ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை

2
ATM

₹10,000 க்கு மேலே ATM ல் பணம் எடுப்பவர்கள் OTP எண்ணைப் பதிவு செய்த பிறகே பணம் எடுக்க முடியும் என்று SBI வங்கி அறிவித்துள்ளது. Image Credit

SBI ATM

தனியார் வங்கிகளுக்குச் சவால் விடும் வகையில் SBI வங்கி தொழில்நுட்பத்தில் அசத்தி வருகிறது. வாடிக்கையாளர் சேவை மற்றும் சில தொழில்நுட்ப கோளாறுகளால் கெட்ட பெயரைச் சந்திக்கிறது.

SBI வங்கியின் செயலி (App), இணையத் தளம் User Interface எந்தத் தனியார் வங்கிக்கும் குறைந்தது அல்ல. பயன்படுத்தக் குழப்பம் இல்லாமல் எளிதாக இருக்கும்.

தற்போது கொண்டு வரப்பட்ட OTP நடைமுறை நிச்சயம் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை பாதுகாப்பை அதிகப்படுத்தும்.

ஏனென்றால், ATM தொடர்பாகப் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது.

ஒருவேளை நம்முடைய அட்டையும், கடவுச்சொல்லும் (Password) திருடப்பட்டாலும், OTP இல்லையென்றால் பணம் எடுக்க முடியாது என்பது பாராட்டத்தக்கது.

எப்படிப் பயன்படுத்துவது?

  • புதிய நடைமுறை என்று எதுவுமில்லை.
  • வழக்கம் போல அட்டையைப் பயன்படுத்தி நமது PIN எண்ணைக் கொடுத்து நுழைய வேண்டும்.
  • தொகையைக் குறிப்பிட்ட பிறகு நமக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • உள்ளீடு செய்த பிறகு வழக்கம்போலப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஒரே ஒரு STEP மட்டும் கூடுதலாக வருகிறது, அவ்வளவு தான்.

ICICI

ICICI வங்கியிலும் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.

SBI வங்கியில் ₹10,000 க்கு மேல் எடுத்தால், OTP கொடுக்க வேண்டும் ஆனால், ICICI வங்கி ATM ல் ₹6,000 எடுத்ததற்கே OTP கேட்டது.

₹10,000 என்பது அதிகமான தொகையாக உள்ளது.

திருடுபவர்கள் ₹9,000 ஆகப் பல முறை எடுக்க முயலலாம். எனவே, எந்தத் தொகையாக இருந்தாலும் OTP தேவை என்று மாற்றினால் நல்லது.

சில நேரங்களில் OTP வராமல் கடுப்பைக் கிளப்பலாம் 🙂 .

தொழில்நுட்பம் வளர்வதால் பல நன்மைகள் இருந்தாலும், இது போலச் சிக்கல்களும் வளர்ந்து கொண்டே உள்ளது.

இவற்றைத் தவிர்க்க முடியாது என்பதால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கொசுறு

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI பயன்படுத்துபவர்கள் ATM சென்று பணம் எடுப்பதே இல்லை. எப்பவாவது தான் எடுக்கிறார்கள்.

பணத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்களே ATM நாடிச்செல்கிறார்கள்.

நான் ATM செல்வது 99% குடும்பத்தினரின் தேவைக்காக மட்டுமே.

நீங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களா?

தொடர்புடைய கட்டுரைகள்

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

முதன்மை வங்கிக் கணக்கு அவசியமானது ஏன்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, இந்த சேவையை ஒரு நல்ல அம்சமாக பார்க்கிறேன்.. (திருடுபவர்கள் ₹9,000 ஆகப் பல முறை எடுக்க முயலலாம். எனவே, எந்தத் தொகையாக இருந்தாலும் OTP தேவை என்று மாற்றினால் நல்லது) ஏற்று கொள்கிறேன்.. என்னை பொறுத்தவரை இங்கு ATM செல்வது மிகவும் அரிது.. பெரும்பாலான 90% செலவுகளை டெபிட் கார்டு மூலம் செய்கிறேன்.. இந்த சேவை இல்லாத இடங்களில் பணத்தை பயன்படுத்துவேன்..

    குடும்பம் தற்போது கூட இல்லாததால் பெரிய செலவுகள் இருக்காது.. அதனால் நான் போட்டு வைத்து இருக்கிற மாத பட்ஜெட்குள்ளே செலவுகள் அடங்கி விடும்..UPI வளர்ச்சி இங்கு இருப்பதை விட ஊரில் செம்மையா இருக்கிறது.. கடந்த முறை ஊருக்கு சென்ற போது தான் நான் இந்த சேவையை பயன்படுத்தினேன்.. நன்றாக இருந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “பெரும்பாலான 90% செலவுகளை டெபிட் கார்டு மூலம் செய்கிறேன்.. இந்த சேவை இல்லாத இடங்களில் பணத்தை பயன்படுத்துவேன்..

    நான் முதலில் UPI. இவை இல்லையென்றால், Credit Card .. இதுவும் இல்லையென்றால் மட்டுமே பணம்.

    தொகை சிறியதாக இருந்தால் UPI, 200 க்கு மேல் என்றால் Credit Card. காரணம் இதில் points கிடைக்கும்.

    கடந்த மாதத்தில் 6 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here