சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 4)

38
Singapore Marina Bay

சிங்கப்பூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கடுமையான சட்டங்களும், அபராதங்களும் தான். Image Credit

சிங்கப்பூர் ஜனநாயக நாடாக இருந்தாலும், கட்டுப்பாடுகள் அதிகம். இது மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக இருந்தாலும், கட்டுப்பாடான சுதந்திரம்! நல்லதே என்பது என் தனிப்பட்ட கருத்து

இங்கு குறிப்பிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை உள்ளது, இதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே புகைபிடிக்க அனுமதி.

சிங்கையில் மற்ற நாடுகளில் இருந்து எடுத்து வந்து இருந்தால் டியுட்டி கட்டப்பட்ட சிகரெட்களையே பயன்படுத்த வேண்டும்.

இங்கு அனைத்து சிகரெட் அட்டையிலும், அதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் கொண்டவர்களின் கொடூரமான படங்கள் இருக்க வேண்டும்.

இருந்தும் இதைக் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை அதைப் பற்றியும் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை.

அந்த படங்களை பார்த்தாலே பயமாக இருக்கும்

புகை பிடிப்பதில் பெண்களும் அதிகளவில் உள்ளனர், சிறிய பொண்ணுக முதல் பாட்டிகள் வரை.

பொது இடங்களில் குப்பை போடக்கூடாது ஆனால், கடுமையாக பின்பற்றப்படுவதாக எனக்கு தோன்றவில்லை.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

சாலை தரமாக இருப்பதால் அதிக வேகத்தில் போனால் கூட எந்த ஒரு வித்யாசமும் தெரியாது, சாதாரணமாகவே இருக்கும்.

வாகனங்களின் வேக கட்டுப்பாடு இடத்திற்கு இடம் மாறுபடும், இது அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு முறை நான் டாக்சியில் சென்ற போது அந்த வண்டி 100KM வேகத்தைத் தொட்ட போது அதில் அலாரம் அடித்தது, பின் ஓட்டுனர் வேகத்தைக் குறைத்து கொண்டார்.

அவரிடம் இது எப்படி இயங்குகிறது என்று கேட்ட போது அவர் தனக்கு தெரியாது என்று கூறி விட்டார்.

போட்டிபோட்டு கொண்டு ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு செல்ல மாட்டார்கள், சீராகவே செல்வார்கள்.

குறிப்பிட்ட இடங்களை பீக் நேரங்களில் கடக்கும் போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும், அதற்குண்டான கருவி அனைவருடைய வாகனத்திலும் இணைக்கப்பட்டு இருக்கும்.

தானியங்கியாகவே பணத்தை எடுத்துக்கொள்ளும்.

இங்கு யாரும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள், அப்படி ஹார்ன் சத்தம் கேட்டால் அது அதிசய நிகழ்வே. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

இரவு நேரத்தில் கூட சாலையில் யாரும் இல்லை என்றாலும் சிக்னலை மதித்தே செல்கிறார்கள்.

நான் ஒரே ஒரு முறை மட்டுமே போக்குவரத்து காவலரைப் பார்த்துள்ளேன், அவர்கள் இல்லாமலேயே அனைவரும் சரியாக செல்கிறார்கள்.

நம்மவர்களுக்கு இது உண்மையிலேயே வியப்பான ஒன்று தான்.

நாம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் என்றால் வழியிலேயே அறிவிப்புகள் இருக்கும், அதன் படி நம் திட்டத்தை மாற்றி கொள்ளலாம்.

நடைபாதையை பயன்படுத்துபவர்களுக்கு சாலையை கடக்கும் போது சிக்னலில் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்.

சிங்கையில் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருந்தாலும், குற்றங்கள் நடைபெறுகிறது. அரசின் வாசகமே “ Low crime doesn’t mean no crime”

அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் சிறைச்சாலையில் இருந்து ஒரு தீவிரவாதி தப்பித்து விட்டான். இது இவர்களுக்கு பெரிய அவமானமாக போய் விட்டது.

பொது இடங்களில் தெளிவான அறிவிப்பு பலகைகள் இருக்கும், அதை பின்பற்றி சென்றாலே போதும் நாம் செல்ல வேண்டிய இடத்தை எந்த ஒரு பிரச்சனையையும் இன்றி அடைந்து விடலாம்.

ரயில் நிலையங்களில் வழி குறியீடுகள், வரைபடங்கள் என்று அனைத்துமே சிறப்பாக இருக்கும், புதிதாக வருகிறவர்கள் எந்த ஒரு குழப்பமும் அடையாமல் தெளிவாக செல்லலாம்.

ரயில் நிலையங்களில் நாம் செல்லும் இடம் பற்றி வரைபடங்களுடன் தகவல்கள் இருக்கும். இதை விட சிறப்பாக தகவல்களை இனியும் கொடுக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

யாருடைய உதவியும் தேவையில்லை. புதிதாக சிங்கை வருபவர்கள் கவலையே படத்தேவையில்லை.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் இருந்து லிட்டில் இந்தியா, சைனா டவுன் செல்ல அரசால் இலவசமாக வாகனங்கள் [shuttle service] இயக்கப்படுகின்றன.

நமக்கு எப்படி லிட்டில் இந்தியா மிக பிரபலமான இடமோ சீனர்களுக்கு சைனா டவுன், இதுவும் சிங்கப்பூரில் உள்ள பழைமையான இடங்களில் ஒன்று.

கேலாங் என்ற இடம் பாலியல் தொழிலாளர்களுக்கு மிக பிரபலம், சிங்கையில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், எந்த பாலியல் நோயும் தங்களுக்கு இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதல் வைத்து இருக்க வேண்டும்.

பொழுது போக்கு இடங்களும் விளையாட்டு இடங்களும் நிறைந்த இடமாக இருப்பது சென்டோசா என்ற இடம், மிகப் பெரிய தீம் பார்க் இது.

இங்கு கடல் உலகமும், டால்பின் விளையாட்டும் மிகப் பிரபலம்.

அதே போல குறிப்பிடத்தக்க இன்னொரு இடம் நைட் சபாரி. இதையே நாம் சிங்கப்பூர் பற்றிய விளம்பரங்களில் காண்கிறோம்.

கிளார்க் கீ என்ற இடம் இதுவரை நான் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்த ஒரு சூழ்நிலையை மற்றும் கலாச்சாரத்தைக் கண்ட இடம்.

இங்கு முழுவதும் வெளிநாட்டினரே அதிகளவில் காணப்படுவர் பார், பப் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இந்த உலகமே தனி.

நாம் இங்கே இருந்தால் இடத்திற்கு பொருத்தமில்லாமல் இருப்பது போன்ற உணர்வு

இரவு முழுவதும் ஒரே ஆட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கும் குறிப்பாக வார இறுதி நாட்களில்.

நம்மவர்கள் புதிதாக வேறு நாட்டு கலாச்சாரத்தைப் பார்க்காதவர்கள் முதல் முறையா இங்கே வந்தால் அவர்களால் வாயடைத்து போகாமல் இருக்கவே முடியாது.

சிங்கையில் மசாஜ் மிக பிரபலம், நம்முடைய வசதிக்கு தகுந்த படி கட்டணம் செலுத்தி செல்லலாம். லிட்டில் இந்தியாவில் கூட நிறைய மசாஜ் பார்லர்கள் உண்டு

பொதுவான தகவல்களையும், கணிப்பொறி துறையில் இருப்பவர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் ஒரு சில பிச்சைக்காரர்கள்!! பற்றியும் அடுத்த இறுதி பகுதியில் கூறுகிறேன்.

Updated on 20-02-2014

மூன்றாம் பாகம் இறுதிப் பாகம்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

38 COMMENTS

  1. ரொம்ப பிரமாதமாக இருக்கு! அருமையான விளக்கங்கள்…கலக்குறீங்க…. அடுத்த முறை நம்ம ஊர் வரும் போது சிங்கப்பூர் வழியாக வருவது என தீர்மானித்து விட்டேன். —ஷங்கர்.

  2. //Shankar said…
    ரொம்ப பிரமாதமாக இருக்கு! அருமையான விளக்கங்கள்…//

    நன்றி ஷங்கர்

    //அடுத்த முறை நம்ம ஊர் வரும் போது சிங்கப்பூர் வழியாக வருவது என தீர்மானித்து விட்டேன். //

    சிங்கப்பூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  3. //ஜோசப் பால்ராஜ் said…
    வழக்கம் போல அருமையா எழுதியிருக்கீங்க கிரி//

    வழக்கம் போல என்னை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஜோசப் பால்ராஜ்

    //இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமருபவர்களும் கட்டாயம் இருபுறமும் கால்களை போட்டுக்கொண்டுதான் அமர வேண்டும். நம்ம ஊர்ல இருக்க மாதிரி டேங்க்ல குழந்தைய உக்காரவைக்கிறது, ஒரு பைக்ல மொத்த குடும்பமே போறது எல்லாம் இங்க முடியாது. குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லவே முடியாது.

    மேலும் கார்களிலும் குழந்தைகளுக்கு முன் சீட்டில் இடம் இல்லை. பின் சீட்டில்தான் அமர வேண்டும்//

    தகவலுக்கு நன்றி

    //குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லவே முடியாது//

    இது எனக்கு முற்றிலும் புதிய தகவல்

  4. சாலை விதிகளைப் பின் பற்றும் அவர்களது நேர்த்தியைப் பாராட்டியே ஆக வேண்டும். எல்லா நாட்டிலும்தான் விதிமுறைகள் உள்ளன. மற்றவர் யாரும் பின் பற்றாதிருக்கையில் நான் மட்டும் ஏன் அக்கறைப் பட வேண்டும் என்கிற எண்ணமே இங்கு மேலோங்கி நிற்பது மிக வருத்தமான விஷயம். தினமும் செய்தித்தாளைப் பிரிக்கையில் சாலை விபத்து பற்றிய செய்தி இல்லாத நாளை விரல் விட்டு எண்ணிடலாம்:(.

  5. // கீ – வென் said…
    அது ஸ்பீடோ மீட்டர் ல் ஒரு கருவி பொருத்தி இருப்பார்கள்.. 90 கீ.மீ மேல் சென்றால் எச்சரிக்கை செய்யும்.. மேலும், டாக்ஸி நிறுவனங்கள்.. அந்த டிஸ்ப்ளே கருவி மூலம் எச்சரிக்கை செய்வதும் உண்டு.. (புதிய ஹூண்டாய் டாக்ஸி களில்)//

    தகவலுக்கு நன்றி வெங்கி

    //இதிலே எல்லாமே ஒரு கணக்கு தான் அங்கே.. நுழையும் பொது வெளியே இருக்கும் “மாமனிடம்” $ 40 குடுத்து விடவேண்டும்.. பின்னர் கண்ணாடிக் கூண்டிற்குள் இருக்கும் “கிளிகளில்” ஒன்றை கொத்தி செல்லலாம்.. (நான் போனதில்லை.. ஒருமுறை வேடிக்கை பார்க்க சென்ற பொது.. “சீன மாமன்” என்னை “சீன கெட்ட வார்த்தை” சொல்லி ..விரட்டி விட்டான்.. பின்னர் அனுபவஸ்தர்களிடம் கேட்டு தெரிந்தது..//

    இங்கு நான் ஒரு முறை கூட சென்றதில்லை அதனால் விவரமான தகல்வல்களை தர முடியவில்லை.. சரி இந்த கூண்டுக்குள்ள நிற்கிறது இங்கேயும் இருக்கா..நான் ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்ததுண்டு 😉

  6. //விஜய் ஆனந்த் said…
    :-)))….//

    என்னங்க விஜய் ஆனந்த் புன்னகையோட ஜெகதீசன் மாதிரி போய்ட்டீங்க

    ===================================================================

    //hari raj said…
    அருமையான பதிவு கிரி!!!//

    நன்றி ஹரிராஜ்

  7. //நான் ஆதவன் said…
    உங்கக் கூடவே வந்துப் பார்த்த மாதிரி இருந்தது கிரி….//

    ஆதவன் நீங்க சும்மா இது வார்த்தைக்கு கூறினீர்களா இல்லை உண்மையாகவே கூறினீர்களா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதை போன்ற உற்ச்சாகமூட்டும் வார்த்தைகள் தான் என்னை மேலும் எழுத வைக்கிறது.

    //அடுத்தது இறுதி பகுதியா??? அதுக்குள்ள முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எதிர்ப்பார்த்தேன்//

    நான் வந்து ஒரு வருடம் தான் ஆகிறது, அதனால் எனக்கு தெரிந்த ஓரளவு தகவல்களை கொடுத்துள்ளேன்.இங்கே பல வருடங்கள் இருப்பவர்கள் இன்னும் மேலும் சிறப்பாக எழுத வாய்ப்புண்டு

    உங்கள் ஆதரவிற்கு நன்றி

  8. //ராமலக்ஷ்மி said…
    சாலை விதிகளைப் பின் பற்றும் அவர்களது நேர்த்தியைப் பாராட்டியே ஆக வேண்டும். //

    சிறப்பாக பின்பற்றுகிறார்கள்

    //எல்லா நாட்டிலும்தான் விதிமுறைகள் உள்ளன. மற்றவர் யாரும் பின் பற்றாதிருக்கையில் நான் மட்டும் ஏன் அக்கறைப் பட வேண்டும் என்கிற எண்ணமே இங்கு மேலோங்கி நிற்பது மிக வருத்தமான விஷயம்//

    சரியாக கூறினீர்கள் ராமலக்ஷ்மி

    //தினமும் செய்தித்தாளைப் பிரிக்கையில் சாலை விபத்து பற்றிய செய்தி இல்லாத நாளை விரல் விட்டு எண்ணிடலாம்://

    இங்கும் விபத்துகள் நடைபெறுகின்றன ஆனால் மிக குறைவு

  9. //கார்க்கி said…
    கேலாங்கை பற்றி வெறும் இரண்டே வரிகள் சொன்னதில் எனக்கு வருத்தம். என்னால் அதைப் பற்றி 10 பதிவுகள்(உண்மைத்தமிழன் பதிவின் நீளத்திற்கு) போடமுடியும்.//

    மன்னிக்கவும் கார்க்கி, நான் இந்த பகுதிக்கு இதுவரை சென்றதில்லை, யாரும் இதை பற்றி அதிகம் கூறியும் கேட்டதில்லை (நண்பர்கள் வட்டமும் அப்படி). உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் ஒரு பதிவு போடலாமே! நானும் தெரிந்து கொள்வேன் மற்றவர்களுடன்.

    //புகழ்பெற்ற ப்ளாசா திரையரங்கை பற்றியும் சொல்லவில்லை. அங்கேதான் சுள்ளான், அலை போன்ற உன்னத உலக காவியங்களை மொத்தமே 6 பேரோடு பார்த்தேன்.//

    :-))))))))) இங்கும் போனதில்லை.

  10. //அவனும் அவளும் said…
    *******பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எந்த பாலியல் நோயும் தங்களுக்கு இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதல் வைத்து இருக்க வேண்டும் ******

    இது ரொம்ப அநியாயம்ங்க//

    நல்லது தானே! இந்த முறைகள் இருப்பதால் தான் அரசு இதை சட்டபூர்வம் ஆகி இருக்கிறது

    ================================================================

    //புதுகை.அப்துல்லா said…
    பாட்டிகள் வரையா? அப்ப சிகிரட் புடிகிறதுனால ஓன்னும் ஆகாதுங்குறீங்க!! :)))//

    ஹா ஹா ஹா அப்துல்லா, பாட்டிகள் வரை என்று தானே கூறினேன். அந்த பாட்டி பொண்ணா இருக்கும் போது இருந்து குடித்துட்டு இருக்குன்னு கூறவில்லையே ஹி ஹி ஹி ..ஒருவேளை இப்ப தான் தொடங்கி இருக்குமோ என்னவோ!

  11. //நான் ஆதவன் said…
    இப்படியெல்லாம் கேக்கப்படாது…அப்பறம் அழுதுடுவேன்….அவ்வ்வ்வ்வ்வ்
    (உண்மையாகச் சொன்னது தான் கிரி)//

    நன்றி ஆதவன், அடுத்த பகுதியையும் படியுங்கள் ஓரளவு சுவாராசியமாகவே இருக்கும்.

  12. வழக்கம் போல அருமையா எழுதியிருக்கீங்க கிரி.

    நீங்கள் சொன்வைகளோடு மேலும் சில தகவல்கள்.

    இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமருபவர்களும் கட்டாயம் இருபுறமும் கால்களை போட்டுக்கொண்டுதான் அமர வேண்டும். நம்ம ஊர்ல இருக்க மாதிரி டேங்க்ல குழந்தைய உக்காரவைக்கிறது, ஒரு பைக்ல மொத்த குடும்பமே போறது எல்லாம் இங்க முடியாது. குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லவே முடியாது.

    மேலும் கார்களிலும் குழந்தைகளுக்கு முன் சீட்டில் இடம் இல்லை. பின் சீட்டில்தான் அமர வேண்டும்.

  13. கிரி சும்மா புகுந்து புகுந்து அடிக்கறீங்க. ரொம்ப நல்லா இருக்கு 🙂 சிங்கையை ஒரு சுத்து சுத்தியாச்சு உங்களோட சேர்ந்து

  14. //ஒரு முறை நான் டாக்சியில் சென்ற போது அந்த வண்டி 100KM வேகத்தை தொட்ட போது அதில் அலாரம் அடித்தது, பின் ஓட்டுனர் வேகத்தை குறைத்து கொண்டார், அவரிடம் இது எப்படி இயங்குகிறது என்று கேட்ட போது அவர் தனக்கு தெரியாது என்று கூறி விட்டார்
    //

    அது ஸ்பீடோ மீட்டர் ல் ஒரு கருவி பொருத்தி இருப்பார்கள்.. 90 கீ.மீ மேல் சென்றால் எச்சரிக்கை செய்யும்.. மேலும், டாக்ஸி நிறுவனங்கள்.. அந்த டிஸ்ப்ளே கருவி மூலம் எச்சரிக்கை செய்வதும் உண்டு.. (புதிய ஹூண்டாய் டாக்ஸி களில்)

    //கேலாங் என்ற இடம் பாலியல் தொழிலாளர்களுக்கு மிக பிரபலம், சிங்கையில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது
    //

    இதிலே எல்லாமே ஒரு கணக்கு தான் அங்கே.. நுழையும் பொது வெளியே இருக்கும் “மாமனிடம்” $ 40 குடுத்து விடவேண்டும்.. பின்னர் கண்ணாடிக் கூண்டிற்குள் இருக்கும் “கிளிகளில்” ஒன்றை கொத்தி செல்லலாம்.. (நான் போனதில்லை.. ஒருமுறை வேடிக்கை பார்க்க சென்ற பொது.. “சீன மாமன்” என்னை “சீன கெட்ட வார்த்தை” சொல்லி ..விரட்டி விட்டான்.. பின்னர் அனுபவஸ்தர்களிடம் கேட்டு தெரிந்தது..

  15. உங்கக் கூடவே வந்துப் பார்த்த மாதிரி இருந்தது கிரி….
    அடுத்தது இறுதி பகுதியா??? அதுக்குள்ள முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எதிர்ப்பார்த்தேன்

  16. கேலாங்கை பற்றி வெறும் இரண்டே வரிகள் சொன்னதில் எனக்கு வருத்தம். என்னால் அதைப் பற்றி 10 பதிவுகள்(உண்மைத்தமிழன் பதிவின் நீளத்திற்கு) போடமுடியும். புகழ்பெற்ற ப்ளாசா திரையரங்கை பற்றியும் சொல்லவில்லை. அங்கேதான் சுள்ளான், அலை போன்ற உன்னத உலக காவியங்களை மொத்தமே 6 பேரோடு பார்த்தேன்.

  17. *******பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எந்த பாலியல் நோயும் தங்களுக்கு இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதல் வைத்து இருக்க வேண்டும் ******

    இது ரொம்ப அநியாயம்ங்க.

  18. புகை பிடிப்பதில் பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர், சிறிய பொண்ணுக முதல் பாட்டிகள் வரை

    //

    பாட்டிகள் வரையா? அப்ப சிகிரட் புடிகிறதுனால ஓன்னும் ஆகாதுங்குறீங்க!! :)))

  19. //ஆதவன் நீங்க சும்மா இது வார்த்தைக்கு கூறினீர்களா இல்லை உண்மையாகவே கூறினீர்களா என்று எனக்கு தெரியவில்லை//

    இப்படியெல்லாம் கேக்கப்படாது…அப்பறம் அழுதுடுவேன்….அவ்வ்வ்வ்வ்வ்
    (உண்மையாகச் சொன்னது தான் கிரி)

  20. எப்படிங்க கிரி! இவ்வளவு அருமையா எழுதிறீங்க.உண்மையிலேயே உங்கள் நடை எந்த வித தடுமாற்றம்ய்ம் இல்லாமல் சீராகச் செல்கிறது.ஹூம் …நானெல்லாம் எப்பங்க இந்த மாதிரி எழுதுறது..அது சரி சட்டியில இருந்தாத்தானே அகப்பையில் வரும்.வாழ்த்துக்கள்!.வாழ்க கிரி!.

  21. //Vidhya said…
    கிரி சும்மா புகுந்து புகுந்து அடிக்கறீங்க. ரொம்ப நல்லா இருக்கு :-)//

    நன்றி வித்யா

    ===================================================================

    //நல்லதந்தி said…
    உண்மையிலேயே உங்கள் நடை எந்த வித தடுமாற்றம்ய்ம் இல்லாமல் சீராகச் செல்கிறது.//

    நன்றி நல்லதந்தி. நான் படித்தது தமில் வழியில் அதனால் இருக்கலாம். உங்கள் வருகைக்கு நன்றி.

  22. //முரளிகண்ணன் said…
    கிரி, புட்டு புட்டு வைக்கிறீங்களே?//

    உங்களுக்கு இந்த விஷயங்கள் புதிது என்பதால் அவ்வாறு தோன்றுகிறது, மற்றபடி பெரிதாக எதுவும் சொல்லிவிடவில்லை

    ===============================================================

    //புதுகை.அப்துல்லா said…
    இதில் இருந்து அறியும் நீதி… வேலைக்கு போன இடத்தில் கிரி அண்ணே வேலையப் பார்க்காம நல்லா ஊரு சுத்தி இருக்காரு :)))//

    ஹா ஹா ஹா அப்துல்லா உண்மையை கூற வேண்டும் என்றால் நான் அதிக இடம் இன்னும் சுற்றவே இல்லை. மிக மிக குறைந்த இடங்களே போய் இருக்கிறேன்.

  23. //Anand – Ivan oru mokkai samy alla!!! said…
    My first visit to your blog through Tamilsh.com.
    Really very informative. Will be a regular visitor.//

    நன்றி ஆனந்த் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

    ==================================================================

    //jackiesekar said…
    மிக அற்புதமாக எழுத வருகிறது ரொம்ப எதெச்சையாகவே படித்தேன்//

    நன்றி ஜாக்கி சேகர்

    //இப்போது நான் சிங்கை வந்தாலும் எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்காது//

    🙂

    //ஹாரன் சத்தம் கேட்காதா? எனக்கு ஹாரன் அடிக்காமல் வாகனம் ஓட்ட தெரியாதே//

    ஹா ஹா ஹா ரொம்ப கஷ்டம்

    //ஆனால் எல்லோரும் சாலை விதியை கடை பிடித்தால் எதற்க்கு ஹாரன் எதற்க்கு?????????//

    உண்மை தான்

    //பால்ராஜ் நம்ம ஊரு சொர்கம்தான்//

    இப்படி சென்று உண்மையாகவே நம்மை சொர்க்கம் அனுப்பாமல் இருந்தால் சரி :-)))

    //கிரி இன்னும் நீங்க நிறைய எழுதலாம், அதுக்குள்ள முடிக்காதிங்க//

    எனக்கு தெரிந்தவை அவ்வளவு தான் ஜாக்கி சேகர், அவசியம் இல்லாமல் இழுத்தால் சுவாராசியம் இருக்காதே

    //பாலியல் இடத்தை பற்றி தொட்டும் படாமலும் சென்ற கிரி ஐயா அவர்களை வண்மையாக கண்டிக்கிறேன்//

    ஹா ஹா ஹா ஹா உண்மையில் நான் அங்கெல்லாம் சென்றதே இல்லை, போய் பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆவல், ஆனால் அதற்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது சென்று அங்குள்ள விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்

    உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு நன்றி ஜாக்கி சேகர்

  24. முரளிகண்ணன் said…
    கிரி, புட்டு புட்டு வைக்கிறீங்களே?

    //

    இதில் இருந்து அறியும் நீதி… வேலைக்கு போன இடத்தில் கிரி அண்ணே வேலையப் பார்க்காம நல்லா ஊரு சுத்தி இருக்காரு :)))

  25. நல்ல பதிவுகள் கிரி மற்றய பதிவுகளையும் படித்திருக்கிறேன் ….பல தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள்…

  26. //King… said…
    நல்ல பதிவுகள் கிரி மற்றய பதிவுகளையும் படித்திருக்கிறேன் ….
    பல தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள்…//

    நன்றி கிங் ரொம்ப நாட்களாக உங்களை காணவில்லை 🙂 உங்கள் வருகைக்கு நன்றி

    ==================================================================

    //குடுகுடுப்பை said…
    பின்னாடி சாட்டையில பட்டையெல்லாம் போடுவாங்களமே.//

    சாட்டை இல்லை பிரம்படி 🙂

  27. மிக அற்புதமாக எழுத வருகிறது ரொம்ப எதெச்சையாகவே படித்தேன். சிலாகித்து சொல்லும் எழுத்து நடை இல்லை எடன்றாலும் எல்லா வற்றையும் உற்ற பார்த்த எதையெல்லாம் இயன்றவரை பதிவில் சேர்க்க முடியுமோ அதை மிக அற்புதமாக சேர்த்து இருக்கிறீர்கள். அது மட்டும் இல்லாமல் இப்போது நான் சிங்கை வந்தாலும் எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்காது.
    ரொம் தேவையான பதிவும் கூட.. அதை விட நம் நாட்டோடு கம்பேர் பண்ஷவது ரொம்பவும் சிறப்பு. ஹாரன் சத்தம் கேட்காதா? எனக்கு ஹாரன் அடிக்காமல் வாகனம் ஓட்ட தெரியாதே, ஆனால் எல்லோரும் சாலை விதியை கடை பிடித்தால் எதற்க்கு ஹாரன் எதற்க்கு?????????

  28. //இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமருபவர்களும் கட்டாயம் இருபுறமும் கால்களை போட்டுக்கொண்டுதான் அமர வேண்டும். நம்ம ஊர்ல இருக்க மாதிரி டேங்க்ல குழந்தைய உக்காரவைக்கிறது, ஒரு பைக்ல மொத்த குடும்பமே போறது எல்லாம் இங்க முடியாது. குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லவே முடியாது.//

    பால்ராஜ் நம்ம ஊரு சொர்கம்தான்

  29. //அடுத்தது இறுதி பகுதியா??? அதுக்குள்ள முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எதிர்ப்பார்த்தேன்//

    கிரி இன்னும் நீங்க நிறைய எழுதலாம், அதுக்குள்ள முடிக்காதிங்க

  30. பாலியல் இடத்தை பற்றி தொட்டும் படாமலும் சென்ற கிரி ஐயா அவர்களை வண்மையாக கண்டிக்கிறேன்

  31. பின்னாடி சாட்டையில பட்டையெல்லாம் போடுவாங்களமே.

  32. // கீ – வென் said…
    ஆசியா பகுதியில் விபச்சாரம் எல்லாமே இந்த ஸ்டைல் ல் தான் நடக்கும்.. “Pay first and Enjoy” பாலிசி தான்..இதில என்ன safety ன்னா 2 வாரத்துக்கு ஒரு முறை மெடிக்கல் டெஸ்ட்..HIV டெஸ்ட் பண்ணியே ஆகணும்.. இல்லேன்னா சந்தைக்கு வரவே முடியாது..//

    தகவலுக்கு நன்றி வெங்கி

    =======================================================================

    //அப்ப தான் தெரிஞ்சுது, நம்மள மாதிரித்தான் ரொம்ப பேரு சும்மா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்காங்கன்னு//

    ஹா ஹா ஹா “அவனா நீ” என்று நினைத்தீர்களா :-))))

    //எனக்கு சிங்கப்பூர்ல நல்லா தெரிஞ்சது லிட்டில் இந்தியா, முஸ்தபா, பெடோக், சாங்கி விமான நிலையம் அவ்ளோதான்.//

    எனக்கு இவ்வளோ தான் தெரியும் இரண்டு இடங்கள் கூடுதல் அவ்வளவே

    //நீங்க வந்த ஒரு வருசத்துல இவ்ளோ தெரிஞ்சு வைச்சுருக்கீங்க//

    அப்படி எதுவும் இல்லை, நீங்கள் கூறும் சில விஷயங்கள் எனக்கு புதிது, ஒரு சில விசயங்களை நான் உன்னிப்பாக கவனிப்பேன் மற்றும் நண்பர்களிடத்தே கேட்டு தெரிந்து கொள்வேன். பல இடங்கள் பற்றி தெரியாதது எனக்கு உண்மையில் வருத்தமே.

    ஜோசப் பால்ராஜ் உங்கள் கருத்துக்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி

  33. இங்கு நான் ஒரு முறை கூட சென்றதில்லை அதனால் விவரமான தகல்வல்களை தர முடியவில்லை.. சரி இந்த கூண்டுக்குள்ள நிற்கிறது இங்கேயும் இருக்கா..நான் ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்ததுண்டு 😉

    ஆசியா பகுதியில் விபச்சாரம் எல்லாமே இந்த ஸ்டைல் ல் தான் நடக்கும்.. “Pay first and Enjoy” பாலிசி தான்..இதில என்ன safety ன்னா 2 வாரத்துக்கு ஒரு முறை மெடிக்கல் டெஸ்ட்..HIV டெஸ்ட் பண்ணியே ஆகணும்.. இல்லேன்னா சந்தைக்கு வரவே முடியாது.. மேலும் இது ரொம்ப இயந்திரத்தனமான வாழ்க்கை… பாவம் அந்த பெண்கள்.. மேலும் இந்தியா வில் (குறிப்பா தமிழ்நாட்டில்) இருந்து நிறைய பெண்கள் 14 நாள் விசாவில் அகேன்ட் மூலம் வந்து சம்பாதித்துக்கொண்டு பொய் விடுவார்கள்.. இவர்களை அந்த ஏரியா வில் காபி கடைகளுக்கு வெளியே, பஸ் ஸ்டாப் ல் காணலாம் .. (புல் மேக்-அப் ல்..). இவர்களிடம் மாட்டினால்.. “கும்மி” தான்.. அடுத்த முறை..”வொர்க் பெர்மிட்” புதுப்பிக்கும் மெடிக்கல் டெஸ்ட் ல் கோவிந்தா தான்..இதே ரூல்ஸ் “பங்களா தேஷி” பெண்களுக்கும் பொருந்தும்..(அவர்களும் 14 நாள் விசாவில்…வந்து..) எனவே.. இந்த ஏரியா வில் வீக் ஆன அன்பர்கள் ஜாக்கிரதை..!!

  34. கிரி, நான் சிங்கப்பூர் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆயிடுச்சு.

    ஆனா இதுல 90% பெடோக் ரிசர்வாயர் சாலை பகுதியிலயே போயிடுச்சு. என் வீடும், அலுவலகமும் 5 நிமிசம் நடக்குற தூரத்துல இருக்கதால எனக்கு வேற எங்கயும் போற வாய்ப்பே இல்ல. சந்தோசா தீவுக்கு நான் இங்க வந்து ஒரு வருசம் கழிச்சுத்தான் போனேன். இன்னும் நிறைய இடம் பார்த்ததே இல்ல. கிளார்கீ, போட் க்வே எல்லாம் போனா வாரம் தான் பேனேன்.

    என் கம்பெனியோட அமெரிக்க கிளையில இருக்க இந்தியர்கள் 5 பேரு போன வருசம் இங்க ஒரு மீட்டிங்கு வந்தப்ப கேலாங்க் போயே ஆகணும்னு கூட்டிட்டு போடான்னு கேட்டப்ப, நான் அங்க போனதுல்லன்னு சொன்னதுக்கு 10 நிமிசம் ஓயாம சிரிச்சாய்ங்க. அவனுங்களும் அங்க வேடிக்கை பார்க்கத்தான் போகனும்னு சொன்னதால நான் அவனுங்க கூட போயிட்டு வந்தேன். அப்ப தான் தெரிஞ்சுது, நம்மள மாதிரித்தான் ரொம்ப பேரு சும்மா சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்காங்கன்னு.

    எனக்கு சிங்கப்பூர்ல நல்லா தெரிஞ்சது லிட்டில் இந்தியா, முஸ்தபா, பெடோக், சாங்கி விமான நிலையம் அவ்ளோதான். விமான நிலையத்துக்கும் யாரையாவது வரவேற்க போறதுன்னா சந்தோசமா போவேன், ஆனா யாரவது ஊருக்குப் போறப்ப போனா நெம்ப மனசு கஷ்டமாயிடும், ஊரு ஞாபகம் வந்துரும்.

    நீங்க வந்த ஒரு வருசத்துல இவ்ளோ தெரிஞ்சு வைச்சுருக்கீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!