப்பாகப் பேசினார். பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
பிரபல இணையத்தள நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை, எதிர்கால வாய்ப்புகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்கள்.
பலர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டனர். சென்னையில் இது தான் முதல் முயற்சி என்றும் இனி இது போல நிகழ்ச்சிகள் தொடரும் என்றும் கூறினர்.
காலை, மதிய உணவு, மாலை சிற்றுண்டி உட்பட ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அடுத்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக நடத்துவார்கள், தமிழ் பேச அதிக நபர்களை நியமிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
ஒரு தமிழனாக எனக்கு தமிழின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மிகப்பெருமையாக உள்ளது.
“தமிழன் வளர்ந்தால் தமிழ் வளரும்” ஆமாம்! உண்மை தான் 🙂 . நன்றி சுந்தர் பிச்சை அவர்களே!
தொடர்புடைய கட்டுரைகள்
மற்ற அனைவரும் துணுக்குச் செய்தி போலவே எழுதியிருந்தாங்க. நீங்க இன்னமும் அங்கே நடந்த உரையாடல்களை பதிவு செய்து இருக்கலாம்.
நிகழ்ச்சிக்கு [[௧௩.௦௩.௨௦௧௮] முதல் நாள் மாலைதான்[௧௨.௦௩.௨௦௧௮] எனக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு வந்தது. எனக்கு நாமக்கல். ரயிலிலோ பேருந்திலோ பதிவு செய்து சென்னை சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறுவது சாத்தியமில்லாமல் போனது.
பதிவுக்கு நன்றி.
@ஜோதிஜி உரையாடல்கள் தொழில்நுட்பம் சார்ந்து இருந்தது, அதை இங்கு விளக்கினால் பலருக்கு புரியாது.
@பசி பரமசிவம் நீங்க சொன்ன பிரச்னையை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன். கூகுள் கொடுத்த கால அவகாசம் போதுமானதாக இல்லை.
நிச்சயம் உங்களைப் போல பலர் குறைவான கால அவகாசத்தால் தவற விட்டு இருக்க வாய்ப்புள்ளது.
கூகுள் அடுத்த முறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு தமிழனாக எனக்கு தமிழின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மிகப்பெருமையாக உள்ளது.
ஆம் எனக்கும்தான்.
கிரி,
நல்ல பதிவு. இந்த நிகழ்வு எங்கு (சென்னையில்) நடந்தது? இதில் பங்கு பெற எங்கு பதிவு செய்ய வேண்டும் போன்ற தகவல் பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும். நன்றி.
@தமிழ்அருவி 🙂
@அசோக் Hyatt regency ஹோட்டலில் நடந்தது.
கூகுள் பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டார்கள். நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால், கூகுள் பக்கத்தை பின்தொடருங்கள்.