GAஜிNI – ஒரு திரைப்பார்வை

41
GAஜிNI

ந்தி கஜினி பட்டாசா இருக்கு. தமிழ் படத்தில் இருந்த சில குறைகளைச் சரி செய்து உள்ளார்கள் முக்கியமாக க்ளைமாக்ஸ். சூர்யா அமீர் இருவருமே சிறப்பாக நடிப்பு.

நம்ம சூர்யா இளமையா இருக்காரு, அமீர் அவர் வயசுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வயதானவரா தான் தெரியறாரு அதாவது தாடி வைத்து இருக்கும் காட்சிகளில்.

ஷேவ் செய்யப்படக் காட்சிகளில் நல்லா இளமையா இருக்காரு. அமீர் உடம்பை தாறுமாறா உடம்பை வைத்து இருக்காரு. Image Credit

அசின்

அமீர் தன்னோட காதலர் என்று பார்ப்பவர் அனைவரிடமும் அசின் புருடா விட்டுக் கொண்டு, அதை அமீரிடமும் கூறும் போது அதை அமீர் ரசித்துக் காட்டும் முகபாவனைகள் கலக்கல்.

அசினை தமிழ் கஜினி போலவே இதிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார். முதல் படமே (ஹிந்தியில்) சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதில் ரொம்பச் சந்தோசமாக இருப்பார்.

வில்லன் தமிழ் படத்தில் இருந்தவரே, பார்க்க ஹிந்தி வில்லன் போலவே இருப்பதால் இவரையே போட்டு விட்டார்கள் போல. நன்றாக நடித்து இருக்கிறார்.

ரியாஸ்கானும் அதே காவல் துறை அதிகாரி வேடத்தில் வருகிறார்.

நயன்தாரா வேடத்தில் ஜியா கான், குறிப்பாகக் கூற ஒன்றும் இல்லை.

தமிழ் படத்தைப் போலவே அமீர் தான் சஞ்சய் என்று தெரிந்து கொள்ளாமலே அசின் போய் விட்டாரே என்று வருத்தமாக இருந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

க்ளைமாக்ஸ்

தமிழ் படத்தில் க்ளைமாக்ஸ் படு சொதப்பல் இதில் படு கலக்கல். குறைகளை நீக்கி அருமையாகச் செய்து இருக்கிறார் முருகதாஸ்.

கண்டிப்பாக இதில் அமீரின் பங்கும் உண்டு, காரணம் முருகதாஸை அழைத்து அமீர் பேசும் போது க்ளைமாக்ஸ் ல் மாற்றம் செய்யப் போவதாகக் கூறினார்.

இரண்டு படத்தையும் ஒப்பிட்டால், படத்தை வைத்துப் பார்த்தால் ஹிந்தி கஜினி தான் டாப்பு, நடிப்பு என்று பார்த்தால் சூர்யா தான் தூள்.

அமீரும் நன்றாகத் தான் நடித்து இருக்கிறார் இருந்தாலும், சூர்யா நடிப்பு சூப்பர் சூர்யா கண்ணு, என்ன பண்ணுறதுன்னு தெரியாம மறந்துட்டு அலை பாயும், அதை நல்லா செய்து இருப்பாரு, அமீர் அந்த அளவிற்கு இல்ல.

பணக்கார தோரணையில் சூர்யா, அமீரை விட ஒரு படி சிறப்பாகவே செய்துள்ளார்.

அமீரின் மொட்டைக் காயத் தழும்பைப் பல கல்லூரி மாணவர்கள் பேஷானாக்கி அதே போலச் சிகை (மொட்டை) அலங்காரம் செய்து பலரை பீதிக்குள்ளாக்கி விட்டார்கள்.

அமீர் “தில் சாத்தா ஹை” ல் புதிய சிகை அலங்காரம் செய்து பலரை கவர்ந்து இருப்பார், கஜினியிலும் பாடல் காட்சியில் பல கலக்கல் ஸ்டைலில் வருகிறார்.

ரகுமான் பாடல், முதல் முறை படம் பார்க்கும் போது தான் கேட்கிறேன் என்பதால் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை.

தமிழில் தான் பாட்டு நன்றாக இருப்பது போலத் தோன்றியது. ஒருவேளை அதிக முறை கேட்டால் பிடிக்குமோ என்னவோ.

ஆக மொத்தம் கஜினி ரசிகர்கள் பல முறை படை எடுக்கலாம். பாலிவுட்ல நம்ம ஆளுங்கள வளர விட மாட்டார்கள், வெற்றி அடையவும் விடமாட்டார்கள்.

இதில் தப்பித்தது மணிரத்னம், A.R ரகுமான், ஸ்ரீ தேவி போன்ற வெகு சிலர் மட்டுமே.

நம்ம முருகதாஸ் என்ன ஆகிறார் என்று பார்ப்போம் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

41 COMMENTS

 1. கலகலப்பான இருக்கிறது கஜினி விமர்சனம். தமிழ் படம் பார்த்திருக்கிறேன்.

  //தமிழ் படத்தை போலவே அசின் சாகும் போது அடடா! அமீர் தான் சஞ்சய் என்று தெரிந்து கொள்ளாமலே போய் விட்டாரே என்று வருத்தமாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.//

  ஆமாம்,இது படம் பார்த்த அனைவரையும் ஆதங்கப் பட வைத்த காட்சி.

 2. //தமிழ் படத்தை போலவே அசின் சாகும் போது அடடா! அமீர் தான் சஞ்சய் என்று தெரிந்து கொள்ளாமலே போய் விட்டாரே என்று வருத்தமாக இருந்ததை தவிர்க்க முடியவில்லை.//

  ஹலோ தப்பு தப்பு…அமீர் சஞ்செய் இல்லை, சச்சின் தான் சஞ்செய்.

 3. அடட… ‘நீங்க ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா’ வா?

  தெரிஞ்ச கதை என்றதால் புரிவது ரொம்ப சுலபமா இருந்துருக்கும்.

  படம் நல்லா வந்ததுக்கு முருகதாஸுக்குப் பாராட்டுகள்.

  நீங்க சொன்னதேதான்……
  நம்மளை அங்கே வளர விடமாட்டாங்க(-:

  ஆனா நம்ம உழைப்பை உறிஞ்சுவதில் சூப்பர்.

 4. //கோவி.கண்ணன் said…
  me the first !
  //கோவி.கண்ணன் said…
  me the first !
  //Repeatayyyyyyyyyyyyyyyyy//

  “பிரபல” மற்றும் மூத்த 🙂 பதிவர் பண்ணுற வேலைய பாருங்க மக்களே..:-)))

  //ஹலோ தப்பு தப்பு…அமீர் சஞ்செய் இல்லை, சச்சின் தான் சஞ்செய்//

  சச்சின் எப்ப படத்துல நடிக்க ஆரம்பித்தாரு? நான் கஜினி ல பார்க்கவே இல்லையே ஹி ஹி ஹி மொக்கைக்கே ஒரு மொக்கை

  ===================================================================

  //முரளிகண்ணன் said…
  கிரி
  நல்லா ஜாலியா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க போல//

  படம் நன்றாக இருந்தது முரளிகண்ணன் 🙂

  ===================================================================

  //ராமலக்ஷ்மி said…
  கலகலப்பான இருக்கிறது கஜினி விமர்சனம்.//

  நன்றி ராமலக்ஷ்மி, முடிந்தால் இதையும் பாருங்க.

  ===================================================================

  //Mahesh said…
  ஹிந்தி கஜினி பத்தி நல்லாவே ரிவ்யூக்கள் வந்துருக்கு. எல்லாரும் க்ளைமாக்ஸைத்தான் சிலாகிச்சு சொல்றாங்க. சீக்கிரம் பாக்கணும்//

  மகேஷ் இதுல க்ளைமாக்ஸ் ரொம்ப சூப்பர் எல்லாம் கிடையாது, தமிழ் ல கொடுமையா இருந்ததால இதுல சூப்பரா தெரியுது அவ்வளோ தான், மற்றபடி நல்ல க்ளைமாக்ஸ். படம் பாருங்க நல்லா தான் இருக்கு

  ===================================================================

  //நசரேயன் said…
  திருட்டு படம் பார்கிறேன்//

  உதை வாங்குவீங்க..திரை அரங்கில் பாருங்க

  ===================================================================

  //துளசி கோபால் said…
  அடட… ‘நீங்க ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா’ வா?//

  ஹா ஹா ஹா ஹா ஆமாம் மேடம் :-))

  //தெரிஞ்ச கதை என்றதால் புரிவது ரொம்ப சுலபமா இருந்துருக்கும்.//

  உண்மை தான் அதுவுமில்லாம ஆங்கில சப் டைட்டில் போட்டாங்க

  //ஆனா நம்ம உழைப்பை உறிஞ்சுவதில் சூப்பர்.//

  சரியா சொன்னீங்க..

  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வருகைக்கு நன்றி மேடம்,

 5. //எனக்கு ஹிந்தியில் தெரிந்த வார்த்தை மேரா நாம் கிரி, துமாரா நாம் கியாகை, ஹிந்தி நகி மாலும், ஏக் தோ தீன் சார் பாஞ் //

  அட உங்களுக்கு இம்புட்டு ஹிந்தி தெரியுமா!
  பெரிய ஆள் சார் நீங்க

 6. //நயன்தாரா வேடத்தில் ஜியா கான் என்று நினைக்கிறேன், குறிப்பாக கூற ஒன்றும் இல்லை, //

  தமிழிலும் நயன்தாரா பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.

 7. //சூர்யா கண்ணு, என்ன பண்ணுறதுன்னு தெரியாம மறந்துட்டு அலை பாயும், அதை நல்லா செய்து இருப்பாரு.//

  அதில் ஒருவித இயலாமையும், கோபமும் தெரியும்

 8. //radhakrishnan said…
  ஹிந்தி கஜினி யில் து மேரியா துரி பியாசு பியாசுகோ//

  இது எந்த பாட்டுன்னே எனக்கு மறந்து போச்சு :-)))

  ===================================================================

  //வால்பையன் said…
  அட உங்களுக்கு இம்புட்டு ஹிந்தி தெரியுமா!
  பெரிய ஆள் சார் நீங்க//

  ஹி ஹி ஹி ஹி

  //அதில் ஒருவித இயலாமையும், கோபமும் தெரியும்//

  சரியா சொன்னீங்க அருண். சூர்யா மறந்து விடுவாரு, அப்புறம் எதற்கு இங்க நிற்கிறோம் என்ன நடந்தது என்று புரியாமல் தவிப்பாரு, அதை நல்லா செய்து இருப்பாரு.

 9. ஹிந்தி கஜினி பத்தி நல்லாவே ரிவ்யூக்கள் வந்துருக்கு. எல்லாரும் க்ளைமாக்ஸைத்தான் சிலாகிச்சு சொல்றாங்க. சீக்கிரம் பாக்கணும்.

 10. ஹிந்தி கஜினி யில் து மேரியா துரி பியாசு பியாசுகோ பாட்டின் மெட்டும் படம் பிடித்த விதமும், அமிரின் body lookum, அசினின் யெக்ஸ்பிரசாநும் சூப்பரா இருக்கு.

 11. நயன்தாரா வேடத்தில் ஜியா கான் என்று நினைக்கிறேன், குறிப்பாக கூற ஒன்றும் இல்லை, சாதாரண நடிகையாக தான் தெரிகிறார், ஈர்ப்பாக இல்லை (எனக்கு).

  கண்ணு சூப்பரில்லை..?

  மற்றது ரகுமானின் பாடல்கள் அருமையாக உள்ளனவே..குறிப்பாக tu meriah.., Gazur, ….

  உங்கள் டெம்ளட் பச்சை கலரில் அழகாத்தான் இருக்கு,, கொஞ்சம் கண்ணைக் குத்துது..அந்த இளம்பச்சை நிறத்தை இன்னும் கொஞ்சம் குறைத்தால் நல்லது என நினைக்கிறேன்..:-)

 12. //arun said…
  Good review Giri//

  நன்றி அருண்

  ===================================================================

  //’டொன்’ லீ said…
  நயன்தாரா வேடத்தில் ஜியா கான் என்று நினைக்கிறேன், குறிப்பாக கூற ஒன்றும் இல்லை, சாதாரண நடிகையாக தான் தெரிகிறார், ஈர்ப்பாக இல்லை (எனக்கு).

  கண்ணு சூப்பரில்லை..?//

  🙂

  //ரகுமானின் பாடல்கள் அருமையாக உள்ளனவே..குறிப்பாக tu meriah.., Gazur, ….//

  ரகுமான் பாடல்கள் பலமுறை கேட்டாலே பிடிக்கும்..நான் படம் பார்க்கும் போது தான் முதல் முறையே கேட்கிறேன்

  //உங்கள் டெம்ளட் பச்சை கலரில் அழகாத்தான் இருக்கு,, கொஞ்சம் கண்ணைக் குத்துது..அந்த இளம்பச்சை நிறத்தை இன்னும் கொஞ்சம் குறைத்தால் நல்லது என நினைக்கிறேன்..:-)//

  குறைத்து விட்டேன் 🙂 நன்றி

  ===================================================================

  புலிகேசி உங்க பின்னூட்டம் சென்சார்ல மாட்டிகிச்சு :-))) மன்னிக்கவும்

 13. //எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது..அப்புறம் எதுக்குயா படத்திற்கு போனே ன்னு கேட்கறீங்களா?//

  சிரிப்புடன் 🙂 நான் இந்தி கற்றுக் கொண்டதே இந்தி திரைப்படங்களைப் பார்த்துத்தான்.அதனால் அசராம இந்திப்படம் தொடருங்கள்.

 14. //புலிகேசி உங்க பின்னூட்டம் சென்சார்ல மாட்டிகிச்சு :-))) மன்னிக்கவும்//

  யோவ் இதெல்லாம் காமெடியா எடுத்துக்கனும். வெண்ணிற ஆடை மூர்த்தி படம் எல்லாம் பார்த்தது இல்லையா. ஏன்யா இப்படி கருத்து சுதந்திரத்தோட கழுத்த நெறிக்கிறீங்க

 15. வால்பையன் said…
  //நயன்தாரா வேடத்தில் ஜியா கான் என்று நினைக்கிறேன், குறிப்பாக கூற ஒன்றும் இல்லை, //

  தமிழிலும் நயன்தாரா பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை.
  \\

  ஆனா இந்தப்படத்துல நயன்தாரா பெரிசா இருப்பாங்க..;)

 16. //புலிகேசி said…
  யோவ் இதெல்லாம் காமெடியா எடுத்துக்கனும். //

  அப்படிங்களா!!

  //ஏன்யா இப்படி கருத்து சுதந்திரத்தோட கழுத்த நெறிக்கிறீங்க/

  அது சரி! …இதுக்கு பேரு தான் கருத்து சுதந்திரம்னு எனக்கு தெரியாம போச்சுங்க.

  ===================================================================

  //ராஜ நடராஜன் said…
  சிரிப்புடன் 🙂 நான் இந்தி கற்றுக் கொண்டதே இந்தி திரைப்படங்களைப் பார்த்துத்தான்.அதனால் அசராம இந்திப்படம் தொடருங்கள்//

  ஆஹா! தெய்வமே! ஆர்வம் ஊட்டிய உங்களுக்கு நன்றியோ நன்றி..நானும் ஹிந்தி கத்துக்கணும் என்று முயற்சி!! செய்றேன்..ஒன்றும் வேலைக்கு ஆக மாட்டேங்குது 🙁 இருந்தாலும் உங்க ஐடியாவ பின் தொடர்ந்து கஜினி மாதிரி படையெடுக்க போறேன்.. 🙂

  ===================================================================

  //தமிழன்-கறுப்பி… said…
  நல்லாருங்க…:)//

  நன்றி.. வாங்க வாங்க கறுப்பி 🙂 ரொம்ப நாளா ஆளையே காணோம்!

  //ஆனா இந்தப்படத்துல நயன்தாரா பெரிசா இருப்பாங்க..;)//

  ஹி ஹி ஹி ஹி

  ===================================================================
  //ஜி said…
  “ஏக் காவ்மே ஏக் கிஸான்.. ரகு தாத்தா” என்ற மிகப் பிரசித்திப் பெற்ற ஹிந்தி வார்த்தையைத் தெரியாத உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன் :))//

  ஹா ஹா ஹா இந்த வார்த்தை எனக்கு தெரியுங்க ஜி..ஆனா இதற்க்கு அர்த்தம் தெரியாது.. ரகு தாத்தா வை மறக்க முடியுமா :-))))

  //நானும் சென்ற வாரம் பார்த்தேன்… எல்லாக் காட்சிகளிலும் சூர்யா மூஞ்சிதான் வந்தது… :))//

  ஐயையோ! நீங்க ஹிந்தி கஜினி பதிலா தமிழ் கஜினி பார்த்துட்டீங்களா! ஹா ஹா ஹா

  ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க நன்றி ஜி 🙂

 17. /எனக்கு ஹிந்தியில் தெரிந்த வார்த்தை மேரா நாம் கிரி, துமாரா நாம் கியாகை, ஹிந்தி நகி மாலும், ஏக் தோ தீன் சார் பாஞ் ..இவ்வளோ தாங்க நம்ம ஹிந்தி :-))).//

  “ஏக் காவ்மே ஏக் கிஸான்.. ரகு தாத்தா” என்ற மிகப் பிரசித்திப் பெற்ற ஹிந்தி வார்த்தையைத் தெரியாத உங்களை கடுமையாகக் கண்டிக்கிறேன் :))

  நானும் சென்ற வாரம் பார்த்தேன்… எல்லாக் காட்சிகளிலும் சூர்யா மூஞ்சிதான் வந்தது… :))

 18. நயன்தாரா வேடத்தில் ஜியா கான் என்று நினைக்கிறேன், குறிப்பாக கூற ஒன்றும் இல்லை, சாதாரண நடிகையாக தான் தெரிகிறார், ஈர்ப்பாக இல்லை (எனக்கு

  உமக்கு எப்படி இருந்தா என்ன வோய், டைரக்டருக்கு சரியா இருந்தா சரிதான்

 19. //
  னக்கு ஹிந்தியில் தெரிந்த வார்த்தை மேரா நாம் கிரி, துமாரா நாம் கியாகை, ஹிந்தி நகி மாலும், ஏக் தோ தீன் சார் பாஞ் ..இவ்வளோ தாங்க நம்ம ஹிந்தி :-))).
  //

  எனக்கு ”ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா” வரைக்கும் நல்லா தெரியும்

 20. //jackiesekar said…
  உமக்கு எப்படி இருந்தா என்ன வோய், டைரக்டருக்கு சரியா இருந்தா சரிதான்//

  ஹா ஹா ஹா

  ===================================================================

  //நெல்லை எக்ஸ்பிரஸ் said…
  thatstami.com ல் உங்கள் பதிவுக்கு link இருக்கிறது.
  கவனித்தீர்களா கிரி?//

  அதை நான் தான் இணைத்தேன் நெல்லை எக்ஸ்பிரஸ். ஆனால் ஒரு சிலர் தான் இங்கே அதை சொடுக்கி இங்கே வருவார்கள், பெரும்பான்மையானோர் அவங்க சைட் லையே என்னோட பதிவு நகல் இருக்கும் அங்கேயே பார்த்து விடுவார்கள்.. உங்கள் அன்பிற்கு நன்றி

  ===================================================================

  //ஆளவந்தான் said…
  எனக்கு ”ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா” வரைக்கும் நல்லா தெரியும்//

  :-)))) பெரிய ஆளுதான் நீங்க

 21. நானும் சென்ற வாரம் கஜினி பார்த்தேன்.( theater இல் தான்)

  படத்தை முடித்தவிதம் hindi இல் நன்றாக இருந்தாலும் கஜினி என்னும் போது இப்போதும் சூர்யா தான்
  மனதில் நிற்கின்றார்.முக்கியமாக அசினுடனான காட்சிகளில்.

 22. hindi-ghajini hit aanathu cos of south people…southla hindi padam paarkathavangakooda namma suriya nadicha ghajinivida ethula enna panitangannu compare pannatha curiosityla padam paarkaranga….so cos of south and srilankan tamils in the world only this film is super hit…full credits to murugadoss…but amir peru eduthuttaru..

 23. என்னதான் இருந்தாலும் நம்ப நயன்தரா மாதிரி வருமா கில்,மழைல நனைசிகிட்டு ஒடுவங்கலே ….இம்ம்ம்ம்

 24. //வாசுகி said…
  நானும் சென்ற வாரம் கஜினி பார்த்தேன்.( theater இல் தான்)//

  திருட்டு DVD பார்க்காத வாசுகி வாழ்க 🙂

  //படத்தை முடித்தவிதம் hindi இல் நன்றாக இருந்தாலும் கஜினி என்னும் போது இப்போதும் சூர்யா தான் மனதில் நிற்கின்றார்.முக்கியமாக அசினுடனான காட்சிகளில்.//

  விட்டா சூர்யா ரசிகர் மன்ற தலைவி ஆகிடுவீங்க போல :-))) ஹி ஹி

  ===================================================================

  // arun said…
  hindi-ghajini hit aanathu cos of south people…southla hindi padam paarkathavangakooda namma suriya nadicha ghajinivida ethula enna panitangannu compare pannatha curiosityla padam paarkaranga//

  தென் இந்தியாவில் ஹிட் ஆனதற்கு ஒரு காரணமாக வேண்டும் என்றால் இருக்கலாம். வெற்றியில் அமிரின் பங்கும் உண்டு என்பது என் கருத்து. நீங்கள் கூறியது போல சூர்யா கதாப்பாத்திரத்தில் அமீர் எப்படி நடித்து இருக்கிறார் என்று பார்க்க சென்றவர்கள் அதிகம் பேர், அதில் நானும் ஒருவன்.

  //so cos of south and srilankan tamils in the world only this film is super hit..//

  நான் அவ்வாறு நினைக்கவில்லை நம்மவர்களும் ஒரு காரணம், ஹிந்தியின் ரீச் அதிகம் UK வில் ஹிந்தி திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உண்டு. அதுவுமில்லாமல் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்கள் என்று இதை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். அமிரின் நடிப்பும் திரைக்கதையும் சிறப்பாக வந்ததால் வெற்றி மிகப்பெரிய வெற்றியாக கிடைத்து விட்டது.

  //.full credits to murugadoss…but amir peru eduthuttaru..//

  முருகதாஸின் பங்கு அதிகம் என்றாலும் அமிரின் பங்கும் அவரின் பிரபலமும் முக்கிய காரணம். ஹிந்தி திரையுலகில் சிறப்பாக நடிக்க கூடியவர்களில் குறிப்பிடத்தக்க நபரில் அமிரும் உண்டு. அமீர் பெயர் எடுத்து விட்டாலும் அங்கே முருகதாஸின் பெயரும் இதனால் உயர்ந்து விட்டது என்பதை மறுக்க முடியாது. இதற்க்கு அமீர் தான் காரணம். பாலிவுட் காரங்க இவரின் வெற்றியை பார்த்து வயிறு எரிந்து இருப்பது நிச்சயம்.

  அமீர் அழைத்து முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுத்ததால் அவர் இன்று பலரும் அறியும் இயக்குநராகி இருக்கிறார். எனவே இந்த படத்தால் இருவருக்குமே லாபம் என்பது தனிப்பட்ட கருத்து. நான் கூற வந்ததை தவறாக எடுத்துக்கொள்ளாமல் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  ===================================================================

  //Thala said…
  என்னதான் இருந்தாலும் நம்ப நயன்தரா மாதிரி வருமா கில்,மழைல நனைசிகிட்டு ஒடுவங்கலே ….இம்ம்ம்ம்//

  யோவ்! செந்தில் நீங்க திருந்த வாய்ப்பே இல்லை :-)))

 25. க்ரெக்ட்டா சொன்னீங்க கிரி. படம் முழுசா ஹிந்தில ஓகே. ஆனா சூர்யாவோட ஒப்பிடும் போது அமீர் பாதி மார்க்கு தான் வாங்குகிறாரு :-(-:

  ஜியா கானின் கண்ணை நீங்க சரியா பாக்கலன்னு நினைக்கிறேன் 🙁

  அப்புறம் “முஜ்ஜே பீ ஹிந்தி நஹிங் மாலும் கிரி”

 26. இந்தியிலும் கஜினியைப் பார்த்தேன். முடிவை மாற்றியிருக்கின்றார்கள். ஆனாலும் அந்த இயந்திரங்களுக்கு நடுவில் நயன்தாரா மொபைலில் பேசுகையில் இயந்திரங்கள் நிற்கும் அதிர்ச்சிக் காட்சியை இந்தியிலும் சேர்த்திருக்கலாம். உண்மையிலேயே அதிர்ச்சியை உண்டாக்கும் காட்சி அது. ஆனால் அங்கிருந்து நயன் தப்பிப்பது நம்ப முடியாமல் இருக்கும்.

  இந்தியில் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் சப்பை. ரகுமானுக்கு என்னாச்சு?

  அமீர்கான் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய இருப்பினாலேயே படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் சூரியாவிடமிருந்த ஏதோ ஒன்று குறைகின்றது. சுட்டும் விழிச்சுடரே பாடலில் சூரியா-அசின் ஒட்டுறவும் வேதியலும் நன்றாக இருக்கும். இந்தப் படம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் காரை விற்று அமீர் கையில் பணம் கொடுக்கும் பொழுது ஒரு பாட்டு வரும். எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்கிறது என்று. அந்தப் பாடல்காட்சிதான் படத்திலே மிகவும் பிடித்த கட்டம். மிக அருமை. ஐயோ….இவங்க ரெண்டு பேரும் சேரக்கூடாதா என்று ஏங்க வைத்த காட்சி.

  படம் முடியும் பொழுது கேக் வெட்டும் காட்சியில் அந்தப் பெண்ணின் பெயரைச் சரியாகச் சொல்லும் புத்திசாலித்தனமும் பாராட்ட வைத்தது.

 27. // arun said…
  Giri ji,
  See koffee with anu where balaji (chennai kings fast bowler) praises our Super Star.//

  ஏற்கனவே பார்த்து விட்டேன் அருண் நன்றி.

  ===================================================================

  //நான் ஆதவன் said…
  ஜியா கானின் கண்ணை நீங்க சரியா பாக்கலன்னு நினைக்கிறேன் :-(//

  ஹி ஹி ஹி நான் வந்து..நான் வந்து ……சொல்ல மாட்டேன் 😉

  //அப்புறம் “முஜ்ஜே பீ//

  என்னங்க ஆதவன் எதோ அசிங்கமா திட்டுறீங்க 🙁

  ===================================================================

  //G.Ragavan said…
  இயந்திரங்களுக்கு நடுவில் நயன்தாரா மொபைலில் பேசுகையில் இயந்திரங்கள் நிற்கும் அதிர்ச்சிக் காட்சியை இந்தியிலும் சேர்த்திருக்கலாம். உண்மையிலேயே அதிர்ச்சியை உண்டாக்கும் காட்சி அது. ஆனால் அங்கிருந்து நயன் தப்பிப்பது நம்ப முடியாமல் இருக்கும்.//

  ஒருவேளை நயன் தப்பிப்பது போல காட்சியும் வைத்தாக வேண்டும் என்று நீக்கி விட்டார்களோ என்னவோ!

  //இந்தியில் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் சப்பை. ரகுமானுக்கு என்னாச்சு?//

  எனக்கும் அவ்வளவா திருப்தி இல்லை.

  //சூரியா-அசின் ஒட்டுறவும் வேதியலும் நன்றாக இருக்கும். இந்தப் படம் முழுக்கத் தேடினாலும் கிடைக்கவில்லை//

  அதற்க்கு அமீரின் மெச்சுரிட்டியான முகமும் ஒரு காரணமாக இருக்கலாம். சூர்யா சின்ன பையன் மாதிரி இருப்பாரு மற்றும் அமீரை விட உணர்வுகளை நல்ல பிரதிபலித்து இருந்தாரு.

  //அந்தப் பாடல்காட்சிதான் படத்திலே மிகவும் பிடித்த கட்டம். மிக அருமை//

  எனக்கு அந்த பாட்டு புரியவில்லை ஆனால் பிடித்து இருந்தது.

  //பெண்ணின் பெயரைச் சரியாகச் சொல்லும் புத்திசாலித்தனமும் பாராட்ட வைத்தது.//

  🙂 நல்ல காட்சி அது.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராகவன்.

 28. mhmmm.. nalla review… but oru objectionnn… surya did well… athukkaga amir khan kuda compare panra alavukku ennum varala bossss… appadi pannina malaikkum maduvukkum ulla diff. than… mhmmm hindi karanga-kitta amir acting is best-nu solranga endha film-la… andha hindi karanga tamil version-m pardhu erukkirangaaa… mhmmm… age sollunga…. surya younger… but facial expresssions.. romancee wisee my vote is amir khannn.. mhmmm… ok any wayyy.. happy pongal…. take care… take healthy foods alwaysss..

 29. //arunprasangi said…
  mhmmm.. nalla review… but oru objectionnn… surya did well… athukkaga amir khan kuda compare panra alavukku ennum varala bossss… //

  பாஸ் நீங்க தவறாக புரிந்து கொண்டீர்கள். அவருடன் ஒப்பிட்டு பேசியது இந்த படத்தில் மட்டும் தான் ஒட்டு மொத்தமாக இல்லை. நீங்கள் கூறியபடி அமீர் சிறந்த நடிகர் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. இதில் எனக்கு சூர்யா சிறப்பாக செய்து இருப்பதாக தோன்றுகிறது.

  // romancee wisee my vote is amir khannn..//

  என்னோட வோட் சூர்யாவிற்கு 🙂

  //happy pongal…. take care… //

  உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி arunprasangi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here