4L (2019 Spanish) | பாலைவனப் பயணம் போகலாமா?!

3
4L movie review

ரணப்படுக்கையில் இருக்கும் நண்பனைக் காண இரு நண்பர்கள் திட்டமிடுகிறார்கள். இறுதியில் சந்தித்தார்களா? என்பதே 4L.

4L

Road Trip என்பது பொருத்தமான நண்பர்கள் அமைந்தால் சொர்க்கம். Image Credit

வழக்கமான பணிகளால் சலிப்படைந்த Tocho பணியை விட்டு விலகி, மரணப்படுக்கையில் இருக்கும் நண்பன் Joseba வை சந்திக்க இன்னொரு நண்பனான Jean Pierre யை அழைத்துக் கொள்கிறார்.

Joseba இருப்பதோ 2000+ மைல்களுக்கு அப்பால் உள்ள Tombuctu, Mali.

உலகின் மூன்றாவது பெரிய, உலகின் அதிக வெப்பமான பாலைவனமான சஹாரா வழியாகக் கடக்கத் திட்டமிடுகிறார்கள்.

இவர்களுடன் Joseba காரும், அவரது பெண்ணும் இணைந்து கொள்கிறார்கள்.

பாலைவனப் பயணம்

மிக ஆபத்தான, ஒருவழிப்பாதை போல உள்ள பயணத்தில் செல்லத் திட்டமிடுகிறார்கள். ஒருவழிப்பாதை என்றால், திரும்ப உயிரோடு வருவது உத்தரவாதமில்லை.

பாலைவனத்தைப் பார்த்தாலே பயமாக உள்ளது. வழியில் வாகனம் பழுதானால் என்ன செய்வது? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மணல் தான்.

சில நேரங்களில் எந்தப்பக்கம் போகிறோம் என்பதே தெரியாது.

வெயில் வேறு வாட்டி எடுக்கும், தண்ணீர் இல்லையென்றால் அதோ கதி தான். இதில் வண்டியும் பழுதாகி விட்டால், அங்கேயே சமாதி தான்.

மன உறுதியும், தைரியமும், எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உள்ளவர்களால் மட்டுமே இப்பாலைவனத்தில் பயணிக்க முடியும்.

நண்பர்கள்

ஒத்த அலைவரிசை நண்பர்களோடு பயணம் செல்வது சுகமான அனுபவம்.

நண்பர்களோடு பயணிக்கும்போது எதிர்பார்ப்புகள் இருக்காது, எதையும் அனுசரித்துச் செல்லும் மனப்பக்குவம் இருக்கும்.

கிடைக்கும் வசதிகளை ஏற்றுக்கொள்வார்கள். இது தான் வேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டார்கள்.

சண்டையிட்டாலும் உடனே சேர்ந்து கொள்வார்கள். இவற்றை அனுபவித்தவர்களால் மட்டுமே இதையெல்லாம் உணர முடியும்.

நட்புக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி, வயதே கிடையாது.

வயதானாலும் அதே கலாட்டா, கிண்டல், சண்டை தான் 🙂 . எப்போது சந்தித்தாலும் அதே நட்பு அப்படியே தொடரும்.

யார் பார்க்கலாம்?

Road Trip, Adventure விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம் 4L. நண்பர்கள் உள்ளவர்களுக்குப் பிடிக்கும், உறுதியாகப் பழைய நினைவுகளைக் கிளறும்.

மற்றவர்களுக்கு வறட்சியா இருக்கேன்னு தோன்ற வாய்ப்புள்ளது 🙂 .

இப்படத்தை இன்னும் மிரட்டலாகப் பிரம்மாண்டமாக எடுத்து இருக்கலாம் ஆனால், சுருக்கமாகச் செலவு இல்லாமல் முடித்து விட்டார்கள்.

பாலைவனப்பகுதி திகிலை இன்னும் மேம்படுத்த வாய்ப்புகள் இருந்தும் ஏனோ முயற்சிக்கவில்லை.

NETFLIX ல் காணலாம்.

நண்பர்களோடு சிங்கப்பூரிலிருந்து மலேசியாக்கு Road Trip சென்றது, என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாதது.

வட மாநிலங்களுக்குப் பயணம் செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எப்போது நடக்கும் என்பது தான் தெரியவில்லை! 🙂 .

மலேசியா பயணம் – மலாக்கா

மசினகுடி பயணம்

Directed by Gerardo Olivares
Written by Gerardo Olivares, Maria Jesus Petrement
Starring Jean Reno, Hovik Keuchkerian, Susana Abaitua
Distributed by Netflix
Release date July 12, 2019
Running time 104 minutes
Country Spain
Languages Spanish, French, Afrikaans

தொடர்புடைய திரை விமர்சனம்

Comrade in America (2017 – மலையாளம்)

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. அப்படியே NETFLIX ல இருக்கிற தமிழ் டப்பிங் படங்களையும் சொன்னா நல்லா இருக்கும் அண்ணா

  2. கிரி, படம் எனக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்.. ஏனெனில் புதிய இடங்களை காணுவதில் அலாதி இன்பம்.. செயற்கையாக உருவாக்கப்பட்டதை காணுவதில் ஆர்வம் குறைவு.. இயற்கையாக, பழமையாக இருக்கிற எல்லா இடங்களும் பிடிக்கும்..

    பிடித்த நண்பர்களுடன் பயணிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இருக்குமா?? என்று தெரியவில்லை.. என்னை பொறுத்தவரை பயணம் என்றாலே சக்தியுடன் மட்டும் தான்.. கல்லூரி நண்பர்கள் குழு (UG / PG ) தனித்தனியாக இருந்தாலும் கால ஓட்டத்தில் நண்பர்களின் வசதிக்கும், அவரின் சூழ்நிலையிலும் பல்வேறான மாற்றங்கள்..

    சில நண்பர்கள் பேசும் போது கூட ரொம்ப மரியாதையை எதிர்பார்க்கின்றார்கள்.. (வா மச்சி, போ மச்சி, வாடா மச்சான், போடா மச்சான்) இப்படி சொல்லி தான் பழகி வந்தோம்.. இந்த மரியாதை எனக்கு புதுமையாக இருக்கிறது.. அது மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களிடம் மாற்றங்களை காண முடிகிறது.. அதன் காரணமாக நட்புகள் தூரம் சென்று கொண்டே இருக்கிறது..

    என்றும் மாற்றம் இல்லாத ஒரு நண்பன் சக்திவேல் மட்டுமே!!! என்னுடைய பயணத்திற்கு ஏற்ற ஒரு துணை இவர் மட்டுமே.. இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியான அளவில் இருக்கும்..எப்போதுமே இருவருமே நிறைய திட்டங்கள் போடுவோம்.. ஆனால் 10 % கூட நிறைவேற்ற முடியாது.. கடந்த முறை ஊருக்கு சென்ற போது சில பயணங்களை மேற்கொண்டோம்.. மகிழ்ச்சியாக இருந்தது.. தற்போது நினைத்தாலும் உள்ளுக்குள் ஒருவித பரவசம் ஏற்படும்.. உங்களை காண வந்தது கொண்ட ஒரு சில நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான்.. அந்த பயணமும் அழகாக இருந்தது..

    (வட மாநிலங்களுக்குப் பயணம் செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எப்போது நடக்கும் என்பது தான் தெரியவில்லை!..) முன்பே சொல்லி இருக்கீங்க.. ஹிந்தி தெரிந்த யாராவது ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று..(என்னுடைய ஹிந்தி டெல்லி வரை பேசும்) வாய்ப்பும், விருப்பமும் அமைந்தால் அந்த பயணத்தில் சக்தியுடன் நானும் இணைகிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @கார்த்திக்

    NETFLIX ல் தமிழ் டப்பிங் இல்லைனு நினைக்கிறேன். அமேசானில் தான் தமிழ் டப்பிங் அதிகம் குறிப்பாக சீரீஸ்.

    @யாசின்

    சக்தி மீதான உங்கள் அன்பு நட்பு எப்போதும் என்னை வியக்க வைக்கிறது 🙂 . நேற்று கூட சக்தி கிட்ட இதைக் கூறினேன்.

    யாசின் அளவுக்கு வார்த்தைகளில் எனக்கு வெளிப்படுத்த தெரியலைனு கூறினார்.

    உங்கள் இருவர் நட்பு எப்போதும் இதே போல தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    வட மாநில பயணம் திட்டத்திலேயே உள்ளது, செயல்பாட்டுக்கு வர வருடங்களாகும் போல 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!