The Attacks of 26 / 11 | மும்பைத் தாக்குதல்

5
The Attacks of 26 / 11

The Attacks of 26 / 11 படத்தின் கதை நாம் அனைவரும் அறிந்தது. Image Credit

எத்தனையோ தீவிரவாதப் படங்களைப் பார்த்து இருந்தாலும், நம் நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் எனும் போது நம்மை அறியாமல் கண் கலங்குவது நிஜம்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பார்த்தால் அழாமல் இருக்கவே முடியாது.

எதுவுமே நமக்கென்று வரும் போது தான் அதன் உண்மையான வலி நமக்குப் புரிகிறது. அது எந்த விசயமாக இருந்தாலும்….!

The Attacks of 26 / 11

அதிகாரிகளிடம் நடந்து முடிந்த The Attacks of 26 / 11 சம்பவங்களை இணை கமிஷனர் “நானா படேகர்”  விளக்குவது போல ஆரம்பிக்கிறது.

உயர் வகை மீன் பிடிக்கக் கடலில் தூரமாகச் செல்கிறார்கள் சில மீனவர்கள். இவை மிக ஆழமான பகுதிகளில் மட்டுமே கிடைப்பவை.

அங்கு வரும் தீவிரவாதிகள், மிரட்டி இவர்கள் படகு மூலமாக மும்பை செல்கிறார்கள்.

கூட்டாக வந்தாலும் தாக்குதலுக்குப் போகும் போது குழுவாகப் பிரிந்து சென்று சரியாக இரவு 9.30 மணிக்கு ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள்.

Leopold Cafe & Bar

முதல் தாக்குதல் வெளிநாட்டினர் உட்பட பலர் இருக்க, இங்கு வரும் இருவர் சரமாரியாகச் சுட்டு அனைவரையும் கொல்கிறார்கள்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் இருவருமே பதட்டமடையவில்லை, அவசரமில்லை, நிதானமாக வெகு நிதானமாக ஒவ்வொருவராகச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சும்மா படுத்து இருந்தாலும் ஒரு முறை சுட்டு உறுதி செய்கிறார்கள்.

தாஜ் ஹோட்டல்

குழந்தையின் சுட்டித் தனத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும் போது தீவிரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிதானமாகச் சுடுகிறார்கள், எந்தப் பதட்டமும் இல்லை. இவர்கள் சுடுவதைப் பார்த்துப் பயந்து ஆளுக்கு ஒரு திசையில் ஓடுகிறார்கள் ஆனால், சுடப்பட்டு வீழ்கிறார்கள்.

கொல்லப்பட்ட தனது அம்மாவின் அருகில் அமர்ந்து ஒரு குழந்தை கதறுகிறது. துப்பாக்கி சத்தம் மட்டும் கேட்கும் குழந்தையின் அழுகை நிற்கும்.

CST [Chhatrapati Shivaji Terminus] ரயில் நிலையம்

இங்கே தான் கசாப் முறை. கசாப் மற்றும் இன்னொருவர். சென்ட்ரல் ரயில் நிலையம் போலவே பரபரப்பாக உள்ளது.

மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே நுழைபவர்கள் எல்லாம் தயார் செய்த பிறகு முதலில் செய்வது வெடிகுண்டைக் கூட்டத்தில் போடுவது தான்.

கண்ணில் படும் அனைவரையும் சுடுகிறார்கள். எங்கே ஓடுவது எங்கே இருந்து சுடுகிறார்கள் என்றே தெரியாமல், இவர்கள் முன்னே வந்து சுடப்பட்டு விழுகிறார்கள்.

இது போல ஒரு திடீர் பிரச்னையை எதிர்பாராத காவலர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறார்கள், இவர்களால் சுடப்பட்டு சாகிறார்கள்.

ஒரு காவல் துறை நபர் பதட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஓடித் தவிப்பதும், தீவிரவாதிகளைச் சுடத் தேடுவதும், மேலதிகாரி உட்பட தன் சக ஊழியர்கள் பிணமாகக் கிடைப்பதை பார்த்து என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக் கதறும் போது நம் மனம் படும் பாடு சொல்லி மாளாது.

Cama Hospital – Women and Children’s Hospital

இவர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்து உஷாரான ஒரு மருத்துவர் அனைவருக்கும் தகவல் கூறி அனைவரையும் ஒரு அறையில் ஒளிந்து கொள்ளக் கூறுகிறார்.

இவர்கள் நுழைந்து [Reception] அங்கு இதே போல வெறியாட்டம் ஆட உள்ளே ஒளிந்தவர்கள் தப்பித்து விடுவது போலத்தான் காட்டப்பட்டு இருக்கிறது.

அனுபவம் புதியது

இதில் நானா பாடகர் கூறிக்கொண்டு இருப்பார்…

எப்போதுமே எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் செல்வோம் ஆனால், இது நடக்கும் போதே செல்லும்படி ஆனது. யாருக்கும் எந்தப் பயிற்சியும் இல்லை.

இது போலப் பிரச்சனை வந்தால் சமாளிக்கக்கூடிய எந்தத் திறமையும் இல்லாத சாதாரண காவலர்கள்” என்று நடைமுறை உண்மையைக் கூறுவார்.

காவல் துறையை, FBI போல அதிரடியாகக் காட்டாமல், நம்மவர்கள் எப்படி நடந்து இருப்பார்களோ அதை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் RGV காட்டி இருந்தார்.

எங்களுக்கு இது புதிது, அனுபவம் இல்லை.. பயிற்சி இல்லை.. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். விசாரிப்புகள்.

இப்படி மொத்தமாகக் குவியும் போது நாங்கள் சமாளிக்க முடியாமல் திணறி விட்டோம்” என்று நானா படேகர் கூறுவார்.

திடீர் என்று பலர் அனைவரையும் சுடுகிறார்கள், பலரின் உயிர் கண் முன்னே போகிறது, நம்மையும் சுட வாய்ப்பு, போதுமான காவலர்களும் இல்லை.

எந்த முன் பயிற்சியும் இல்லை என்று இருக்கும் போது வரும் பதட்டம், சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் தெரியும்.

காவல் துறை எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.

ஆனால், அதற்கு அரசாங்கம் அவர்களுக்குண்டான போதுமான வசதிகளை, பயிற்சிகளை நவீன ஆயுதங்களைக் காவலர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

என்ன தான் பயிற்சி பெற்றாலும் திடீர் என்று அதை எதிர்கொள்ளும் போது எவருக்கும் பதட்டம் வருவது இயற்கையே!

கசாபாக நடித்து இருந்தவர் நடிப்பு அருமை.

நானா படேகர் கசாப்பிடம் பேசும் முறை அசத்தலாக இருக்கும். கசாப் செய்யும் முட்டாள் தனத்தை அழகாக விவரிப்பார்.

NSG செய்த துப்பாக்கி சூடு

தாஜ் ஹோட்டலில் NSG செய்த துப்பாக்கி சூட்டை காட்டவில்லை. இதை CNN காணொளியாக எடுத்து நம்மை நாறடித்து இருந்தது.

TRP யை அதிகப்படுத்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் பேட்டி கொடுக்க, அதை ஹோட்டலில் இருந்த தீவிரவாதிகள் நேரலையாகப் பார்த்து உஷார் ஆனது கொடுமையான கதை.

ஊடகங்கள் செய்த அட்டகாசங்கள், பேட்டி கொடுத்துச் சொதப்பிய அதிகாரிகள், பயிற்சி இல்லாமல் சுடும் கமாண்டோக்கள், இதிலும் விளம்பரம் தேடிய அரசியல்வாதிகள் என்பது போன்ற சம்பவங்களை இந்தப் படத்தில் கூறவில்லை.

தொலைக்காட்சி ஊடகங்கள் செய்த அட்டகாசத்தையாவது குறிப்பிட்டு இருந்து இருக்கலாம். வட இ

திய தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை அந்தச் சமயத்தில் நாடே பார்த்தது.

Read: மும்பை தாக்குதல் | சாவு வீட்டில் விளம்பரம் [December 2008]

இந்தப்படம் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை ஆனால், காண்பித்த வரை சிறப்பாகவே எடுத்து இருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு கூற முடியுமோ அதைக் கூறி இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை கடுமையாகப் பலரும் ஏன் விமர்சனம் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை! வட இந்திய ஊடகங்கள் 2 ஸ்டார் மட்டுமே கொடுத்து இருந்தன.

RGV இவர்களைப் படத்தில் நாறடித்து இருந்து இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தவற விட்டுவிட்டார்.

RGV is BACK with BANG! அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.

Directed by Ram Gopal Varma
Produced by Parag Sanghvi
Written by Ram Gopal Varma, Rommel Rodrigues
Starring Nana Patekar, Sanjeev Jaiswa
Studio Alumbra Entertainment
Distributed by Eros International
Release date(s) February 2013 (Berlin), 1 March 2013
Running time 116 minutes
Country India
Language Hindi & Telugu

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. உங்களோட விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்….

  2. // எதுவுமே நமக்கு என்று வரும் போது தான் அதன் உண்மையான வலி நமக்குப் புரிகிறது. அது எந்த விசயமாக இருந்தாலும்….! //

    இதை நான் ஒப்புகொல்கிறேன்

  3. 26/11 விமர்சனத்திற்கு நன்றி.
    அப்பா! இப்போதான் எனக்கு பிடிச்ச ஒன்னு உங்களுக்கும் பிடிச்சிருக்கு, RGV படங்கள் 🙂 .

  4. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கௌரிஷங்கர் உங்களுக்கு பிடிக்காததையே எழுதிட்டு இருக்கேனா! 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here