பத்மா சேஷாத்திரி பள்ளி அரசியல்

5
பத்மா சேஷாத்திரி பள்ளி

த்மா சேஷாத்திரி பள்ளி சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. Image Credit

பத்மா சேஷாத்திரி பள்ளி

பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் செய்த பாலியல் அத்துமீறல் மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது. மாணவிகள் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆள்வது திமுக என்பதாலும், பாதிக்கப்பட்ட பள்ளி உரிமையாளர் பிராமணர் என்பதாலும், பள்ளியின் மீதான நெருக்கடி கடுமையாக உள்ளது.

ஒருபடி மேலே சென்று பள்ளியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளப் பரிசீலிப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் பேட்டி கொடுத்தார்.

ஓரிருவர் செய்த தவறுகளுக்கு ஒரு பள்ளியையே அரசு எடுக்க வேண்டும் என்பது காழ்ப்புணர்ச்சியே தவிர மாணவிகள் மீதான அக்கறையல்ல.

சாதி மதத்தை வைத்து நடக்கும் அரசியல்

இப்பள்ளியில் நடந்த தவறுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை இந்தப்பள்ளியில் மட்டும் தான் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதை போலப் போராளிகள் குதிப்பது தான் கடுப்பை கிளப்புகிறது.

பாதிக்கப்படும் மாணவி, மாணவன் எந்தப்பள்ளியாக இருந்தால் என்ன? தவறு தானே!

இதுவரை ஏராளமான பள்ளிகளின் மீது இக்குற்றச்சாட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் இது போலப் பரபரப்பு இல்லையே ஏன்?

அப்படியென்றால் பிராமணத் தலைமையுள்ள பள்ளி மாணவிகள் மீது மட்டுமே அக்கறை உள்ளது, மற்றவர்கள் மீது இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?!

எத்தனையோ கிறித்துவப் பள்ளி, கல்லூரிகளில் இது போல நடந்துள்ளது ஆனால், அதற்கெல்லாம் போராடவில்லையே ஏன்?

ஊடகங்கள் இது பற்றிய செய்தியை வெளியிடுவதில் அக்கறையே காட்டவில்லையே!

PSBB பள்ளி பற்றி மணிக்கொரு செய்தி போட்டுக்கொண்டு இருந்த புதியதலைமுறையின் முதலாளி SRM கல்லூரியில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது ஏன் விவாதிக்கப்படவில்லை?

எந்தப் பிரச்சனை மக்களை அடைய வேண்டும்? எது அடைய கூடாது என்பதைத் தீர்மானிப்பது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் போராளிகளும் மட்டுமே!
சம்பவங்கள் அல்ல.

குரல் கொடுக்க மாட்டார்கள்

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காகப் போராளிகள் குரல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தால் அறிவீனம்.

காரணம், இவர்கள் அக்கறை மாணவிகள் மீது அல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனம், சமூகத்தின் மீது உள்ள வெறுப்பு.

உண்மையான அக்கறையோடு கேட்டவர்கள் இப்பட்டியலில் வரமாட்டார்கள்.

மேற்கூறியது தவறு என்றால், ஏன் மற்ற பள்ளிகளில், கல்லூரிகளில் நடந்த பாலியல் அத்து மீறல்களுக்குக் குரல் எழுப்பவில்லை?

ஏன் தற்போது அடைந்த பரபரப்பு இல்லை?! அவர்கள் மாணவிகள் இல்லையா?

இவர்கள் அக்கறை மாணவிகள் நலன் மீதல்ல, சம்பந்தட்டவர் யார் என்பது மீது தான்.

ஒருவகையில் இப்பள்ளி மாணவிகளுக்கு நல்லது தான் செய்துள்ளார்கள், இனியொரு தவறு இப்பள்ளியில் நடக்க வாய்ப்பில்லை குறைந்தபட்சம் தற்போதைக்கு.

ஆனால், மற்ற பள்ளிகளில் தொடர்ந்து கொண்டு இருக்கும் காரணம், என்ன நடந்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

உண்மையில் மற்ற பள்ளிகளில் படிக்கும் குறிப்பாகக் கிறித்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இது போல நடந்தால் மூடி மறைக்கப்படும்.

எத்தனையோ பள்ளி மாணவிகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகள் பேசப்படவில்லையே என்று மனதினுள் புழுங்கி இருப்பார்கள்.

காரணம், இது போலப் பாலியல் அத்துமீறல்கள் இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் நடந்து கொண்டுள்ளது, நடக்கும்.

இதைக்கூற வருத்தமாக இருந்தாலும், இது தான் கசப்பான உண்மை.

வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உட்படப் பலர் புகார் கொடுத்தும், யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

இது போலச் சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் சின்மயி குறிப்பிட்டு வருகிறார் ஆனால், இதுவரை அவருக்கு நியாயம் கிடைக்கவில்லையே?

விசாரித்தால் தான் நடந்தது என்னவென்று தெரியும். இவர் பார்ப்பனர் என்பதால் தானே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்?

பார்ப்பன பெண் என்றால், புறக்கணிக்கலாமா?! இது தான் சமூக நீதியா?

பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி கூறுகிறார், அதே ட்வீட்டில் சின்மயி தன் பிரச்சனையைக் கூறுகிறார் ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லையே!

ஒரு பெண்ணுக்குப் பெண்ணே உதவவில்லை என்றால், யாரிடம் கேட்பது?

கடுமையான சட்டம்

மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வது நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் என்பது போல உறுதியான சட்டங்கள் வந்தால் மட்டுமே இக்குற்றங்கள் குறையும் (நிற்காது).

தற்போது நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, இக்குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என்ற மசோதாவை நிறைவேற்றலாமே!

மக்களிடையே நிச்சயம் பாராட்டைப் பெறும்.

என்ன நடந்தாலும், பின்னர் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணமே இது போல மன்னிக்க முடியாத தவறை செய்ய வைக்கிறது.

என்ன கடுப்பென்றால், இவ்வளவையும் செய்தவர்கள் பின்னர் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

சட்டங்கள் கடுமையாகாதவரை குற்றங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தற்போது குரல் கொடுத்தவர்களும், ஊடகங்களும் விரைவில் அடுத்தப் பரபரப்புக்குத் தாவி இதை மறந்து விடுவார்கள்.

இது தான் இன்று வரை அனைத்து சம்பவங்களிலும் நடந்து கொண்டுள்ளது.

குற்றம் எங்கே நடந்தாலும் சாதி, மதம் பார்த்துக் கண்ணீர் வடிக்காதீர்கள், கேவலமாக உள்ளது. தவறு யார் செய்தாலும் தவறு தான்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. நிறைய செய்திகள் தீடீரென்று எல்லோராலும் கவனம் பெறப்பட்டு, சில நாட்களுக்கு பின் காணமல் போகி விடுகின்றது.. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். தற்போது இருக்க கூடிய சூழ்நிலையில் இது போல செய்திகளை பார்க்கும் போது மனது கணக்கிறது.. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு, மீண்டும் இந்த தவறு நிகழாத வண்ணம் சட்டத்தை கொண்டு வர வேண்டும்..தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றங்கள் குறையும்..

  2. //உண்மையில் மற்ற பள்ளிகளில் படிக்கும் குறிப்பாகக் கிறித்துவப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இது போல நடந்தால் மூடி மறைக்கப்படும்.//
    அப்படியானால் கிரி நீங்கள்
    கடந்த பத்து வருடங்களில் அ தி மு க ஆட்சியில் மூடி மறைகப்பட்டது என்று சொல்கிறீ்களா? பொதுவாக சொல்ல வேண்டாம்

  3. @யாசின் தவறிழைத்தவர்கள் தப்பி கொண்டே இருக்கிறார்கள். இந்த ராஜகோபாலானாவது தண்டனையை அனுபவிப்பானா என்று பார்ப்போம்.

    @Aloy “கடந்த பத்து வருடங்களில் அ தி மு க ஆட்சியில் மூடி மறைகப்பட்டது என்று சொல்கிறீ்களா? பொதுவாக சொல்ல வேண்டாம்”

    அதிமுக திமுக எந்த ஆட்சியாக இருந்தாலும் ஒன்றே தான்.

    அதிமுக ஆட்சியில் கிறித்துவ பள்ளி, கல்லூரிகளில் பாலியல் அத்துமீறல் நடக்கவில்லை என்று கூறுகிறீர்களா?

    ஆள்வது யாராக இருந்தாலும் சம்பந்தபட்டவர்கள் யார் என்பதை பொறுத்து தான் இங்கே பரபரப்பாகிறது, சம்பவத்தை வைத்தல்ல.

  4. ஆசிரியர் தவறு செய்ததாக குற்றம் சாட்ட பட்டிருக்கிறார் அதனால் சிறையில் அடைந்திருக்கிறார்கள். செய்தி அவ்வளவே! நீதி மன்றத்தில் அது நிரூபிக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்பிருந்தால் அவர்களும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்க பட வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் மற்றும் பண பலம் உள்ளவர்கள் பெரும்பாலும் தப்பித்து விடுகிறார்கள். காலம் என்ன பதில் சொல்ல போகிறது என்று பார்ப்போம்.

    மீடியா பரபரப்பாக செய்தி வெளியிடலாம் ஆனால் தண்டிக்க முடியாது. இன்னும் சில நாட்கள் கழித்து இவர்களும் மக்களும் மறந்து விடுவார்கள். இது தான் பெரும்பாலும் நடப்பது,நடந்தது, இனி நடக்க கூடியது. இதில் பொங்கி எந்த பலனும் இல்லை.

    இந்த போலி போராளிகள் பெரும்பாலும் ப்ராம்ஹண சமூக வெறுப்பையுடையவர்கள் அல்லது அவர்கள் குழந்தைகளுக்கு அங்கே சீட் கிடைக்கவில்லை என்ற மன குமுறலில் உள்ளவர்கள். அதனால் தான் பொங்குகிறார்கள். அந்த பள்ளி தரம் அப்படி.என்னுடைய சில நண்பர்கள் அப்பள்ளியிலுருந்து வந்தவர்கள்.I could see the difference!

    இந்த பெரும்தொற்று காலத்தில் பொங்குவதை, எதிர்மறை எண்ணங்களை பரப்புவதை நிறுத்தினாலே அவர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் உதவி.

    பள்ளியை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பது முட்டாள் தனம். It is a CBSE school, technically not possible by state government.

  5. @மணிகண்டன்

    “பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்பிருந்தால் அவர்களும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்க பட வேண்டும்.”

    அதே தான். யார் தவறு செய்தால் என்ன? தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

    அது ஆசிரியராக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

    “இன்னும் சில நாட்கள் கழித்து இவர்களும் மக்களும் மறந்து விடுவார்கள். இது தான் பெரும்பாலும் நடப்பது,நடந்தது, இனி நடக்க கூடியது.”

    இதையே குறிப்பிட்டுள்ளேன். ஊடகங்களுக்கு ஒரு வார பரபரப்பு செய்தி, மாணவிகளின் சர்ச்சை அவ்வளவே!.

    “இந்த போலி போராளிகள் பெரும்பாலும் ப்ராம்ஹண சமூக வெறுப்பையுடையவர்கள் அல்லது அவர்கள் குழந்தைகளுக்கு அங்கே சீட் கிடைக்கவில்லை என்ற மன குமுறலில் உள்ளவர்கள். ”

    மிகச்சரி. தற்போது பள்ளியின் தரம் குறைந்ததாக குற்றச்சாட்டு இருந்தாலும், திரும்ப மக்கள் இங்கேயே தான் சென்று நிற்கப்போகிறார்கள்.

    “It is a CBSE school, technically not possible by state government.”

    Exactly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here