சிலை & நினைவு மண்டபங்கள் | வீணாகும் மக்கள் வரிப்பணம்

4
சிலை & நினைவு மண்டபங்கள்

மிழக அரசு சமீபமாக சிலை மற்றும் நினைவு மண்டபங்கள் அமைக்கும் பல உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. Image Credit

சிலை & நினைவு மண்டபங்கள்

சிலை அமைப்பதும் நினைவு மண்டபங்கள் அமைப்பதும் அரசியலாகி விட்டது.

ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும் போதும் அவர் கட்சி சார்ந்த கொள்கையுடைய தலைவர்களுக்கு இவற்றை அமைப்பது வழக்கமாகி விட்டது.

இதோடு அரசியல் தலைவர்கள் பெயர்களை திட்டங்களுக்கு, கட்டிடங்களுக்கு, நிறுவங்களுக்கு வைப்பது.

கலைஞர் நினைவு மண்டபம்

எம்ஜிஆர், ஜெ நினைவு இடங்களுக்குப் போட்டியாக கலைஞர் மண்டபம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நிதி நெருக்கடி இருப்பதாக அறிவித்து விட்டுத் தற்போது ₹39 கோடியில் நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.

இவர்கள் கொடுத்த மாதிரி வரைபடத்தில் ஒரே ஒரு பேனா தவிர வேறு எந்தப் பெரிய கட்டிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு ₹39 கோடி.

இதன் பிறகு அண்ணாசாலையில் கலைஞர் சிலை வைக்கப்படப் போவதாக அறிவிப்பு! இதை இதே நினைவுமண்டபத்திலேயே வைக்கலாமே!

இதை போக்குவரத்து நெரிசல் உள்ள அண்ணாசாலையில் ஏன் வைக்க வேண்டும்?

பிறந்தநாள், நினைவுநாள், மற்ற விழாக்கள் என்று இங்கே கூட்டத்தை கூட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவார்கள்.

ஏற்கனேவே, அண்ணா, எம்ஜிஆர், ஜெ சிலைகளுக்கு இந்த பிரச்சனைகள் உள்ளன. தற்போது கூடுதலாக கலைஞரும் சங்கத்தில் இணைந்து விட்டார்.

‘ஜெ’ சிலைக்கு ஏணியை எடுத்து விட்டார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி புகார். எதற்குச் சிலையை வைக்கணும்? பின்னர் இப்படி புலம்பனும்?

இவர்கள் அனைவருக்கும் மெரினாவில் பல கோடி செலவில் நினைவுமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் சிலைகளை அங்கேயே வைக்கலாமே!

ஏன் சாலை, தெருவில் வைத்துப் பொதுமக்களையும், போக்குவரத்தையும் தொல்லை செய்ய வேண்டும்?

தலைவர்கள் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் அவர்களது கட்சி அலுவலகத்தில் வைத்துக்கொண்டு தினமும் வணங்கலாமே! யார் குறை கூறப்போகிறார்கள்?!

தொடரும் சிலை & நினைவு மண்டபங்கள்

அப்துல் கலாமுக்கு மெட்ராஸ் பல்கலை கழகத்தில் சிலை என்று அறிவிப்பு! கலாமுக்கும் பல கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல கோடி செலவில் நினைவு மண்டபம் இருக்கையில், இங்கே ஏன்?

பெரியாருக்கு ₹100 கோடியில் திருச்சியில் சிலை (திராவிடர் கழகம் அமைப்பதாகக் கூறப்படுகிறது).

இவையல்லாமல் இன்னும் பலருக்கு சிலை, நினைவு மண்டபங்கள் அமைக்க சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொண்டுள்ளன. பல நூறு கோடி மக்கள் வரிப்பணம் இதற்காக கூச்சமே இல்லாமல் செலவிடப்பட்டுள்ளன.

இது போதாது என்று குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்காதவர் செருப்பு மாலை போட்டால், அதற்குக் காவல்துறை பாதுகாப்பு!

அரசுத் திட்டங்களுக்குப் பணம் இல்லையென்று கூறுவது, பின்னர் இது போல வெட்டியாக செலவு செய்வது.

மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இந்நிலையை பார்க்கும் போது ஏற்படும் எரிச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

கண்டு கொள்ளாத நீதிமன்றங்கள்

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் சிலை, நினைவு மண்டபங்களுக்கு நீதிமன்றங்களும் தடை போடாமல் வேடிக்கை பார்ப்பது மேற்கூறியதை விட கோபத்தை ஏற்படுத்துகிறது.

அரசியல் கட்சிகள் பொது இடங்களில் சிலை, நினைவு மண்டபம் அமைப்பதற்கு தடை வேண்டும். இதை நீதிமன்றமே முன்னெடுத்து ஏன் தடைவிதிக்கக்கூடாது?!

சிலை வைக்க விருப்பப்படுகிறவர்கள் அவர்கள் சொந்த செலவில், அவர்கள் கட்சி அலுவலகத்திலேயே வைத்துக்கொள்ளட்டும். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

இல்லையென்றால், ஒரு பெரிய நினைவு மண்டபத்தை அமைத்து அதில் வரிசையாக ஒவ்வொருவருவருக்கும் சிலை வைத்து விடலாம்.

அமரர் நவீன சிங்கப்பூர் தந்தை திரு ‘லீ குவான் யூ‘ கூறியது..

'நான் இறந்த பிறகு எனக்குச் சிலை வைக்கக் கூடாது. நான் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கக் கூடாது. ஒருவரின் புகழ் என்பது அவர் செய்த செயலில், சாதனையில் தான் உள்ளதே தவிர நினைவுச் சின்னங்களில் அல்ல'

தொடர்புடைய கட்டுரைகள்

நடிகர் திலகம் சிலை சர்ச்சைகள்

எடப்பாடி அரசின் தேவையில்லாத ஆணிகள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி.. இது போல செய்திகளை படிக்கும் போது உண்மையிலே அதிர்ச்சியாக இருக்கிறது..மெட்ராஸ் படத்தில் வரும் சுவர் அரசியல் போல, தலைவர்களின் சிலைகளிலும் அரசியல் உள்ளது.. எல்லா கட்சிகளும் இந்த விஷியத்தில் ஒற்றுமையாக இருக்கிறது..

    தமிழ்நாட்டில் ஒரு வேளை உணவு கிடைக்காமல் எத்தனை பேர்கள் பட்டினியாக இருக்கும் போது இது போல திட்டங்கள் அவசியமா??? என்று யோசிக்க வேண்டும்.. அடிப்படை வாழ்வாதாரமே இழந்து விட்டு பல குடும்பங்கள் இன்று வீதிக்கு வந்து விட்டது.. அவர்களின் வாழ்வியல் முறையை மாற்ற வேண்டியது அரசின் கடமையாகும்..

    சிலைகளுக்கு செலவு செய்யும் தொகையை இது போல பல நிகழ்வுகளுக்கு செய்யலாம்.. எல்லா அரசியல் கட்சிகளும் நிறைய வைப்பு தொகை வைத்து இருக்கிறது.. அப்படி இருக்கும் போது அவர்கள் சொந்த செலவில் சிலை வைத்து பராமரிக்கலாம்.. அரசின் செலவில் வைக்க வேண்டியது அவசியமா என யோசிக்க வேண்டும்.. ஒரு கட்சி சிலையை வைப்பது, அடுத்த முறை ஆட்சி மாறும் போது சிலையை மாற்றுவது!!! சிலையை வைப்பதற்கு முன்பே யோசிக்க வேண்டும்..

    ‘நான் இறந்த பிறகு எனக்குச் சிலை வைக்கக் கூடாது. நான் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கக் கூடாது. ஒருவரின் புகழ் என்பது அவர் செய்த செயலில், சாதனையில் தான் உள்ளதே தவிர நினைவுச் சின்னங்களில் அல்ல’…

    செம்ம கிரி.. திரு. லீ குவான் யூ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.. உங்களுக்கு தெரிந்து சரியான புத்தகம் தமிழில் இருப்பின் கூறவும் ..

    மிக சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணலை கண்டு மிரண்டு விட்டேன்.. கிட்டத்திட்ட 10 பகுதிகளுக்கு மேல் உரையாடல் இருந்தது.. ஒவ்வொரு பகுதியும் பொக்கிஷம்.. வாழ்வியலின் முறையை மிகவும் அழகாக எடுத்துரைத்தார்.. ரஜினி சாரை குறித்து அவர் பேசியது.. மிகவும் சிறப்பு… நேரம் இருப்பின் பார்க்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. சிலைக்கு அனாவசிய செலவு ஒரு முக்கிய காரணம் என்றால், அதை வைப்பதால் பல அரசியல் பிரச்சனைகள் பின்னாளில் வருகிறது.

    தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.

    யாசின் நீங்க சொன்னீங்க என்று மூன்று பாகங்கள் தொடர்ந்து பார்த்தேன்.. பின்னரும் தொடர்ந்ததால், அனைத்தும் முடிந்த பிறகு மொத்தமாக பார்த்துக்கொள்ளலாம் என்று காத்துள்ளேன்.

    முடிந்து விட்டதா?

  3. முடிந்து விட்டது கிரி.. தொடர்ச்சியாக எல்லா பகுதிகளையும் பார்க்கவும்.. வாழ்க்கையின் பல படிகளை கடந்து வந்துள்ள அனுபவத்தை மிகவும் எளிமையாக, இனிமையாக, அழகாக விவரிக்கிறார்.. ரஜினி சாருக்கும் அவருக்கான நட்பு அதிசயிக்க வைக்கிறது.. காணொளியை பார்த்து விட்டு நான் ஒரு மின்னஞ்சல் ராமகிருஷ்னன் சாருக்கு அனுப்பினேன்.. பதிலும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி..

  4. அனைத்தையும் பார்த்து விட்டுக் கூறுகிறேன் 🙂 .

    உங்களுக்குப் பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நாம் மதிக்கும், ரசிக்கும் ஒருவருக்கு கடிதம் அனுப்பி அவரிடமிருந்து பதில் பெறுவது உண்மையிலேயே சிறப்பான தருணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here