Tablet PC என்றால் என்ன?

18
Tablet PC

Tablet PC பிரபலமாகி வருகிறது, அவை குறித்து விளக்கமாகக் காண்போம்.

Tablet PC எப்படி வந்தது?

ஆப்பிள் நிறுவனர் Steve Jobs 2010 ல் முதன் முதலில் அறிமுகப்படுத்திய சாதனம் இதுவாகும். Image Credit

Netbook என்ற சிறிய கணினி சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த போது அதை இன்னும் சுருக்கி வித்யாசமாக TabletPC என்று அறிமுகப்படுத்தினார்.

இதை அறிமுகப்படுத்திய போது, நம்புறீங்களோ இல்லையோ இதற்கு வரவேற்பு சுத்தமாக இல்லை.

பலரும் இதைத் தோல்வி அடைந்த தயாரிப்பு என்று கூற துவங்கினார்கள்.

ஆனால் அதன் பிறகு இதனுடைய எளிமை மற்றும் பயன்பாடு ஆகியவற்றால் Steve Jobs அவர்களே கிறுகிறுக்கும் அளவிற்கு வெற்றி பெற்று விட்டது.

சும்மா சாதாரண வெற்றி எல்லாம் இல்லை மாபெரும் வெற்றி.

Netbook யே ஆட்டம் காண வைத்து விட்டது என்றால் பாருங்கள். Netbook வாங்கியவர்கள் எல்லாம் அடடா! வடை போச்சே! மாதிரி ஆகி விட்டார்கள்.. ஹி ஹி அதுல நானும் ஒருவன்.

Tablet PC யின் பயன்பாடு என்ன?

இது பெரும்பாலும் இணையம், அலுவலக மின்னஞ்சல்கள் (Outlook), விளையாட்டுகள் போன்றவற்றிக்காகவே உருவாக்கப்பட்டது.

நாம் விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவும் (Install) மென்பொருளைப் போல இதில் நாம் நிறுவ முடியாது.

இதற்கென்று உள்ள மென்பொருளை மட்டுமே நிறுவ முடியும். அலுவலக மின்னஞ்சல் மற்றும் இணையம் மட்டுமே பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள எளிமையான ஒன்றாகும்.

Tablet PC என்றால் Apple மட்டும் தானா?

இல்லை. தற்போது இதில் பிரபலமாக இருப்பது Apple உடன் Samsung, Motorola மற்றும் பல நிறுவனங்களாகும் ஆனால் இன்று வரை டாப்பில் இருப்பது Apple தான்.

Tablet PC எனென்ன இயங்குதளத்தில் (Operating System) இயங்குகிறது?

ஆப்பிள் iOS என்ற இயங்குதளத்திலும் Samsung, Motorola போன்றவை கூகுள் உடைய இயங்கு தளமான Android ல் இயங்குகிறது.

Android இவை மட்டுமல்லாமல் பல Tablet PC க்களுக்கு இயங்குதளமாக பயன்படுத்தப்படுகிறது.

Apple Tablet PC பற்றி சிறிய அறிமுகம்

இதன் அளவு 9.7″, pixel 1024 x 768 ஆகும். இது iOS என்ற இயங்குதளத்தில் (Operating System) ல் செயல்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தாரின் பலமே புதுமை, எளிமை மற்றும் கவர்ச்சி தான்.

இதனால் தான் போட்டிகள் பல இருந்தாலும் இதற்கு என்ற அசைக்க முடியாத ரசிகர் கூட்டம் உள்ளது.

இதனுடைய அடுத்த வெளியீடு iPad 2 விரைவில் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் இது பற்றிய பரபரப்பு இப்பவே பலரை தொற்றிக்கொண்டது.

முதல் மாடலில் இல்லாத front facing camera (for Video chat) உட்பட பல வசதிகளைத் தரப்போகிறது.

Samsung Tablet PC

ஆப்பிள் iPad க்கு ஓரளவு போட்டியாக வளர்ந்து கொண்டு இருக்கும் ஒரு நிறுவனம் Samsung ஆகும்.

இதனுடைய முதல் வெளியீடு Galaxy Tab யின் அளவு 7″ மட்டுமே ஆகும்.

இது FAT32 ல் இயங்குவதால் 4 GB க்கு மேல் உங்களால் ஒரு ஃபைலை காபி செய்ய முடியாது இதனால் HD படங்களைக் காபி செய்வதில் சிக்கல் உண்டு.

ஆப்பிள் அளவிற்கு இல்லை என்றாலும் இதற்கும் ஓரளவு ஆதரவு உள்ளது.

இதனுடைய அடுத்த வெளியீடான Samsung Galaxy 10.1 (அளவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை) விரைவில் வரப்போவதாக Samsung தெரிவித்துள்ளது.

Andriod தொலைபேசிகளுக்கு தயாரித்த இயங்கு தளத்தையே TabletPC க்கும் பயன்படுத்தி வந்தது.

Andriod ன் அடுத்த வெளியீடான “Honeycomb” Tablet PC க்கு என்றே தயாரிக்கப்பட்ட இயங்கு தளமாகும்.

இது Samsung ன் அடுத்த வெளியீட்டில் இது பயன்படுத்தப்படப்போகிறது ஆனால் அதற்கு முன்பே Motorola இதை வெளியிட்டு விட்டது.

ஆப்பிள் தமிழ் ஃபான்ட் வசதியைச் செய்துள்ளது ஆனால் Andriod ல் அது இல்லை ஆனால் ஒபரா உலவியின் (browser) மூலம் தமிழ் படிக்க முடியும்.

இணையத்தில் பலரும் தமிழ் வசதியை Andriod இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது பற்றிக் கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், கூகுள் இன்று வரை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனாலே சிலர் Andriod வர யோசிக்கிறார்கள். கூகுள் ஏன் இந்த வசதியைத் தர இவ்வளவு தாமதப் படுத்துகிறது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.

Tablet PC க்கான Application ஐ எங்கே பெறுவது?

iOS இயங்கு தளத்திற்கு http://store.apple.com/ மற்றும் Android இயங்கு தளத்திற்கு https://market.android.com/.

இதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன.

நமக்கு தேவையான அனைத்து மென்பொருளையும் இங்கே சென்று தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இன்னும் பல தகவல்களை உங்களுக்கு என்னால் விளக்கமாகக் கூற முடியும் ஆனால் ரொம்ப விளக்கினால் உங்களுக்கு குழப்பமாகி விடும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

தற்போது நீங்கள் TabletPC பற்றிய குறிப்பிடத்தக்க அறிவை பெற்று இருக்கிறீர்கள் என்று நம்பலாம்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் (Comment) கேளுங்கள் தெரிந்தால் கூறுகிறேன் இல்லை என்றால் தெரிந்து கொண்டு கூறுகிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Android TV என்றால் என்ன?

ஆப்பிள் ஐஃபோன் iPhone நிறை குறைகள்

Android OS பதிப்புகளின் பெயர் ஏன் மாறுகிறது?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

18 COMMENTS

  1. வணக்கம் அண்ணே, புதுமையான தொழிநுட்ப தகவல்கள் எளிமையான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு

    தொழிநுட்ப பதிவுகளை பாமரனும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கி பதிவிடுவதில் எனக்கு பிடித்த மதிப்பிற்குரிய பிகேபி ஐயா அவர்களுக்கு அடுத்து நீங்கள் பதிவிடுவது ரொம்ப புடிக்கும் அந்தளவுக்கு முடிந்தவரை தெளிவாகவே எழுதுகிறீர்கள்…..உங்கள் பதிவின்மூலம் தான் நிறைய இணைய சம்பந்தமான தொழிநுட்ப தகவல்களை கற்று வருகிறேன்..ஒரு மாணவனாக…

    உங்களின் இந்த பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றிகளும் பல… 🙂

  2. எல்லாம் ஓகே..ன்ணா….
    எனக்கு கூட புரிஞ்சிபோச்சி..ஹி ஹி…
    சரி விலையை பத்தி ஒன்னுமே சொல்லலீயே…

  3. நல்ல உபயோகமான தகவல் நண்பா.Tablet pc External Hard disk ஐ Detect பண்ணுமா?

  4. கிரி சார் ….
    2010 க்கு முன்னாடியே அவதார் படத்துல ஒரு சீன்ல ஸ்டீபன் பீல்பெர்க்
    இந்த pc ஐ யூஸ் பண்ணிருப்பார் கவனிச்சிங்கள.

    அப்புறம் இதுல டேட்டா கார்டு யூஸ் பண்ண முடியாதாம்.. வை பை மட்டும் தான் யூஸ் பண்ண முடியும் ..அப்படியா ?

  5. கிரி அண்ணா
    இந்த tablet PCi சாப்புட்ட அப்புறம் பாக்கனுமா இல்லாட்டி சாப்புடுறதுக்கு முன்னாடி பாக்கனுமா?

  6. @மாணவன் சித்ரா பொன்மலர் SNKM பாமரன் Meshak ஆனந்த் மற்றும் சிவா வருகைக்கு நன்றி

    @மாணவன் தொடர்ச்சியான வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி. அப்புறம் உங்கள் பின்னூட்டம் (என் தளம் அல்லாது) அதிக இடங்களில் பார்க்கிறேன்..குறைத்துக்குங்க. உங்களுக்கு பெரும்பான்மையான நேரம் இதிலே செலவாகிக் கொண்டு இருக்கும்.

    @சித்ரா அப்ப நீங்க வைத்து இருக்கீங்கன்னு சொல்லுங்க 🙂

    @பாமரன் விலை நம்முடைய தேவையைப் பொறுத்தது. நீங்கள் 400 USD ல இருந்து 800 USD வரை நமது configuration க்கு தகுந்த மாதிரி விலை மாறுபடும். குத்துமதிப்பாக கூற வேண்டும் என்றால் நமது மதிப்பில் 22000 ருபாய் ஆகலாம் ஒரு நல்ல Tablet PC அதே நீங்கள் 8000 க்கும் வாங்க முடியும்.

    @Meshak External HDD பதிலாக நாம் SD Card பயன்படுத்தலாம்.

    @ஆனந்த் அவதார் ல வேற ஏதாவதாக இருக்கும். SD Card ஆப்பிள் ல பயன்படுத்த முடியாது அதை iPad 2 ல சரி செய்துட்டாங்க..இந்த மாதம் வெளிவரப்போகிறது. மற்ற brand Tablet PC ல நீங்க SD Card பயன்படுத்தலாம்.

    @சிவா டேய்! இதுக்கு பேரு ஜோக்கா. மொக்கை போடாதடா!

  7. கிரி,
    ரொம்ப நல்ல இருக்கு. பகிர்வுக்கு நன்றி

  8. சிங்காப்பூர்ல் பிஜிட்சு தயாரிப்பான மைக்ரோசாப்ட் சார்ந்த Tablet PC பள்ளிகளில் உபயோகபடுகிறது. குறிப்பாக Cresent Grils ஸ்கூல் மாணவர்களுக்கு Tablet pc பயன்பாடு கட்டாயம்.

  9. பொதுவாக பலருக்கு இதைப்போல விஷயங்கள் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது

    ————————————————————————————————-

    இத எழுதும்போது நான் தானே ஞாபகத்துக்கு வந்தேன். 🙂 😛 😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!