நீங்கள் உதவ நினைப்பது யாருக்கு?

2
Thaayam Book review நீங்கள் உதவ நினைப்பது சிகரத்தை

ஹாத்ரயாரா என்பவர் எழுதிய ‘தாயம்’ புத்தகத்தில், அவர் கூறிய ஒரு அனுபவத்தின் ஒரு பகுதி. நீங்கள் உதவ நினைப்பது யாருக்கு? என்பதை விளக்குகிறது.

மஹாத்ரயாராவும் அவரது நண்பர்களும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு உதவச் சென்று இருக்கிறார்கள் ஆனால், அங்கே பொறுப்பில் இருந்தவர் ஒருவர் வந்தவர்களை மதிக்காமல் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் வந்தவர்கள் அனைவரும் கோபம் அடைந்தாலும், தாங்கள் வந்தது குழந்தைகளுக்கு உதவவே! எனவே, இவரின் அவமரியாதையைப் புறக்கணித்துக் குழந்தைகளுக்கு உதவலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

‘நம்முடைய நல்ல எண்ணங்களை வேறு ஒருவரின் குணத்தால் இழக்காமல் பார்த்துக்கொள்வோம். அதாவது நம்முடைய எண்ணங்களைச் செயல்களை வேறொருவர் கட்டுப்படுத்த / தடுக்க அனுமதிக்கக் கூடாது.

உலகம் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு சோதிக்கப்பட்டாலும், எங்குச் சென்றாலும், நம் பண்பு நலன்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

அடுத்தவர்களின் குறைபாடுகள் நம்மைக் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. வேறொருவர் தவறு செய்துள்ளார் என்பதால், நம் தவறை நியாயப்படுத்தக் கூடாது. தவறுக்கு தவறே விடையாக இருக்க முடியாது.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிறரிடம் சரிக்குச் சமமாகப் போட்டியிடாமல் அவர்களைத் தாண்டிச்செல்வோம். நீங்கள் உதவ நினைப்பது சரியான நபரை அடையட்டும்.

என்று கூறுகிறார்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் நம்முடைய சுயகௌரவம் (Ego) தூண்டப்படுவதால், அதற்குப் பலியானால் நம்மால் உதவ முடியாமல் போகலாம்.

நம்முடைய நல்ல எண்ணத்தை மற்றவரின் நடத்தை செய்ய விடாமல் தடுக்க அனுமதிக்கக் கூடாது.

அமேசானில் வாங்க –> தாயம்

தொடர்புடைய கட்டுரை

சிகரத்தை அடைய எளிய வழி எது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நான் எப்போதும் பொதுவான புத்தககங்களும், கற்பனை கதைகள், கவிதைகளை படிப்பதை விட அனுபவப்பூர்வமானவற்றை படிப்பதில் அலாதி ஆர்வம்.. என்னுடைய விருப்பமான ஆசிரியர் என்றால், அ.முத்துலிங்கம் மட்டுமே!!! இவரை விட பல சிறந்தவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்கவும் ஆர்வம் இல்லை.. முத்துலிங்கம் அவர்களின் அனுபவம் உலகலாவியது!!! ஒவ்வொருமுறை படித்தவற்றை திரும்ப படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும்.. சலிப்படைய செய்யாது..

    இந்த பதிவில் ” தவறுக்கு தவறே விடையாக இருக்க முடியாது.” இந்த வரிகள் என்னை மீண்டும் மீண்டும் யோசிக்கிக்க வைக்கிறது.. என் கடந்தகால வாழ்க்கையையும் ஒரு வினாடி கண் முன்னே கொண்டு வருகிறது.. நாற்பது வயதை நெருங்கும் போது என்னுள் ஏற்படும் மாற்றங்களை நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. “எப்போதும் பொதுவான புத்தககங்களும், கற்பனை கதைகள், கவிதைகளை படிப்பதை விட அனுபவப்பூர்வமானவற்றை படிப்பதில் அலாதி ஆர்வம்”

    எனக்கும் 🙂

    இப்புத்தகம் ஏராளமான என்னுடைய தவறுகளை சுட்டிக்காட்டியது. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    தவறு செய்யும் போது படித்தது நினைவுக்கு வந்து, அதை செய்யாமல் தடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here