வாழ்க்கை அனுபவங்கள்

5
வாழ்க்கை அனுபவங்கள் Life Experience

த்தளத்தில் எழுதப்பட்ட சில அனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து அமேசான் Kindle ல் “வாழ்க்கை அனுபவங்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

எழுத ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட கவிதை தவிர அனைத்து பிரிவுகளிலும் எழுதியுள்ளேன்.

வாழ்க்கை அனுபவங்கள்

சிறு வயதில் இருந்து கிடைத்த வாழ்க்கை அனுபவங்களை அவ்வப்போது எழுதி வந்துள்ளேன், அவற்றைத்தான் இப்புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.

பல ஆண்டுகளாக இத்தளத்தைப் படிப்பவர்கள் இதில் உள்ளவற்றை ஏற்கனவே படித்து இருப்பீர்கள் ஆனால், அனைத்தையும் ஒருங்கிணைத்து இதற்கென்ற புத்தகமாக இருக்கும் போது இதற்கான எண்ணவோட்டத்தில் படிக்க முடியும்.

இவை நிச்சயம் உங்களுக்குப் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

இனி வரும் காலங்களிலும் சிறப்பு என்று கருதுகிற கட்டுரைகளை இது போலப் புத்தகங்களாக அமேசானில் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்.

காரணம், ஏதாவது ஒரு கட்டத்தில் இத்தளம் இல்லாமல் போகலாம்.

ஆனால், இது போலப் புத்தகங்களாக வெளியிட்டால், நான் இல்லையென்றாலும் இப்புத்தகங்கள் ஏதாவது ஒரு வகையில் என் நினைவுகளை / அனுபவங்களைச் சுமந்து இணையத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்.

Author Page

தற்போது என் அமேசான் ஆசிரியர் (Author) பக்கம் வண்ணமயமாகி விட்டது 🙂 . மேலும் வண்ணங்களைச் சேர்த்துக்கொண்டே இருப்பேன்.

ஒரு அட்டைப்படத்தை உருவாக்க முதலில் திணறிக்கொண்டு இருந்தேன், தற்போது மிக எளிதாகச் செய்து விட முடிகிறது. இன்னும் கூடுதல் வேலை செய்தால், எழுத்துக்களிலும் அழகான வடிவமைப்புகளைக் கொண்டு வர முடியும்.

சும்மா ஒரு எட்டுப் போய்ப் பார்த்து அட்டை படங்கள் எப்படியுள்ளது என்று கூறுங்கள் 🙂  Amazon Giri Profile

அமேசானில் புத்தகத்தை வாங்க –> வாழ்க்கை அனுபவங்கள் Link

Unlimited Kindle ல் உள்ளவர்கள் இலவசமாகப் படிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் அமேசான் இ-புத்தகம்

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. கிரி.. மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது அடுத்த நகர்வை எண்ணி .. உங்களது புதிய முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .. அட்டைப்படங்களை பார்த்தேன் .. நன்றாக இருக்கிறது என்னை கவர்ந்தது (பார்த்தவுடன் மகாநதியின் அட்டைப்படம்)..

    கிரி .. சொன்ன நம்புவீங்களானு தெரியல 2000/2001 ஆம் ஆண்டில் அடோப் pagemaker , coraldraw ,photoshop இதில் கொஞ்சம் நல்ல புலமை இருந்தது .. பின்பு தொடர்பில்லாமல் விட்டுவிட்டேன்). அந்த பருவத்தில் நான் ஒரு தீவிரமான புகைப்பட காதலன் .. ஒரு புகைப்படத்தையே ஒரு மணிநேரம் கூட பார்த்து கொண்டிருப்பேன் ..

    புகைப்படம் என்ற உடன் ஒரு இலங்கை எழுத்தாளர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது .. புகைப்படங்கள் குறித்து அவ்வளவு அழகாக எழுதி இருப்பார் .. Kindle இதுவரை வாங்கவில்லை.. முன்பு வாங்க வேண்டும் என்று கூறி இருந்தேன் .. தற்போது இதன் விலை & எது சிறந்தது என்று தெரிந்தால் கொஞ்சம் கூறவும் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. பாரதி புத்தகாலயம் அழகுத்தமிழ் யுனிகோடு ஃபாண்ட் என்ற பெயரில் 800க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை இலவசமாகவே வெளியிட்டுள்ளார்கள். அவற்றை தரவிறக்கி வைத்துக் கொண்டு, கையேட்டில் எழுத்துருவின் வடிவத்தைப் பார்த்து அதிகபட்சம் 50 எழுத்துருக்களை மட்டும் பாராக்கள் மற்றும் தலைப்புகளுக்காக தேர்வு செய்து வைத்துக் கொண்டால் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    தொழில்முறை வடிவமைப்பில் பயன்படும் ஸ்ரீலிபி, அனு, செந்தமிழ், இளங்கோ உள்ளிட்ட எழுத்துரு வகைகள் அனைத்தும் இந்த யுனிகோடு எழுத்துரு தொகுப்பில் கிடைக்கின்றன.
    அட்டைப்படம் மட்டுமின்றி அவற்றின் எழுத்துருக்களையும் சிறப்பாக பயன்படுத்த வாழ்த்துகள்…

    தேவைப்பட்டால் சொல்லுங்கள்…. கூகிள் ட்ரைவ் லிங்க் அனுப்புகிறேன்.

  3. வழக்கமாக நாயகர்கள் ஜெயிலுக்கு போய் வந்து புத்தகம் எழுதுவார்கள். நீங்கள் சிங்கப்பூர் போய்வந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா. மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களின் வளர்ச்சியை பார்க்கையில். இந்த புத்தகத்தின் அடுத்த பகுதியை உங்களின் ஆதர்ச நாயகன் ரஜனி சார் வெளியிடும் அள‌விற்கு நீங்கள் வழர்ச்சியடையவேண்டும்.

  4. @பாலா நன்றி

    @யாசின் பல திறமைகளை மறைத்து வைத்துள்ளீர்கள் போல 🙂 . போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டேன் ஆனால், ஏனோ அதற்கான சூழ்நிலை அமையவில்லை. நானும் அமைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை.

    Kindle https://amzn.to/3ixet3D இதை வாங்குங்கள்

    @ஆரூர் சரவணா தகவலுக்கு நன்றி. லிங்க் கொடுத்தால், முயற்சித்துப் பார்க்கிறேன்.

    எப்போதுமே புதிதாக முயற்சித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம், குறிப்பாக தொழில்நுட்பத்தில்.

    @பிரியா நன்றி பிரியா 🙂 . நலமா.. அனைத்தும் சரியாகி விட்டதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!