ஸ்டைல்! பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்துப் பார்க்கலாம் (முடி இருந்தால்) 😉 .
ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் ஒரு ஸ்டைல்ல வருவாரு. கவுண்டர் அதைப் பார்த்து டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்கு என்று நக்கல் செய்வார்.
அப்போது கிண்டலாகத் தெரிந்து இருந்தாலும் தற்போது மேலை நாடுகளில் அது தான் தற்போதைய லேட்டஸ்ட் ஃபாஷன்.
சிங்கப்பூரில் வந்த புதிதில் என்னடா! இப்படி முடிய வெட்டிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க என்று சிரிப்பாக இருந்து. Image Credit
தற்போது அதைப் பார்த்துப் பழகப் பழக அதுவும் நன்றாகவே உள்ளது.
இதை நம்மில் பலரால் ஏற்றுக் கொள்ள முடியாது, காரணம் நாம் இன்னும் அந்த அளவிற்கு மனதளவில் தயாராகவில்லை.
ஸ்டைல்! ஸ்டைல்!! ஸ்டைல்!!!
இங்கே சில ஹேர் ஸ்டைல் பற்றிப் பார்ப்போம், இது உங்களுக்குக் கிண்டலாகவும் நக்கலாகவும் தெரிந்தாலும் விரைவில் நம் ஊரிலும் இதைப் போல ஹேர் ஸ்டைல் வரப்போகிறது.
இத்தகைய ஹேர் ஸ்டைல் க்கு ஒரு பிரச்சனை கொஞ்சம் கலராகவும் முடி ஸில்க்கியாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு செக்ஸி லுக் கிடைக்கும்.
நாம் என்ன பெண்களா! செக்ஸி லுக் வர என்று கேட்டால் உங்களுக்கு வயதாகி விட்டதாக அர்த்தம் 🙂 .
ஸ்டைல் என்றவுடன் நினைவிற்கு வருவது சூப்பர் ஸ்டார் தான். ரஜினியின் ஹேர் ஸ்டைல் (தற்போது காலி ஆகி விட்டது) பலரால் விரும்பப்பட்டது.
அமீர் கான்
ஆனால், இந்தியாவில் நடிகர்களில் ஹேர் ஸ்டைல் என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அமீர் கான் தான்.
பல வித விதமான ஹேர் ஸ்டைல்களைத் தனது படங்களில் அறிமுகப்படுத்தி இருப்பார். கவனிக்கத் தக்க முதல் படம் என்றால் “தில் சாத்தா ஹை” பற்றிக் குறிப்பிடலாம்.
கஜினி தமிழில் ஏற்கனவே சூர்யா மொட்டை முறையில் ஹேர் கட் செய்து இருந்தாலும், அதை அமீர் கான் செய்த போது கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்தது.
கால்பந்து விளையாட்டு மன்னன் டேவிட் பெக்காம் ஹேர் ஸ்டைல் உலக அளவில் பிரபலம்.
கால்பந்து விளையாட்டில் இவருக்கு இருக்கும் ரசிகர்களைப் போல இவரது ஹேர் ஸ்டைலுக்கும் உலகளவில் பல ரசிகர்கள், இவரது ஸ்டைல் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
டேவிட் பெக்காம் ஸ்டைல்
டேவிட் பெக்காமின் இந்த ஹேர் ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், குறிப்பாகப் பெண்கள். பல பெண்கள் இவர் மேல் பைத்தியமாக இருக்கிறார்கள்.
அதற்கு இதைப் போன்ற செக்ஸி ஹேர் ஸ்டைல் முக்கியக் காரணம். ஆளும் பெர்சனாலிட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.
இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்பப் பிடித்த ஸ்டைல், ஸ்பைக் ஸ்டைல் ன்னு சொல்லுவாங்க இதை. இதை நம்ம ஊர்ல மேல் தட்டு மக்கள் ஒரு சிலர் வைத்து இருக்கிறார்கள், ரொம்ப casual ஆக இருக்கும்.
விதவிதமா ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்துக்கணும் என்று ரொம்ப விருப்பம் ஆனால் அந்த அளவிற்கு அடர்த்தியா முடி இல்லைன்னு வருத்தபடுகிறவங்க இந்த மாதிரி ஷார்ட்டா வைத்துக்கொள்ளலாம்.
இந்த ஹேர் ஸ்டைல் கருப்பா ஒல்லியா இருக்கிறவங்க வைக்க முடியாது, நன்றாக இருக்காது. அதையும் மீறி வைத்தால் காதல் படத்தில் ஹீரோ வாய்ப்பு கேட்டு வருவாரே விருச்சிகாந்த் போல இருக்கும் 🙂 .
இது தாங்க நம்ம கவுண்டர் கிண்டல் செய்த ஹேர் ஸ்டைல். இதைப் போலச் சிங்கப்பூர் ல பல பேர் வைத்து இருக்காங்க, முதலில் என்னவோ போன்று தெரிந்தாலும் இப்போது இது பிடித்து விட்டது.
நம்ம ஊர்ல இதைப் போல வர காலம் ஆகும். இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்களிடையே மன பக்குவம் இல்லை.
இந்த ஹேர் ஸ்டைல் வைக்க உங்களுக்கு உங்க முடி ஸில்க்கியாக இருக்க வேண்டியது அவசியம், கொஞ்சம் கலராக இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு ரிச் லுக் இருக்கும். இதைப் போல ஹேர் ஸ்டைல் பெண்களை (girls) கவரும்.
இந்த வகை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள நம்ம ஊரில் எந்தத் தடையும் இல்லை, யாரும் எதுவும் கூற மாட்டார்கள். எனவே தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
வெய்யில் காலங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். உடற்பயிற்சி உடம்பாக இருந்தால் ஸ்மார்ட்டாக இருக்கும்.
குழந்தைகள்
குழந்தைகளுக்கும் தற்போது வித விதமா அவர்களது பெற்றோர்கள் ஹேர் ஸ்டைல் பண்ணுறாங்க, ஒருவேளை தங்களால் முடியாததைத் தங்கள் குழந்தைகள்மூலம் செய்து கொள்கிறார்களோ என்னவோ.
தற்போது சலூன்களில் குழந்தைகளுக்கு என்றே பலவிதமாக ஹேர் ஸ்டைல் உண்டு. குழந்தைகளுக்கு எந்த மாதிரி முடி வெட்டினாலும் அழகு தான்.
அதுவும் ஸில்க்கியான முடியாக இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை.
இந்த ஹேர் ஸ்டைல் குழந்தைகளுக்கு ரொம்ப அழகா இருக்கும், நம் ஊர் வெய்யில் அதிகம் என்பதால் குழந்தைகளுக்குத் தலை விரைவில் வேர்த்து சளி பிடித்துக்கொள்ளும். எனவே அதிகளவில் முடி வைக்க முடியாது.
என் பையனுக்கு முடி இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லை, வெட்டினால் இப்படித் தான் கத்துவான் 🙂 .
Update – என் பையன் அழவில்லை, அமைதியாக அமர்ந்து இருந்தான் 🙂 .
குறிப்பு
நமக்குப் பிடித்த எந்த ஹேர் ஸ்டைல் ம் வைக்கலாம், அதெல்லாம் வைக்கும் முன்பு நம் உடல் அமைப்புக்கும், கலருக்கும், உயரத்திற்கும் ஏற்றதா என்பதை ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால், அதற்குப் பொருத்தமானவரா நாம் என்பதையும் யோசிக்க வேண்டும்.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஹ்ஹ்ம்ம்ம்ம்…. முடி இருக்கிற மகராசி அள்ளி முடியுற மாதிரி… நீங்க எழுதிட்டீங்க!.என்ன செய்ய எனக்கெல்லாம்… ”ஒரிஜினல்” தலைவர் ஸ்டைல்தான் வாய்த்துள்ளது!
கடைசிப் படம்: நல்ல தீர்க்கதரிசிதான் நீங்கள்:))!
கடைசி 2 படங்கள் சூப்பரா இருக்கு கிரி… மேட்டர இன்னும் படிக்கல… வூட்டுல போயி படிச்சிட்டு கமெண்டு போடுறேன்.
யோவ், நானும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் தலைக்கு கலர் அடிக்கச் சொல்லுவேன். ஞாபகம் இருக்கா ?
//இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் //
தலையில் முடி உள்ளவங்களுக்குன்னு சொல்லி இருக்கலாம், பாரு பதிவைப் படிச்சுட்டு பலர் பெருமூச்சு விடுறாங்க.
//ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் ஒரு ஸ்டைல் ல வருவாரு, கவுண்டர் அதை பார்த்து விட்டு டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்கு என்று நக்கல் செய்வார்.சரியா சொன்னீங்க… காலம் மாரிபோச்சு-னே.. வாழ்த்துக்கள்……("பசங்க" திரைப்படம் பாணியில்)
// Vijay said…
ஹ்ஹ்ம்ம்ம்ம்…. முடி இருக்கிற மகராசி அள்ளி முடியுற மாதிரி… நீங்க எழுதிட்டீங்க!.
என்ன செய்ய எனக்கெல்லாம்… ”ஒரிஜினல்” தலைவர் ஸ்டைல்தான் வாய்த்துள்ளது!//
:-))
===================================================
//ஷண்முகப்ரியன் said…
நீங்கள் சொன்னது போல இளைஞ்ர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,கிரி.
எவ்வளவு விரிவாகவும் ஆர்வமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்//
நன்றி சார். எனக்கு இதை போன்ற விசயங்களில் ரொம்ப ஆர்வம்.
==================================================
//ராமலக்ஷ்மி said…
கடைசிப் படம்: நல்ல தீர்க்கதரிசிதான் நீங்கள்:))!//
எனக்கு பீதி ஆகுது! என்ன கலாட்டா பண்ண போறானோ! :-((
==================================================
// லொல்லு சபா said…
கடைசி 2 படங்கள் சூப்பரா இருக்கு கிரி… மேட்டர இன்னும் படிக்கல… வூட்டுல போயி படிச்சிட்டு கமெண்டு போடுறேன்.//
பொறுமையா வாங்க
===================================================
// கோவி.கண்ணன் said…
யோவ், நானும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் தலைக்கு கலர் அடிக்கச் சொல்லுவேன். ஞாபகம் இருக்கா ?//
🙂 இருக்கு.
//தலையில் முடி உள்ளவங்களுக்குன்னு சொல்லி இருக்கலாம், பாரு பதிவைப் படிச்சுட்டு பலர் பெருமூச்சு விடுறாங்க.//
ஹலோ! நான் சரியா தான் கூறி இருக்கேன் இன்னொரு முறை படிங்க
"இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் (முடி இருந்தால்). ;-)"
===================================================
// Karthik said…
சரியா சொன்னீங்க… காலம் மாரிபோச்சு-னே.. //
🙂 முதல் வருகைக்கு நன்றி கார்த்திக்
அண்ணே முடியே இல்லாட்டியும் பரவாயில்லை, வித விதமா விக்கு வாங்கி வச்சிகுவோம்ல!
(சஞ்சய வெறுப்பேத்தனும்னு எத்தனை நாளா ஆசை)
நீங்கள் சொன்னது போல இளைஞ்ர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்,கிரி.
எவ்வளவு விரிவாகவும் ஆர்வமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.
🙂
நாங்க தல சீவினா எங்க முடி எப்படி நிற்கும்னு எங்களுக்கே தெரியாது..,
என் போட்டோ போடலையா கிரி
கேட்டிருந்தா தந்து இருப்பேன்ல்ல
இந்த முடி இருக்கே முடி… இது படியாம நான் பட்ட பாடு… முள்ளு மண்டையான்னு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல தலையே சீவாம அப்படியே விட்டுட்டு திரிஞ்சியலைஞ்சேன். இப்போ ஏதோ பரவாயில்லை. :)))
நம்ம சூப்பர்ஸ்டார விட்டுட்டீங்களே கிரிமத்த படமெல்லாம் சூப்பர்ப்
என் மாப்பு சஞ்செய்யை கடுமையா சீண்டுற மாதிரி இருக்கதால இந்தப் பதிவ நாங்க வன்மையா வரவேற்கிறோம்.
/
ஜோசப் பால்ராஜ் said…
என் மாப்பு சஞ்செய்யை கடுமையா சீண்டுற மாதிரி இருக்கதால இந்தப் பதிவ நாங்க வன்மையா வரவேற்கிறோம்.
/
ரிப்பீட்டு
Giri,
Appadiye namma super star roda 90's la ulla hair style photo vum photo irukalam:(
nalla pathivu
Thanks,
Arun
தலையிலே முடியே இல்லைனா என்ன செய்ய கிரி ?
கிரி நல்ல பதிவு
பழைய ரஜினி ஹேர் ஸ்டைல் படம் எனக்கு பிடிக்கும்.
அந்த கால கட்டத்தில் ரஜினியின் புது படம் ரீலிஸ் ஆகும் போது பள்ளி அருகில் சுவற்றில் வித விதமான ரஜினியின் படங்களை ஓவியர்கள் ரசிகர் மன்றம் சார்பாக வரைவார்கள் இன்றும் அது பசுமையான நினைவுகளாக உள்ளது. இன்று பல டிஜிட்டல் பேனர் வந்தாலும் அன்று திரை அரங்கில் ரஜினி ரசிகர்கள் போட்டி போட்டு வைக்கும் பேனருக்காகவே பல தடவை இதை பார்பதற்கு நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்றது உண்டு.
அமிர்கான் கஜினி ஹேர் ஸ்டைல் உருவாகும் வீடியோ.
அமிர்கான் கஜினி ஹேர் ஸ்டைல் உருவாகும் வீடியோ.
sorry Kiri the link miss it
http://www.youtube.com/watch?v=yPXmnX7AIuA
// நட்புடன் ஜமால் said…
என் போட்டோ போடலையா கிரி
கேட்டிருந்தா தந்து இருப்பேன்ல்ல//
:-))))
ஜமால் உங்க படத்தை இந்த பதிவுல போட முடியாது..அதுக்கு இதற்க்கு எதிர் பதிவுல தான் முடியும் :-)))
=====================================================
அருண், ஜோசப் பால்ராஜ் மற்றும் சிவா மூவரும் சஞ்சய் மேல ஏன் இந்த கொலை வெறி :-))))))))
=====================================================
// நசரேயன் said…
தலையிலே முடியே இல்லைனா என்ன செய்ய கிரி ?//
பிரச்சனையே இல்ல..இருக்கிற கொஞ்சம் !!! முடியையும் ஷேவ் செய்துட்டா மொட்டை ஸ்டைல் ல நல்லா இருக்கும், இங்கே அப்படி பல பேர் இருக்காங்க.
=====================================================
கடையம் ஆனந்த் வருகைக்கு நன்றி
=====================================================
// SUREஷ் (பழனியிலிருந்து) said…
நாங்க தல சீவினா எங்க முடி எப்படி நிற்கும்னு எங்களுக்கே தெரியாது..,//
சுரேஷ் உங்களுக்கே பிரச்சனையே இல்லை….இப்படி நின்னா தான் ஸ்டைல்
======================================================
// ஊர்சுற்றி said…
இந்த முடி இருக்கே முடி… இது படியாம நான் பட்ட பாடு…
'முள்ளு மண்டையா' ன்னு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல தலையே சீவாம அப்படியே விட்டுட்டு திரிஞ்சியலைஞ்சேன். இப்போ ஏதோ பரவாயில்லை. :)))//
ஊர் சுற்றி அப்ப கவலை பட்டு இருக்கலாம்..இப்ப கவலைப்படாதீங்க.. நீங்க தான் இதை போல ஸ்டைல் க்கு பர்ஃ பெக்ட் ஆன நபர், உங்க முடியை கொஞ்சம் ட்ரிம் செய்தாலும் போதும் புதிய லுக் கொண்டு வந்து விடலாம் (தமாசுக்கு சொல்லல்லை)
======================================================
//♠புதுவை சிவா♠ said…
கிரி நல்ல பதிவு
பழைய ரஜினி ஹேர் ஸ்டைல் படம் எனக்கு பிடிக்கும்.//
எனக்கும் (இதில் எதுவும் ஆச்சர்யம் இல்லைன்னு சொல்றீங்களா..அட! உண்மையாவே தாங்க)
//அந்த கால கட்டத்தில் ரஜினியின் புது படம் ரீலிஸ் ஆகும் போது பள்ளி அருகில் சுவற்றில் வித விதமான ரஜினியின் படங்களை ஓவியர்கள் ரசிகர் மன்றம் சார்பாக வரைவார்கள்//
சிவா பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள் 🙂 நீங்கள் கூறுவது சரி தான்.
உங்க கஜினி வீடியோ க்கு நன்றி ..கலக்கலா இருக்கு
=====================================================
வசந்த் மற்றும் அருண் நான் புது ட்ரெண்ட் பற்றி தான் சொன்னேன், அதனால விட்டுட்டேன், தலைவர் பற்றி சொல்ல வாய்ப்பா கிடைக்காது! 🙂
====================================================
// thevanmayam said…
நல்லா இருக்கு!!
உங்க படத்தை உள்ளே தள்ளியிருக்கலாமே!!//
என்னோட பழைய படத்துல தான் லாங் ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்து இருந்தேன், இப்ப முடி கொட்டி விட்டால் என்ன செய்வது என்று எல்லாவற்றையும் வெட்டி விட்டேன், அப்புறம் என் படத்தை இங்கே போட்டால் கொஞ்சம் அல்ல நெம்பவே ஓவரா இருக்கும் :-)))
என்ன மாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் யூயூபி…..:-)
நல்லா இருக்கு!!
உங்க
படத்தை
உள்ளே
தள்ளியிருக்கலாமே!!
:))
// வாசுகி said…
:))//
வருகைக்கு நன்றி வாசுகி
==============================================
// ’டொன்’ லீ said…
என்ன மாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் யூயூபி…..:-)//
:-)) ஜுஜுபி யா ..உங்க கட்டிங்க பார்த்தால் அப்படி தெரியலையே! 😉
//ஊர் சுற்றி அப்ப கவலை பட்டு இருக்கலாம்..இப்ப கவலைப்படாதீங்க.. நீங்க தான் இதை போல ஸ்டைல் க்கு பர்ஃ பெக்ட் ஆன நபர், உங்க முடியை கொஞ்சம் ட்ரிம் செய்தாலும் போதும் புதிய லுக் கொண்டு வந்து விடலாம் (தமாசுக்கு சொல்லல்லை)//ஹிஹிஹி.. ரொம்ப நன்றி…
கிரி,
சில சமயம் பதிவா போட்டு தள்ளுரவங்களையும் அவுங்க எடுக்கற டாபிக்கையும் என் நண்பர்கள் சிலர் கிண்டல் பண்ணுவார்கள்… ஆனா நீங்க வித்யாசமா டாபிக் எடுத்து வெளுத்து வாங்குறீங்க..அட இதிலெல்லாம் கூட அசத்தல் மேட்டர் இருக்கே என்று ஆச்சர்யப் பட வைக்கிறீர்கள்.. படங்களும் அருமை..
அப்புறம், சின்னப் பிள்ளைங்களுக்கு முடிவெட்டுறது இருக்கே… அத வச்சு ஒரு பதிவே போடலாம்… நான் சீக்கிரம் போடறேன்…
பி.கு. எனக்கு தலை முடி அடர்த்தி அதிகம்னாலும், கொஞ்சம் உச்சி மண்டையில முடி படியாது…முடி வேற கொஞ்சம் கரடு முரடா வணங்கா முடியா இருக்கும்… குசேலன் பசுபதியைத் தவிர வேறு எல்லா சிகையலங்கார நிபுணர்களையும் பார்த்து விட்டேன்… ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்களேன்… (நம்ம சிம்பிள் சுந்தர் அப்பப்போ, நீங்களும் நானும் பல விஷயத்துல ஒரே மாதிரின்னு சொல்லிட்டே இருப்பார் – இந்த பிரச்சினை உங்களுக்கும் இருந்தா (???) எனக்கு தனியா சொல்லுங்க…. ஹி ஹி ஹி …
அன்புடன்
ஈ ரா
//குசேலன் பசுபதியைத் தவிர வேறு எல்லா சிகையலங்கார நிபுணர்களையும் பார்த்து விட்டேன்… ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்களேன்… //
**********
ஈ ரா
Kuselan Vadivel kitta try pannineengalaa???
// ஈ ரா said…
நீங்க வித்யாசமா டாபிக் எடுத்து வெளுத்து வாங்குறீங்க..அட இதிலெல்லாம் கூட அசத்தல் மேட்டர் இருக்கே என்று ஆச்சர்யப் பட வைக்கிறீர்கள்.. படங்களும் அருமை.//
நன்றி ஈ ரா, எனக்கு ஒரே மாதிரி எழுத பிடிக்காது, இந்த பதிவு தான் கிரி எழுதுவார் என்று யாரும் கூறுவதை விரும்பவில்லை. அனைத்து வகை பதிவுகளும் எழுதுவதையே விரும்புகிறேன். மொத்தத்தில் மசாலாவாக 🙂
//அப்புறம், சின்னப் பிள்ளைங்களுக்கு முடிவெட்டுறது இருக்கே… அத வச்சு ஒரு பதிவே போடலாம்… நான் சீக்கிரம் போடறேன்.//
போடுங்க போடுங்க
//எனக்கு தலை முடி அடர்த்தி அதிகம்னாலும், கொஞ்சம் உச்சி மண்டையில முடி படியாது…முடி வேற கொஞ்சம் கரடு முரடா வணங்கா முடியா இருக்கும்..//
ரொம்ப கஷ்டம்..மனதை தேத்திக்க வேண்டியது தான்.. :-))))
//குசேலன் பசுபதியைத் தவிர வேறு எல்லா சிகையலங்கார நிபுணர்களையும் பார்த்து விட்டேன்//
ஹா ஹா ஹா ஹா
//இந்த பிரச்சினை உங்களுக்கும் இருந்தா (???) எனக்கு தனியா சொல்லுங்க…. ஹி ஹி ஹி //
:-))))))
எனக்கு எந்த பிரச்சனையும் "இது" வரை இல்லை
================================================
//ஊர்சுற்றி said…
ஹிஹிஹி.. ரொம்ப நன்றி..//
சந்தோசமா இருங்க…முடிய மட்டும் பார்த்துக்குங்க.. அதையும் இதையும் செய்து..மொத்தமா காலி பண்ணிடாதீங்க :-))
==================================================
// R.Gopi said…
Kuselan Vadivel kitta try pannineengalaa??//
ஹா ஹா ஹா கோபி உங்களுக்கு வேற யாரும் சிக்கலையா! ஈ ரா பாவம் அப்பாவி ஆளு 🙂
// இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் (முடி இருந்தால்). 😉 //
:-))))
// ஹி ஹி என் பையன் நிலைமைய நினைத்தால் தான் பாவமா இருக்கு..:-)) //
உங்கள் பையன் பயந்து ஓட போறான். குழந்தைகள் படம் அழகா இருக்குது.
gopiji,
en intha kolai veri enmela?
Nara nara….
ee raa
அழகா சொல்லியிருக்குறீங்க.
காலேஜ் படிக்கும்போது விதவிதமா ட்ரை பண்ணினேன்… எப்போ வேலக்கி வந்தனோ அப்பவே எல்லாம் கட், இப்ப நார்மலாத்தான் அலையிறேன்.
அப்புறம்…. நமக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லனு சொல்லுவாங்க… சென்னை பக்கம் வந்தீங்கன்னா 2 டிரஸ் செலக்ட் பண்ணி குடுத்துட்டுப் போங்க… ஹி ஹி ஹி…
// மின்னல் said…
உங்கள் பையன் பயந்து ஓட போறான். குழந்தைகள் படம் அழகா இருக்குது.//
:-))
=========================================================
//எவனோ ஒருவன் said…
அழகா சொல்லியிருக்குறீங்க//
நன்றி
//நமக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லனு சொல்லுவாங்க… சென்னை பக்கம் வந்தீங்கன்னா 2 டிரஸ் செலக்ட் பண்ணி குடுத்துட்டுப் போங்க… ஹி ஹி ஹி.//
அவ்வளோ தானே! இது பெரிய விசயமா! செய்துடுவோம் 🙂
இருவரின் முதல் வருகைக்கு நன்றி
//-)) ஜுஜுபி யா ..உங்க கட்டிங்க
பார்த்தால் அப்படி தெரியலையே! ;
//
அதான் நான் புது கெட்டப் போட்டிருக்கிறன்..சந்திப்பு போட்டோக்களில் பார்க்கவும்..:-)
ம்ம்ம்ம் ஸ்டைல் ஸ்டைலா இருக்கு கிரி
//இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டைல், ஸ்பைக் ஸ்டைல் னு சொல்லுவாங்க இதை. இதை நம்ம ஊர்ல மேல் தட்டு மக்கள் ஒரு சிலர் வைத்து இருக்கிறார்கள், ரொம்ப casual ஆக இருக்கும்.//
இதுக்குப் பேரு ஸபைக்கா!!நான் தூங்கி எந்திருச்சா தலை இப்படிதான் இருக்குது.எல்லா ஸ்டைலும் செஞ்சு பார்த்தாச்சு.நம்ம கவுண்டமணி சொன்ன ஸ்டைல் மட்டும் தப்பிச்சுடுச்சே:)
//’டொன்’ லீ said…
அதான் நான் புது கெட்டப் போட்டிருக்கிறன்..சந்திப்பு போட்டோக்களில் பார்க்கவும்..:-)//
பார்த்தேன் ..நல்லா இருக்கு 😉
==========================================================
// ஆ.ஞானசேகரன் said…
ம்ம்ம்ம் ஸ்டைல் ஸ்டைலா இருக்கு கிரி//
நன்றி ஞானசேகரன் 🙂
==========================================================
//ராஜ நடராஜன் said…
இதுக்குப் பேரு ஸபைக்கா!!நான் தூங்கி எந்திருச்சா தலை இப்படிதான் இருக்குது.எல்லா ஸ்டைலும் செஞ்சு பார்த்தாச்சு.நம்ம கவுண்டமணி சொன்ன ஸ்டைல் மட்டும் தப்பிச்சுடுச்சே//
இதுக்கு கொஞ்சம் ஜெல் எல்லாம் தடவனும் ..அப்ப தான் ஸ்மார்ட் லுக் கிடைக்கும் 😉
ஹாய் என்னோட தலைமுடி அடங்கவே மாட்டிங்குது
நான் எப்படி சீவினாலும் கீழே தொங்கி கொண்டு தான் வருகின்றது
எனக்கு நல்ல சூப்பர் ஹேர் ஸ்டைல் வேண்டும்
எல்லோரும் என்னை முள்ளு மண்டையன் என்று சொல்கிறார்கள்
என்னோட அடங்கா முடியை அடக்க ஒரு ஐடியா கொடுங்களேன்
கார்த்திக் இது பெரிய விசயமில்லை. முள்ளு முடியாக இருந்தால் ஸ்ட்ரைட்டனிங் செய்தால் சரி ஆகும் ஆனால் இது உங்கள் முடியை பாதிக்கும். எனவே உங்கள் முடியையே உங்க முகத்திற்கு தகுந்த மாதிரி வெட்டிக் கொள்ளலாம். பெரிய சலூன் சென்றீர்கள் என்றால் உங்கள் முகத்திற்கு எது நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள், அதன் படி வெட்டிக்கொள்ளலாம்.
உங்களை ஆறுதல் படுத்த வேண்டும் என்று கூறவில்லை, முள்ளு முடியாக இங்கே சிங்கப்பூரில் பெரும்பாலும் இருக்கிறார்கள் ஆனால் அழகாக வெட்டி இருக்கிறார்கள். எனவே இது பற்றி கவலைப்படாமல் மாடர்னாக வெட்டிக்கொள்ளுங்கள். ரொம்ப நன்றாக இருக்கும். இப்ப முள்ளு முடிதாங்க ஃபேஷன். ஒழுங்கான முடிய முள்ளு முடியா இங்க மாற்றிட்டு இருக்காங்க. நிசமாத்தான்.
ஹாய் கிரி சார்
உங்க பதிலுக்கு நன்றி
முடிக்கு ட்ரைகாலஜி ட்ரீட்மென்ட் எடுக்கலாமா
முடி சீக்கிரம் வேகமா வளருது திக் அண்ட் டார்க்
ஆனா ஹேர் ஸ்டைல் மட்டும் நல்ல வரமாட்டேங்குது
உங்க மெயில் ஐடி சொல்லுங்க என்னோட போட்டோ அனுப்புறேன்
உங்க பதிலசொல்லுங்க என் போட்டோ பார்த்துட்டு
இப்படிக்கு
கார்த்திக்
வண்டியில் சென்றால் முடி தூக்கி கொள்கிறது
இதை எப்படி சரி செய்வது
கார்த்திக் என்னோட மெயில் ஐடி contact [at] giriblog.com
முடி அலை அலையாக இருப்பதற்கு எந்த மாதிரி வெட்டினால் நல்ல இருக்கும்