சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 3)

47
Little India

 

ந்தியர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பழக்கம் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவை கூறலாம். Image Credit

சிங்கையில் மற்ற இடங்களில் இதைப் போல மோசம் இல்லை

சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று.

சிங்கை முழுவதும் சுத்தம், போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட்டாலும் அவை எதுவுமே இங்கு கொஞ்சம் கூட பின்பற்றப்படுவதில்லை, அரசும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

அவரவர் இஷ்டத்திற்கு சாலையைக் கடந்து கொண்டு இருப்பார்கள், சாலை விதியா! கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்! (இந்த கொடுமையில் என் பங்கும் கொஞ்சம் உண்டு, தற்போது இல்லை).

மற்ற நாட்டினர் பார்த்தால் இவங்க எங்கே இருந்தாலும் இப்படி தான் போல என்று கிண்டலாக தான் நினைப்பார்கள், நம்மை பார்த்து அவர்களும் இங்கு சாலை விதிகளை மதிப்பதில்லை.

கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள் (இந்த பழக்கத்தை விடவே மாட்டாங்களா)

இந்தியர்கள் அனைவரும் (பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தினர்) கூடும் இடம் இங்கே தான்.

சனி ஞாயிறு இரு நாட்களும் கூட்டம் நிரம்பி வழியும், சென்னை டி நகர் தோற்றுப் போய் விடும்.

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான இடம் என்பதால், அனைவரும் விடுமுறை நாளில் பொருட்கள் வாங்க இங்கே குவிவார்கள்.

லிட்டில் இந்தியாவில் இருக்கும் போது நாம் வேறு ஒரு நாட்டில் இருக்கும் உணர்வே இருக்காது, சென்னை வீதிகளில் சுற்றி கொண்டு இருப்பது போலவே இருக்கும், எங்கு நோக்கினும் நம்மவர்களே இருப்பார்கள்.

லிட்டில் இந்தியா வந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் இருக்கும் டாமிட்ரி செல்ல இங்கேயே பேருந்து இருக்கும். இதில் கட்டணம் செலுத்தி சென்று கொள்ளலாம்.

இவ்வாறு செல்லும் பேருந்தில் தான் ஒருவர் அடிபட்டு சாக, கலவரம் ஆனது.

நண்பர்கள் அனைவரும் இங்கே வந்து கூடி தங்கள் விடுமுறை நாட்களை செலவிடுவார்கள் (சாப்பாடு சரக்கு என்று) சந்தோசமாக.

இங்கே சிங்டெல் என்ற தொலைபேசி நிறுவனம் மிகவும் பிரபலம், நம் ஊருக்கு சலுகை விலையில் மற்றும் பல கவர்ச்சி திட்டங்களுடன் தங்கள் சேவைகளை தருகிறார்கள்.

லிட்டில் இந்தியா வந்தால் இவர்கள் தரும் விளம்பர சீட்டை பெற்று கொள்ளாமல் நாம் லிட்டில் இந்தியா வை விட்டு வெளியேற முடியாது, அந்த அளவுக்கு நம் இடத்தில் விளம்பரம் செய்கிறார்கள்.

எங்கு சென்றாலும் யாரவது ஒருவர் விளம்பர காகிதத்தை வைத்து நின்று கொடுத்துக்கொண்டு இருப்பார்.

இவர்கள் தரும் சீட்டை மற்றும் பலர் தரும் விளம்பர சீட்டை கவலையே படாமல் வழியில், சாலையில் போட்டு விட்டு செல்வார்கள்.

நம் இடம் பழைய முறையில் நீண்ட காலமாக இருப்பதாலோ என்னவோ சாக்கடை செல்லும் இடங்களில் சிங்கப்பூரில் மற்ற இடங்களை போல அல்லாமல் இங்கு நாற்றம் அடிக்கும்

கூட்டம் அதிகம் இருப்பதாலோ இல்லை வேறு காரணமோ திருட்டுகளும் உண்டு. இங்கு வந்தால் மட்டும் கவனமாக இருப்பேன்.

சிங்கப்பூர் சுற்றுலா வரும் அனைத்து வெளிநாட்டினரும் லிட்டில் இந்தியா கண்டிப்பாக வருவார்கள். இங்கு தீபாவளி பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும்

நம் ஊரில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கும், கிடைக்காத பொருளே கிடையாது.

லிட்டில் இந்தியா என்றால் முஸ்தபா பல்பொருள் அங்காடி என்று கூறும் அளவிற்கு இந்த அங்காடி பிரபலம்

இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை, ஒருமுறையாவது இங்கு வராத மற்றும் பொருள் வாங்காத இங்குள்ள எந்த ஒரு இந்தியனும் இருக்கவே முடியாது.

அங்காடியின் அளவு மிக மிக மிகப் பெரியது, பைக் கார் தவிர அனைத்துமே இங்கு கிடைக்கும்.

இங்குத் திருட்டு பயத்தால் நாம் போகும் முன்பு நம் உடமைகளை பாதுகாவலரிடம் கொடுத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

இல்லை என்றால் அவர்களே நம் பைகளைக் கட்டிக் கொடுத்து விடுவார்கள். இது போல ஒரு நிலையை நான் வேறு எங்கும் காணவில்லை.

சனி ஞாயிறு கிழமைகளில் இந்த பக்கம் எட்டியே பார்க்கக் கூடாது அதுவும் குறிப்பாக மாலை நேரங்களில், கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம்.

இந்த அங்காடி இருக்கும் இடத்தைச் சுற்றி ரங்கநாதன் தெருவைப் போல எங்குப் பார்த்தாலும் மனித தலைகளாக தெரியும், தாறுமாறான கூட்டமாக இருக்கும்.

இந்தியர்கள் மற்றும் மற்ற நாட்டினர்.

இந்த அங்காடி 24 மணி நேர சேவை. எப்போது வேண்டும் என்றாலும் நாம் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்

முஸ்தபா போல அடையாளம் கூற அனைவரும் பயன்படுத்தும் இன்னொரு இடம் “தெக்கா”, இங்கும் பல கடைகள் உண்டு, குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும்.

அனைத்துமே அருகருகே உள்ள இடங்களே!

நம்ம ஊரில் இருக்கும் அனைத்து உணவகங்களும் இங்கே உண்டு சரவண பவன், அஞ்சப்பர், கோமளாஸ், முருகன் இட்லி, வசந்த பவன், ஆனந்த பவன் என்று ஒன்று விடாமல்.

நம்ம ஊர் அளவிற்கு இங்கு சுவை இல்லை.

நான் சிங்கப்பூர் என்பதால் பல வித கற்பனையோடு சாப்பிட்டேன், எந்த வித சுவையும் இல்லாமல் கொடுமையாக இருக்கிறது. நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!

இதில் சரவண பவன் மற்றும் முருகன் இட்லி பரவாயில்லை, அசைவத்தில் அஞ்சப்பர் பரவாயில்லை என் அனுபவத்தில்.

சிங்கையில் இந்திய உணவகங்கள் தவிர வேறு எங்கேயும் குடிக்க தண்ணீர் தர மாட்டார்கள், அப்ப என்ன விக்கிட்டு சாவுறதான்னு கேட்கறீங்களா! 🙂 .

தண்ணீருக்கும் காசு கொடுக்கணும் அவ்வ்வ் என்னையா இது! கொடுமையா இருக்குன்னு சொல்றீங்களா! அது அப்படி தான்.

இதுல நம்ம உணவகங்கள் வள்ளல்கள்.

அதுவும் விரைவு உணவகங்களில் வாய்ப்பே இல்லை, கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் வாங்கியே ஆக வேண்டும்

இங்கு அனைத்து வகை விலையிலும் பொருட்கள் இருக்கும், ஒரு சில பொருட்களை முஸ்தபாவில் வாங்காமல் வேறு இடங்களில் வாங்கினால் கொஞ்சம் சேமிக்கலாம்.

இங்கு தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் கடை வைத்து இருக்கிறார்கள், லிட்டில் இந்தியா ஒரு முக்கிய விற்பனை இடம் என்றால் மிகையாகாது

நம்ம ஊர் குமுதம் விகடன் துக்ளக் குங்குமம் என்று அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்

வெளிநாட்டினர் இங்கே அதிகளவில் பொருட்கள் வாங்குவார்கள்

இங்கே முடிவெட்ட குறைந்த பட்சமே 6 வெள்ளி, சிங்கையில் அதிகபட்சமாக 30 வெள்ளி வரை பார்த்து இருக்கிறேன் [கொடுத்தது இல்லை 😀 ]. சீன நாவிதரிடம் தலையை கொடுத்தால் அவங்க வெட்டுவதுதான் கட்டிங்.

அவங்க பேசுவது ஒன்றும் புரியாது, பலி ஆடு மாதிரி தலைய கொடுக்க வேண்டியது தான். குத்து மதிப்பா வெட்டு வாங்கிட்டு வர வேண்டியது தான்

இங்கு பிரபலமான அம்மன், பெருமாள் கோவில் மற்றும் மசூதி உண்டு, இவை தவிர சிங்கை முழுவதும் பல கோவில்கள் உள்ளன.

டோபி காட் என்ற இடத்தில் உள்ள முருகன் கோவில் ரொம்ப பிரபலம்.

அதுவும் தை பூசம் போது காவடி மற்றும் அலகு ஆட்டம் என்று நம்ம ஊரை போலவே களை கட்டி விடும்

வேலை இருக்குதோ இல்லையோ சும்மாவாவது வார இறுதி நாட்களில் இங்கு வருபவர்கள் உள்ளனர்.

இந்திய கூலித் தொழிலாளர்களுக்கு லிட்டில் இந்தியாவே சொர்க்கம், குறைவான விலையில் அனைத்தையும் பெற முடியும், வார இறுதி நாட்களில் இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

இங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கும், அதுவும் குறிப்பாக முஸ்தபா சென்டர் சுற்றி உள்ள பகுதிகளில், பழைய சாலைகள் என்பதால் அகலம் குறைவாக தான் இருக்கும் அதுவும் ஒரு காரணம்

இங்கு சில குறைகள் இருந்தாலும் எவருக்கும் தவிர்க்க முடியாத பகுதி என்று கூறினால் அது மிகை அல்ல

சிங்கப்பூர் கட்டுப்பாடுகள் மற்றும் சில பிரபல இடங்கள் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

Updated on 20-02-2014

இரண்டாம் பாகம் நான்காம் பாகம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

47 COMMENTS

  1. இப்ப லிட்டில் இந்தியாப்பகுதி & சிராங்கூன் ரோடு எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. முந்தி அதாவது 1982லே இப்ப தெக்கா முன்னால் மார்கெட் இருக்கு பாருங்க அங்கே கட்டணக்கழிப்பறை ஒன்னு இருந்துச்சு.

    அவசரமுன்னா அங்கேதான் ஓடணும். குழந்தையைக் கையில் வச்சுக்கிட்டுப் பட்ட அவஸ்தையெல்லாம் சொல்லி மாளாது. இப்போ அட்லீஸ்ட் சில மால்களாவது எங்கூர் தரத்துக்கு வந்துருக்கு.

    ஞாயித்துக்கிழமை மட்டும் அந்தப் பக்கம் போயிறாதீங்க. அதுவும் பிற்பகல் நேரமுன்னா……..

    தேனீக்கூட்டைக் கலைச்சுப்போட்டச் சத்தம். முக்காலே மூணுவீசம் பங்களாதேஷ், பாகிஸ்தான் தொழிலாளர்கள்தான் அங்கே.

    தமிழ்க்காரக் கூலி ஆட்கள் நம்ம கோயிலைச் சுத்தி உக்கார்ந்துருப்பாங்க.

    அவுங்களோடு ஒரு சமயம் பேசித்தான் பாருங்களேன்.

    ஐயோன்னு இருக்கும் நமக்கு.

  2. //துளசி கோபால் said…
    அவசரமுன்னா அங்கேதான் ஓடணும். குழந்தையைக் கையில் வச்சுக்கிட்டுப் பட்ட அவஸ்தையெல்லாம் சொல்லி மாளாது//

    இப்போதெல்லாம் நன்றாக உள்ளது மேடம்

    //அவுங்களோடு ஒரு சமயம் பேசித்தான் பாருங்களேன்.
    ஐயோன்னு இருக்கும் நமக்கு.//

    உண்மை தான் மேடம் ரொம்ப பாவம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி

  3. //மோகன் Mohan said…
    அருமையான பதிவு//

    நன்றி மோகன்

    //ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் மாதிரினு சொல்லுங்க!//

    அதே

    //அப்போ 24 மணி நேர போக்குவரத்து வசதி உண்டா?//

    ரயில் பேருந்து(சிறப்பு பேருந்து தவிர) கிடையாது, டாக்சியில் போய் கொள்ளலாம்

    //சரவண பவன் கூடவா?//

    இங்கு இரண்டு சரவண பவன் இருப்பதாக கூறுவார்கள், நான் பழையது சென்றது இல்லை, புதியது தான் சென்றுள்ளேன்..வார நாட்களில் நன்றாக இருக்கிறது வார இறுதியில் சுவை வேறுபடுகிறது, (விலை அதிகம்)

    //நம் நாட்டைப் போன்று வேறு யாரும் தண்ணீரை உபயோகிப்பதில்லை என்பது என் கருத்து//

    இருக்கலாம் நான் வேறு நாட்டை பற்றி அறிந்ததில்லை எனவே நம்முடி நாட்டை ஒப்பிட்டே கூறினேன்.

  4. //வெண்தாடிதாசன் said…
    எல்லா HDB liftகளிலும் எச்சில் துப்புவர்களை கண்டதில்லையா? இவ்வளவு ஏன் சில HDB liftகளில் ஒன்னுக்கு அடிக்கின்றார்கள் என்பதற்காக urine detector/camera உள்ளது. எனவே இந்தியர்களை/தமிழர்களை மட்டும் குறை சொல்லவேண்டாம்.//

    வெண்தாடி தாசன்! என்னை திட்டுறதுன்னே கங்கணம் கட்டிட்டு வருவீர்களா! நான் தற்போது லிட்டில் இந்தியாவை பற்றி கூறி உள்ளேன் மற்ற இடங்களை பற்றி கூறும் போது கண்டிப்பாக கூறுவேன், இந்தியர்களை/தமிழர்களை குறை கூறவில்லை உண்மையை தான் கூறினேன், இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது அதை நாகரீகம் கருதி கூறவில்லை.

    //அப்படியே ஞாயிறுக்கிழமைகளில் Rochor Center, Golden Mile, Lucky Plaza ஆகிய இடங்களுக்கு சென்று பிற இன மக்களின் கூட்டத்தையும், கொட்டத்தையும் கண்டு வாருங்கள்.//

    நீங்கள் கூறுவது உண்மை தான், கேள்வி பட்டு இருக்கிறேன் பார்த்தது இல்லை.

  5. //விஜய் ஆனந்த் said…
    சிங்கப்பூர் பத்தி அருமையா பதிவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க…3 பாகங்களையும் இப்பதான் ஒண்ணா படிச்சேன்!!!!
    தொடர்ந்து கலக்கவும்!!!//

    நன்றி விஜய் ஆனந்த், நான் இந்த ஒரு வருடத்தில் தெரிந்து கொண்டதையே கூறுகிறேன், அனுபவம் இருப்பவர்கள் இன்னும் அதிகம் கூறலாம்.

  6. //ஜெகதீசன் said…
    லிட்டில் இந்தியா மட்டுமல்ல.. அனைத்துப் புராதானப் பகுதிகளும் இப்படித்தான் இருக்கும்..//

    இருக்கலாம் அதனாலே நானும் குறிப்பிட்டேன்

    //இங்கெல்லாம் மற்ற பகுதிகளை விட கொஞ்சம் சுகாதாரம் குறைவு தான்..//

    கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் பார்த்தது இல்லை.

    //அடுத்த 7 நாட்கள் உழைக்க ஊக்கம் தருவது அந்த ஞாயிறு மாலைச் சந்திப்புகளும் கொண்டாட்டங்களும் தான்…//

    சந்தேகமே இல்லை. அவர்களுக்கு இது ஒன்றே மகிழ்ச்சி தரும் இடங்கள்

    //ஜெகதீசன் said…
    செல்லாஸ் உணவகத்தில் சாப்பிட்டுப் பாருங்க… தரமும் சுவையும் நன்றாகவே இருக்கிறது…
    :))//

    ஒருமுறை எப்போதோ சாப்பிட்டு இருக்கிறேன் நினைவில்லை

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி ஜெகதீசன்

    ===================================================================

    //share thiva said…
    YENAKU ONNUM PURIYALA//

    நீங்க நேரா மூன்றாவது பாகத்திற்கு வந்ததால் இருக்கும், முதல் இரண்டு பாகங்களை படித்து விட்டு வாருங்கள்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி திவா

  7. லிட்டில் இந்தியா பற்றி விவரமான பதிவு.

    விஜய் ஆனந்த் said…
    //சிங்கப்பூர் பத்தி அருமையா பதிவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க…//
    //தொடர்ந்து கலக்கவும்!!!//

    வழிமொழிகிறேன்.

  8. //ஜோ / Joe said…
    அவர்கள் மேல் இந்த மேல்தட்டு பார்வையும் ,ஏளனமும் தேவையற்றது//

    அவர்களை கிண்டலாக எந்த இடத்திலும் நான் கூறவில்லை, கூட்டம் அதிகம் என்றே கூறினேன்.

    //நாலு பேரிடம் பேசிப்பாருங்கள் .அப்போது அவர்கள் கஷ்டம் தெரியும்.//

    நானே சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவன் தான் என்னுடைய முந்தைய பதிவுகளை படித்து பாருங்கள். கஷ்டம் என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். அனைவரையும் திருப்தி படுத்தும் படி யாராலும் பதிவு போட முடியாது.

  9. //ராமலக்ஷ்மி said…
    லிட்டில் இந்தியா பற்றி விவரமான பதிவு.

    விஜய் ஆனந்த் said…
    //சிங்கப்பூர் பத்தி அருமையா பதிவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க…//
    //தொடர்ந்து கலக்கவும்!!!//

    வழிமொழிகிறேன்.//

    நன்றி ராமலக்ஷ்மி

    =====================================================================

    //அசைவ சாப்பாடு சகுந்தலாவில் சாப்பிட்டு பாருங்கள், அதுவும் நல்லாத்தான் இருக்கு//

    அங்கும் எப்பாவது சாப்பிடுகிறேன்

    //சைவம் இப்ப முருகன் இட்லிக்கடைத்தான். வேற எங்கயும் நல்லா இல்ல//

    இது புதிதாக இருப்பதால் இருக்கும் இன்னும் கொஞ்சம் நாள் போனால் மற்ற உணவகங்களை போல ஆகி விடும் என்றே நினைக்கிறேன்.

  10. //ஜோ / Joe said…
    கண்டிப்பாக என்னை நீங்கள் திருப்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை//

    ஜோ எப்போதும் ஏன் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள், நான் எல்லோரையும் என்றது உங்களை அல்ல அனைத்து தரப்பு மக்களை.

    //இனிமேல் இங்கு கருத்து சொல்லாமல் இருப்பது உத்தமம் என நினைக்கிறேன் .நன்றி!//

    எதற்கு தேவை இல்லாமல் கோப படுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் விருப்பம் எதுவோ அதன்படி செய்யுங்கள்.

  11. //வெண்தாடிதாசன் said…
    உங்களுடைய பதிவில் பின்னூட்டம் இடுவது இதுவே கடைசி.//

    உங்கள் விருப்பம் வெண்தாடி தாசன்.

  12. பதிவு அருமையாக உள்ளது மூன்று பாகங்களையும் படித்து விட்டேன் அடுத்த பாகத்திற்காக
    காத்திருகிறேன் …..

  13. கிரி, 2000ம் ஆண்டு; நான் வேலை நிமித்தமாக hotel shangri-la விற்கு வந்திருந்தேன். அப்போது little india செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சுற்றுலா வழிகாட்டியாக வந்தவர் ஒரு சீனர். அந்த பேருந்தில் நானும் என்னுடன் பணிபுரியும் நண்பரும் மட்டுமே இந்தியர்கள்.
    அங்கே இருந்த எச்சில்(பான் கறை)கறையைக் காட்டி “சிங்கப்பூரில் இந்த இடம் தவிர வேறு எங்கும் இது போல் காணக் கிடைக்காது” என்றார். அனைவரும் எங்களைப் பார்த்து நகைத்தது போன்ற உணர்வு.
    முஸ்தபாவில் வாங்கிய நகைகள் அருமை(சிங்கையில் தங்கமும் மிக சுத்தமாமே!)

  14. //நிழல் said…
    பதிவு அருமையாக உள்ளது மூன்று பாகங்களையும் படித்து விட்டேன் அடுத்த பாகத்திற்காக
    காத்திருகிறேன் //

    நன்றி நிழல் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

    =====================================================================

    //piratheepan said…
    A1(mustafa அருகில் இருக்கும் மசூதிக்கு பின்னால் இருக்கின்றது) லும் சாப்பாடு நல்லா இருக்கும்//

    தகவலுக்கு நன்றி piratheepan .உங்கள் வருகைக்கும் நன்றி.

  15. //Vijay said…
    அங்கே இருந்த எச்சில்(பான் கறை)கறையைக் காட்டி “சிங்கப்பூரில் இந்த இடம் தவிர வேறு எங்கும் இது போல் காணக் கிடைக்காது” என்றார்//

    பான் கறை பற்றி எனக்கு தெரியவில்லை, ஆனால் எச்சில் துப்புவது சாதாரணமாக வெண்தாடிதாசன் அவர்கள் கூறியது போல HDB மின் தூக்கிகளில் இருக்கும் மற்றும் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

    //சிங்கையில் தங்கமும் மிக சுத்தமாமே!//

    கேள்வி பட்டு இருக்கிறேன் உண்மையா என்று தெரியவில்லை.

  16. தங்கம் முஸ்தாஃபாவில் வாங்குவதைவிட பது பஹாத் ன்னு ஒரு சீனக்கடையில் வாங்குவது இன்னும் நல்லது. நாம் தெரிவு செய்யும் டிஸைனை அப்பவே ஒரு மூணு நாலுமணி நேரத்தில் செஞ்சே கொடுப்பாங்க.

  17. அருமையான பதிவு

    //லிட்டில் இந்தியா என்றால் முஸ்தபா பல்பொருள் அங்காடி என்று கூறும் அளவிற்கு இந்த அங்காடி பிரபலம்
    இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை, ஒருமுறையாவது இங்கு வராத மற்றும் பொருள் வாங்காத இங்குள்ள எந்த ஒரு இந்தியனும் இருக்கவே முடியாது//
    ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் மாதிரினு சொல்லுங்க!

    //இந்த அங்காடி 24 மணி நேர சேவை. எப்போது வேண்டும் என்றாலும் நாம் சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம் //
    அப்போ 24 மணி நேர போக்குவரத்து வசதி உண்டா?

    //நம்ம ஊரில் இருக்கும் அனைத்து உணவகங்களும் இங்கே உண்டு சரவண பவன், அஞ்சப்பர், கோமளாஸ் முருகன் இட்லி, வசந்த பவன் ஆனந்த பவன் என்று ஒன்று விடாமல். அனைத்துமே படு கேவலமாக இருக்கும். வாங்கும் பணத்திற்கு மனசாட்சியே இல்லாத தரத்தில் தருவார்கள். சுவையே இருக்காது
    நான் சிங்கப்பூர் என்பதால் பல வித கற்பனையோடு சாப்பிட்டேன், எந்த வித சுவையும் இல்லாமல் கொடுமையாக இருக்கிறது. நம்ம ஊர் நம்ம ஊர் தாங்க!//
    சரவண பவன் கூடவா?
    //அதுவும் விரைவு உணவகங்களில் வாய்ப்பே இல்லை, கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் வாங்கியே ஆக வேண்டும்//
    நம் நாட்டைப் போன்று வேறு யாரும் தண்ணீரை உபயோகிப்பதில்லை என்பது என் கருத்து
    மோகன்

  18. //கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள் (இந்த பழக்கத்தை விடவே மாட்டாங்களா)//

    எல்லா HDB liftகளிலும் எச்சில் துப்புவர்களை கண்டதில்லையா? இவ்வளவு ஏன் சில HDB liftகளில் ஒன்னுக்கு அடிக்கின்றார்கள் என்பதற்காக urine detector/camera உள்ளது. எனவே இந்தியர்களை/தமிழர்களை மட்டும் குறை சொல்லவேண்டாம்.

    அப்படியே ஞாயிறுக்கிழமைகளில் Rochor Center, Golden Mile, Lucky Plaza ஆகிய இடங்களுக்கு சென்று பிற இன மக்களின் கூட்டத்தையும், கொட்டத்தையும் கண்டு வாருங்கள்.

  19. சிங்கப்பூர் பத்தி அருமையா பதிவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க…3 பாகங்களையும் இப்பதான் ஒண்ணா படிச்சேன்!!!!

    தொடர்ந்து கலக்கவும்!!!

  20. லிட்டில் இந்தியா மட்டுமல்ல.. அனைத்துப் புராதானப் பகுதிகளும் இப்படித்தான் இருக்கும்..

    இந்தியருக்கு லிட்டில் இந்தியா,
    சீனர்களுக்கு சைனாடவுன்,
    மலேயருக்கு அரப் ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்…
    இங்கெல்லாம் மற்ற பகுதிகளை விட கொஞ்சம் சுகாதாரம் குறைவு தான்..

    *****************
    தொழிலாளர்களைப் பொருத்தவரை,
    வாரத்தின் 7 நாட்களும் உழைத்துக் களைத்த அவர்களின் உள்ளமும், உடலும், அடுத்த 7 நாட்கள் உழைக்க ஊக்கம் தருவது அந்த ஞாயிறு மாலைச் சந்திப்புகளும் கொண்டாட்டங்களும் தான்…

  21. ஞாயிறன்று அங்கே வரும் மக்கள் நம்மைப் போல குளிர்சாதன அறையில் உக்கார்ந்து பொட்டி தட்டுபவர்கள் அல்ல ..லட்ச லட்சமாக கமிஷன் அழுது வெறும் 16 டாலர் நாள் சம்பளத்தில் ,தினமும் ஓவர் டைம் பார்த்து ,உழைத்து ஓடாகி ,ஞாயிறன்று கிடைக்கும் ஒரு நாள் ஓய்வில் ,தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று மற்ற நண்பர்களையும் ,ஊர்க்காரர்களையும் காண அனுமதி இல்லாததால் ,ஒரு பொது இடம் தேடி இங்கே வந்து கூடுகிறார்கள் .

    அவர்கள் மேல் இந்த மேல்தட்டு பார்வையும் ,ஏளனமும் தேவையற்றது .

    நாலு பேரிடம் பேசிப்பாருங்கள் .அப்போது அவர்கள் கஷ்டம் தெரியும்.

  22. நான் வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியா பக்கம் செல்வதை முடிந்த அளவு தவிர்த்துவிடுவேன். வெள்ளி, சனி மாலைகளில் நீங்கள் முஸ்தபாவில் இருந்து டாக்ஸி எடுக்க நினைத்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும்.

    அசைவ சாப்பாடு சகுந்தலாவில் சாப்பிட்டு பாருங்கள், அதுவும் நல்லாத்தான் இருக்கு.

    சைவம் இப்ப முருகன் இட்லிக்கடைத்தான். வேற எங்கயும் நல்லா இல்ல.

    துளசி மேடம்,
    சிங்கப்பூர்ல பங்களாதேஷ் ஆட்கள் தான் உண்டு. பாகிஸ்தான் ஆட்கள் இங்க கிடையாது.

  23. //அனைவரையும் திருப்தி படுத்தும் படி யாராலும் பதிவு போட முடியாது.//
    கண்டிப்பாக என்னை நீங்கள் திருப்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை .அதை நான் எதிர் பார்க்கவும் இல்லை .ஆனால் ‘தகவல்கள்’ என்ற ரீதியில் நீங்கள் பதிவிடும் போது , குத்து மதிப்பாக உங்கள் ஊகத்தின் அடிப்படையில் எழுதுவதால் மற்றவர்கள் தவறான தகவல்களை பெறுகிறார்கள் .

    உதாரணமாக..

    //இங்கு வேலை செய்யும் கூலி தொழிலாளர்களை அவர்களுடைய நிறுவனமே பேருந்தில் அழைத்து வந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அழைத்து சென்று விடும் //

    இப்படி யார் சொன்னது ? ஜூராங் ,பூன் லே பகுதிகளில் இருக்கும் உழைப்பாளர் விடுதிகளில் இருந்து லிட்டில் இந்தியாவுக்கு சில தனியார் பேருந்துகளை இயக்குகிறார்கள் .அந்த விடுதியில் உள்ளவர்கள் காசு கொடுத்து அதில் ஏறி செல்கிறார்கள் .நிறுவனம் ஒன்றும் அவர்களை அழைத்து செல்வதில்லை .

    இனிமேல் இங்கு கருத்து சொல்லாமல் இருப்பது உத்தமம் என நினைக்கிறேன் .நன்றி!

  24. கருத்து சொல்வதே தப்பா?. பிற இடங்களை கண்டதில்லையா என்று கேட்பது தப்பா?. உடனே திட்டுகின்றீர்கள் என்று பழைய கதையை ஆரம்பிப்பது சரியில்லை. உங்களுடைய பதிவில் பின்னூட்டம் இடுவது இதுவே கடைசி. சந்தோஷம்தானே :-)))

  25. //துளசி கோபால் said…
    தங்கம் முஸ்தாஃபாவில் வாங்குவதைவிட பது பஹாத் ன்னு ஒரு சீனக்கடையில் வாங்குவது இன்னும் நல்லது. நாம் தெரிவு செய்யும் டிஸைனை அப்பவே ஒரு மூணு நாலுமணி நேரத்தில் செஞ்சே கொடுப்பாங்க.//

    தகவலுக்கு நன்றி மேடம்

    =====================================================================

    //அறிவன்#11802717200764379909 said…
    கிரி,திரும்பவும் நெருப்பு நரியல் உஙக பதிவு தெரியவில்லை.//

    அறிவன் நீங்கள் நெருப்பு நரி 3.0.1 நிறுவினால் சரியாக தெரியும்

  26. A1(mustafa அருகில் இருக்கும் மசூதிக்கு பின்னால் இருக்கின்றது) லும் சாப்பாடு நல்லா இருக்கும்.

  27. //ஆராய்ச்சி !! said…
    முக்கியமான விசயமே சரவணா பவன்ல பீர் கூட கிடைக்கும்பா//

    அப்படி எதுவும் நான் பார்க்கவில்லை. உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    =================================================================

    //nawab said…
    fine and amazing inshaallah i will try update about saudi arabia soon//

    எழுதுங்கள் தெரிந்து கொள்கிறோம்

  28. //முரளிகண்ணன் said…
    கிரி, என்னப்பா ஆவலை அதிகப்படுத்திட்டு இப்ப மண்ணள்ளி போடுறீங்க?//

    :-))) அதெல்லாம் எதுவும் இல்லைங்க முரளிக்கண்ணன் உங்கள் எதிர் பார்ப்பு வீண்போகாது. இதெல்லாம் சிறு சிறு குறைகள்

    =====================================================================

    //bala said…
    namavarkalai patriyea kurai sollikodurikreerkal. MRT il oru indian vanthu amarthal elunthupogum chinarkalai parthathilaiya neengal.naam BUSil yerinal yetho theendathakathavanai phol parkum malayarkalai parthathilaiyathangal.naan avarkalin velai vaipai payapaduthi kondom endru poramaiyudan parkum singai thamilarkalai parthathilaya thangal.//

    பாலா இது வரை நீங்கள் கூறியது போல எனக்கு நேர்ந்தது இல்லை. உங்கள் வருகைக்கு நன்றி

  29. namavarkalai patriyea kurai sollikodurikreerkal. MRT il oru indian vanthu amarthal elunthupogum chinarkalai parthathilaiya neengal.naam BUSil yerinal yetho theendathakathavanai phol parkum malayarkalai parthathilaiyathangal.naan avarkalin velai vaipai payapaduthi kondom endru poramaiyudan parkum singai thamilarkalai parthathilaya thangal.

    “NAAM VALARTHA THEENDAMAIYAI
    VALIYODU UNARTHEAN
    PIRANATAN ENAI KARUPAN ENDRU
    OTHUKIYA THARUNATHIL”

    NANDI

    BALA

  30. சனி.ஞாயிறு க்கு முஸ்தாபா பக்கத்தில் வாடகை வண்டிக்கு அதுவும் சாயங்கால வேளையில் நின்று பார்க்கவும்…வண்டி கிடைத்தால் நீங்கள் அன்று அதிர்ஷ்டக்காரர் தான்.இப்போது MRT இருப்பதால் அவ்வளவு பிரச்சனையாக இல்லை.
    முஸ்தாபா – சாமான்கள் வாங்க நிறைய பேர்கள் வருகிறார்கள்….உண்மை தான்,என் பார்வையில் மிகவும் பாதுகாப்பு குறைவான இடமாக தோன்றுகிறது.இடைவெளி குறைவான பாதை.ஒரு தீ விபத்து போதும் பலரை கூண்டோடு இந்தியா அல்லது அவரவர் ஊருக்கு அனுப்ப.மிட் நைடில் போனால் சுகமாக பர்சேஸ் செய்யலாம்.கணினி சாமான்கள் லிம் சிம் ஸ்கொயரில் மலிவாக கிடைக்கிறது.

  31. //வடுவூர் குமார் said…
    சனி.ஞாயிறு க்கு முஸ்தாபா பக்கத்தில் வாடகை வண்டிக்கு அதுவும் சாயங்கால வேளையில் நின்று பார்க்கவும்…வண்டி கிடைத்தால் நீங்கள் அன்று அதிர்ஷ்டக்காரர் தான்//

    :-))) எனக்கு எப்போதும் 23 எண் பேருந்து தான்

    //என் பார்வையில் மிகவும் பாதுகாப்பு குறைவான இடமாக தோன்றுகிறது//

    நீங்க கூறுவது சரிதான். நானும் இதை யோசித்ததுண்டு..அதுவும் கீழ் தளம் சென்றால் நீங்கள் கூறுவது போல ஏதாவது பிரச்சனை என்றால் ரொம்ப ரொம்ப சிரமம்

    //நைடில் போனால் சுகமாக பர்சேஸ் செய்யலாம்//

    உண்மைதான். நடைமுறையில் சிக்கல் என்பதால் நான் ஷிப்ட் மாறி இருந்தால் திங்கள் காலையில் சென்று வந்து விடுவேன்

    //கணினி சாமான்கள் லிம் சிம் ஸ்கொயரில் மலிவாக கிடைக்கிறது.//

    இது பற்றி வரும் பதிவுகளில் கூறுவேன்..நன்றி

  32. //ஜோதிபாரதி said…
    கட்டுமானத்துறை மற்றும் கப்பல் பட்டறையில் பணிபுரியும் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உக்காந்திருப்பாங்க.//

    ஜோதிபாரதி உங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி

    =================================================================

    //ஓவியா said…
    சிங்கப்பூர் பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது.//

    நன்றி ஓவியா

  33. //துளசி கோபால் said…
    இப்ப லிட்டில் இந்தியாப்பகுதி & சிராங்கூன் ரோடு எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. முந்தி அதாவது 1982லே இப்ப தெக்கா முன்னால் மார்கெட் இருக்கு பாருங்க அங்கே கட்டணக்கழிப்பறை ஒன்னு இருந்துச்சு.

    அவசரமுன்னா அங்கேதான் ஓடணும். குழந்தையைக் கையில் வச்சுக்கிட்டுப் பட்ட அவஸ்தையெல்லாம் சொல்லி மாளாது. இப்போ அட்லீஸ்ட் சில மால்களாவது எங்கூர் தரத்துக்கு வந்துருக்கு.

    ஞாயித்துக்கிழமை மட்டும் அந்தப் பக்கம் போயிறாதீங்க. அதுவும் பிற்பகல் நேரமுன்னா……..

    தேனீக்கூட்டைக் கலைச்சுப்போட்டச் சத்தம். முக்காலே மூணுவீசம் பங்களாதேஷ், பாகிஸ்தான் தொழிலாளர்கள்தான் அங்கே.

    தமிழ்க்காரக் கூலி ஆட்கள் நம்ம கோயிலைச் சுத்தி உக்கார்ந்துருப்பாங்க.

    அவுங்களோடு ஒரு சமயம் பேசித்தான் பாருங்களேன்.

    ஐயோன்னு இருக்கும் நமக்கு.

    //தமிழ்க்காரக் கூலி ஆட்கள் நம்ம கோயிலைச் சுத்தி உக்கார்ந்துருப்பாங்க.//

    துளசியம்மா கருத்துப் பகிர்வுக்கு நன்றி!

    கட்டுமானத்துறை மற்றும் கப்பல் பட்டறையில் பணிபுரியும் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உக்காந்திருப்பாங்க.

  34. //குசும்பன் said…
    அருமையா சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் கிரி//

    நன்றி குசும்பன். நீங்கள் உங்கள் இடம் பற்றிய செய்தியும் கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம்

    ===================================================================

    //hari raj said…
    அருமையான பதிவு கிரி!!!//

    நன்றி ஹரிராஜ் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

  35. //jackiesekar said…
    rommba arputhamaana pathiu//

    ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க ஜாக்கி சேகர் உங்கள் வருகைக்கு நன்றி.

    ==========================================================================

    //Yazh said…
    ஏன் இந்த ஏளன பார்வை? வெளி நாட்டு ஊழியர்கள் என்று சொல்லலமே…//

    நீங்கள் அவருடைய அடுத்த வரியையும் கவனித்தால் அவர் அந்த அர்த்தத்தில் கூறி இருக்க மாட்டார் என்று புரிந்து கொள்வீர்கள். ஏளன பார்வையுடன் கூறும் நபர் அல்ல அவர். எனவே தவறாக நினைக்க வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி யாழ்.

  36. “தமிழ்க்காரக் கூலி ஆட்கள் நம்ம கோயிலைச் சுத்தி உக்கார்ந்துருப்பாங்க”

    ஏன் இந்த ஏளன பார்வை? வெளி நாட்டு ஊழியர்கள் என்று சொல்லலமே…

  37. இங்கு உள்ள அனைத்து பகுதியும் சிங்கபூர் லிட்டில் இந்தியா பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி தொடருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here