ஊழல்

23
ஊழல்

2G அலைக்கற்றை ஊழல் பிரச்சனைகுறித்து ஏற்கனவே போதுமான அளவிற்கு அனைவரும் பேசி விட்டார்கள் நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. Image Credit

ராசா கைது ஆன பிறகு சுற்றுலா போகிற மாதிரி எல்லோருக்கும் ஜாலியா டாடா காட்டிட்டு போறாரு.

தான் குற்றமில்லாதவன் என்பதை நிரூபிக்கபோறதா சொல்றாரு! அதை DMK தொலைக்காட்சி செய்திகள்ல சொல்றாங்க.

CBI ரெய்டு கலைஞர் டிவி யில் நடந்ததைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாம DMK+PMK கூட்டணி பற்றித் தலைப்புச் செய்தி வருகிறது.

ஜெ அடக்குமுறை ஆடம்பரங்கள்

ஆட்சியில் இருந்த போது ஜெ செய்த அடக்குமுறை,  ஆடம்பரங்கள், கொள்ளைகளால், நொந்து போன மக்கள் தாமரைக்கனி ஒருவரைத்தவிர ஜெ உட்பட அனைத்து வேட்பாளர்களையும் தோல்வியடைய செய்தார்கள்.

ஜெ க்கு கொள்ளை அடிக்க மட்டும் தான் தெரிந்ததே தவிர அதை எப்படி கமுக்கமாகச் சுருட்டுவது, வெளியே தெரியாமல் அமுக்குவது போன்ற வழிமுறைகள் கலைஞரைப் போல அவருக்குத் தெரியவில்லை.

ஐந்து வருடமாகக் கொடை நாடு மற்றும் பல இடங்களில் ஓய்வெடுத்து விட்டுத் தேர்தல் நேரத்தில் மக்கள் நினைவு வந்து தற்போது போராட்டம் நடத்துகிறார்.

ஈழ தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்! மீனவர்களுக்காக வருந்துகிறார்!!

தினம் ஒரு போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அதில் கூட இவரில்லை வழக்கம்போல இவரது கட்சியினர் தான்.

கலைஞரின் குடும்ப ஆக்ரமிப்பு

முன்பு கலைஞர் ஆட்சியில் பல தொழிற்சாலைகள் வந்தன. இதனால் பணச்சுருட்டல் நடந்தாலும் இந்த வகையில் தமிழ்நாட்டில் முன்னேற்றம் அடைகிறது என்ற ஒரு அல்ப சந்தோசம் இருந்தது.

ஆனால், நாளுக்கு நாள் இவர்களின் குடும்ப ஆக்கிரமிப்பும் கொள்ளையும் கட்டுப்பாடே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத முக்கியத் துறையே இல்லை எனலாம் சிமென்ட், ஊடகம், திரைப்படம், ரியல் எஸ்டேட் என்று பல இவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,  குறிப்பாக ஊடகம் மற்றும் திரைத்துறை.

ஜெ இருந்த போது அவருடன் சசிகலா சேர்ந்து அனைத்தையும் சுருட்டினார்கள் தற்போது இவர்கள் குடும்பமே செய்து கொண்டுள்ளது.

ஜெ செய்த தவறுகளை நாறடிக்க அப்போது நமக்கு ஒரு சன் டிவி இருந்தது ஆனால், தற்போது DMK செய்யும் ஊழல்களை யார் கூறுவது?

ஜெயா டிவியை எத்தனை பேர் பார்க்கிறார்கள்.

அப்படியே பார்த்தாலும் சன் டிவி போல கவர்ச்சியாக மக்கள் மனதில் ஆழப் பதியுமாறு கூறத்தெரியாது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கலைஞரின் இலவச டிவி புண்ணியத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவென்று தெரியவில்லை என்றாலும் எதோ லட்சம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்களாம்! என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு செய்தி போனது ஒரு ஆறுதல்.

நம் மக்களுக்கு அன்றாட பிரச்சனைகளைப் பார்க்கவே நேரம் போதவில்லை இதில் இவர்கள் ஊழல்களைக் கவனிக்க எங்கே நேரம்.

தற்போது யார் அதிகப்பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சரியாக ஓட்டு வேற போட்டு விடுகிறார்கள்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. அப்பர் மிடில் கிளாஸ் குடும்பமான எங்களுக்கே கண்ணைக் கட்டி விட்டது.

கீழ் தட்டு மக்கள் என்ன செய்தார்கள் என்று கடந்த முறை ஊருக்குச் சென்று இருந்த போது கேட்டேன்.

ஒருவர் “மக்கள் எல்லாம் கடுப்புல இருக்காங்க இந்த முறை நம்ம ஊருல DMK எல்லாம் வர வாய்ப்பே இல்லை” என்று அடித்துக்கூறினார்.

இன்னொருவர் “அதெல்லாம் ஒன்றுமில்லைங்க என்ன விலை ஏறினாலும் மக்கள் வாங்கிட்டு தான் இருக்காங்க. இப்பவும் காய்கறிக்கு டிமாண்டாகத்தான் இருக்கிறது. விலை ஏறுவதால் மக்கள் வாங்குவது எதையும் நிறுத்தவில்லை.

மக்களிடம் பணப்புழக்காட்டம் நிறைய இருக்கிறது அதனால் DMK தான் வரும்” என்கிறார்.

ஜெ அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டதால் அவர்கள் கண்டிப்பாக DMK க்கு தான் ஓட்டுப் போடுவார்கள் அது அவர்களிடம் பேசியதிலேயே தெரிகிறது.

அதனால் எதையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை ஆனால் இணையத்தில் உள்ளவர்கள் மட்டும் DMK காலி என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

தேர்தல் முடிவு

இதற்குத் தேர்தல் முடிவு மட்டுமே சரியான பதிலைக்கூற முடியும். மற்றபடி அனைவரும் அவர்களது ஊகத்தை வேண்டும் என்றால் கூறலாம்.

சென்னை மாநகரத் தேர்தலில் ஜெ நடத்திய அராஜகத்தை சென்னை நகர மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக் கூடச் செய்ய முடியுமா! என்று பயமுறுத்தியவர்கள் அதோடு சுடுகாட்டு கொட்டகை வரை சுரண்டி எடுத்தவர்கள் ஆனால், இந்த ஊழல் எல்லாம் சாதாரணம் என்று கலைஞர் குடும்பம் நொறுக்கித் தள்ளிக்கொண்டு இருக்கிறது.

ஜெ செய்த கொடுமையைவிட அதிகமாகத் திமுக ஊழலைத் தற்போது நினைக்கிறேன். இருவரும் போட்டிப்போட்டு ஊழல் செய்கிறார்கள்.

திமுக ஊடகங்கள்

ஜெ செய்ததை மக்களுக்குத் தெரிவிக்க ஊடகங்கள் அதிகம் இருந்தன.

ஆனால், DMK தொலைக்காட்சிகள் அவர்களது அனைத்து தவறுகளையும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். இதனால் பல ஊழல்கள் மக்களுக்குத் தெரிவதே இல்லை.

பார்ப்பன பத்திரிகை என்று பதிவர்கள் திட்டிக்கொண்டு இருக்கும் தினமலரில் மட்டுமே கொஞ்சமாவது இவர்கள் பற்றிய ஊழல்கள் வருகிறது பிறகு ஜீவி.

இவர்கள் இல்லை என்றால் எந்தச் செய்தியுமே மக்களுக்குத் தெரியாமல் போய் விடும் அப்படியே தெரிந்தாலும் அதன் முக்கியத்துவம் புரியாமல் போய் விடும்.

காமன்வெல்த், BSNL, ஆதர்ஷ் குடியிருப்பு, தமிழக அரசு வீடு ஒதுக்கியதில் ஊழல், இஸ்ரோ ஊழல்கள் என்று புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.

45 ரூபாய் விசிலை 450 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்களாம்.

தற்போதெல்லாம் 10 கோடி ஊழல் 100 கோடி ஊழல் என்றால் ஓ! அவ்வளவு தானா பரவாயில்லப்பா! என்கிற ரேஞ்சுக்கு நம்மைக் கொண்டுவந்து விட்டார்கள்.

நாமும் 1000 லஞ்சம் வாங்குறவனை உள்ளே போடுறாணுக இவ்வளோ கோடியைக் கொள்ளை அடிக்கிறவங்கள விட்டுடுறாங்க என்று 1000 லஞ்சம் வாங்கிய நபரை நேர்மையான நபராக மக்கள் மாற்றி விட்டார்கள்.

இவ்வளோ பணத்தைக் கொள்ளை அடிக்கறாங்களே! அப்படி என்ன தான் பண்ணுவாங்க. ஒரு நாளைக்கு ஒரு கோடி என்று இவர்கள் ஆயுசு முழுக்க செலவழித்தாலும் இவர்களால் இத்தனை பணத்தை செலவழிக்க முடியாது.

இதுவும் கடந்து போகும் என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் நினைக்கத்தோன்றவில்லை.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

23 COMMENTS

 1. அட போங்க நீங்க…..அவனவன் ரொம்ப வயிர்த்தெரிச்சல் ல இருக்கான் ..சாதாரணமான ஒரு ஆளுக்கு கூட தெரியுது ஸ்பெக்ட்ரம் ஊழல் ,

 2. 2g is not a scam , might be some procedural lapses thats all . Will you belive whatever தினமலர் or விகடன் says . They are biased against DMK from day one . See the good things done during DMK rule .

 3. தற்போதைய நிலைமையின் ஊழலைப்பற்றி தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க அண்ணே

  🙂

 4. //இவ்வளோ பணத்தைக் கொள்ளை அடிக்கறாங்களே! அப்படி என்ன தான் பண்ணுவாங்க. ஒரு நாளைக்கு ஒரு கோடி என்று இவர்கள் ஆயுசு முழுக்க செலவழித்தாலும் இவர்களால் இத்தனை பணத்தை செலவழிக்க முடியாது. இதுவும் கடந்து போகும் என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் நினைக்கத்தோன்றவில்லை.//

  உண்மைதான் அண்ணே, கொள்ளையடிக்க வெறும் ஆசையா இருந்தால் பரவாயில்லை மெகா பேராசையால்ல இருக்கு வேற என்னத்த சொல்றது…

 5. இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்று கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லத்தெரியாது.

  மக்கள் புரட்சியால்தானே ஒரு காலத்தில் சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது?

 6. ஒரே தீர்வு கிரி,

  கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் கோஷ்டிகள், விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கோஷ்டிகள், வைகோ, சீமான், முக்கியமா கலாநிதி மாறன்.
  இதுகளை ஒரு கப்பலில் ஏற்றி நடுக்கடலுக்கு போயி கல்லைக்கட்டி தூக்கிப் போட்டுவிடவேண்டும். அல்லது பெரிய மைதானத்தில் கண்ணைக் கட்டி விட்டு ஓட ஓட விரட்டி சுட்டுக் கொல்ல வேண்டும்.

  அப்புறம் 96 தேர்தலில் எங்கள் தொகுதி “மாவீரன்” இரா.தாமரைக்கனியுடன் அ.தி.மு.க வில், திருநாவுக்கரசு (அறந்தாங்கி), கருப்பசாமி (சங்கரன் கோவில்), மற்றும் ஒருவர் என 4 பேர் வெற்றி பெற்றார்கள்.

 7. Dear Giri,
  I agree with you about corruption. In India that is unfortunate.
  But DMK has done lots of good people welfare schemes- the health care scheme, 1rs rice scheme, ambulance scheme, housing scheme to name a few.
  Not only Chennai is being developed, second ring towns like coimbatore, Trichi, Nellai, Madurai all being developed. Lots of oppurtunities for youngsters to get into work.
  Standard of living has improved.
  Even one of the north indian channel CNN-IBN has awarded Tamilnadu as number one state for years2008 to 2010 in women welfare, educatiion, health policy and a few others.
  So kindly when putting down something on your blog you should be neutral
  You might not approve this, but be a true Rajini fan and speak truth.
  Take care.
  cheers
  dana.

 8. I agree with Mr.Danasekar.
  DMK has implemented lots of good policies and people welfare schemes.
  This is probably the best 5 years DMK rule(keeping corruption aside) compared with their previous tenure in power.
  warm regards
  dev.

 9. சித்ரா, கோவை நேரம், பிரகாஷ், இளவரசன், மாணவன், பாலா, காத்தவராயன், தனா மற்றும் தேவராஜ் வருகைக்கு நன்றி

  @பிரகாஷ் 2G பற்றி நானும் அறிவேன்.. கொஞ்சம் சுருக்கமாக சொல்வது என்றால் கடந்த வருடம் அண்ணா சாலையில் 5 கோடிக்கு வாங்கப்பட்ட இடத்தை அடுத்த வருடமும் அதே 5 கோடிக்கு விற்றால் எப்படி அது போலத்தான். இதில் வரும் நஷ்டத்தைத்தான் கொள்ளை என்று அனைவரும் கூறுகிறார்கள்.. ரொம்ப போட்டு குழப்பாம கூறுவது என்றால். இன்னும் விளக்கலாம்..தேவையில்லை நீங்கள் அறிவீர்கள்.

  தினமலர் மற்றும் விகடன் கூறுவதை அப்படியே நம்புவும் அளவிற்கு முட்டாள் அல்ல. நான் கூற வந்தது DMK மற்றும் Central Govt செய்த ஊழலைப்பற்றி மற்றவர்கள் எதுவுமே கூறாத போது இவர்களாவது கூறினார்களே என்பது தான். அதாவது இவர்கள் கூறியதில் 100% உண்மை இல்லை கொஞ்சமாவது உண்மை இருக்குமே என்பது தான். ஏன் என்றால் வட இந்தியாவில் ஊடங்கங்கள் ஊழலை விமர்சிப்பதுபோல தமிழகத்தில் யாரும் விமர்சிப்பது இல்லை காரணம் அனைத்து ஊடகமும் இவர்கள் கட்டுப்பாட்டில் தான்.

  @பாலா எனக்கு ஐடியா இல்ல

  @காத்தவராயன் ரொம்ப டெர்ரரான தீர்வா இருக்கு 🙂 அப்புறம் தகவலுக்கு நன்றி

  @தனா

  திமுக நிறைய நிறைய செய்து இருப்பதை நிச்சயம் என்னாலும் மறுக்க முடியாது அப்படி மறுத்தால் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். நீங்கள் கூறியுள்ள அனைத்துமே ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் 108 சேவை எங்கள் குடும்பத்திலேயே பயன்பட்டது. பலரிடம் பணப்புழக்காட்டம் அதிகரித்து இருப்பதும் உண்மை. நான் இவர்களது ஆட்சியை விமர்சிக்கவில்லை அப்படி விமர்சித்து இருந்தால் அதில் கண்டிப்பாக நீங்கள் கூறியதை எல்லாம் குறிப்பிட்டு இருப்பேன் ஆனால் நான் விமர்சித்தது இவர்கள் ஊழல் மட்டும் ஆக்கிரமிப்பை.

  மனதை தொட்டு சொல்லுங்கள் இவர்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை என்று. இன்று தமிழகத்தில் ஊடகம் திரைத்துறை சுதந்திரமாக செயல்படுகிறது என்று நம்புகிறீர்களா? மக்களுக்கு இவர்கள் செய்த சாதனை மட்டுமே செல்கிறது இவர்கள் செய்த ஊழல்கள் அடக்குமுறைகள் சரியாக செல்வதில்லை. இவர்கள் கூறுவது தான் செய்தி என்றாகி விட்டது.

  எனக்கும் திமுக மீது மதிப்பு இருந்தது ஆனால் இவர்களை மீறி எதுவும் யாரும் செய்ய முடியாது என்று வரும் போது எப்படி நன்மதிப்பு இருக்க முடியும்?

  இலவசம் இலவசம் என்று கொடுத்தே மக்களை கெடுத்து விட்டார்கள் இதில் உண்மையாக பயனடைபவர்களை விட மற்றவர்கள் பயனடைவதே அதிகமாக இருக்கிறது. நமது மாநிலத்தின் கடன் ஏறிக்கொண்டே செல்கிறது ஒரு கட்டுப்பாடே இல்லாமல்.

  நீங்கள் கூறியுள்ளபடி ஊழல் நமது நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது (இதை நம்மை கூறவைக்கும் அளவிற்கு நம் நாடு கேவலமாக போய் விட்டதை எண்ணி ரொம்ப வருத்தமாக உள்ளது) ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா! ஒவ்வொரு செய்தியும் கேட்கும் போது வரும் வெறுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. வேறு எந்தக்கட்சி வந்தாலும் இதே தான் செய்யும் என்பதும் தெரிந்த ஒன்றே.

  நான் உங்கள் கருத்தை வெளியிடமாட்டேன் என்று நீங்கள் நினைக்கவே வேண்டாம்..என்னுடைய தளத்தில் கமென்ட் மாடரேசன் கிடையாது. நான் ஒருதலைப்பட்சமாக எழுதுவதாக இருந்தால் தான் அதைப்போல யோசிக்க வேண்டும். அசிங்கமான வார்த்தைகள் மட்டுமே எடிட் செய்யப்படும் மற்றபடி இதுவரை எந்த கருத்தையும் நான் தடுத்ததில்லை.

  முடிவாக எனக்கு திமுக மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட வெறுப்புமில்லை. எந்தக்கட்சியின் மீதும் பாசமும் இல்லை. உங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி.

  @தேவ் உங்களுக்கும் மேற்க்கூறியதே.

 10. நியூஸ் பேப்பரில் முதல் பக்கத்தை நான் படிக்கவே மாட்டேன் அதற்கு காரணம் எனக்கு இந்த அரசியலை பத்தி ஒன்னுமே தெரியாது.அப்படி இருக்கும் எனக்கே கடந்த 8 – 10 மாதங்களாக இந்த அரசியல் கட்சிகள் செய்யும் உழலை நினைத்து வயறு எரிகறது. மக்களின் வரி பணமெலாம் இப்படி சுரண்ட படுகிறதே. இதற்கு எல்லாம் முடிவு ஒன்று இல்லாத நிலை உருவாகி விட்டதால் இதை எல்லாம் தட்டி கேட்க படத்தில் வருவது போல ஒரு ஹீரோ வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தான் நினைக்க முடிகிறது.

 11. கிரி அண்ணா….உன்ன்களுடைய…அண்ணா சாலை எடுத்துகாட்டு ரொம்ப அருமை…நீங்க எப்போ ரியல் எஸ்டேட் பிசினஸ் அரமிசிங்க….5 கோடிக்கு வாங்கப்பட்ட இடத்தின் சைஸ் என்ன…ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்கள்….அன்பு தம்பி…சிவா

 12. டாக்குடரு கேப்டன் விஜயகாந்த் அவர்களை முதல்வராக்கி விடுங்கள்…

  தமிழ்நாடாவது பிழைத்து போகட்டும்…

  “விருதகிரி-2” ரெடியாயிட்டு இருக்காம், ரிலீஸுக்கு…. இனி தமிழ்நாடு பிழைக்குமா என்று தெரியவில்லை…

 13. இதுக்கு நாம என்ன செய்யலாம் னு யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம் .. அனா எழுதுதி வட்சிகாங்க கிரி … அடுத்து திமுக தான் .. அடுத்த cm ஸ்டாலின் தான்

 14. @Breeze என்ன பண்ணுறது!

  @சிவா டேய்! உன் இம்சை தாங்க முடியல

  @கோபி 🙂

  @ஆனந்த் பார்ப்போம் என்ன ஆகிறது என்று! 🙂

 15. மக்களோட மனநிலைய பார்க்கிறப்ப, இனிமேல் இதை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது. இதற்கெல்லாம் விடிவுகாலம் ஒரு மக்கள் புரட்சி வந்தால்தான் உண்டு, அதுக்கு இன்னும் நூறு தடவ இப்பிடிப்பட்ட ஊழல் நடந்தாதான் உண்டு. நாம இன்னும் இந்த மாதிரி எத்தனை ஊழல பாத்து சகிச்சுக்க பழகனுமோ, ஆண்டவா?

 16. அய்யா கிரி அவர்களே, கீழே உள்ள கருத்தை வேண்டி ஒரு பதிவு போடும்படி சிறிது காலத்திற்கு முன்பு வேண்டி இருந்தேன் அனால் இது வரை அப்படி நீங்கள் பதிவு செய்யவில்லை !!!! நீங்கள் மறந்து இருந்தால் கீழே உள்ளதை படிங்கள்.

  நண்பர்களே, இது தேர்தல் நேரம் யாரேனும் தபால் வாயிலாக ஒட்டு போடுவது எப்படி, எந்த முறையாக அணுக வேண்டும் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா ? எழுதுவது மட்டும் அல்லாமல் மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்ற இனைய தளங்களில்லும் பகிர்ந்து ஒரு புரட்சிய ஏற்படுத்துவோம். இது கள்ள ஓட்டுகளை நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்.

  நம்மால் அனா ஒரு புரட்சியை ஆரம்பிப்போம், வெறுமனே நாட்டில் நடக்கும் வன்முறை, ஊழல் பற்றி பேசி, படித்து குமிறியது போதும். ஏதாவது செய்க ப்ளீஸ். இது என்னால் முடிந்த சிறய கல், அனைவரும் முன்வாருங்கள், முன்னேற்றி முன்னேறலாம்.

  ஜெய் ஹிந்த்.

 17. @முத்துக்குமார் இன்னும் நூறு தடவ நடந்தா இந்தியா சோமாலியா மாதிரி ஆகிடும் 🙂

  @சதீஷ் ரைட்டு

  @நண்பன் ஏதாவது செய்க ஏதாவது செய்க என்று சொல்லிட்டு இருந்த நேரம் நீங்க ஏதாவது முயற்சி எடுத்து இருந்தால் கூட இவ்வளோ காலம் ஆகி இருக்காது. ஒரு வலை தளமே ஆரம்பித்து நீங்களே இதை அனைவரிடமும் கொண்டு சேர்த்து இருக்கலாம்.

  நேரடியாவே எவனும் ஓட்டுப்போட மாட்டேங்குறான் இதுல நீங்க தபால் வழி ஓட்டு பற்றி பேசி புரட்சி பண்ணலாம் என்று சொல்லுறீங்க. இது எப்படி இருக்கும் தெரியுமா ஈழ பிரச்சனை நடந்த போது கலைஞர் தந்தி அனுப்புன மாதிரி இருக்குது.

  மற்றவர்கள் செய்யட்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் நீங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்தால் அதற்க்கான முயற்சிகளில் நீங்களே ஈடுபடுங்கள்.

  எனக்கு தபால் வழி ஓட்டு பற்றி எழுதவெல்லாம் விருப்பமில்லை.

 18. அய்யா கிரி அவர்களே, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி…

  // @நண்பன் ஏதாவது செய்க ஏதாவது செய்க என்று சொல்லிட்டு இருந்த நேரம் நீங்க ஏதாவது முயற்சி எடுத்து இருந்தால் கூட இவ்வளோ காலம் ஆகி இருக்காது. ஒரு வலை தளமே ஆரம்பித்து நீங்களே இதை அனைவரிடமும் கொண்டு சேர்த்து இருக்கலாம். //

  நான் செய்து கொண்டு தான் இருந்தேன்/இருகிறேன் ஆகையால் எனை பற்றிய உங்கள் கறுத்து தவறானதே, நான் எறிந்த கல் தவறான இடத்தில விழுந்ததை நினைத்து வருத்தம் அடைகிறேன்.

  // நேரடியாவே எவனும் ஓட்டுப்போட மாட்டேங்குறான் இதுல நீங்க தபால் வழி ஓட்டு பற்றி பேசி புரட்சி பண்ணலாம் என்று சொல்லுறீங்க. //

  அய்யா கிரி அவர்களே நீங்க வலை தலத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் பலனை பெற்றுவிடீரா ??? புரட்சி என்பது ஒரு நாளில் வெடித்தாலும் அதற்கு சில காலம் ஆகும் என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது.

  //எனக்கு தபால் வழி ஓட்டு பற்றி எழுதவெல்லாம் விருப்பமில்லை.//

  உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி… இருந்தாலும் உங்கள் பதில் எனக்கு பொறுப்பாநாதக தெரியவில்லை, ஊழல் ஊழல் என்று சொன்னால் மட்டும் போதாது, ஏதேனும் செய்யணும், உங்களால் முடியவில்லை, பரவாயில்லை, எனது கருத்தை உங்கள் பதிவில் பதிவு செய்ய அனுமதித்ததற்கு மிக்க நன்றி.

 19. பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்
  நல்லையா தயாபரன்

 20. இந்த இடுக்கை கருத்துக்கள் எற்றுகொள்பவை… வாழ்த்துக்கள் அன்பரே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here