குழந்தைகளை அழைத்துச் செல்லும் முறை தெரியுமா?!

0
குழந்தைகளை அழைத்துச் செல்லும்

குழந்தைகளை அழைத்துச் செல்வதிலும் ஒரு வழிமுறை இருப்பது தெரியுமா?

குழந்தைகளைச் சாலையில் அழைத்துச்செல்கிறார்கள் ஆனால், தாங்கள் செய்து கொண்டு இருக்கும் தவறை உணராமலே! Image Credit

இந்தியா போன்ற நாடுகளில் பாதசாரிகளுக்கான பாதை என்று அனைத்து இடங்களிலும் இருந்து விடுவதில்லை, வெகு சில இடங்களில் மட்டுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

எனவே, பெரும்பாலான நேரங்களில் நாம் சாலையின் ஓரத்தில், வாகனப் பாதையிலேயே நடக்க வேண்டியதாக உள்ளது.

நாம் நடப்பதே கவனத்துடன் நடக்க வேண்டும் என்ற நிலையில், சிலர் குழந்தைகளை அழைத்து வரும் போது சாலைப் பகுதியில் குழந்தையையும் ஓரத்தில் இவர்களும் நடந்து வருகிறார்கள்.

இது மிகத்தவறான செயல்.

எந்த முறை சரியானது?

நடக்கும் போது எப்போதும் குழந்தைகளை இடது புறமாகவும் நீங்கள் வலது புறமாகவும் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் இடது புறமாகவும் குழந்தைகளை வலது புறமாகவும் அழைத்துச் செல்ல வேண்டும்.

சுருக்கமாக, வாகனங்கள் பயணிக்கும் பகுதியில் நீங்களும், சாலையின் ஓரப்பகுதியில் குழந்தையும் இருக்க வேண்டும்.

வாகனங்கள் எப்படி வரும் என்று தெரியாது! வாகன ஓட்டிகள், குழந்தைகள் உயரம் காரணமாக அவர்கள் இருப்பது தெரியாமலும் வரக்கூடும். மிக ஆபத்தான சூழ்நிலை.

குழந்தைகள் வாகனங்களில் எளிதாக அடிபட வாய்ப்புள்ளது.

சமீபத்தில், சாலையில் செல்லும் போது ஒரு பெண் தன்னுடைய குழந்தையை இது போல வாகன போக்குவரத்துப் பக்கமாக அழைத்துச் செல்வதைப் பார்த்து ஒரு ஆட்டோ ஓட்டுநர், அழைத்துக் கூற முயற்சித்தார் ஆனால், அப்பெண் கவனிக்காமலே சென்று விட்டார்.

நான் கவனித்தவரை பலர் இதனுடைய ஆபத்து புரியாமலே குழந்தைகளை அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ள ‘common sense‘ என்ற ஒன்று இருந்தால் போதும்.

குழந்தைகளை மேற்கூறிய முறையில் அழைத்துச் செல்கிறீர்கள் என்றால், பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், தவறை திருத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் பாதுகாப்பான பக்கம் மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும்.

தொடர்புடைய கட்டுரை

ஆண்கள் பெண்கள் எப்படி நடக்க வேண்டும்!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!