தற்காலிக மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி?

3
தற்காலிக மின்னஞ்சல் முகவரி

ணையத்தில் எந்தத் தளத்தில் கணக்குத் திறப்பது என்றாலும் மின்னஞ்சல் முகவரி அவசியம். இதைத் தற்காலிக மின்னஞ்சல் முகவரி மூலம் சரி செய்யலாம்.

தற்காலிக மின்னஞ்சல் முகவரி

முதன்மை மின்னஞ்சல் முகவரி ஒன்றும், Backup மின்னஞ்சல் முகவரி ஒன்றும் பலர் வைத்து இருப்பார்கள். இதையும் தாண்டித் தற்காலிக மின்னஞ்சல் முகவரி சில நேரங்களில் தேவைப்படுகிறது.

சில தளங்களில் எதையாவது முயற்சிப்போம் ஆனால், அத்தளம் பயனுள்ளதாக உள்ளதா இல்லையா என்பது தெரியாது. பயன்படுத்திப்பார்க்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால், ஸ்பாம் செய்து விடுவார்கள்.

ஏகப்பட்ட மார்க்கெட்டிங் மின்னஞ்சல்கள், சலுகைகள், தள்ளுபடிகள் என்று அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

Unsubscribe செய்தாலும் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள்.

என்ன தீர்வு?

இதற்காக https://temp-mail.org/ போன்ற பல தளங்கள் உள்ளன. இதில் தற்காலிகமாக மின்னஞ்சல் முகவரியைப் பெற முடியும்.

இம்முகவரியைக் கொடுத்து நாம் சேவையைத் தொடருவதா, இல்லை புறக்கணிப்பதா என்று முடிவு செய்யலாம்.

சில தளங்கள் என்ன உள்ளது என்று பார்க்கவே கணக்கு திறக்கக் கட்டாயப்படுத்துவார்கள். அதற்குத் தற்காலிக மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்.

https://temp-mail.org/ தளம் திறந்தாலே தற்காலிக மின்னஞ்சல் உருவாகி விடும்.

OTP வந்தாலும் இதற்குக் கீழேயே (அதே பக்கத்தில்) மின்னஞ்சல் வந்து விடும். எனவே, மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துவதும் எளிது.

ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு இம்முகவரியைக் கொடுத்தால், கணக்கை முடக்க வாய்ப்புள்ளது. காரணம், இம்முகவரிகள் ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களின் ஸ்பாம் பட்டியலில் இருக்கும்.

இம்முகவரியை முக்கியமல்லாத தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்காலிக முகவரி என்றாலே முக்கியமற்ற தளங்களுக்காகவே.

ஜிமெயில், யாஹூ போன்ற தளங்களில் அனைத்து விவரங்களையும் கொடுத்துச் செய்ய வேண்டியது இல்லாமல், இதில் நொடியில் உருவாக்கலாம்.

தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிச்சயம் எப்போதாவது தேவைப்படும் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்?

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. அருமை அண்ணா இதுபோல் பல தளங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பாமலே வங்கி கணக்கை முடக்கி வைக்கிறார்கள். கணக்கை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்குள் உயிர் போய்விடுகிறது. அலையவிட்டு கொண்டே இருக்கிறார்கள். இதுபோல் வங்கிக் கணக்குகளை முடக்கி அதை அரசின் கஜானாவுக்கு மாற்ற முயற்சி நடப்பதாக வங்கி ஊழியர்களே தெரிவிக்கிறார்கள். முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை பெறுவதற்கு மற்றும் அதில் உள்ள பணத்தை எடுக்கும் வழிமுறை பற்றி ஒரு பதிவிடுங்கள்.நன்றி

  2. @விஜயகுமார்

    பல காலமாக பயன்படுத்தாத வங்கிக்கணக்கை மட்டுமே முடக்குவார்கள்.

    ஏற்கனவே, பல வங்கிக்கணக்குகள் சம்பந்தப்பட்டவர்கள் காலமாகியும், தெரிவிக்கப்படாததால் அதில் உள்ள பணத்துடன் தொடர்ந்து கொண்டுள்ளது என்று சமீபத்தில் ஒரு செய்தி பார்த்தேன்.

    அதே போல இன்சூரன்ஸ் பணம் கூடப் பெறப்படாமல் இன்சூரன்ஸ் நிறுவனங்களே வைத்துள்ளன என்று கூறப்பட்டதால், அதை அரசின் கஜானாக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட போவதாக படித்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!