ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!

16
ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!

திர்காலத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஓங்கி அடிச்சா 5G வேகம்டா! என்று வசனம் பேசினால் வியப்பதற்கில்லை 🙂 .

ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!

உலகளவில் இணைய வேகத்தில் தாறுமாறாக இருப்பது தென் கொரியா தான்.

அண்ணன் அமெரிக்கா உலகிற்கே ராசாவாக இருந்தாலும், இணையத்தில் சிப்பாய் அளவில் தான் தென் கொரியாவிடம் உள்ளது.

என்ன முக்கினாலும் தென் கொரியாவில் ராணுவத்தைத் தான் மிரட்டிக் கொண்டு இருக்க முடிகிறதே தவிர, இணைய வேகத்தைப் பிடிக்க முடியவில்லை. Image Credit

உலகளவில் இணையத்தில் தென் கொரியா அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.

இந்தியா குறைந்தது இணைய வேகத்தில் 15 – 20 ஆண்டுகளாவது பின் தங்கி இருக்கும் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தென் கொரியா

எங்கள் நிறுவனத்தில் ஒரு ப்ராஜக்ட்க்காகத் தென் கொரியாவில் 10 வருடங்களுக்கு முன் (Approx 2002-04) ஒரு வங்கிக்காகப் பணி புரிந்தார்கள்.

அப்போதே அங்கே இணைய வேகம் 100 MBPs இருந்தது என்று கூறுவார்கள்.

நம்ம ஊரில் தற்போது (2014) தான் 25 MB வந்து உள்ளது. 100 MBps கொடுக்கிறார்கள் ஆனால், அதிக கட்டணத்தால் வெகுஜன பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.

5G 1000 மடங்கு வேகம் 

தென் கொரியா தற்போது மொபைல் இணையத்தில் 5G வேகத்தைக் கொண்டு வர முயற்சி செய்து, 1.6 ட்ரில்லியன் பணம் இதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள்.

4G LTE வேகமே செமையாக இருக்கும் இதில் 5G வந்தால்…! 5G வேகம் 4G LTE யை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கப் போவதாகக் கூறுகிறார்கள்.

என்னது 1000 மடங்கா!!! எப்படி இருக்கும் பாருங்க. இவர்களின் கணிப்புப் படி 800 MB திரைப்பட தரவிறக்கம் [Download] ஆக ஒரு நொடி தான் ஆகுமாம்! News Credit

சிங்கப்பூரில் 4G LTE வேகமாக இருக்கும் ஆனால், அனைவரும் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால் Peak நேரங்களில் மெதுவாகத் தான் இருக்கும்.

Airtel 3G

எங்க ஊர் கோபியில் Airtel 3G வேகம் சிங்கப்பூர் 4G LTE வேகத்திற்கு இணையாக உள்ளது, காரணம் மொபைல் இணையம் பயன்படுத்துபவர்கள் கோபியில் குறைவு.

சில வினாடிகளில் 30-40 MB தரவிறக்கம் ஆகிறது. இதே சென்னை வந்தால், இந்த வேகம் கிடைக்காது.

5G சோதனை அடிப்படையில் 2017 லிலும் அனைவரின் பயன்பாட்டிற்கு 2020 லும் வரும் என்று கூறிஉள்ளார்கள். ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது! என்று புரியவில்லை.

இதற்கு முன்பு வேகமாக வந்தவர்கள், 5G க்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. திட்டமிட்ட காலத்திற்கு முன்பே 5G தொழில்நுட்பம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

குறைவான டேட்டா

3G சேவை பயன்படுத்தினால் சிங்கப்பூரில் 12 GB Data இலவசமாகக் கொடுத்த தொலைபேசி நிறுவனங்கள் 4G வந்த பிறகு 3 GB தான் கொடுக்கிறார்கள்.

காரணம், 4G வேகமாக இருப்பதால், வழக்கமாக இணையத்தை பயன்படுத்துவதை விட அதிகம் பயன்படுத்துவோம்.

எடுத்துக்காட்டுக்கு, இணையத்தில் பார்க்கும் திரைப்படம் Buffer ஆகாமல் வந்தால் இரு படம் கூடப் பார்ப்பீர்கள் ஆனால், அதே முக்கிக் கொண்டு இருந்தால், பாதிலேயே நிறுத்தி விடுவீர்கள்.

தற்போது புரிகிறதா ஏன் குறைவான வேகத்திற்கு அதிக GB யும் அதிகமான வேகத்திற்கு குறைவான GB யும் கொடுக்கிறார்கள் என்று.

முன்பு 12 GB இருந்தாலும் அதில் நான் 1.5 GB தான் பயன்படுத்தி இருப்பேன். 4G வந்த பிறகு 3 GB கூடப் போதவில்லை.

Wifi Router

5G வந்து இணையம் செலவு குறைவாக மாறினால் எதிர்காலத்தில் Wifi Router ஒவ்வொருவரும் வாங்குவார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது!

ஏனென்றால் தற்போதே என் நண்பன் அவனுடைய 4G LTE இணைப்பைத் தான் வீட்டு இணையத்துக்கும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

இனி 5G வந்தால், Wifi வாங்காமல் இதிலேயே வேண்டும் என்றால் [Hotspot] பயன்படுத்திக்கொள்ளும் படி ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

இரண்டையும் தனித் தனியாகப் பாவிப்பவர்கள் மட்டும் Wifi வாங்கிக் கொள்வார்கள்.

எதிர்காலத்தில் மொபைலின் பங்கு தற்போது இருப்பதை விட அபரிமிதமாக இருக்கும். நம் அனைத்துப் பணிகளையும் மொபைல் மூலமே முடித்து விட முடியும்.

இந்த நிலையில் 4G LTE யை விட 1000 மடங்கு வேகத்தில் இணைய வேகம் இருந்தால், என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.

இணையத்தில் Buffer என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்று தான் எதிர்கால சந்ததியினர் கேட்பார்கள்.

“56 KBPS” வேகத்தில் இருந்து பயன்படுத்திக்கொண்டு இருக்கும் எனக்கு இதன் வளர்ச்சிகளில் கூடவே வருவது ஒரு மகிழ்ச்சியான பயணமே!

தற்போது 100 MBps Fiber வேகம் வரை வந்து உள்ளேன் 🙂 .

கொசுறு

தென் கொரியாவில் இருந்து வந்த பதிவர் கார்த்திக், சியோல் (தென் கொரியா தலைநகரம்) ஒளி வெள்ளத்தில் இருக்கும், இரவே பகல் மாதிரி தான் இருக்கும்.

சிங்கப்பூர் தள்ளித் தான் நிற்க வேண்டும் என்று கூறினார்.

சிங்கப்பூரே அருமையாகத் தான் இருக்கு! இதை விட அங்கே அருமை என்றால், எப்படி இருக்கும்!! தென் கொரியா எனக்குப் பிடிக்க ஒரு முக்கியக் காரணம் இருக்கு.

அங்கே இருந்து தான் நிறைய ஹாரர் படங்கள் தயாராகி வருது 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

16 COMMENTS

  1. //என்ன முக்கினாலும் தென் கொரியாவில் ராணுவத்தைத் தான் மிரட்டிக் கொண்டு இருக்க முடிகிறதே தவிர, இணைய வேகத்தை பிடிக்க முடியவில்லை.//

    அமெரிக்காவும் தென்கொரியாவும் நண்பர்கள். வட கொரியாவையே அமெரிக்கா மிரட்டுகிறது

  2. இணையம் சம்மந்தமான தொழில்நுட்ப செய்திகளை தந்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  3. 4G இந்தியால முழுசா வருவதற்கு இன்னும் காலம் ஆகும் கிரி. இந்தியால விக்கற மொபைல்ல LTE வசதி இல்ல. LTE இருக்கற மாதிரி மொபைல் எப்போ விப்பாங்கன்னெ தெரியல, இதுல 5G பத்தி நாம்ப பேசவே முடியாது. stomach buring…. நீங்க 4G மொபைல் use பண்றீங்கன்னு 🙂

  4. //இவங்க பக்கத்து நாட்டுல நிஜமாலுமே திரைப்படங்களை மிஞ்சும் ஒரு ஹாரர் நபர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

    தெரியும், தெரியும் , சொந்த மாமாவையே 100 நாய்களை விட்டு கடிக்க வச்சு மரண தண்டனை குடுத்த பாசக்கார பயபுள்ளதான ????

    5G நியூஸ் செம மேட்டர் ….

    அருண் பிரசாத் ஜெ

  5. அருமையான 5g தகவல்கள் கிரி அவர்களே .. 5g தரவேற்ற வேகம் எவ்வளவு?

  6. “கொரியா எனக்குப் பிடிக்க ஒரு முக்கியக் காரணம் இருக்கு. அங்கே இருந்து தான் நிறைய ஹாரர் படங்கள் தயாராகி வருது!” — Same Feeling… 🙂 Well Said

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @Drogba அமெரிக்காவும் தென் கொரியாவும் நண்பர்கள் என்பது சரி தான்.. ஆனால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நண்பன். அதாவது தென் கொரியாவை ஆட்டுவிக்கும் சாவி அமெரிக்காவில் தான் உள்ளது. வட கொரியா அமெரிக்காவிற்கு அடங்காமல் பெரும் குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

    @கௌரி ஷங்கர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்னு இந்த விசயத்தில் சொல்ல முடியாது 🙂 🙂

    @அருண் அதே அதே! 🙂 கிறுக்கு பய புள்ள பெரும் கிறுக்கு பய

    இப்ப அவர் சொந்தக்காரங்க & தலைமுறையையே கொல்ல கூறி விட்டானாம்.. கிட்டத்தட்ட 100 பேர்

    @விஜய் கேப்டன் இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் 🙂

    @சரத் இன்னும் இது பயன் பாட்டிற்கு வரவில்லை. எப்போதுமே தரவிறக்கத்தை விட தரவேற்ற வேகம் குறைவாக இருக்கும். இதில் 800 MB தரவிறக்கம் ஒரு நொடியில் ஆகிறது என்றால் தரவேற்றத்தில் 400 – 500 ஆகலாம்.

    அப்புறம் “கிரி அவர்களே” என்றெல்லாம் கூப்பிடாதீங்க.. கிரி யே போதும் 🙂

    @Peraveen நீங்களும் ஹாரர் பட ரசிகரா? 😉

  8. previously i was using sify broadband with 364kbps speed. When i go to sleep i click the download button of any movie before going to bed. when i wake up, 80 percent of downloading would have been over. 700mb movie may take more than 8 hours.

    Now, i am using airtel broad band with 8 mbps speed. downloading of 700 mb movie takes less than half an hour….

    waiting for 4g in chennai.

  9. மைக்ரோசாப்ட், Google சர்ச் பண்ணி பாத்துருக்க மாட்டாங்களோ? இல்லை ஒருவேளை Bing சர்ச் இதை கொடுக்கலையோ?

  10. @ராஜேஷ் ரைட்டு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

    @விஜய் 🙂 இது கார் பார்ட்ஸ் தளம் என்பதால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். கடந்த முறை Skydrive வும் Cloud சேவை வழங்கியதே பிரச்சனையாக இருந்தது.

    மைக்ரோசாப்ட் க்கு கட்டம் சரியில்லை போல 🙂

  11. குட் போஸ்ட்,சமீபத்தில் டெஸ்ட் 5G ஸ்பீட் 1 TB.,MAY CAN INCREASE WHILE LAUNCH

  12. என்னதான் தறை இரக்கம் வேகம் கூடினாலும் நாம் இன்றையா சேமிக்கும் தட்டிலோ அல்லது பிளாஷ் ஹர்ட் டிஸ்க் கிலோ நிச்சயம் வேகம் இல்லை.
    அதாவது 8 MB யில் இருந்து அதிக பச்சம் 32 MB (ஸ்மாட் ஹாடிஸ்)வரைதான்..
    பிளாஷ் ஹர்ட் டிஸ்க் கிலோ அதிக பச்சம் 70 MB வேகம். வேண்டுமானால்.
    RAM மில் வேண்டுமனால் பதிவிறக்கம் செய்யலாம் 10 GB 15 – 30 நிமிசம் பதிவிறக்கம் செய்தால் சேமிக்கும் தட்டிலோ சேமிக்க 1 மணி நேரம் ஆகும்.

    நான் கல்லாம் ஜப்பானிய, சீன மொழி மெகா சீரியல் தறை இரக்கம் பன்றேம்லா. எங்களுக்கு ஒரு விடை சொல்லுங்கப்பா..
    அதுவும் HD கூட கிடையாது 12-13 எப்பிசோடு தான் 720க்ஸ்480p தான் அதுக்கே 6GB to 10 GB வருது. சென்னை BSNL Rs 800 512 KBPS 10 GB Takes 25 Hours . 1 month 100 GB Use பன்றோம்ல…………
    என்னுடைய dlink wifi ரௌட்டர் dlink 2750u USB 3G/HardDisk பயன்படுதிக்கொள்ளாம்.
    USB ல Harddisk போட்டு Network ல LED TV wifi Connention கொடுத்து பாற்கிறோம்.
    இந்த இடுக்கையில் படம் பகிற்வு இருந்தால் நல்லா இருக்கும்.
    நாங்கள்ளாம் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்………………

  13. கொசுறு:-

    RAM மில் இருந்து 10 GB Data Hard Disk ல பொறதுக்குள்ள.
    Hard Disk 60 டிகிரி 70 டிகிரி சூடாயிடுது..
    FAN அல்லது AC கிட்ட வச்சிதான் கூல் பண்ண முடியும்../.
    Reference S.M.A.R.T Hard Disk Monitor…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!