முதல் வெளிநாட்டு விமானப் பயணம் II

17
வெளிநாட்டு விமானப் பயணம்

ணிப்பெண் “ஹெல்ப் ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி” ன்னு அலறியவுடன் எனக்குத் தூக்கம் எல்லாம் கலைந்து பயத்தில் முகம் எல்லாம் வெளிறி போய் விட்டது.

எமெர்ஜென்சி

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற மாதிரி, என்ன பிரச்சனைனு தெரியறதுக்குள்ள பயத்துல..

ஐயோ விமானம் பிரச்சனையாகி விட்டது போல இருக்கே, எட்டி கூடக் குதிக்க முடியாதே! கீழே இறங்காம இப்படியே மேலே கூட்டிட்டுப் போறாங்களே, தண்ணீரில் மூழ்கிச் சாவோமா (ஐயோ மீன் வேற வருமே) இல்ல விமானம் வெடித்துச் சாவோமா!

கொடுத்த பீரை கூட வேண்டாம்னு சொல்லிட்டோமே! கடைசிக்கு! அதையாவது குடித்து இருக்கலாமேன்னு‘ நம்ம கற்பனை சூப்பர் சானிக் வேகத்தில் போயிட்டு இருக்கு. Image Credit

மூச்சிரைப்பு

என்னனு பார்த்தால் என் இருக்கைக்கு அடுத்தப் பக்கம் இருந்த ஒரு வயதான பெண்மணிக்கு மூச்சிரைப்பு, அந்தப் பாட்டி பாவம் பயங்கரமா மூச்சிரைக்கறாங்க.

எனக்குப் பாவமாகப் போய் விட்டது, உடன் வந்து இருந்த அவங்க வீட்டுக்காரர்னு நினைக்கிறேன் பயந்து போய் விட்டார். பின்ன இருக்காதா?

பணிப்பெண் கத்தியது என்னன்னா Doctor Help Emegency யாரவது இருக்காங்களான்னு! தூக்கத்தில் அரைகுறையா கேட்டதில் இந்த Doctor வார்த்தை மட்டும் விழவில்லை.

Business வகுப்பில் இருந்து ஒருவர் Economy வகுப்பில் இருந்து இருவர் வந்தார்கள்.

பாட்டிக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றிவிட்டார்கள். அதன் பிறகு தான் எல்லோருக்கும் உயிரே வந்தது.

பாட்டியின் கணவர் அழுகாத குறையாக நன்றி கூறினார். மருத்துவரை ஏன் தெய்வம் மாதிரின்னு சொல்றாங்கன்னு புரிஞ்சுது.

ரணகளத்தில் ஒரு கிளுகிளுப்பு

இங்க ஒரு ரணகளமே நடந்துட்டு இருக்கு, பின் இருக்கையில் இருந்த ஒருத்தர் வேகமாக அங்கே சென்றார்.

என்னடா! பார்த்தால்.. ஒண்ணுமே தெரியல இவரும் டாக்டரா?! ச்சே! எவ்வளோ தப்பா நினைத்து விட்டோம்னு என்னைத் திட்டிட்டு பார்த்தால், நம்ம ஆளு எதுக்குப் போனாருன்னு நினைக்கறீங்க, போய் வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு.

அடங்கொக்கமக்கா எனக்கு வந்ததே பாருங்க கோபம், செம காண்டாகி விட்டது.

ஏன்டா! உங்களோட எட்டி பார்க்குற புத்திய எங்க போனாலும் விட மாட்டிங்களான்னு மனதிற்குள் திட்டிவிட்டு அமர்ந்தேன் (நம்மால் அது தானே முடியும் 🙂 ).

பிறகு பணிப்பெண் ‘காற்று விடுங்க அவங்கவங்க இருக்கைக்குப் போய் உட்காருங்க‘ன்னு சொன்னதும் அவர் சரியா பார்க்க முடியலைங்ற வருத்தத்தோட வந்து இருக்கையில் அமர்ந்து விட்டார். என்ன கொடுமை சார்!

தூக்கம் வரவில்லை ஆனால்..

இதற்கப்புறம் எனக்குத் தூக்கம் வரும்னு நினைக்கறீங்க???? இப்படி நடந்ததால எனக்குத் தூக்கம் வரலை, பயத்துல ஒண்ணுக்கே வந்து விட்டது 😀 .

யாராவது கழிவறை உள்ளே இருந்தா கதவுல சிகப்பு விளக்கு எரியும். 

என் நேரம்னு பார்த்து எல்லாமே சிகப்பா இருக்கு, அளவா குடித்தா தானே, இலவசம்னா நம்ம ஆளுங்க பினாயில கூடக் குடிப்பாங்களே, சரக்க விடுவாங்களா!

வண்டி வண்டியா குடிக்க வேண்டியது கழிவறைக்குள்லேயே குடி இருக்க வேண்டியது. அப்புறம் ஒருத்தன் வெளியே வந்தான்.

யப்பா! வேற எவனாவது போவதற்குள்ளே போயிடலாம்னு போய்ட்டேன்.

கழிவறைக்குப் போனா அதை வேற எப்படித் திறக்கறதுன்னு தெரியல அப்புறம் எப்படியோ அதை இதை அமுக்கித் திறந்து உள்ளே போய்ட்டேன்.

எல்லாம் முடிந்து பிளஷ் பண்ணினா தண்ணீருக்குப் பதிலாகப் பயங்கரமான சத்ததோட உறிஞ்சுது, அது போட்ட சத்தத்தை எதிர்பார்க்காததால் ஒரு நொடி பயந்து விட்டேன்.

கைக்கழுவ பைப் அமுக்கினா சோப்புத் தண்ணீர் வருது என்ன இழவுடா இதுன்னு! கீழே இன்னொரு பொத்தான் இருந்தது அதை அமுக்கினா தண்ணீர் வந்தது அப்பாடான்னு வந்துட்டேன்.

ஏற்கனவே, நிறையச் சோப்புத் தண்ணீர் சிந்தி இருந்தது நம்மை மாதிரியே யாரோ தடவிட்டுத் தண்ணீர் எப்படி வரவைக்கிறதுன்னு தெரியாம விட்டுப் போய் இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன் 🙂 .

அருகில் இருந்தவர் சரக்கு வாங்கிக் குடித்துக்கொண்டு இருந்தார்.

ஆகா! நம்ம மேல வாந்தி எடுக்காம போகமாட்டாரு போலன்னு பயத்தோடவே உட்கார்ந்துகொண்டேன். காலை நல்லா நீட்டிட்டுப் படுத்த மாதிரி சாய்ந்து கொண்டார், கப்பு தாங்கல!

மறுபடியும்ம்ம்ம்மா

திடீர்னு விமானம் அதிர ஆரம்பிச்சது ‘ஐயயோ மறுபடியும்ம்ம்ம்மா இனி தாங்காதுடா சாமி‘ன்னு பயந்து நம்ம கற்பனை குதிரையைத் தட்டி விடுறதுக்குள்ள கேப்டன் ஒண்ணும் இல்லைன்னு அறிவித்தார்.

கொஞ்சம் நேரம் அதிர்ந்து பிறகு சரியானது.

நண்பர்களிடம் கேட்ட போது அழுத்தத்தில் (turbulence) அப்படி ஆகும், இது சகஜம்னு சொன்னாங்க இருந்தாலும் முதல் முறை என்பதால் எனக்கு உதறல் ஆகி விட்டது.

விமானம் இன்னும் சிறிது நேரத்தில் சாங்கி விமான நிலையம் அடைய போகுதுன்னு அறிவித்தாங்க.

என் அருகில் இருந்தவர் எழுந்து பணி ஆண் ஒருவரை அழைத்து ரெடி ஷேவ், பேஸ்ட், பிரஷ் எல்லாம் கேட்டு வாங்கிப் போட்டுகிட்டாரு!

வாங்கிப் போட்ட பிறகு அவர் முகத்துல அப்படியொரு பெருமிதம்.

அடப்பாவிகளா 3 1/2 மணி நேர பயணத்துக்கு இதெல்லாம் ஓவர்ன்னு நினைத்துட்டு ஒரு கொலை வெறியோட அந்த ஆள பார்த்தேன்.

அவர் என்னை  முறைத்தார்.

ஒரு வழியா விமானம் தரை இறங்கியது. எல்லோரும் எந்தப் பக்கம் போறாங்கன்னு பார்த்து அவங்க பின்னாடியே போய் எல்லாம் முடிந்து வெளியே வந்துட்டேன்.

வெளியே வந்தவுடன் எனக்கு நினைவு வந்த வசனம் நம்ம கவுண்டரின் பிரபல வசனமான  “இது என்ன ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிங்கபூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” 🙂 .

முதல் வெளிநாட்டு விமானப் பயணம் இனிதே! முடிந்தது.

Read: முதல் வெளிநாட்டு விமானப் பயணம் I

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

17 COMMENTS

 1. //நல்லவேளை !! பேசின் ல உக்காந்துட்டு பட்டன் ஐ அமுககலியே ?? மொத்தமா சேர்த்து இழுத்திருக்கும் :))//

  ஹா ஹா ஹா

  வருகைக்கு நன்றி வெங்கி 🙂

 2. // புதுகைத் தென்றல் said…
  முதல் அனுபவமே இப்படியா?
  ஈசியா எழுதிட்டாலும் விமானத்துல உங்க நிலமை எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். :(//

  என் ராசியே இப்படி தாங்க..எங்க போனாலும் மொதல்ல தர்ம அடி வாங்குவேன் 🙂

  உங்க வருகைக்கு நன்றி புதுகை தென்றல்

  //எம்.ரிஷான் ஷெரீப் said…
  இனிமே ஒவ்வொருமுறை விமானத்துல போகும்போதும் உங்க ஞாபகம் தான் வரும்.. :)//

  ரிஷான் என்னை நினைத்தீங்கன்னா அப்புறம் எவனாவது மொக்கை மாதிரி ஒருத்தன் வந்து உட்காந்துடுவான். நம்ம ராசி அப்படி :-))

 3. ////இது என்ன ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிங்கபூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” // பாட்டா பாடறீங்க… வைச்சானா ஆப்பு :-)//

  ரொம்ப சந்தோசம் போல இருக்கு 🙂 வித்யா என்னோட சாபத்தை வாங்கிக்காதே அப்புறம் நீ வேற அடுத்த மாசம் ஊருக்கு போகணும்னு சொன்னே ….:-)))))

 4. // umakumar said…
  ஒரே நொந்த‌ க‌தையா இருக்கே//

  பலரின் கதை இது தான், நான் பரவாயில்லை :-). உங்க வருகைக்கு நன்றி உமகுமார்.

 5. //உள்ளே போனா எல்லாம் முடிந்து பிளஷ் பண்ணினா தண்ணீர் வருவதற்கு பதிலாக அது பயங்கரமான சத்ததோட உறிஞ்சுது, அது போட்ட சத்தத்தை நான் எதிர்பார்க்காததால் ஒரு நொடி பயந்து விட்டேன்.//

  நல்லவேளை !! பேசின் ல உக்காந்துட்டு பட்டன் ஐ அமுககலியே ?? மொத்தமா சேர்த்து இழுத்திருக்கும் :))

  //என் அருகில் இருந்தவர் எழுந்து பணி ஆண் !!! ஒருத்தரை கூப்பிட்டு ரெடி ஷேவ், பேஸ்ட், பிரஷ் எல்லாம் கேட்டு வாங்கி பய்யில போட்டுகிட்டாரு!! வாங்கி போட்ட பிறகு அவர் முகத்துல அப்படி ஒரு பெருமிதம்.//

  நம்ம ஆளுங்க..சும்மா இலவசமா குடுத்தா பீ கூட சாபிடுவாங்க… இதுக்கு சொல்லவா வேணும் ??

 6. முதல் அனுபவமே இப்படியா?

  ஈசியா எழுதிட்டாலும் விமானத்துல உங்க நிலமை எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். 🙁

  விமான பயணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

 7. அப்பாட உங்க கதையல்ல நிஜம் எப்படா அடுத்த பாகம் வரும்னு இருந்தேன். நல்ல வேளை பக்கத்தில் இருந்தவர் உங்களை அடிக்காமல் விட்டார்.

  //சிங்கப்பூர் வந்ததும் என்னோட கன்சல்டன்சி விருந்தினர் வீடு தேடி போய் அங்கே கதவு பூட்டப்பட்டு இருந்து//
  உங்களுக்கும் இதே மாதிரி அனுபவமா பேஷ் பேஷ் இந்த அனுபவம் பலருக்கு இருக்கு போல…

  //இது என்ன ஊர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிங்கபூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” // பாட்டா பாடறீங்க… வைச்சானா ஆப்பு 🙂

 8. ஒரு மூணு, மூணரைமணி நேரப் பயணத்துக்கே இந்தக் கதியா?

  மக்கள்ஸ் செய்யறது கொஞ்சம் ‘ஓவரா’தெரியலை?

 9. அருமையான பகிர்வுகள் கிரி.

  கதவு பூட்டியிருந்ததைப் பார்த்து நொந்த அனுபவத்தை ‘இன்னொரு சமயத்துல’ வச்சுக்காம அடுத்த பதிவா எழுதிடுங்க.

  உங்களுக்கு எழுத்து இயல்பாகவே வருகிறது. நிறைய எழுதுங்கள்.

  வாழ்த்துகள். பாராட்டுகள்!

 10. //கதவு பூட்டியிருந்ததைப் பார்த்து நொந்த அனுபவத்தை ‘இன்னொரு சமயத்துல’ வச்சுக்காம அடுத்த பதிவா எழுதிடுங்க//

  தொடர்ந்து எழுதினா படிப்பவர்களுக்கு சலிப்பாகி விடும் எனவே, சிறிது நாள் பொறுத்து எழுதுகிறேன். அடுத்த வாரம் என் அம்மாவை கூட்டி வர செல்கிறேன். எனவே அது பற்றி எழுதுவேன்.

  //உங்களுக்கு எழுத்து இயல்பாகவே வருகிறது. நிறைய எழுதுங்கள்//

  உங்கள் பாராட்டுக்கு நன்றி சுந்தர். நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.

 11. //ஒரு மூணு, மூணரைமணி நேரப் பயணத்துக்கே இந்தக் கதியா?//

  எனக்கே இந்த கதின்னா, நம்ம வெங்கி மாதிரி தொடர்ந்து போகிறவங்க நிலைமையை நினைத்து பாருங்க.

 12. நல்லவேளை !! பேசின் ல உக்காந்துட்டு பட்டன் ஐ அமுககலியே ?? மொத்தமா சேர்த்து இழுத்திருக்கும் :))

  Mr. Kee Ven, Eppadi ippadi yosikireenga?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here