ராவணன் படம் விமர்சனம் பற்றி எழுதி ஏகப்பட்ட பேர் நொறுக்கி தள்ளிட்டு இருக்காங்க… இதுல என்னத்தை விமர்சனம் என்று எழுதுவது. Image Credit
அதனால படத்தை விடச் சிங்கை திரையரங்கில் நடந்த கொடுமைகளைக் கூறுகிறேன் படிங்க.. நீங்களும் பாவம் எத்தனை திரைவிமர்சனம் தான் படிப்பீங்க 😉 .
ராவணன்
நான் ராவணன் படம் இந்த வாரம் பார்ப்பதாகவே இல்லை அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தேன்.
நண்பன் தொலைபேசியில் அழைத்துச் சனி இரவுக் காட்சிக்கு முன்பதிவு செய்கிறேன் கண்டிப்பாக வா என்று கூற சரி நானும் மணிரத்னம் படம் என்பதால் ஆர்வமாக இருந்தேன்.
உடனே சரி என்று கூறி விட்டேன்.
சிங்கையில் யிஷுன் என்ற இடத்தில் உள்ள கோல்டன் வில்லேஜ் என்ற திரையரங்கில் படம் பார்த்தோம்.
பல திரையரங்கில் மற்ற படங்களின் காட்சிகள் குறைக்கப்பட்டு ராவணன் படமே ஓடிக்கொண்டு இருந்தது, அனைத்து காட்சிகளும் நடு இரவுக் காட்சிகள் கூட நிரம்பி வழிந்தது.
வார இறுதியில் எப்போதும் நடு இரவுக்காட்சி இருக்கும்.
வார இறுதி என்பதால் பலர் “உற்சாகமாக” வேறு வந்து இருந்தார்கள். அதற்கு தகுந்த மாதிரி படமும் A வகுப்பு பார்வையாளர்களுக்கான படமாக இருக்க..
படம் முழுவதும் கண்டபடி கமெண்ட் அடித்துப் படத்தையும் படம் பார்த்த எங்களைப் போன்றவர்களையும் எண்ணையில் பொரிக்காமலே பஜ்ஜி ஆக்கி விட்டார்கள்.
கமெண்ட் அடிப்பதற்கு என்றே ரூம் போட்டு யோசித்து விட்டு வருவார்களா என்று தெரியவில்லை.
படம் தொடக்கத்திலிருந்து படம் முடியும் வரை பல கும்பல்கள் கத்தி படத்தையே மொக்கையாக்கி விட்டார்கள்.
படமும் இவர்கள் கிண்டல் அடிப்பதற்கு வசதியாக, மணிரத்னம் படம் என்பதால் சில காட்சிகள் கவிதைத்தனமாக இருக்க பலர் டரியலாகி விட்டார்கள்.
ரஞ்சிதா
படம் போய்க்கொண்டு இருக்கும் போது திடீர் என்று நித்தி நித்தி என்று குரல்கள்…. எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை என்ன சொல்கிறார்கள் என்று.
கொஞ்ச நேரத்தில் ரஞ்சிதா முழுவதும் காட்சியில் வர….
அடங்கப்பா! ஐஸ் விக்ரம் என்று யாருக்கும் இல்லாத கைதட்டல் விசில் என்று தூள் பறந்து விட்டது.
எல்லோரும் நித்தியானந்தா நித்தியானந்தா என்று கத்த ஆரம்பித்துத் திரையரங்கையே கிடுகிடுக்க வைத்து விட்டார்கள்.
ஆஹா! நித்தி மற்றும் ரஞ்சிதா இப்படி அகில உலக பேமஸ் ஆகி விட்டார்களே! என்று கிறுகிறுத்து விட்டது.
மணிரத்னம் பார்த்து இருந்தால் அடப்பாவிகளா! ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்ட மாதிரி காடு மலை எல்லாம் நடந்து கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறேன்.
அதை எல்லாம் நக்கல் அடித்து விட்டு ரஞ்சிதா வந்தவுடன் இந்தக்கத்து கத்துறீங்களே என்று நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பார் 🙂 ரஞ்சிதா காட்சியில் வந்தாலே விசில் தான்.
எங்கள் முன்னாடி இருந்தவர் அவர் நண்பருடன் அமெரிக்காவில் நடக்கும் ஆயில் பிரச்னையை விட அதி முக்கியமான அவருடைய ஒரு பிரச்னையை மிக சத்தமாக பேசி எங்கள் பல்சை எகிற வைத்துக்கொண்டு இருந்தார்.
கொடுமைடா சாமி! திரையரங்கில் வந்து தொலைபேசியில் சத்தமாக பேசுகிறவர்களை கண்டால்… கண்டால்… கண்டால்..
அட! என்னங்க பண்ணித்தொலையறது மனசுக்குள் திட்டி விட்டுக் கம்முனு இருக்க வேண்டியது தான்.
ஐஸ்
எங்கள் பின்னாடி உட்கார்ந்து இருந்த ஒருவருக்கு அபிஷேக் பச்சனை விடப் பெரும் கவலை ஐஸ் மீது.
அவர் அருகில் இருந்தவரிடம் .. மச்சி! ஐஸ் கொஞ்சம் உடம்பு போட்டுடுச்சுடா.. வயதானது தெரிகிறது ம்ம்ம் மேக்கப் கூட அதிகம் என்று ஐஸ் புராணம் பாடிக்கொண்டு இருக்க.
அடங்கொக்க மக்கா! டேய் படம் பார்க்கவே விடமாட்டீங்களா என்று கடுப்பாகி விட்டது.
பொறுமை இழந்து… படத்தில் விக்ரம் போடும் வெடிகுண்டு இரண்டை வாங்கி இவனுக வாயில் வைத்தால் என்ன! என்றாகி விட்டது… கிர்ர்ர்ர்
ஐஸ் வரும் ஒரு காட்சியில் எதோ ஒரு பாடல் வரும் (CD யில் இல்லை) ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு ஐஸ்வர்யா நமக! என்று மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
எங்க இருந்து தான் கிளம்பி வருவீங்க.
ஒரு பகுதியில் இருந்த கும்பல் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல விக்ரம் ஐஸ் என்ன பேசினாலும் ஏதாவது ஒரு கமெண்ட். அதுல வேற கவிதை சொல்ற மாதிரி வரும். சும்மாவே நக்கல் அடிக்கறானுக..!
இவங்க பண்ணுற இம்சையை பார்த்து எங்க பின்னாடி உட்கார்ந்து இருந்த இம்சைங்க ..மச்சான்! அவனுக ஓவரா சத்தம் போடுறானுக!!! ஒன்றும் புரியலை என்று கூறுகிறார்கள்.
இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
இவங்க இம்சை தாங்காம நாங்களே நொந்து போய் இருந்தோம் இதுல இவங்களுக்கு அவங்க கத்துறது சிரமமா இருக்காம் .. விளங்கிடும் என்று நினைத்துக்கொண்டேன்.
ப்ரியாமணி
ப்ரியாமணி வர உடனே எல்லோரும் முத்தழகு முத்தழகு என்று அழைக்க (கத்த) திரையில் இருந்த ப்ரியாமணியே இவர்கள் கத்தலில் திரும்பிப் பார்த்து இருப்பார்.
நாங்க பார்த்தால் அது வாசல் கதவாகத்தான் இருக்கும்.
என்னது… படம் எப்பூடி இருந்துதாவா!
இராமாயண போருக்கு நடுவுல உட்கார்ந்து சன் டிவி பார்த்த மாதிரி இருந்தது. நல்லா கேட்கறாங்கய்யா டீடைலு.
கொசுறு
வைரமுத்து இந்தப்படத்திற்கு ஐஸ், விக்ரம் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினார்.
இது படம் வெளிவரும் முன்பு அவர் கூறியது… இப்ப அவர்களுக்கு கிடைக்குதோ இல்லையோ அதற்கு கடுமையான போட்டியாக நித்தியானந்தர் வந்து விட்டார்.
பின்ன என்னங்க! படத்தில் நடிக்காமலே யாரவது விசில் சத்தம் பெற முடியுமா! அதை நித்தியானந்தர் சாதித்து இருக்கிறார் எவ்வளோ பெரிய விஷயம்.
எனவே கண்டிப்பாக அவருக்கு தான் தேசிய விருது ஹி ஹி 😉 .
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
எப்படியோ என்ன மாத்ரி நீங்களும் என்ஜாய் பன்னிருகேள்
அனுபவம் புதுமை!
சிங்கை திரையரங்கில் நடந்த கொடுமைகளை காமெடிகளை கூறுகிறேன் படிங்க.. நீங்களும் பாவம் எத்தனை திரைவிமர்சனம் தான் படிப்பீங்க
ஹா…ஹா
நல்லாவே படம் பாத்திருக்கீங்க போல
உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் நக்கலு கிரி !!!
ரொம்ப ரசித்தேன் !!
கிரி ,
இது !!!!!!இதுக்கு பேரு தான் வித்தியாசம்!!!!!!!!!!!(விமர்சனம் )கலக்கிடீங்க 🙂
ஷங்கர்
நானும் இன்னும் படம் பார்க்கலை நெறைய பேரு மாதிரி…
இதுல என்ன புது விஷயம் ன்னு பார்த்த உங்க விமர்சனம் தான். இன்னும் ஆச்சர்யம் நம்ம ஆளுக திரை அரங்கில் பண்ண காமெடி. வழக்கம் போல எல்லோர் மாதிரியும் சிங்கைளையும் இப்படியானு கேக்க தோணுது.
இரு மொழிகளில் எடுத்தால் இப்படி தான் கவன சிதறல் அதிகமாக இருக்கும். மணி ரசனைகாக படம் எடுத்தார், இப்போ மார்க்கெட்டிங் க்காக…
கிரி……..
ரொம்ப தான் நொந்து போயிருக்கீங்க….
நாங்க துபாய்ல ரொம்ப அமைதியா பார்த்தோம்… ஏன்னா, கூட்டமே இல்ல…
பதிவில் நீங்கள் எழுதியுள்ள கீழே உள்ள இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்…
//ப்ரியாமணி வர உடனே எல்லோரும் முத்தழகு முத்தழகு என்று அழைக்க (கத்த) திரையில் இருந்த ப்ரியாமணியே இவர்கள் கத்தலில் திரும்பி பார்த்து இருப்பார்.. .//
எந்திரன் முன்னாடி எந்த படமும் பார்க்காம இருக்கணும்னு நெனச்சேன்… அந்த விரதத்தை மணிரத்னம் உடைத்தார்…. ஆனால், படம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… லொகேஷன்கள் மற்றும் கேமரா ரொம்ப நன்றாக இருந்தது…
படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், படத்தின் ஓட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன… குறிப்பாக படத்தை பற்றிய அமிதாப் பச்சனின் ட்விட்டர் குண்டு….
தல,
நல்ல இருக்கு உங்க ராவணன் அனுபவம். அப்புறம் எந்திரன் updates 2 weeks ல ஆர்வமா எதிர் பார்க்குறேன்
நன்றி,
அருண்
உங்க வர்ணனையை படிச்சிகிட்டே வரும் பொது மணி ரத்னம் படத்த பாத்தவுடன் கோமாளி மாதிரி தெரியுறாரு!
ஹரிசிவாஜி கருணாகரசு சரவணன் அத்திரி மகேஷ் ஷங்கர் சதா கோபி அருண் மற்றும் ஜெயதேவா தாஸ் வருகைக்கு நன்றி
@ஹரிசிவாஜி சிங்கப்பூர் ல தான் இருக்கீங்களா!
@ சதா சிங்கப்பூர் நம்ம ஊர் மாதிரி தான். சுருக்கமான சொன்னா ஹைடெக்கான தமிழ்நாடு
சதா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. அவர் இரு மொழிகளை கவர எடுத்து முற்றிலும் சொதப்பி ஒரு மொழியிலும் உருப்படி இல்லாமல் போய் விட்டது. என்னை பொறுத்தவரை தமிழிலே அவர் சிறப்பாக எடுக்கிறார். எப்போது ஹிந்திக்கு போனாரோ! அப்போது இருந்து ஒரு நல்ல படம் கூட பார்க்கவில்லை. அங்கே கடைசியாக வெற்றி பெற்றது கூட நம்ம அலைபாயுதேவை வைத்துத்தான்
@கோபி என்னது கூட்டமே இல்லையா! 🙂
எந்திரன் கண்டிப்பாக சரவெடியாக இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம்! நிரூபித்த பிறகு பார்த்துக்கொள்வோம் 😉
படம் ஓடவில்லை என்பது உண்மை தான். அமிதாப் கூறியது போல திரைக்கதை மற்றும் எடிட்டிங் சொதப்பல் தான்.
@ அருண் கண்டிப்பாக அடுத்த வாரம் எந்திரன் பற்றி பதிவு உங்களுக்காகவே எழுதுகிறேன். உங்களுக்கு ஏமாற்றம் தராத அளவிற்கு எழுத முயற்சிக்கிறேன்.
நீங்கள் ஃபுட்பால் பற்றி கூறி இருந்தீங்க சென்ற பதிவிலேயே! நான் கூற மறந்துட்டேன். இப்ப கூறியும் பிரயோஜனம் இல்லை ஹி ஹி ஹி 😀 என்ன மேட்டர்னா இங்கே நான் போட்டியை பார்க்க டிவியில் சப்க்ரைப் பண்ணலை அதனால ஒரு போட்டி கூட பார்க்கலை இதுல எங்க போய் சொல்வது! 🙂 மன்னிக்கவும்
@ஜெயதேவ தாஸ் ஆனா படம் பார்ப்பவர்களை கோமாளி மாதிரி ஆக்கிட்டார். அடுத்த முறை சரியாக படம் எடுக்க வாழ்த்துகிறேன்.
நான் சிங்கம் படம் ‘தியேட்டரில்’ பார்த்து விட்டேன்:)!
அவங்கலாம் ரூம் போட்டு யோச்சி கமெண்ட் அட்டிச்சங்கோ, நீ தியேட்டர்ல யோசி கமெண்ட் அடிக்கற…
@ராமலக்ஷ்மி படம் ஓகே வா! அதை சொல்லுங்க 😉
@ வாய்யா! குரு நல்லவனே! எப்படி இருக்கிறே.. கமெண்ட் எல்லாம் போட்டு அசத்துற! நடத்துயா! லிமட்டை கேட்டதா சொல்லு 🙂
நான் அது நல்ல படம் என்று நினைத்தேன். But Giri, good, funny post from you. I enjoyed reading your post.
டேய் பண்ணி கிரி ராவணன் நல்ல படம் டா.அத ஏன்டா இப்படி பண்ற பாவி .நீ நல்லாவே இருக்க மாடேடா .