ஐந்து பைசாக்குப் பிரயோஜனம் இல்லாத சிம்பு பாடிய பாடலை வெளியான நாளிலிருந்து இன்று வரை ஒயாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். Image Credit
மூன்று வாரம் முன்பு சென்னை பிழைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்தது. மறைமலை அடிகள் பாலம் உடையாமல் தப்பிக்குமா?! என்று பலரும் திகிலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நம்ம வீட்டுக்குள்ள தண்ணீர் வந்துடுமோ என்று பலர் பயத்தில் இருந்தார்கள்.
அரசாங்கத்தை எப்போதுமில்லாதளவு வறுத்து எடுத்துக் கோபத்தைக் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
சிங்கம் படத்துல விஜயகுமார், சூர்யாவைப் பார்த்து “இத்தனை நாளா எங்கயா இருந்தே?” என்று கேட்பது போல மொபைலை நோண்டிக்கொண்டு இந்த உலகத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று இருந்தவர்கள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து உதவிக் கொண்டு இருந்தார்கள்.
கடந்த வாரம் ஊருக்குச் சென்ற போது ஊரில் பலரும் தமிழக மக்களின் உதவும் குணத்தைப் பற்றிப் பேசி சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கேட்கவே இன்பமாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பயம் காரணமாக இதுவரை அதிகம் கிண்டலடிக்கப்படாத “ஜெ” கூட ஸ்டிக்கர் மற்றும் அரசாங்கத்தின் பல சொதப்பலான நடவடிக்கைகளால் இந்த முறை தப்பவில்லை.
அனைவரையும் கலாயித்துக்கொண்டு இருந்தார்கள்.
Beep.. Beep.. Beeeeeeeep
இது போலத் தமிழ்நாடே வழக்கத்துக்கு மாறாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்ததைக் கொஞ்ச நாள் கூட அனுபவிக்க முடியாமல் இந்தப் பீப் பாடலை வைத்து நாசம் செய்து விட்டார்கள்.
இப்ப இரண்டு வாரம் முன்பு பேரழிவுன்னு சொன்னா.. அப்படியா.. நான் கூட ரொம்ப நாள் ஆச்சோன்னு நினைத்துட்டேன்!! என்று கூறும் அளவுக்கு நிலை மாறி விட்டது.
அனைத்துப் பிரச்சனைகளையும் மறந்து மக்கள் / ஊடகங்கள் பீப் பாடலில் தீவிரமாக மூழ்கி விட்டார்கள். இதைத் தான் அரசியல்வாதிகளும் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு விரைவிலேயே நிறைவேறி விட்டது.
இதை விடக் கேவலமாகத் திரைப்படங்களில் ஆபாசமாகக் காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் வீட்டுக்கே நடனம் என்ற பெயரில் ஆபாசத்தைக் கொண்டு வருகிறார்கள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்பு விசயத்துக்குத் தையா தக்கான்னு குதிச்சிட்டு இருக்காங்க.
செம்ம எரிச்சலாக இருக்கிறது.
அப்படி என்ன தலை போகிற பாடல் இது..!
இந்தச் சிம்பு… வேலை வெட்டி இல்லாம கிறுக்குத் தனமா போட்ட பாட்டை என்னமோ இதால் உலகமே அழிந்து விடும் என்பது போல ஆளாளுக்குப் பொங்கி தீர்த்து விட்டார்கள்.
மாதர் சங்கம்
இந்த மாதர் சங்கத்தை நினைத்தால் எனக்குச் சுர்ருன்னு கோபம் வருது. நாட்டுல நிர்பயா வழக்கு போல ஆயிரக்கணக்கில் வழக்கு உள்ளது.
அதையெல்லாம் விட்டுட்டுச் சிம்பு வீட்டு முன்பு சாணி அடித்துட்டு இருக்காங்க. படத்தைக் கிழித்துட்டு இருக்காங்க.
நானும் பார்த்துட்டேன் பிரபலமான ஆளுங்க பிரச்சனை என்றால் மட்டும் தான் இந்த மாதர் சங்கம் எல்லாம் கொந்தளிக்கறாங்க.
தினம் தினம் எத்தனையோ பெண்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
இப்ப சிம்பு வீட்டுல சாணி அடித்த எத்தனை பேர் மற்ற பெண்களுக்காகப் போராடி இருக்கிறார்கள்?
குடும்பத்தை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக்குக்காக இவர்கள் எல்லாம் ஒரே ஒரு நாளாவது போராடி இருப்பார்களா!
சிம்பு பாட்டு முக்கியமா.. இல்ல டாஸ்மாக் போன்ற மாநிலத்தையே அழித்துக்கொண்டு இருக்கும் இருக்கும் குடியை விரட்டுவது முக்கியமா?!
சிம்பு நான் பாடலை வெளியிடலன்னு சொல்றாரு.. இவரோட பழைய கதைகளை எல்லாம் கவனித்தால் சத்தியமா எவனும் நம்ப மாட்டான்.
கடந்த முறைகளைப் போல இந்த முறையும் பரபரப்பாகப் பேசப்படும் என்று நினைத்து இந்த வேலையைச் செய்தாரோ என்னவோ.. செம்மையா மாட்டிக்கிட்டார்.
ஒரு வகையில பார்த்தால் இது தேவை தான் இனி இது போல அரை வேக்காட்டுத்தனமா செய்கிறவங்களுக்கு எல்லாம் இது ஒரு படிப்பினையாக மாறி விட்டது.
எதோ ஒரு நாள் பேசலாம் சரி.. மூன்று நாள் பேசலாம்.. இப்படி வாரக் கணக்குல பேசுற அளவுக்கு அப்படி என்ன இதுல இருக்கு. சும்மா விட்டு இருந்தால் அதோட போய் இருக்கும்.
ஊர்ல இருக்கிறவங்க எல்லோரையும் இதைப் பேச வைத்தது தான் இந்தப் போராட்டங்களின் சாதனை.
முக்கியமான விஷயங்கள்
சிம்பு செய்தது கேவலமான செயல் தான் ஆனால், இதை விட முக்கியமான எத்தனையோ விஷயங்கள் உள்ளது அதையெல்லாம் விட்டுட்டு இப்படி இதையவே பிடித்துத் தொங்கிட்டு இருக்காங்க.
அரசியல்வாதிகள் கூட அறிக்கை விட்டுட்டு இருக்காங்க…. கொடுமை.
இதுல மூன்று தனிப் படைகள் அமைத்துச் சிம்புவை தேடுகிறார்களாம்.
எப்படியும் இன்னும் சில நாட்களில் இந்தச் செய்தி ஒண்ணுமில்லாம போகப் போகுது.. அதுக்கு இவ்வளோ பில்டப்பு.
உங்க மனசாட்சியத் தொட்டுச் சொல்லுங்க.. தற்போது இது தான் நமக்கு முக்கியப் பிரச்சனையா! ஊடகங்கள் பரபரப்புக்காக இதை அப்படியே தொடர்ந்து கொண்டுள்ளார்கள்.
நாளையே இன்னொரு விசயம் மாட்டினால் அதற்குச் சென்று விடுவார்கள். இது தான் உண்மை.
எனக்கு இப்படி ஒரு கருமாந்திரமான விசயத்துக்கு எல்லோரும் குதிச்சிட்டு இருக்காங்களே என்ற கோவத்தை விட இரண்டு வாரம் முன்பு நடந்த எத்தனையோ நல்ல விசயங்களை உதவி செய்தவர்களைச் அரசாங்கம் செய்த தவறுகளை ஒரே நாளில் அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற கோபம் தான் அதிகமுள்ளது.
அனைவரும் செய்த வேலையைத் தான் நானும் தற்போது செய்து இருக்கிறேன்.
தினம் தினம் இது பற்றிய செய்திகளே கண்ணில் பட்டுக்கொண்டு இருப்பதால், வந்த எரிச்சலை இப்படிக் கொட்டி விட்டேன்.
போங்கய்யா.. Beep beep.
கொசுறு
அப்புறம் சென்னை திரும்ப வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🙂 . நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருப்தியாக உணர்கிறேன்.
நண்பர் விஜயகுமார் மழை பிரச்சனையின் போது “கிரி! நீங்க.. ஏன்டா சென்னை வந்தோம்னு நினைத்து இருக்கீங்களா!” என்று கேட்டார்.
அவர் கேட்ட பிறகே எனக்குச் சிங்கப்பூர் நினைவு வந்தது.
எல்லோரும் நம்புறீங்களோ இல்லையோ எனக்கு இந்தப் பேருந்தில் சில்லறை கொடுக்கும் பிரச்சனையைத் தவிர நிஜமாகவே எதுவுமே சிரமமா இல்லை 🙂 . நம்புங்க.
சிங்கப்பூரை தவற விடுவதா நினைக்கவே இல்லை (நண்பர்களை மட்டுமே ரொம்ப மிஸ் பண்ணுறேன்) .
ஏற்கனவே சென்னையில் 13 வருடங்கள் இருந்து இருந்ததால் எனக்குச் சென்னை புதிது இல்லை.
ஒருவேளை சென்னைக்குப் புதியவனாக இருந்தால் அப்படித் தோன்றி இருக்குமோ என்னவோ! நானே விருப்பப்பட்டு வந்ததால் எந்த வித்யாசமும் தோன்றவில்லை.
அதோட நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவன் அல்ல.
எட்டு வருடங்கள்
எதோ எட்டு வருடங்கள் இருந்து இருக்கிறேன் அவ்வளவே! மீதி பல வருடங்கள் சென்னை மைலாப்பூர் பகுதியில் லஸ் சிக்னலில் நண்பர்களோடு சுற்றிக்கொண்டு இருந்தவன் தான்.
எனவே, சிங்கப்பூரில் இருந்ததை விட மிகச் சந்தோசமாக இருக்கிறேன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அலுவலக ரீதியாகவும். புதிதாகக் கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது.
எனவே, எனக்குக் கடவுள் கூடுதல் கருணை காட்டுவதாகவே தோன்றுகிறது.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதாலும் எந்தப் பிரச்சனையையும் நினைத்துப் பயப்படக்கூடாது என்று தீர்மானமாக இருப்பதாலும், முன்பை விடத் தற்போது எந்தக் குழப்பமும் பயமும் இல்லாமல் இருக்கிறேன்.
குறிப்பாக எந்தப் பிரச்சனை வந்தாலும் “பார்த்துக்கலாம்” என்ற மன நிலை அதிகமானதால் பதட்டம் குறைந்து இருக்கிறது.
இது அலுவல் பணியில் உதவியாக இருக்கிறது. பின்னர் இது குறித்து விரிவாக எழுதுகிறேன்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அடிக்கடி பதிவுகள் இடவும் 🙂
நீங்கள் சொல்வது சரிதான். எத்தனையோ முக்கியப் பிரச்சனைகள் இருக்க, இதுக்கு போலீஸ் படை தயார் செய்த புண்ணியவானுக்கு கழுத்துக்கு மேல ஒண்ணுமே இல்லை போலிருக்கு. ஏதோ சிம்பு பாட்டினால்தான் உலகமே அஸ்தமித்து விட்டதாகப் படம் காட்டுகிறார்கள். அதைப்போல் பலமடங்கு கெட்ட வார்த்தைகள் டாஸ்மாக்கில் இருக்கும். அந்த டாஸ்மார்க் உங்கள் வீட்டருகில் இருக்கும். உங்கள் வீட்டு கணிணியிலும் தொலைக்காட்சியிலும் இல்லாத ஆபாசமா? இவர்கள் எல்லோரும் வெட்டி ஆபீசர்ஸ்.
என்ன சொல்வது என்பது தெரியல கிரி. ஆனால் ஒன்னு மட்டும் புரியுது கடைசியில் தேவர் மகன் படத்தோட முடிவை போல் உங்களையும் பீப் பிப் பேச வச்சிடாங்களே!!!. ரெண்டு வாரத்துக்கு முன்பு மாற்றம், சகாயம் என்று பேசியவர்கள் இன்று பீப்பில் பிசியாகி விட்டார்கள். முந்தைய கடந்த கால அரசியல் வரலாற்றை தற்போது படிக்கும் போது மனது வலிக்கிறது கிரி. குறிப்பாக காமராஜர் அவர்களின் வாழ்க்கை குறிப்பு. பகிர்வுக்கு நன்றி கிரி.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
என்னவென்று சொல்ல…… BeeP……