Chennai Express [2013]

11
CHENNAI EXPRESS

ஷாருக்கான் படம் DDLJ க்கு பிறகு Chennai Express தான் நான் திரையரங்கு சென்று பார்ப்பது. படம் பார்க்க முக்கியக்காரணம் கதை தமிழ்நாட்டில் நடப்பது தான்.

Chennai Express

படத்தின் கதை, தன்னுடைய தாத்தாவின் அஸ்தியை தனது பாட்டியின் வேண்டுகோளுக்கிணங்க “ராமேஸ்வரத்தில்” கரைக்க ஷாருக் கிளம்புகிறார்.

ஆனால், நண்பர்கள் கோவா போகலாம் என்று ஆசை காட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ராமேஸ்வரம் போகிற மாதிரி [இந்த ரயில் அங்கே போகாது ஆனால், அதற்கு விளக்கம் படத்தில் ஷாருக் கூறுவார்] கிளம்பி விட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி கோவா சென்று விடுவது தான் திட்டம். Image Credit

ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு வரும் தீபிகாவுடன் அவருடைய கிராமத்துக்கே செல்ல வேண்டிய நிலை. பிறகு என்ன நடந்தது என்பது தான் படம்.

வடா தோசா

நம்ம ஆளுங்களை இந்த வடா தோசாகாரங்க ஓவரா டேமேஜ் செய்து இருந்தா விமர்சனத்தில் கொத்துக்கறி போட்டு விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

ஏனென்றால் அவர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசம் 🙂 ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் ஓரளவு தான் இருந்தது.

அதாவது நமது தமிழ் படங்களில் மற்ற மாநில ஆளுங்களை கலாயிப்பது போல.

படத்தில் நம்ம ஆளுங்களை எல்லாம் அடிதடிகாரர்கள் போலக் காட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் ஆந்திராவில் தான் நடக்கும்.

தற்போது ஆந்திராவிலேயே இது போலக் காட்சிகள் குறைந்து விட்டது.

இருப்பினும் எனக்கு இது உடன்பாடில்லை அதே போலப் பசங்க பொண்ணுகளையும் பேக்கு மாதிரி காட்டியிருக்கிறார்கள்.

சரி விடுங்க… இதை பற்றி பேசுனா மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுவேன் 🙂 .

ஷாருக்

ஷாருக் உண்மையிலேயே கலக்கி இருக்கிறார். இவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இவரது நடிப்பு இதில் பிடித்து விடும்.

ஓவர் பந்தா எல்லாம் விடாமல், தான் பெரிய ஹீரோ என்ற பில்டப் எல்லாம் எதுவும் கொடுக்காமல் அசத்தி இருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் பெயர் போடும் போது தீபிகா பெயருக்குப் பிறகு தான் இவர் பெயரே வருகிறது.. எதுவும் காரணமா!! எனக்கு வியப்பாக இருந்தது.

இவர் தமிழை கிண்டலடித்து பேசுவது முதலில் எனக்கு கடுப்பாக இருந்தாலும் [காரணம் மேலே கூறியது தான்] போகப் போக அவருடன் ஒன்றி ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஹிந்தி படம் என்றாலே பிரம்மாண்டம், வண்ணமயம் தான், அது இதிலும் பிரதிபலிக்கிறது.

இது போலக் கிராமங்கள் எதுவும் தமிழ்நாட்டில் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. ரொம்ப செயற்கையாக இருக்கிறது.

சத்யராஜ்

தீபிகாவின் அப்பாவாக சத்யராஜ் ஊரின் பெரிய மனிதராக வருகிறார்.

ஷாருக் பாணியில் “பெரிய தலை” 🙂 .

மொத்த ஊருமே இவர் வீட்டுக்கிட்ட தான் வேலை பார்ப்பாங்க போல, அதே போலப் பாதிப்பேர் சத்யராஜ் கிட்ட தான் அடியாளா வேலை பார்ப்பாங்களோ என்று சந்தேகம் வருகிறது.

சத்யராஜ் மொத்தமே 20 நிமிடம் வந்தாலே அதிகம். நடிக்க வாய்ப்பில்லை.

கில்லி முத்து சந்திரமுகி

படத்தின் துவக்கத்தில் Thanks to Shri Rajinikanth என்று வருகிறது அதோட இவங்க போடாம விட்டது கில்லி முத்து சந்திரமுகி படத்துக்கு :-).

முக்கால் வாசி படம் இந்த மூன்று படங்களிலிருந்து தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக கில்லி தான் படம்.

முத்து சந்திரமுகியிலிருந்து சில காமெடிகள். படம் தமிழ்நாட்டை ஒட்டிய கதை என்று முடிவு செய்ததும் இங்க உள்ள DVD வாங்கி ஒரு படத்தை தயார் செய்து விட்டார்கள் போல.

சுட்டாலும் ரசிக்கும் படி கொடுத்ததால் தப்பித்தார்கள். காட்சிகள் எல்லாம் அப்படியே உள்ளது.

தீபிகா அழகோ அழகு. படத்தில் தீபிகா பாதி மட்டும் தான் மாராப்பு போடணும் என்று முடிவு செய்து தான் படத்தையே ஆரம்பித்து இருப்பார்கள் போல.

முக்கால் வாசி காட்சிகளில் அப்படி தான் இருக்கிறார். பார்க்க ஸ்லிம்மாக இருப்பதால் ரொம்ப ஆபாசமாகத் தெரியவில்லை.

தமிழ் தெரியாதவன் ஹிந்திகாரன் பேசுற மாதிரி தமிழ் பேசுனா சரி!

ஆனால், தமிழ்நாட்டை சார்ந்த தீபிகா ஏன் வடா தோசா காரங்க மாதிரி தமிழ் பேசுறாங்க என்பது எனக்கு புரியாத புதிர்.

இவங்க அடிக்கடி சொல்லும் “இல்லே” ரொம்ப நன்றாக இருக்கிறது 🙂 .

சிரிப்போ சிரிப்பு

ஒரு காட்சியில் சந்திரமுகி படத்தில் வருவது போலத் தூக்கத்தில் தீபிகா நடந்து கொள்ள, அவரிடம் மாட்டிக்கொண்டு ஷாருக் படும் பாடு… செம்ம காமெடி.

என் பின்னாடி இருந்த பெண் சிரித்தார் சிரித்தார் சிரித்துட்டே இருந்தார்.. அவரால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

எல்லோருமே இவரோட சேர்ந்து சிரிச்சுட்டே இருந்தாங்க.. நானும் தான் 🙂 ஷாருக் செம க்யூட் இந்தக் காட்சியில் 🙂 .

பாடல்கள் நன்றாக இருந்தது. வழக்கம் போல வண்ணமயமாக எடுத்து இருந்தார்கள். ஒளிப்பதிவு அருமை, பளிச்.

ஏற்கனவே பாடல்கள் கேட்டு இருந்ததால் இதிலும் கேட்க நன்றாக இருந்தது. காஷ்மீர் – கன்யாகுமாரி என்ற பாடல் எடுத்த விதம் ரொம்ப நன்றாக இருந்தது.

ப்ரியாமணி ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுச் சென்று இருக்கிறார். அடுத்த ஹிந்தி படத்தில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டியிருப்பார்களோ!

திரைக்கதை

படத்தில் ஒன்றுமே இல்லை ஆனால் படத்தை ஓட வைப்பது திரைக்கதை ஷாருக் நடிப்பு மட்டுமே!

படத்தின் கடைசியில் மொழி காதல் என்று ஷாருக் வாசித்து விட்டதால் முதலில் இருந்த கொஞ்சம் கோபமும் குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

படம் முடிந்த பிறகு பெயர் போட்டு அப்படியே ரஜினிக்கு மரியாதை கொடுப்பதாகக் கூறி YouTube ல் வெளியிட்ட லுங்கி டேன்ஸ் பாடல் போட்டார்கள்.

சென்னையின் அடையாளங்களுள் ரஜினியும் ஒருவர், உள்ளூர் [தமிழ்நாடு] ரசிகர்களைக் கவர அதோடு ஷாருக் சமீபமாக ரஜினி புகழ் பாடுவதால் இந்தப் பாடலைப் போட்டு இருக்கலாம்.

எப்படியோ சென்னை என்ற ஒரு பெயருக்காகத் தான் இந்தப் படத்திற்கு சென்றேன். படம் ஏமாற்றவில்லை.

படத்தில் தமிழும் ஹிந்தியும் பேசுவது கலந்து வருவதால் நம்ம படம் என்ற ஒரு உணர்வு இருப்பது உண்மை தான்.

அதோடு ஷாருக்கின் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம். லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ரசிக்க முடியும். குடும்பத்துடன் பார்க்கலாம்.

படம் சந்தேகம் இல்லாமல் ஹிட் தான்.

Directed by Rohit Shetty
Produced by Gauri Khan ,Ronnie Screwvala, Siddharth Roy Kapur
Screenplay by Yunus Sajawal
Story by K. Subaash
Starring Deepika Padukone, Shahrukh Khan
Music by Vishal–Shekhar
Cinematography Dudley
Editing by Steven H. Bernard
Studio Red Chillies Entertainment
Distributed by UTV Motion Pictures
Release date(s) 8 August 2013 (United Kingdom, United States) 9 August 2013 (Worldwide)
Running time 141 minutes
Country India
Language Hindi

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

 1. review நல்லா செஞ்சு இருக்கீங்க தல
  படம் நிச்சயம் ஒரு தடவ பாக்கலாம்
  review ல இன்னும் நிறைய தியேட்டர் அனுபவம் எழுதினா (அங்க நீங்க ரசிச்சது) எழுதினா இன்னும் நல்லா இருக்கும் என்ன உங்க அனுபவம், பார்வை எழுத்தோட ரசிகன்

  தலைவா review விஜய் ஸ்டைல் ல – “I am waiting ”

  – அருண்

 2. நன் ரொம்ப avala இருக்கேன் , உங்க தலைவா review படிக்குறதுக்கு

 3. @அருண் கொஞ்சம் அவசரமாக எழுதியதால் அவற்றை குறிப்பிட முடியவில்லை

  @ராஜேஷ் 🙂

 4. @விநாயகம் ஹலோ பாஸ்.. அவங்க கர்நாடகா என்பது எனக்கும் தெரியும் 🙂 நான் கூறியது படத்தில். தமிழ்நாட்டுப் பெண் எதற்கு இப்படி பேசுகிறார் என்பது தான்.

 5. மிக அருமையான, படத்தைப் பார்க்கத் தூண்டும் விமர்சனம். சில தினங்களில் கண்டிப்பாகப் பார்த்து விடுவேன் 🙂

 6. அன்புள்ள கிரி,

  இன்று மத்தியானம் 1 மணி ஷோ. 7.50 டாலர் டிக்கெட். மொத்தம் ஐந்தே பேர் எங்களையும் சேர்த்து. உங்கள் பாஷையில் சொல்வதென்றால் இந்த ஊர் வடா தோசாகாரங்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை போலிருக்கிறது. நீங்கள் கூறியிருப்பது போல ஷாரூக்கையும் தீபிகாவையும் ரசிக்க முடிந்தது. தீபிகா அடிக்கடி சொல்லும் ‘இல்லே’ மிக அருமை.

 7. @ஸ்ரீநிவாசன் நீங்கள் கூறுவது சரி தான். இதில் தமிழ் வசனங்கள் அதிகம் அதனால் அது அவர்களுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம். நம்முடைய தமிழ் படத்தில் ஹிந்தி அதிகம் வந்தால் நாமும் அப்படித்தானே நினைப்போம்.

  நம்ம ஊரில் நிச்சயம் ஹிட் அடிக்கும். அங்கே சந்தேகம் தான் நீங்கள் கூறுவது போல. வாட தோசா காரங்க சும்மாவே நம்ம மேல காண்டுல இருப்பாங்க.. இதுல படமே நம்ம ஊரைப் பற்றி இருந்தால்.. போச்சு! 🙂

 8. //நம்ம ஆளுங்களை இந்த வடா தோசாகாரங்க ஓவரா டேமேஜ் செய்து இருந்தா விமர்சனத்தில் கொத்துக்கறி போட்டு விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஏனென்றால் அவர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசம்//

  same blood. கலக்குங்க கிரி… 🙂 அருமை

 9. இப்போ மீடியா ட்ரெண்டே தமில்நாட்டுக்காரங்க்களை காட்டுவதுதான். முன்பு சிங்குங்களை வைத்து விளம்பரங்களை எடுத்தார்கள். இப்போது தமில்நாட்டுக்காரங்களை வைத்து எடுக்கிறார்கள். அந்த ட்ரெண்டை ஷாருக் அற்புதமாய் use பண்ணிகிட்டார். சரியான வியாபர யுக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here