கனவிலும் எதிர் பார்க்காத தோல்வியை (2-0) ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது, வார்னே மெக்ராத் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவத்தைக் கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். Image Credit
பஞ்சரான ஆஸ்திரேலிய அணி
முதல் டெஸ்ட் போட்டியில் டிரா க்காக விளையாடியதாக நம்மைக் குற்றம் சாட்டி தங்கள் திறமையைப் பெரிதாக நினைத்தவர்களுக்கு அடுத்த மூன்று டெஸ்ட் ம் தர்ம அடி கொடுத்துள்ளது.
அதுவும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் அவர்கள் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இருக்க வேண்டியது ஆனால், என்ன செய்தும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரன் எடுக்க நம்மவர்கள் விடவில்லை.
அது மட்டுமில்லாமல் இரண்டாவது இன்னிங்க்ஸ்ல் டோனி ஹர்பஜன் எடுத்த 50 ரன்களும் எமனாகி விட்டது.
பொதுவாக இந்திய ஆட்ட களங்கள் சுழல் பந்து வீச்சிற்குச் சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும்.
அதனால், இதை ஒரு குறையாக எப்போதும் எதிர் அணியினர் கூறுவார்கள். இந்த முறை அவ்வாறு இல்லாமல் பேட்டிங் கிற்குச் சாதகமாகவே அமைக்கப்பட்டது.
அப்படி இருந்தும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியவில்லை. இதில் இருந்தே அவர்கள் திறமையை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
இங்கிலாந்து
இந்தியா பாகிஸ்தான் எப்படிக் கடும் எதிரிகளோ அதே போலத் தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள்.
தற்போது ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால் இந்தியாவை விட அவர்கள் தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இங்கிலாந்து பத்திரிகைகள் ஆஸ்திரேலியாவை கிண்டலடித்துச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை “எந்தச் சாம்ராஜியமாக இருந்தாலும் ஒரு நாள் வீழ்ந்து தான் ஆக வேண்டும்.
எந்த ஒரு அணியும் வெல்ல முடியாது என்று இல்லை, இந்திய 2-0 என்று வெற்றி பெற்று இருப்பதன் மூலம் ஆஸ்திரேலியா பஞ்சராக்கப்படுள்ளது, ஆஸ்திரேலியாவிற்குச் சரிவு தொடங்கி விட்டது” என்று கூறி உள்ளது.
கங்குலி
இந்த டெஸ்ட் தொடர் “தாதா” கங்குலிக்கு நிறைவாகவே முடிந்து இருக்கிறது (கடைசி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்க்ஸ் ல் டக் அவுட் ஆனது தவிர) கடைசியில் டோனி கங்குலிக்கு கேப்டன் பொறுப்பைக் கொடுத்து அழகு பார்த்தது மனதிற்கு நமக்குக் கொஞ்சம் நிறைவாக இருந்தது.
இந்நிலையில் எனக்கு நினைவுக்கு வந்தது ஸ்டீவ் வாக் தான், அவர் தன்னுடைய கடைசி டெஸ்ட்டில் நம்முடன் கஷ்டப்பட்டு விளையாடி டிரா செய்து தொடரை சமன் செய்ய வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த விசயத்தில் கங்குலி அதிர்ஷ்டகாரரே. இவர் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் நம்முடைய கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத நபரே!
இவருடைய சிக்ஸர்களும் நாட்வெஸ்ட் சீரீஸ் ல் வெற்றி பெற்ற போது சட்டையைச் சுழற்றியதையும் எவராலும் மறக்க முடியாது.
இவர் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்க்கு பல ரசிகர்கள் உண்டு என்பதை மறுப்பவர்களும் உண்டோ!
கும்ப்ளே
கும்ப்ளே ஏன் மூன்றாவது டெஸ்ட் உடன் விலகினார் என்று தெரியவில்லை. இவர் கேப்டன் பொறுப்பேற்ற இரண்டு டெஸ்ட்டும் டிரா ஆனது இவருக்குத் தர்மசங்கடத்தைக் கொடுத்து இருக்கும்.
வெற்றியுடன் விடை பெற்று இருந்தால் அவருக்கு நிறைவாக இருந்து இருக்கும், இருந்தாலும் தோல்வியைக் கொடுக்காத வரை பரவாயில்லை.
ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங் எங்கள் நாட்டில் முரளிதரனை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறி அதே போல அவரை வார்னே சாதனையை முறியடிக்க முடியாமல் செய்தார்கள்.
ஆனால், இந்திய டெஸ்ட் போட்டி தொடங்கிய போது சச்சினை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறிய போது தலைகனம் தான் தெரிந்தது.
காரணம், அப்போது 75 ரன்களே எடுக்க வேண்டியது இருந்தது அதற்கு, சச்சினை கேவலமாக நினைத்தார்களா அல்லது ஓவர் கான்பிடண்ட் ஆக இருந்தார்களா என்று தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் இவ்வாறு கூறியதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது என்பதைப் புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகின் தலை சிறந்த அணி !!! என்று கூற ஆரம்பித்து விட்டார்கள் ஒரு சிலர்.
ஆஸ்திரேலியா தற்போது தோல்வி அடைந்து இருந்தாலும் அதைச் சாதாரணமாக எடை போட கூடாது, மிகச் சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த வெற்றியின் மூலம் வெற்றி போதை தலைக்கேறாமல் (நம்மவர்கள் தான் தர்ம அடியும் கொடுப்பார்கள் அதே சமயம் தர்ம அடியும் வாங்குபவர்கள் ஆயிற்றே) வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்.
இந்த வெற்றி ஒரு கூட்டு வெற்றி தான், எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரின் வெற்றியும் அல்ல.
எத்தனை அணிகள் உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது இந்திய அணி தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
வெள்ளன்ன எழுந்து பதிவப் போட்டாச்சு… பதிவும் நல்லா இருக்கு…நாளும் நல்லா இருக்கும்!!!
//பழமைபேசி said…
வெள்ளன்ன எழுந்து பதிவப் போட்டாச்சு… பதிவும் நல்லா இருக்கு…நாளும் நல்லா இருக்கும்!!!//
:-))) நன்றி பழமைபேசி. எனக்கு தற்போது தான் அலுவலக வேலை முடிந்தது.
//ஆஸ்திரேலியா தற்போது தோல்வி அடைந்து இருந்தாலும் அதை சாதாரணமாக எடை போட கூடாது, மிக சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியின் மூலம் வெற்றி போதை தலைக்கேறாமல் (நம்மவர்கள் தான் தர்ம அடியும் கொடுப்பார்கள் அதே சமயம் தர்ம அடியும் வாங்குபவர்கள் ஆயிற்றே) வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த வெற்றி ஒரு கூட்டு வெற்றி தான், எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரின் வெற்றியும் அல்ல.//
வழக்கம் போலவே இந்த அலசலின் முடிவாக உங்கள் கருத்தை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
சக்கரம் சுழல்கிறது
உங்க பதிவ படிச்சு தான் இந்திய கேலிச்சுட்டாங்கனு தெரியுது, அவ்வளவு கிரிக்கெட் ஆர்வம் எனக்கு
கங்குலி தலைமை பண்புகள் நிறைந்தவர்,
அவர் வழிநடத்திய போது நமது அணி சிறப்பாகவே செயல்பட்டதாக நான் கருதுகிறேன்.
ஆஸ்திரேலிய அணியை குறைவாக மதிப்பீடக்கூடாது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன், காரணம் நாம் ஜெயித்திருப்பது இந்தியாவில்,
உண்மையான வெற்றி அவர்கள் நாட்டில் அவர்களை ஜெயிப்பதில் இருக்கிறது.
//நசரேயன் said…
உங்க பதிவ படிச்சு தான் இந்திய கேலிச்சுட்டாங்கனு தெரியுது, அவ்வளவு கிரிக்கெட் ஆர்வம் எனக்கு//
எனக்கும் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது நசரேயன். ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றதால் மற்றும் சச்சின் கங்குலி கும்ப்ளே போன்றவர்களுக்கு இது முக்கிய போட்டி என்பதால் மட்டுமே ஆர்வமாக பார்த்தேன்.
===================================================================
//ராமலக்ஷ்மி said…
வழக்கம் போலவே இந்த அலசலின் முடிவாக உங்கள் கருத்தை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.//
நன்றி ராமலக்ஷ்மி
===================================================================
//SUREஷ் said…
சக்கரம் சுழல்கிறது//
மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாமல் இருக்கிறது. உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுரேஷ்.
===================================================================
//முரளிகண்ணன் said…
சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றாற் போல என மாற்றினால் சரியாக இருக்கும்//
மாற்றிவிட்டேன் நன்றி முரளிகண்ணன்
//விஜய் ஆனந்த் said…
:-)))…
நல்லா அலசியிருக்கீங்க!!!//
நன்றி விஜய் ஆனந்த். நீங்களும் இன்றைக்கு சிரிப்பானுடன் சேர்ந்து கொஞ்சம் மேட்டரும் கூறி விட்டீர்கள் 😉
//பாப்போம்…இந்தியா இங்கிலாந்து கூடவும், ஆஸ்திரேலியா நியூஸி கூடவும் என்ன பண்றாங்கன்னு//
நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து சரியாக விளையாடவில்லை. நம்முடன் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.
===================================================================
//நான் ஆதவன் said…
தோனிக்கு குரு ஆறாம் இடத்தில் இருப்பதாலும் ஆஸ்திரேலியாவிற்கு சனி பகவான் உச்ச நிலையில் இருப்பதாலும் இந்த ஆண்டு இந்தியாவிற்கு நல்ல ஆண்டாக அமையும்…..//
மற்றவர்களுக்கு சனி உச்சத்தில் இல்லாமல் இருந்தால் சரி :-))))
===================================================================
//வால்பையன் said…
கங்குலி தலைமை பண்புகள் நிறைந்தவர்,
அவர் வழிநடத்திய போது நமது அணி சிறப்பாகவே செயல்பட்டதாக நான் கருதுகிறேன்.//
வழிமொழிகிறேன். பல குற்றசாட்டுகள் இருந்தாலும் சிறப்பான தலைமை பொறுப்பை வகித்தார்.
//நாம் ஜெயித்திருப்பது இந்தியாவில்,
உண்மையான வெற்றி அவர்கள் நாட்டில் அவர்களை ஜெயிப்பதில் இருக்கிறது//
நம்மவர்கள் அவர்கள் நாட்டிலையும் அவர்களுக்கு தண்ணீர் காட்டி இருக்கிறார்கள். நம்மவர்கள் கிட்ட இருக்கிற பிரச்சனையே பக்கவா வெற்றி பெற்றாலும் உடனே கேவலமாக தோற்பார்கள்.
\\பொதுவாக இந்திய ஆட்ட களங்கள் பந்து வீச்சிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் \\
சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றாற் போல என மாற்றினால் சரியாக இருக்கும்
:-)))…
நல்லா அலசியிருக்கீங்க!!!
பாப்போம்…இந்தியா இங்கிலாந்து கூடவும், ஆஸ்திரேலியா நியூஸி கூடவும் என்ன பண்றாங்கன்னு…
தோனிக்கு குரு ஆறாம் இடத்தில் இருப்பதாலும் ஆஸ்திரேலியாவிற்கு சனி பகவான் உச்ச நிலையில் இருப்பதாலும் இந்த ஆண்டு இந்தியாவிற்கு நல்ல ஆண்டாக அமையும்…..