6 Underground (2019) மிரட்டல் சண்டை

3
6 Underground Movie Poster

Bad Boys, The Rock, Armageddon, Transformers போன்ற அதிரடி திரைப்படங்களை எடுத்த இயக்குநர் Michael Bay இயக்கிய படம் 6 Underground.

6 Underground

மிகப்பெரிய பணக்காரரான Ryan Reynolds தன்னுடைய இறப்பை போலியாக உலகுக்கு அறிவித்து, இவரைப்போல் எண்ணமுடைய 5 நபர்களை இணைத்துக் கிரிமினல், தீவிரவாதிகளைக் களை எடுக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

Subtitle உடன் படம் பார்த்தும், படம் சரியாகப் புரியவில்லை ஆனால், படத்தின் சண்டை காட்சிகள் தாறுமாறாக உள்ளது. இப்படத்துக்கு விமர்சனம் எழுத இதுவே காரணம்.

இத்தாலியில், கார் துரத்தல் காட்சி படத்தின் துவக்கத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. எப்படி எடுத்தார்கள் என்றே தெரியலை! எங்கேயுமே CG என்றே தெரியவில்லை. உண்மையாகவே இத்தனை கார்கள் சேதப்படுப்பட்டதா?

கண்களையே நம்ப முடியவில்லை. எங்கேயுமே CG என்று தெரியவில்லை. இந்த இடத்தில் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறதே தவிர, உறுதியாகக் கூற முடியாது.

இதில் Spy என்று வரும் கதாப்பாத்திரம், கட்டிடத்துக்குக் கட்டிடம் தாவுவது, உயரமான மெல்லிய சுவரில் ஓடுவது என்று படம் முழுக்கத் திகில் ஏற்படுத்தி இருக்கிறார்.

மிரட்டல் CG 6 Underground

காட்சிகள் CG தான் என்று அறிவு சொல்கிறது ஆனால், மனது நம்ப மறுக்கிறது.

ஒரு மிகப்பெரிய கட்டிடத்தில் நடக்கும் சண்டை காட்சிகளும், கப்பலில் நடக்கும் சண்டை காட்சிகளும்.. த்தா எப்படியா எடுத்தானுக!! என்று தோன்றியது.

எவ்வளவோ சண்டை படங்களைப் பார்த்து இருக்கிறேன் ஆனால், இப்படி மிரண்டது இல்லை.

NETFLIX Ultra HD யில் பார்த்தேன்.. ப்ப்பா எப்படி இருக்கிறது!

சும்மா பளபளன்னு வண்ணமயமாக அட்டகாசமான ஒளிப்பதிவு. இதற்காகவே படத்தைப் பார்த்துட்டே இருக்கலாம் போல உள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கே உண்டான வழக்கமான நம்ப முடியாத காட்சிகள் தான் படம் நெடுக என்றாலும், பிரம்மாண்டமாக, சுவாரசியமாக எடுத்துள்ளார்கள்.

ஆனால், படத்துக்கு விமர்சனம் எதிர்மறையாக உள்ளது. பலரும் குறைந்த மதிப்பெண்ணையே கொடுத்துள்ளார்கள்.

இயக்குநர் Michael Bay வின் முந்தைய படங்களின் தீவிர ரசிகர்களாக இவர்கள் இருக்கலாம். மற்ற படங்களோடு ஒப்பிடும் போது அவர்கள் எதிர்பார்த்த அளவு திரைக்கதை இல்லை போல.

90′ களில் வந்த Armageddon படத்தைச் சென்னை தேவி திரையரங்கில் பார்த்த பிரம்மிப்பே எனக்கு இன்னும் தீரவில்லை. இப்படத்தில் பல புரியலை ஆனால், சுவாரசியமாக உள்ளது.

படத்தில் இரு உடலுறவு காட்சிகள் வருகிறது. இவற்றைத் தவிர்த்து இருந்தால், சின்னப் பசங்களுக்கும் இப்படத்தைக் காட்டலாம், ரொம்ப ரொம்ப ரசிப்பார்கள்.

CG, சண்டை காட்சிகள், தொழில்நுட்பம், ஒளிப்பதிவுக்காகப் படத்தைப் பார்க்கலாம்.

Directed by Michael Bay
Produced by Michael Bay, Ian Bryce, David Ellison, Dana Goldberg, Don Granger
Written by Paul Wernick, Rhett Reese
Starring Ryan Reynolds, Mélanie Laurent, Corey Hawkins, Manuel Garcia-Rulfo, Adria Arjona, Payman Maadi, Ben Hardy, Dave Franco
Music by Lorne Balfe
Cinematography Bojan Bazelli
Edited by William Goldenberg, Roger Barton, Calvin Wimmer
Distributed by Netflix
Release date December 10, 2019 (The Shed), December 13, 2019 (United States)
Running time 128 minutes
Country United States
Language English

Read: Polar (2019) எங்கிட்ட மோதாதே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. படத்தோட முன்னோட்டம் பட்டாசாக இருக்கிறது.. நாம அவங்க கூட எந்தக்காலத்திலும் CG வேலைகளில் போட்டி போட முடியாது போல!!! படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.. 90 களில் நான் பார்த்து மிரண்ட, வியந்த, படம் டெர்மினேட்டர்.. முதல்முதலில் பார்த்த ஆங்கில படமும் இதுதான்..

    நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேபாளி மொழி படத்தை பார்த்தேன்.. படம் செம்ம படம்.. இமயமலையின் ஒட்டுமொத்த அழகையும் படத்தில் காண முடியும்.. தற்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு வாரமாக முயற்சித்து கொண்டிருக்கிறேன்.. நினைவில் கொண்டுவர முடியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. டெர்மினேட்டர் , ஸ்பீடு, ஆர்மகெட்டான், ராம்போ போன்ற படங்கள் அப்போது மிகப்பிரபலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here