கிளம்பிட்டான்யா…

3
What is blog

னக்கு இந்த blog ல இல்ல எதாவது சைட் ல நமக்குன்னு எதாவது பண்ணனும், நம்முடைய கருத்து மற்றும் எண்ணங்களை எங்கயாவது எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை இருந்தது. Image Credit

அப்ப எல்லாம் இந்தச் சைட்ல தமிழ்ல எழுதற மாதிரி எல்லாம் வரல.

என்ன தான் நம்ம கருத்த இங்கிலீஷ் சொன்னாலும் முழுமையா சொன்ன மாதிரி இருக்காது. நமக்கும் ஒரு திருப்தி கிடைக்காது (இங்கிலீஷ் நமக்கு ஒழுங்கா வேற வராது அது வேற விஷயம்).

அப்பத் தான் இந்தக் கூகிள் தமிழ் பான்ட் வெளியிட்டாங்க. அதுக்கு முன்னாடியும் இருந்தது ஆனால், இந்த அளவுக்குப் பேமஸ் ஆகல.

இது ரொம்ப உதவியா இருந்துச்சு இதை வைத்து நான் பல சைட்ல கமெண்ட் எழுதி இருக்கேன்.

இதற்கு அப்புறம் தான் இந்தப் பிளாக் எல்லாம் பண்ண தைரியம் வந்தது. இப்ப நெட்ல மொக்கை போட நானும் ரெடி ஆகிட்டேன்.

முன்பு யாஹூ 360 ல் 2006 ம் ஆண்டில் இருந்து எழுதி வந்தேன்.

அதில் நான் மட்டுமே எழுதி நான் மட்டுமே படிக்கும் படி இருந்தது. நான் எழுதுவதே யாருக்கும் தெரியல.. அதோட எப்படி இதை அனைவரிடமும் கொண்டு செல்வது என்பதும் தெரியல.

இன்டர்நெட்ல சுற்றிட்டு இருந்த போது கிடைத்தது தான் இந்த Blogger சைட். என்னால நான் முன்பு எழுதிய யாஹூ 360 போஸ்ட் எல்லாம் இங்க கொண்டு வர முடியல.

இது எனக்கு வருத்தம் தான். இதுல எப்படி எழுதறேன்னு பார்ப்போம்.

3 COMMENTS

  1. யுவர் போஸ்ட்ஸ் ஆர் குட். உங்க பதிவுகளை நான் சொல்ல மாட்டேன் மொக்கைன்னு. உங்க கிரெடிட் கார்ட் பதிவு எனது கண்ணைத் திறந்துவிட்டது.
    //இப்ப நெட் ல மொக்கை போட நானும் ரெடி ஆகிட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here