மத அரசியல் செய்வது யார்?

4
மத அரசியல்

பாஜக மத அரசியல் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக மக்கள் மனதில் மத வெறியை விதைத்துக் கலவரத்தைத் தூண்டுவதாகவும், மத அரசியலுக்கு இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நிலைநாட்டுங்கள் என்று கூறியுள்ளார். Image Credit

மத அரசியல் செய்வது யார்?

முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது போலப் பாஜக மத அரசியல் செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர்கள் செய்யக் காரணம் என்ன?

மதச்சார்பின்மை என்று கூறிக்கொண்டு இருக்கும் திமுக & கூட்டணி கட்சிகள் இந்து மதத்தை மட்டும் இழிவு படுத்துவார்கள்.

முதலமைச்சர் என்ற அனைவருக்கும் பொதுவான பதவியிலிருந்து கொண்டு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறுவார், இந்துக்களைப் புறக்கணிப்பார் அதை அனைவரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க வேண்டுமா?

இந்துக் கடவுள் சிலைகள் உடைக்கப்படுகின்றன ஆனால், எவரும் கண்டுகொள்வதில்லை.

திமுகவில் உள்ள இந்துக்களும், சொரணை கெட்ட இந்துக்களும் வேடிக்கை பார்க்கலாம், மற்றவர்கள் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்?

இந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்துவார்கள், அசிங்கப்படுத்துபவர்களுக்கு ஆதரவு தருவார்கள் கேட்டால் மதச்சார்பின்மை.

லாவண்யா

தற்கொலை செய்த லாவண்யாவின் தந்தை திமுக உறுப்பினர்.

தனது கட்சி தொண்டன் குடும்பம் பாதிக்கப்பட்டும் ஏன் அவரின் மகளுக்காகப் போராடவில்லை? காரணம் தொண்டனின் மகள் இந்து, காரணமானவர் சிறுபான்மையினர். கட்சிக்கு யார் முக்கியம் என்பது தெரிகிறதா?

இதற்கெல்லாம் அசிங்கப்பட்டும் திமுகவினர் முட்டுக் கொடுக்கலாம், மற்றவர்கள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?!

ஊடகங்களின் பாரபட்சம்

PSBB பள்ளி பிரச்சனைக்குத் தினமும் விவாதம் வைத்தவர்கள், இதைக்கண்டுகொள்ளவே இல்லை. சரி விவாதம் வேண்டாம் ஆனால், நீதிமன்றம் கூறியதை கூற வேண்டும் அல்லவா! அதையும் கூறவில்லை.

பின்வருவன நீதிமன்றம் கூறியவை, எந்த முன்னணி ஊடகங்கள் இதைக் கூறியது?

 • லாவண்யா தற்கொலை வழக்கு விசாரணையைத் திசைமாற்ற காவல்துறை முயற்சித்தது.
 • முத்துவேல் பதிவுசெய்த லாவண்யா வீடியோக்களின் உண்மைத்தன்மையில் எந்தச் சந்தேகமும் இல்லை.
 • லாவண்யா தற்கொலையில் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யாவை குற்றம் சாட்ட எவ்வித அடிப்படைகளும் இல்லை.
 • லாவண்யா தற்கொலை வழக்கில் காவல்துறை பதிவு செய்த மற்றும் முத்துவேல் என்பவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் இரண்டிலும் விடுதி வார்டன் சகாய மேரியை குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கூறியவை முழுக்க ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஊடகங்கள், அரசியல்வாதிகள், போராளிகள் அனைவரும் இந்துக்களுக்கு ஒன்று என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

நியாயம் கேட்டால் மத அரசியல் என்பார்கள்.

இதே அரியலூர் அனிதாக்குத் திமுக செய்தது என்ன? அனிதாவை வைத்து அரசியல் செய்யவில்லையா? கேட்டால் அவியலா செய்வார்கள் என்பார் ஸ்டாலின்.

இவர்கள் இந்து மதத்தை என்ன பேசினாலும் ‘அன்பே சிவம்! பொறுமையே பெருமை‘ என்று அமைதியாகக் கடந்து செல்ல வேண்டும்.

சொரணை இல்லாதவர்கள் அமைதியாக இருங்கள். மற்றவர்கள் ஏன் இருக்க வேண்டும்?

திமுக வெற்றி பெற காரணம் நாங்கள் போட்ட பிச்சை‘ என்று ஜார்ஜ் பொன்னையா கூறிய போது ஒரே ஒரு திமுக வினர் கூடக் கண்டனம் தெரிவிக்கவில்லை.

திமுக வினர் பிச்சையை ஏற்றுக்கொண்டு அரசியலுக்காக, ஆட்சிக்காக அனைத்தையும் கேள்வி கேட்காமல் இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்தா?

இந்நிலை ஏற்படக் காரணம் என்ன?

திமுக & கூட்டணி கட்சிகளின் பார்வையில் மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு எதிராகப் பேசுவது, கேவலப்படுத்துவது சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்வது.

யாரும் கேள்வி கேட்கக் கூடாது, கேட்டால் மத அரசியல் என்று விமர்சிக்கப்படும்.

யார் நமக்காகப் பேசுகிறார்களோ அவர்களிடம் தான் பாதிக்கப்பட்டவர்கள் செல்வார்கள். இதில் என்ன வியப்பு உள்ளது!

இவ்வாறு செய்யத் தூண்டுவதே திமுகவினர், கூட்டணி கட்சிகள் தானே!

மதச்சார்பின்மை பற்றிப் பேச இங்கே யாருக்குமே தகுதியில்லை.

திமுக நியாயமாக, உண்மையான மதச்சார்பின்மையுடன் நடந்து கொள்ளாத போது விமர்சனம் இருக்கத் தானே செய்யும்.

சிறுபான்மையினர் வாக்குக்காக இந்துக்களைக் கேவலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள், அதை வேடிக்கை பார்த்துட்டே இருக்கணுமா?!

மத அரசியல் செய்வது திமுகவா பாஜகவா?

எந்த மதத்தினரையும் விமர்சிக்கக் கூறவில்லை, அது என் விருப்பமும் அல்ல. அனைத்து மதத்தினரிடமும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஒரு சார்பாக நடக்காதீர்கள் என்கிறேன்.

எப்படிக் காறித்துப்பினாலும் இந்துக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைமை மாறாத வரை திமுக காட்டில் மழை தான் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பான அசிங்கமான உண்மை.

என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும். அதற்குக் காரணம் பாஜக வாக இருக்காது, முழுக் காரணமும் திமுகவாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் பாஜக வளர்வதற்குத் தீவிரமாக உழைத்துக்கொண்டு இருப்பது திமுக & கூட்டணி கட்சிகளே! இதில் எந்தச் சந்தேகமுமில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

4 COMMENTS

 1. கிட்டதிட்ட நாற்பது வயதாகியும் அரசியல் மொழியினை சத்தியமாக புரிந்து கொள்ள முடியவில்லை.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல இருக்கும் போது, அவைகளில் கவனம் செலுத்துவது தான் சரியானதாக இருக்கும்.. யார் நல்லவர் யார்
  கெட்டவர் என்று அடையாளம் காண முடியவில்லை.. அரசியல் புரியாத புதிராகவே இருக்கிறது..

  எந்த மதத்தினரையும் விமர்சிக்கக் கூறவில்லை, அது என் விருப்பமும் அல்ல. அனைத்து மதத்தினரிடமும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஒரு சார்பாக நடக்காதீர்கள் என்கிறேன். உங்கள் கருத்தின் ஆழத்தை உள்வாங்கி கொள்ள முடிகிறது..மிக சரியான கூற்றும் கூட.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின் அரசியல் முற்றிலும் மாறி விட்டது.

  மக்களும் அதற்கு பழகி விட்டார்கள். நேர்மையான அரசியலை எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. சதவீத அளவில் பரவாயில்லை என்றே கூற முடியும்.

 3. அண்ணே , நீங்க இப்போ எந்தக்கட்சி? உண்மையை சொல்லவும். 40+ ஆச்சுது. இரத்தக்கொதிப்பு உடம்புக்கு கூடாது.

 4. @பிரியா

  “அண்ணே , நீங்க இப்போ எந்தக்கட்சி? உண்மையை சொல்லவும்.”

  நான் எந்தக் கட்சியிலும் இல்லை.. ஆனால், பாஜக ஆதரவாளன். அதென்ன உண்மைய சொல்லவும்! இங்க என்ன பொய்யா சொல்லிட்டு இருக்கேன்.

  “40+ ஆச்சுது. இரத்தக்கொதிப்பு உடம்புக்கு கூடாது.”

  20+ வயதில் உள்ளவர்களுக்கும் தற்போது ரத்த கொதிப்பு வருகிறதாம்.. கேள்விப்பட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here