The Equalizer (2014) | பிறர் அறியாமலே செய்யப்படும் உதவி

4
The Equalizer

ண்டை பட ரசிகர்களால் தவிர்க்க முடியாத படம் The Equalizer. டிவி சீரீஸ் ஆக வெளிவந்ததைத் திரைப்படமாக இயக்கியுள்ளார்கள். Image Credit

The Equalizer

கப்பல் படையில் பணி புரிந்து வெளியே வந்து சாதாரணப் பணியில் ஈடுபட்டுள்ள கதாப்பாத்திரம் Denzel Washington.

மற்றவர் அறியாமலே உதவுவதை ஒரு சேவையாக விருப்பமாகச் செய்பவர். தனக்கு யார் உதவினார்கள் என்பதே பலருக்குத் தெரியாது என்பதே இதன் சுவாரசியம்.

உதவுவது என்றால், எதோ பணம் அனுப்புவது என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். உயிருக்கே ஆபத்து என்ற எல்லைக்கே சென்று உதவுவார் ஆனால், சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாது.

சுவாரசியமாக இருக்கிறதல்லவா! 🙂 .

மற்றவருக்கு உதவுவது பெரிய செயல், சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் அதிக ஆபத்தை எதிர்கொண்டு உதவுவது அனைத்தையும் விடப் பெரிய செயல் தானே!

இந்த மையப்புள்ளி தான் இரண்டு பாகங்களிலும் இருக்கும். இரண்டாம் பாகத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவர் யாரெனத் தெரிய வரும்.

Denzel Washington முன்னாள் அதிகாரி என்பதால் இவருக்குப் பலரின் தொடர்புகள் கூடுதல் பலம்.

Denzel Washington

இப்படத்துக்கு மிகப்பெரிய பலம் திரைக்கதையாக இருந்தாலும், அதை உயிரோட்டமாகக் கொடுத்தவர் Denzel Washington.

அப்படியொரு அசாத்திய நடிப்பு.

நடவடிக்கையில் பொறுமை, பதட்டமின்மை, திட்டமிடல், வேகம், பயமின்மை, புத்திசாலித்தனம் என்று பட்டையைக் கிளப்பியுள்ளார்.

30 நொடிகளுக்கு நேரத்தை அமைத்து எதிரிகளை வெளுப்பது பட்டாசாக இருக்கும். விழும் ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கும்.

இவர் அணுகும் ஒவ்வொருவரின் பிரச்சனைகளும் சராசரி நபருக்கானதாகவே இருக்கும். அதாவது சாதாரணமான பொதுஜனத்தின் பிரச்சனைகளுக்கு உதவுவதாகவே இருக்கும், இல்லையென்றால் நட்புக்காக இருக்கும்.

திரைக்கதை

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் குறைந்த நேரமே ஆனால், மிரட்டலாக இருக்கும்.

ஒரு சண்டைப்படம் என்றால், சண்டைப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. சில காட்சிகளே வந்தாலும் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரும்பப் பார்த்தாலும் சுவாரசியத்தை தர வேண்டும்.

பெரும்பாலான காட்சிகள் அமைதியாகவோ, வேகம் குறைந்ததாகவோ இருக்கும் ஆனால், சலிப்பு ஏற்படாது என்பதே இதன் சிறப்பு.

எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவருக்கு உதவுவதையும் படம் பார்ப்பவர்கள் மனதில் விதைத்துள்ளார்கள்.

படம் பார்த்து முடிக்கும் போது நாமும் யாருக்காவது அவருக்குத் தெரியாமலே உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்பதே இப்படத்தின் சிறப்பு.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் திரைக்கதையை, கதையோட்டத்தைச் சிதைக்காதபடியுள்ளது.

இரண்டு பாகங்களுக்குப் பிறகு இன்னும் மூன்றாவது பாகம் வெளிவரவில்லை ஆனால், இம்மையக்கருத்தில் எத்தனை பாகங்கள் என்றாலும் எடுக்கலாம்.

யார் பார்க்கலாம்?

சண்டைப்படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள் தவறவிடக்கூடாத படம் ஆனால், அனைவருமே பார்த்து இருப்பார்கள் 🙂 .

பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

பொழுது போகாத சமயங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப பார்க்கும் படங்களில் ஒன்று The Equalizer.

Amazon Prime ல் காணலாம்.

Directed by Antoine Fuqua
Written by Richard Wenk
Based on The Equalizer by Michael Sloan, Richard Lindheim
Produced by Todd Black, Jason Blumenthal, Denzel Washington
Starring Denzel Washington
Cinematography Mauro Fiore
Edited by John Refoua
Music by Harry Gregson-Williams
Release dates September 7, 2014 (TIFF) September 26, 2014 (United States)
Running time 132 minutes[3]
Country United States
Language English

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

6 Underground (2019) மிரட்டல் சண்டை

Below Zero (2021 Spanish) | கடுங்குளிர்

Taken (2008) தந்தையின் அதிரடி துரத்தல்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, படத்தோட கதைக்களம் மிகவும் புதிதாக இருக்கிறது.. அதே சமயம் ரசிக்கும் படிக்கும் உள்ளது.. இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர் படம் பார்த்தேன்.. துவக்கம் ரசிக்கும் படி சென்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் முடியவில்லை.. கோவாவின் காட்சிகள் பழைய புருஸ்லீ படத்தை நினைவு படுத்தும் படி இருந்தது..

    எவ்வளவோ கதைகள் இங்கு இருந்தும் அவைகள் காட்சி படுத்தப்படாமலே இருக்கிறது.. திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலே நிச்சயம் ரசிப்பார்கள்.. ஆனால் பெருன்பான்மை இயக்குனர்கள் இங்கு சிந்திப்பது வேறு மாதிரி இருக்கிறது..

    நீங்கள் குறிப்பிட்ட படத்தின் கதை நான் இதுவரை கேட்டிராத ஒன்று.. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் எனக்கு தெரியவில்லை.. இந்த பதிவை படிக்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே உண்டாகிறது..

    ஆனால் தமிழில் வரும் புது படங்களில் வெகு சில படங்கள் மட்டுமே என்னை கவர்வதாக உள்ளது.. பெருன்பான்மை படங்கள் ஏமாற்றம் மட்டுமே தருகிறது.. அதுவும் பெரிய நடிகர்கள் படத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி ஐயா இந்த படத்தில் இரு பாகங்களையும் பார்த்துள்ளேன்.சண்டைகாட்சிகள் அருமையாக இருக்கும். இதன் காட்சிகள் பல வேதாளம் திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும். பல தெலுங்கு படங்கள் இதன் பல காட்சிகளை திருடி இருக்கின்றன. டென்சில் அவர்களின் book of eli நன்றாக இருக்கும்.

  3. @யாசின் பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.

    ” தமிழில் வரும் புது படங்களில் வெகு சில படங்கள் மட்டுமே என்னை கவர்வதாக உள்ளது.. பெரும்பான்மை படங்கள் ஏமாற்றம் மட்டுமே தருகிறது.”

    எனக்கும் இதே. தமிழ் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் குறைந்து வருகிறது. வெகு சில படங்களே திருப்தி அளிக்கிறது.

    @விஜயகுமார்

    ஐயா எல்லாம் வேண்டாம் 🙂 .

    The Book of Eli இன்னும் பார்க்கவில்லை. Amazon Prime ல் உள்ளது பார்க்கிறேன்.

  4. I have seen both the parts i still often watch the Fight at the pimps place
    as you said Denzie … chance illa have you seen Magnificiant Seven …

    warrant officer sam chisolm solra style athagalam

    this is again coming in Series but they have changed the lead character as a female

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here