குருவி (2008)

24
kuruvi movie குருவி

 ண்பர் விஜய் ரசிகர் குருவி படத்திற்கு முன்பதிவு செய்கிறேன் நீங்கள் வருகிறீர்களா? என்ற கேட்டு, எனக்கும் சேர்த்து முன்பதிவு செய்தார்.

யிஷுன் கோல்டன் வில்லேஜ் திரை அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதால் நம்ம ஊரில் பார்க்கும் உணர்வே இருந்தது.

விஜயின் அப்பா மணிவண்ணன் ஆந்ரா மாநிலத்தில் கல் குவாரியில் கல் உடைக்கும் போது அதில் வைரம் இருப்பதைக் கண்டு அரசுக்குச் சொல்ல முயற்சிக்க அதை வில்லன் கும்பல் சுமன் ஆஷிஷ் வித்யார்த்தி அவர்களை அடிமையாக்கி வெளியுலகிற்குத் தெரியாமல் அடைத்து வைத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள்.

அதோடு அந்த வைரத்தை விற்றுக் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் இதை விஜய் எப்படிக் கண்டுபிடித்து மணிவண்ணனையும் அவரோடு அடிமைகளாக இருப்பவர்களையும் மீட்கிறார் என்பதே குருவி கதை.

எடுத்தவுடன் கார் பந்தயம் போன்ற காட்சி, அனைவரும் காரில் இருந்து விஜய் வரப்போகிறார் என்று விசில் அடித்து உற்சாகமாக இருக்க, வெளியே வருவது விவேக்,

ரசிகர்கள் ஏமாற்றமாக, வந்த விவேக் விஜய் வருவதைப் பற்றி ஒரு பில்ட் அப் கொடுக்க, விஜய் வேறு இடத்தில், மூடி இருந்த தொட்டி விலகி அதில் இருந்து விஜய் தண்ணீருடன் பீச்சியடிக்க மேலே வருகிறார்.

யாருமே அதை ஒரு பரபரப்புடன் எதிர்பார்க்காததால் அவருடைய தொடக்கக் காட்சி சப்பென்று அமைந்த விட்டது.

கார் பந்தயம்

விஜய் தன்னுடைய ஓட்டை காருடன் (கிண்டல் செய்யவில்லை உண்மையிலேயே டப்பா கார் தான்) போட்டியில் கலந்து கொள்கிறார்.

அனைத்து கார்களும் கலக்கலாக இருக்க விஜயின் கார் மட்டும் காயலான் கடை கார் மாதிரி இருக்கிறது.

அனைவரும் அதைக் கிண்டல் செய்ய விஜய் மௌனமாக அஜித் மாதிரிப் போட்டி உடையில் போஸ் கொடுக்கிறார். போட்டி ஆரம்பமாகி கார்கள் ஓடத் துவங்குகின்றன.

விஜயின் கார் பாகங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று கொள்ள, விடாமல் காரை ஓட்டுகிறார், பேனட், கதவு, பம்பர் என்று எல்லாமே கழண்டு விடுகிறது.

கடைசியில் விசை மிதியும் உடைந்து போக அனைவரும் சிரிக்கிறார்கள்.

விஜய் அறுந்து போன கேபிளை வாயில் கடித்து இழுத்து வேகத்தைக் கூட்டி பறந்து சென்று (உண்மையாகவே) முதலிடம் பிடிக்கிறார்.

பின்னர் போட்டியில கலந்துக்கிறது முக்கியம் இல்ல யாரு ஜெயிக்கறாங்க என்பது தான் முக்கியம் என்று யாருக்கோ சவால் விடுகிறார்.

கண்ணைக் கட்டிக்கொண்டு Mask of Zorro போல, முதல் பாதியில் விஜய் ஒரு ஸ்பைடர் மேன் ஆகவே இருக்கிறார், பாதி நேரம் பறந்து கொண்டே இருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷாக்கு வேலை விஜய்யைத் துரத்துவது மட்டுமே. த்ரிஷா அழகாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் இடுப்பு சுளுக்கு ஏற்பட்டு அதற்கு எண்ணைத் தடவும் இடத்தில் என்னைப் போல் ரசிகர்களைக் கிறங்கடித்துக் கிளுகிளுப்பு மூட்டுகிறார்.

அனைவரும் விஜயை மாறி மாறிச் சுடுகிறார்கள் ஆனால், வேகமாக வரும் துப்பாக்கி குண்டை விட வேகமாக ஒதுங்கித் தப்பித்துக்கொள்கிறார்.

விஜயை வில்லன்கள் துரத்தி வர அவர் ஓடி ஓடி மொட்டை மாடிக்கே வந்து விடுவார் அதற்குப் பிறகு ஓட முடியாது, வில்லன்கள் வேறு வந்து விடுவார்கள்.

தப்பிக்க என்ன வழி என்று பார்ப்பார் நமக்கும் வழியில்லை என்று தோன்றுகிறது, விஜய் மேலே பருந்தை பார்க்கிறார், கடவுளைப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை.

எதோ ஏடாகூடமாக நடக்கப் போகிறது என்று பார்த்தால் விஜய் அங்கே மாடியில் இருந்து தாவிச் சம்பந்தமே இல்லாத தூரத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் பாலத்திற்குப் பறந்து தாவிப் பிடித்துக்கொள்கிறார்.

விவேக்

இடைவேளை வரை, படத்தை ஓரளவிற்காவது காப்பாற்றுவது விவேக் தான், இல்லை என்றால் ரொம்பக் கடுப்பாகி இருக்கும்.

இடைவேளைக்குப் பிறகு முழுவதும் ஆந்த்ரா கடப்பாவில் நடப்பதையே காட்டுகிறார்கள், நமக்கும் வறண்ட இடத்தையே பார்த்துச் சலிப்பாகி விடுகிறது. இடையில் த்ரிஷா பாடலில் வந்து ஜில் சேர்க்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு விவேக் இல்லை, படமும் வறட்சியாகப் போகிறது, திரிஷாவை தவிர்த்து.

விஜய் வழக்கம் போல ஆட்டத்தில் பட்டய கிளப்புகிறார். நளினமான மற்றும் வேக ஆட்டத்தில் நான் தான் ராஜா என்பதைக் கூறாமல் ஆட்டத்தில் காட்டுகிறார்.

கில்லி என்ற தாறுமாறான விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த இயக்குநர் தான் குருவி இயக்கினார் என்று கூறினால் நம்ப முடியவில்லை.

தொடர்புடைய விமர்சனம் – துப்பாக்கி

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

 1. வாங்க சிவா மற்றும் இளா. என்னங்க என் வலைப்பதிவு பக்கம் எட்டியே பார்க்க மாட்டேங்குறிங்க. அப்பப்ப கொஞ்சம் வந்து நிறை குறைகளை சொல்லிட்டு போங்க 🙂

  அது சரி விஜய் மேல ஏங்க இப்படி காண்டுல இருக்கீங்க 😀

 2. இதை படிச்சா விசயகாந்து ரொம்ப சந்தோசப்படுவாரு. பின்னே, அவரோட அரசாங்கம் 9ம் தேதி வருதுல்ல (அட, படம் தானுங்கண்ணா)

 3. பெத்தராயுடு காரு இது தெலுங்கு படம் இல்லையே தவிர, ஏகப்பட்ட தெலுங்கு வார்த்தைகள், தெலுங்கு நடிகர்கள், கடப்பா இடம் என்று ஏகப்பட்ட தெலுங்கு, தெலுங்கு தெரிந்தவர்கள் என்றால் நல்லது. தொங்கனா கொடுக்கா… மட்டுமே நான் அடிக்கடி கேட்ட வார்த்தையாக புரிந்தது 😀

 4. மிக்க நன்றி

  உண்மையில் இது நல்ல செய்தி! சூப்பர்!

  இன்னும் இதுப் போல் 5 படம் விஜய்க்கு ஊத்தில் கொண்டால் அவர் திருந்த வாய்ப்பு உண்டு!

  நல்லச் செய்திக்கு நன்றி

  மயிலாடுதுறை சிவா…

 5. :))

  //இன்னும் இதுப் போல் 5 படம் விஜய்க்கு ஊத்தில் கொண்டால் அவர் திருந்த வாய்ப்பு உண்டு! //
  ஏற்கனவே மூணு ஆகிருச்சு, இன்னும் ரெண்டுதான். முதல்ல அஜித் உருப்படாம போனதுக்கும் இதுதான் காரணம்.

 6. இந்தப் படம் தெலுங்கு ரீமேக் இல்லையே!
  ஒரு வேளை தெலுங்கில டப் பன்ணலாம் என்று எடுத்திருப்பார்களோ? ஏன்னா, நீங்க சொல்றத பாத்தா பாலைய்யா* படம் பாத்த மாதிரி இருக்கு.

  இப்ப சொல்றேன். விஜய்யோட அடுத்த படம் ‘ஜல்சா’ தெலுங்குப்படத்தோட ரீமேக்தான். படம் அம்புட்டு மசாலா.

  *பாலைய்யா = நந்தமூரி தாரகராம் ராமாராவ் பாலகிருஷ்னா

 7. வணக்கம் கிரி சார், தங்களின் படைப்புகளை இன்றுதான் படித்தேன் நல்லா இருந்தது,திரை விமர்ச்சனங்கள் நன்றாகதான் இருந்தது எனினும் கொஞ்சம் காலதாமதமாக செய்யலாமே,விஜய்க்கு ஒன்னுமில்லை, வாங்கி திரையிட்ட வினியோகஸ்தர்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்..உங்கள் விமர்ச்சனத்தை படித்த பலர் தியேட்டர் பக்கம் போகவே மாட்டார்கள்.ஆனால் நன்றாக இருந்தது தங்களின் அனைத்து படைப்புகளும் வாழ்த்துக்கள்…

  அன்புடன்
  வீரமணி

 8. நன்றி வீரமணி உங்கள் கருத்துக்கு. நான் உங்கள் நல்ல எண்ணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன், நான் உண்மையிலேயே உங்களை போல் நினைப்பவன் தான் அதனாலேயே நான் திரைப்படங்களை திருட்டு DVD ல் பார்க்காமல் திரை அரங்குகளில் மட்டுமே பார்ப்பவன், பார்த்தவுடன் இதை என் வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றிய ஆர்வத்தால் அப்படி செய்து விட்டேன், மற்றபடி எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை.

  விஜயின் படங்களும் எனக்கு பிடித்தவையே. நான் அனைவரின் படங்களையும் பார்ப்பவன். இனிமேல் நீங்கள் கூறியது போல் படம் சரி இல்லை என்றால் தாமதமாக எழுதுகிறேன், நான் பொதுவாக இவ்வளவு விரைவாக பார்க்க மாட்டேன், ஒரு ஆர்வத்தில் சென்று பார்த்தேன். என் தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி.

 9. //வணக்கம் கிரி சார், தங்களின் படைப்புகளை இன்றுதான் படித்தேன் நல்லா இருந்தது,திரை விமர்ச்சனங்கள் நன்றாகதான் இருந்தது எனினும் கொஞ்சம் காலதாமதமாக செய்யலாமே,விஜய்க்கு ஒன்னுமில்லை, வாங்கி திரையிட்ட வினியோகஸ்தர்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்..உங்கள் விமர்ச்சனத்தை படித்த பலர் தியேட்டர் பக்கம் போகவே மாட்டார்கள்.ஆனால் நன்றாக இருந்தது தங்களின் அனைத்து படைப்புகளும் வாழ்த்துக்கள்… //
  அண்ணாத்தே படத்தை பாக்குறவங்களை பத்தியும் கொஞ்சம் யோசியுங்களேன்..இந்த மாதிரி எம்மூட்டு படத்துல தான் நாங்க அடி வாங்குறது சொல்லுங்க, முடியலைண்ணே முடியலை… இது மாதிரி படங்களை எல்லாம் பாத்துட்டு எத்துணை முறை தான் நாங்களும் ரூம் போட்டு அழுறது..

 10. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்… இது விசய் படமா??? இல்ல விசயகாத்து படமா???

 11. நல்ல வேலை நேற்று படம் பார்க்கலாம்னு இருந்தேன் … என் பணத்தை மிச்ச படுத்துட்டிங்க மிக்க நன்றி கிரி..!

 12. அவர்களை குறை கூறுவதை விட, தவறு நம்முடையது தான் என்று நான் கருதுகிறேன். நல்ல படங்களை நாம் ஆதரிப்பது இல்லை, நல்ல படம் என்று நாம் சொல்வது மட்டுமே அந்த தயாரிப்பாளரையோ அல்லது இயக்குனரையோ திருப்தி படுத்தி விடுமா? திரை அரங்கு சென்று பார்த்தால் மட்டுமே அவர்களுக்கும் நஷ்டம் வராது அடுத்த நல்ல படம் எடுக்க தோன்றும். நம்மவர்கள் குஜால் படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அதனாலேயே இவர்களும் ஓடுகிற குதிரை மீது பணம் கட்டுகிறார்கள். ஏமாறும் நம்மை போன்றவர்களின் நிலைமையும் பரிதாபம் தான்.

  தங்கள் வருகைக்கு நன்றி இந்தியன்

 13. //வணக்கம் கிரி சார், தங்களின் படைப்புகளை இன்றுதான் படித்தேன் நல்லா இருந்தது,திரை விமர்ச்சனங்கள் நன்றாகதான் இருந்தது எனினும் கொஞ்சம் காலதாமதமாக செய்யலாமே,விஜய்க்கு ஒன்னுமில்லை, வாங்கி திரையிட்ட வினியோகஸ்தர்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்..உங்கள் விமர்ச்சனத்தை படித்த பலர் தியேட்டர் பக்கம் போகவே மாட்டார்கள்.ஆனால் நன்றாக இருந்தது தங்களின் அனைத்து படைப்புகளும் வாழ்த்துக்கள்…

  அன்புடன்
  வீரமணி
  //

  அண்ணே, ரசிகர் மன்றத் தலைவரோ? அடடா தளபதி மேல என்ன அக்கறை.. ? என்ன அக்கறை.. ? ஏன் விநியோகஸ்தர்களுக்கு மூளையில்லையா? 100 ரூவா கொடுத்துப் டிக்கட் வாங்குபவரே படம் மோசம் எனச் சொல்லும்போது 1 கோடி 2 கோடி ரூவா கொடுத்து வாங்குறவங்கங்களுக்கு புத்தி எங்க போச்சு? இப்படி உசுப்பேத்தியே ஒரு இத்துப் போனவன தளபதியாக்கி, தலைவனாக்கி, கடைசியா கடவுளாக்காம விடமாட்டாங்க போலிருக்கு.

 14. குருவி – முதல் நாள் காட்சியைப் பார்த்து நொந்தவர்களில் நானும் ஒருவன்.
  🙂

 15. //அதற்கு விவேக் அறிமுக காட்சியே சிறப்பாக இருந்தது.//

  ஹா ஹா ஹா…

 16. வாங்க இத்துப்போன ரீல் (உங்க பேரை இப்படி கூப்பிட கஷ்டமா இருக்குங்க) . உங்க பாராட்டுக்கு நன்றி.

  வாங்க முரளிக்கண்ணன்

 17. //பெத்தராயுடு காரு இது தெலுங்கு படம் இல்லையே தவிர, ஏகப்பட்ட தெலுங்கு வார்த்தைகள், தெலுங்கு நடிகர்கள், கடப்பா இடம் என்று ஏகப்பட்ட தெலுங்கு, தெலுங்கு தெரிந்தவர்கள் என்றால் நல்லது. தொங்கனா கொடுக்கா… மட்டுமே நான் அடிக்கடி கேட்ட வார்த்தையாக புரிந்தது :D//

  அந்த இடம் கடப்பா அல்ல!.சேலத்தில் உள்ள மேக்னசைட் மைன்ஸ்களில் படமாக்கப்பட்டது.
  தங்களின் விமர்சனம்.மிக தெளிவு!

 18. \\அண்ணே, ரசிகர் மன்றத் தலைவரோ? அடடா தளபதி மேல என்ன அக்கறை.. ? என்ன அக்கறை.. ? ஏன் விநியோகஸ்தர்களுக்கு மூளையில்லையா? 100 ரூவா கொடுத்துப் டிக்கட் வாங்குபவரே படம் மோசம் எனச் சொல்லும்போது 1 கோடி 2 கோடி ரூவா கொடுத்து வாங்குறவங்கங்களுக்கு புத்தி எங்க போச்சு? இப்படி உசுப்பேத்தியே ஒரு இத்துப் போனவன தளபதியாக்கி, தலைவனாக்கி, கடைசியா கடவுளாக்காம விடமாட்டாங்க போலிருக்கு\\
  excellent

 19. உங்களை திட்டுற மாதிரியே இருக்கு.

  //வேணும்ணா இத்துப்போகாத ரீல்ன்னு மாத்திக்கலாமா?….//

  ஹா ஹா ஹா …என்னங்க விஜய் பட வசனம் மாதிரி பேசுறிங்க :))))

  உங்க வருகைக்கு நன்றி கோவி கண்ணன் மற்றும் சரவண குமரன் உட்பட.

 20. //வாங்க இத்துப்போன ரீல் (உங்க பேரை இப்படி கூப்பிட கஷ்டமா இருக்குங்க) . உங்க பாராட்டுக்கு நன்றி.//
  ஏன் கஷ்டமா இருக்கு தலைவா!..வேணும்ணா இத்துப்போகாத ரீல்ன்னு மாத்திக்கலாமா?….

 21. யோவ் திரு உங்க நக்கலுக்கு அளவே இல்லையா.

  //நான் திரிஷாவின் இடுப்பில் சுளுக்கு எடுக்கும் காட்சிற்க்காக அந்த படத்திற்கு சென்றேன்…ஆனால் அந்த சீன் .. நிங்கள் சொன்னமாதிரி கிளுகிளுப்பாக இல்லை//

  ஆமா நீங்க எதாவது மலையாள படம் லெவலுக்கு எதிர் பார்த்து போனா நான் என்னையா பண்ணுறது? த்ரிஷா வுக்கு இதே அதிகம். சரி இதுக்கு மேல விலாவரியா எல்லாம் சொல்ல முடியாது.. ஹீ ஹீ ஹீ நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் 😀

 22. கிரி அவர்களே ..குருவி படத்தை பற்றிய விமர்சனத்தை படித்து விட்டு குருவி படத்தை பார்க்க சென்றேன் ..ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.. ஹி.. ஹி .நான் திரிஷாவின் இடுப்பில் சுளுக்கு எடுக்கும் காட்சிற்க்காக அந்த படத்திற்கு சென்றேன்…ஆனால் அந்த சீன் .. நிங்கள் சொன்னமாதிரி கிளுகிளுப்பாக இல்லை ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here