பாவக்கதைகள் (2020) | இளகிய மனம் கொண்டோருக்கு அல்ல

3
பாவக்கதைகள்

சிறுகதைகளின் தொகுப்பாகப் பாவக்கதைகள் NETFLIX ல் வெளியாகியுள்ளது. Image Credit

பாவக்கதைகள்

விமர்சன ரீதியாகப் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொங்காரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் & வெற்றிமாறன் இயக்கியுள்ளனர்.

தங்கம்

காளிதாஸ் சிறு வயது நண்பராக, சாந்தனு. ஊரார் அனைவரும் வீட்டார் உட்படக் திருநங்கை காளிதாஸை ஒதுக்க, ஆறுதலாகவும் நட்பாகவும் இருப்பவர் சாந்தனு.

காளிதாஸ் தங்கை, சாந்தனு காதலில் எதிர்பாராத சிக்கலில் மாட்டுகிறார் காளிதாஸ்.

இறுதியில் என்ன ஆகிறது? என்பதே கதை.

திருநங்கையாக ஒருவர் சந்திக்கும் பிரச்சனைகளை மிகைப்படுத்தப்படாத உடல்மொழியில் காளிதாஸ் வெளிப்படுத்தியிருந்தார்.

திருநங்கையாக நடித்த காளிதாஸ் மற்றும் அவரது நண்பராகச் சாந்தனு நடிப்பு அனைவரிடையே வரவேற்பை பெற்றது.

குறிப்பாகச் சாந்தனு, ‘வெற்றி உணர்வு என்றால் இப்படித்தான் இருக்குமா!‘ என்று காணொளி வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

கொங்காரா இயக்கம் சிறப்பு.

லவ் பண்ணா விட்டுடனும்

இரட்டை சகோதரிகளாக அஞ்சலி. ஊரில் மிகப்பெரிய நபர் அஞ்சலி அப்பா.

ஒரு அஞ்சலி கார் ஓட்டுநரைக் காதலிக்க, பிரச்சனை ஆகிறது.

இதே சமயம் சகோதரியான இன்னொரு அஞ்சலியும் புதுப் பிரச்சனையுடன் வந்து சேர என்ன ஆகிறது என்பதே கதை.

உதட்டோடு முத்தம், அரைகுறை உடை என்று ஒரு அஞ்சலி விவகாரமாக நடித்துள்ளார்.

குள்ளமாக வருபவரின் நடிப்பும், வசனங்களும், நக்கலும் கவனிக்கப்படக்கூடியதாக இருந்தது. இவரது அறிமுகக் காட்சி சிறப்பு 🙂 .

விக்னேஷ் சிவன் திரைக் கதையில், துவக்கத்தில் இருந்த கதையின் அழுத்தம் இறுதியில் இல்லை.

வான்மகள்

கெளதம் மேனன், சிம்ரன் தம்பதிகளுக்கு ஒரு மகன், இரு மகள்கள். இதில் ஒரு மகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள்.

வழக்கமான நடுத்தரக் குடும்பமாக மானத்துக்குப் பயந்து, காவல்துறையிடம் செல்லச் சிம்ரன் மறுக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

சிம்ரன் நடிப்பு மிகச்சிறப்பு. சராசரி அம்மாவாக அவரின் பதட்டம், கவலை, இயலாமை ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

கெளதம் மேனன் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியில்லை. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாதவராக உள்ளார்.

காளிதாஸ், சாந்தனு பற்றி அதிகம் சமூகத்தளங்களில் கூறப்பட்டது ஆனால், அதிகம் கவனிக்கப்படாத இன்னொரு நபர் கெளதம் மேனன் மகனாக வருபவர்.

தன் தங்கை நிலை என்ன ஆனதோ என்று பயப்படுவதும், இயலாமையும், கோபத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

குறைந்த நேரமேயான நடிப்பு என்றாலும், அருமை.

கெளதம் மேனன் இயக்கம் தனித்தன்மையாக இருக்கும் ஆனால், இதில் அப்படியில்லை.

ஓர் இரவு

ஓடிப் போய்த் திருமணம் செய்து கொண்ட மகளான சாய்பல்லவியைத் தாமதமாகக் காணும் தந்தையான பிரகாஷ்ராஜ், வளைகாப்பு நிகழ்வைத் தம் ஊரிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று அழைக்கிறார்.

ஊருக்கு வரும் சாய்பல்லவிக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

இந்த நான்கு கதைகளிலும் வெற்றிமாறன் இயக்கக் கதையே மிக இயல்பாகவும், திரைப்படத்தைப் பார்ப்பது போலவும் இருந்தது.

மற்ற மூன்றிலும் எதோ ஒரு நாடகத்தன்மை, காட்சியில் அவசரம், விரைவில் முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி தெரிந்தது.

ஆனால், வெற்றிமாறன் 2.30 மணி நேர படமாக இருந்தாலும் 30 நிமிட படமாக இருந்தாலும் ஒன்று தான் என்று தெறிக்க விட்டுள்ளார்.

பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, அவரது அம்மா மற்றும் இக்கதையில் வரும் அனைவரின் நடிப்பு சிறப்பு. ஒளிப்பதிவு மிக இயல்பு.

நான்கு கதைகளில், வெற்றிமாறன் இயக்கம் என் பார்வையில் முதல் இடம்.

பாவக்கதைகள் இளகிய மனம் கொண்டவர்களுக்குண்டானது அல்ல. மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, யோசித்துப் பார்க்கவும்.

Directed by Sudha Kongara, Vignesh Shivan, Gautham Vasudev Menon, Vetrimaaran

Starring Kalidas Jayaram, Shanthnu Bhagyaraj, Bhavani Sre, Anjali, Kalki Koechlin, Padam Kumar, Simran, Gautham Menon, Aadhitya Baaskar, Prakash Raj, Sai Pallavi, Hari Krishnan

Music by Justin Prabhakaran, Anirudh Ravichander, Karthik, R Sivatmikha
Country of origin India
Original language Tamil
No. of seasons 1
No. of episodes 4
Producers Ashi Dua, Rhea Kongara, Ronnie Screwvala, Avinash Viswanathan
Cinematography Theni Eswar, Suresh Bala, Ganesh Rajavelu, Jomon T. John
Distributor Netflix

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. After a long time I am in to your blog giri.

  my order of good rating

  1. Thangam
  2. or iravu
  3. vaan magl
  4. love panna vittudanum..

  🙂

 2. கிரி, தற்போது மனைவி, மகன், மகள் இங்கு வந்து இருப்பதால் அடுத்த 5 மாதங்களுக்கு எந்த படத்தையும் பார்க்க வாய்ப்பு ரொம்ப குறைவு.. கடந்த மாதம் Scam 1992 வெப்சிரிஸ் பார்த்தேன்.. உண்மையில் இதை எடுத்த விதத்தை கண்டு மிரண்டு விட்டேன்.. சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி உள்ளார்கள்.. அதுவும் ஹர்ஷத் மேத்தாவாக நடித்தவரின் நடிப்பு.. செம்ம!!! துணைப்பாத்திரங்களிலும் நன்றாக நடித்து உள்ளார்கள்.. நேரம் இருப்பின் நிச்சயம் இதை பாருங்க கிரி.. கண்டிப்பா விரும்புவீங்க.. வெப்சிரிஸ் பார்க்கும் முன் ஹர்ஷத் மேத்தாவை பற்றி தெரியவில்லை என்றால் கொஞ்சம் அவரை பற்றி தெரிந்து கொண்டு இதை பாருங்கள்.. அப்போது தான் சுவாரசியமாக இருக்கும்.. பாலிவுட்டில் படமாக வந்து இருந்தால் என்கணிப்பு நிச்சயம் மிக பெரிய வெற்றி பெற்று இருக்கும்..

 3. @ராகு வாங்க 🙂

  உங்களுடைய பட்டியலே பலருடைய விருப்ப பட்டியல். எனக்கு வெற்றிமாறன் இயக்கம் நேர்த்தியாக இருந்தது. எந்த இடத்திலும் குறை காண முடியவில்லை.

  Making அசத்தல்.

  @யாசின் “Scam 1992” என் பட்டியலில் உள்ளது.

  ஹர்ஷத் மேத்தா ஒரு காலத்தில் மிகப்பிரபலம். அவரை நம் தலைமுறையினர் கேள்விப்படாமல் இருக்க வாய்ப்புக்குறைவு 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here