ரம்மி [2014]

7
ரம்மி

ரு காதல் ஜோடிகள் அதற்குப் பெண்கள் பக்கம் வீட்டில் எதிர்ப்பு. இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் ரம்மி. Image Credit

ரம்மி

படத்தின் கதை 1987 ல் நடப்பது போலக் காட்டப்படுகிறது. இனிகோ பிரபாகர், விஜய் சேதுபதி இருவரும் கல்லூரியில் தங்கி படிக்க வருகிறார்கள்.

இதில் இனிகோ பிரபாகர் தான் முக்கிய கதாபாத்திரம் விஜய் சேதுபதி அவரது நண்பராக வருகிறார்.

சிலர் என்னதான் முயற்சித்தாலும் அவர்களது கதாநாயக அடையாளம் தெரியும் ஆனால், விஜய் சேதுபதி சாதாரண கதாப்பாத்திரம் போலவே வந்து செல்கிறார்.

இனிகோ பிரபாகர் காதலிக்கும் பெண்ணாக நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் நாயகி.

விஜய் சேதுபதிக்கு ஜோடி ஐஸ்வர்யா. இவர் “அட்டகத்தி” படத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருடன் கல்லூரியில் படிப்பவராகக் காமெடிக்கு சூரி வருகிறார்.

சூரிக்கு நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, காமெடிக்கு இவர் வேண்டும் என்று வைத்தது போலத்தான் இவரது கதாப்பாத்திரம் இருக்கிறது.  காமெடியும் எடுபடவில்லை.

இனிகோ பிரபாகர் & விஜய் சேதுபதி

இனிகோ பிரபாகர், விஜய் சேதுபதி இருவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள். சென்ராயன் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்.

விஜய் சேதுபதி ஒரு கிணற்றில் குளிக்கும் போது தான் ஐஸ்வர்யா உடன் காதல் வரும். இது ஒரு இன்ஸ்டன்ட் காதல்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு நிமிடத்திலேயே காதல் வந்து விடும் ஆனாலும் இவர்கள் பகுதி நன்றாகவே இருந்தது.

இதில் வரும் கிணற்றைப் பார்க்கும் போது அதுவும் தண்ணீருடன் பார்க்க வியப்பாக உள்ளது. இனி கிணறு என்பதை இப்படிப் பார்த்தால் தான் உண்டு போல 🙂 .

1987

படத்தில் 70% எந்தவித பெரிய திருப்பமும் இல்லாமல் செல்கிறது. இந்தக் கதைக்கு எதற்கு 1987 ஆண்டைத் தேர்வு செய்தார்கள் என்று தான் புரியவில்லை.

தற்போதைய காலகட்டத்திலேயே இந்தக் கதையைக் கிராமத்தில் எடுத்து இருக்க முடியும்.

மொபைல் பயன்படுத்த முடியாத காட்சிகள் தவிர வேறு எதற்கும் இந்த 1987 ஆண்டு காலம் உதவவில்லை.

படத்தில் 1980 கால பட ரஜினி போஸ்டர்கள் மட்டும் ஓட்டினால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல இருக்கிறது.

போஸ்டர்கள் மட்டுமே 1987 ல் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இவர்கள் ஊரில் வெளி ஆட்கள் யாரும் பெண்களிடம் வாலாட்ட முடியாது. உடனே போட்டுத் தள்ளி விடுவார்கள் அல்லது கையை வெட்டி விடுவார்கள்.

இதற்காகவே உள்ளூர் காவலர்!!! போல ஒரு அடியாள். இவருக்கு வேலையே இது தான் போல இருக்கிறது.

புதுப்பேட்டை படத்தில் தனுஷ் அப்பாவாக வருவாரே அவர் தான் இது. படம் முழுக்க முறைச்சுட்டே இருக்கிறார்.

இவருக்கு முதலாளி ஒருவர் (ஊர் நாட்டாமை மாதிரி). இரண்டு பேருக்கும் ஊர்ல யார் காதலிச்சாலும் உடனே மூக்குல வேர்த்துடும்.

இசை & ஒளிப்பதிவு

நன்றாக இருப்பது இசை, ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான கதையோட்டம்.

சமீபமாக நகரத்து கதையே பார்த்து, கூட்டத்தையும், காமெடி கதைகளையும் பார்த்துச் சலித்து போய் இருந்த மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

ஒளிப்பதிவு அருமை. பெரும்பாலான இடங்களில் மக்கள் குறைவாக, பரபரப்பு இல்லாமல் இருப்பதால் உண்மையாகவே கிராமத்தில் பயணிப்பது போல இருக்கிறது.

நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளும் பரந்து விரிந்த இடங்களும் இந்த ஒளிப்பதிவில் பார்க்க அழகாக உள்ளன.

பாடல்களில் வரும் இடங்கள் அனைத்தும் இது எங்கே இருக்கிறது என்று தேட வைக்கிறது.

இமானுக்கு மைனா படத்தில் இருந்து எதோ ஆகி விட்டது. மனுஷன் இசையில் பின்னுகிறார்.

ஏற்கனவே இந்தப் படப் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. குறிப்பாக “கூடைமேல” பாட்டு செம ஹிட் ஆகி விட்டது.

படத்தில் நான்கே பாடல்கள் தான் ஆனால் நான்கும் நச்சுனு இருக்கிறது. தற்போது இந்தப் பாடல்களைத் தான் அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

கிராமத்துக் கதை, ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சியமைப்பு, நான்கு நல்ல பாடல்கள், ஒளிப்பதிவு இவற்றிக்காக மட்டும் படத்தைப் பார்க்கலாம்.

மற்றபடி கதையெல்லாம் மிகப் பழையது. இது மாதிரி கதையில் ஏற்கனவே ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டது.

இதில் என்ன புதுமையைக் கண்டு விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

இந்தப் படத்திற்கு எதற்கு ரம்மி என்று பெயர் வைத்தார்கள் என்று கடைசி வரை புரியவில்லை.

Directed by Balakrishnan K
Produced by K. Gurunathan, P. Ealappan, M. Dharmarajan, Balakrishnan K
Written by Mona Palanisamy, K. Balakrishnan
Starring Vijay Sethupathi, Gayathrie Shankar, Iyshwarya Rajesh, Inigo Prabhakaran
Music by D. Imman
Cinematography C. Premkumar
Editing by Raja Mohammed
Distributed by JSK Film Corporation, J. Satish Kumar
Release dates 31 January 2014
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. எளிமையான அருமையான விமர்சனம் கிரி அவர்களே… சமீபத்தில் வந்த கிராமத்து படங்களை நீங்கள் குறிப்பிட்ட போது அதில் வீரம் படம் வரவில்லை.நான் வீரம் இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்களில் கிராமத்து கதை என்று சொல்லப்பட்டது.

 2. நான் இன்னும் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா இன்னும் பார்க்கவில்லை பார்க்கணும் 1987 காலத்திய கதை என்கிறீர்கள் அதனால் பார்த்துட வேண்டியது தான்

 3. கிரி. சில நேரங்களில் சினிமாவை பற்றி ஒரு குழப்பம் எப்போதும் இருக்கும். சில பெரிய ஹீரோக்களும் / பெரிய டைரக்டர்களும் தரம் இல்லாத படங்களை தரும் போது, இந்த படத்தில் நடிக்க இல்ல எடுக்க, தயாரிக்க,எப்படிடா? மனசு வந்துச்சுனு தோணும். நிறைய படங்களை உதாரணம் சொல்லலாம். (என்னை விட உங்களுக்கு அனுபவம் அதிகம்).
  வைரமுத்துவின் வரிகள் எங்கேயோ படித்தது (வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் சுவை, நாளை நேர்வதறியா சூட்சுமம் தான் அதன் சுவை.) என் கேள்விக்கு விடையும் இதுதான். தொடர் வெற்றியில் சிறு சறுக்கல்கள் இருக்கலாம்,கரும்பின் கணுவில் உள்ள கசப்பை போல,அதை கடந்தால் இனிய சுவை தான். மீண்டும் ஒரு மாறுபட்ட கதை களத்தில் வெற்றி பெற விஜய் சேதுபதிக்கு என் வாழ்த்துகள். பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

 4. @சரத் வீரம் கிராமத்துப் படம் தான் ஆனால் அது மாஸ் கதை / ஹீரோ படம் என்பதால் அதை ஒரு உண்மையான கிராமத்து படம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் உண்மையான கிராமத்தை காண முடியாது ஆனால் ரம்மி, மத யானைக் கூட்டம் போன்ற படங்கள் உண்மையான, நடைமுறை கிராம மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை. இன்னும் சொல்லப்போனால் ரம்மியை விட மத யானைக் கூட்டம் அருமையாக பிரதிபலித்து இருக்கிறது.

  @சரவணன் ரைட்டு

  @யாசின் விஜய் சேதுபதி நிச்சயம் வித்யாசமான நடிகர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்தப் படம் அவருக்கு சரியாக அமையவில்லை அவ்வளவு தான். ஒருவருக்கு அனைத்துப் படங்களும் சிறப்பாக அமைந்து விடுவதில்லையே.. அமைந்து விடவும் முடியாது.. அடுத்த படம் பண்ணையாரும் பத்மினியும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

  அப்புறம் நீங்க கூறிய ” Le Grand Voyage” படம் பார்த்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. இது போன்ற படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் இவர்கள் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து போவது அவர்களுடனே பயணிப்பது போல இருந்தது. இது பற்றி என்னுடைய அடுத்த பதிவில் எழுதுகிறேன்..விமர்சனமாக அல்ல… சிறு குறிப்பாக.

 5. கிரி, நான் குறிப்பிட்ட படத்தை பார்த்தமைக்கு மகிழ்ச்சி. உண்மையில் எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு கெட்ட பழக்கம். ஒரு விஷியம் (சினிமா, கிரிக்கெட், கவிதை, பாடல்கள்,ஓவியம், புத்தகங்கள்,etc) பிடிக்கிறது என்றால் மற்றவர்களுக்கு அதை கூறி அவர்களையும் ஆர்வப்படுத்துவேன்.
  10% நபர்கள் கூட நான் கூறுவதை விரும்பி செய்ய மாட்டார்கள். கடந்த 2/3 வருடங்களாக அதிகம் யாரிடமும் இது போன்றவைகளை பகிர்வதில்லை. நீங்கள் Le Grand Voyage”படத்தை பார்த்தது மகிழ்வை தருகிறது. (நீங்கள் குறிப்பிட மலையாள படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்கான தருணம் அமையவில்லை. பார்த்துவிட்டு நான் அதை பற்றி கூறுகிறேன்.

 6. இந்த படத்த பாத்தா பிறகு எனக்கு எற்ப்பட்ட சந்தேகத்த தெளிவா நீங்க கடைசில கேட்டுடிங்க அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here